DEVI BHAAGAVATAM - SKANDA 2
2#2a. பராசரர்
தீர்த்த யாத்திரை செய்து வந்தார் பராசர முனிவர்;
யாத்திரையில் அடைந்தார் யமுனைக் கரையை!
நதியைக் கடக்க அழைத்தார் படகோட்டி தாசனை;
விதிவசத்தால் வரமுடியவில்லை அழைத்தவுடன்.
“உடனே செல்ல வேண்டும்” என்று முனிவர் கூறவே
உடன் அனுப்பினான் தன் வளர்ப்பு மகள் மச்சகந்தியை.
ஓடத்தை ஒட்டிய மச்சகந்தியின் ஓய்யாரத்தில்,
ஒயிலில், வனப்பில் கொள்ளை போனது மனம்!
மோகம் தலைக்கு ஏறிவிட்டது முனிவருக்கு!
காமம் எல்லை மீறிவிட்டது தவ முனிவருக்கு!
வலக் கரத்தைப் பற்றிக் கொண்டார் முனிவர்;
கலவரம் அடைந்தாள் மச்சகந்தி அதனால்.
“ஞான வைராக்கியம் உடைய தவச் சீலரே!
ஏனையரைப் போல இருக்கலாமா நீரும்?
ஏழைப் பெண்ணின் கரம் பற்றி இழுக்கலாமோ?
பாழாய்ப் போன மீன் மணம் அடிக்கவில்லையா?
அரிய அந்தணப் பிறவி எடுத்த பிறகும் உமக்குத்
தெரியவில்லையா இது தவறான செயல் என்று?
சமமான இருவர் கூடினால் சந்தோஷம் விளையும்;
சமமற்றவர்கள் கூடினால் அருவருப்பு விளையும்.
அருவருக்கும் பெண்ணிடம் விளையுமா இன்பம்?
விரும்பி வரும் பெண்ணிடமே விளையும் இன்பம்!
ஓடத்தைக் கவிழ்க்க ஒரு நாழி வேண்டாம்!
உடலும், உயிரும் பறிபோய் விடும் அறியீரா?” என
‘ஊடல் செய்பவள் போலப் பேசுகின்றாள் இவள்;
மூடன் மகள் அல்ல; நல்ல அறிவுள்ளவள் இவள்!’
என்ன செய்வது என்றறியாத பராசர முனிவர்
பின்னும் சிந்திக்கலானார் தீவிரமாக மனத்துள்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி