Devi bhaagavatam - skanda 7
8# 2. வராஹ மூர்த்தி
ஆதி பகவானை பிரமன் தியானித்து இருந்த
போது தோன்றியது வராஹம் மூக்கிலிருந்து!
விரல் அளவே இருந்தது அது தோன்றியபோது!
விரைவாக வளர்ந்து விட்டது மலையளவாக!
வராஹம் சாதாரணப் பன்றி அல்லவே!
வராஹம் யக்ஞரூபி பகவான் அல்லவா?
கர்ஜனை செய்தது உலகம் மகிழ்ந்திட!
கர்ஜனை செய்தது பகைவர் நடுங்கிட!
.
தோத்திரம் செய்தனர் அனைவரும் கூடி!
பாத்திரம் ஆயினர் வராஹத்தின் அருளுக்கு.
புகுந்தது வராஹம் பூமியைத் தேடி - அது
அமிழ்ந்திருந்த பரந்த நீர் பரப்பினுக்குள்.
வருந்தினான் சமுத்திர ராஜன் வராஹத்தின்
வருத்திய அடர்ந்த பிடரி மயிர் கற்றைகளால்!
முகர்ந்து பார்த்தது நீரினுள் தெய்வ வராஹம்;
அகம் மகிழ்ந்தது பூமியைக் கண்டு கொண்டதும்.
தாங்கியது பூமியைத் தன் கோரைப் பற்களால்;
தூக்கியது பூமியைத் தன் கோரைப் பற்களால்!
வெளி வந்தது ஒளி வீசியபடி நீர் பரப்பிலிருந்து;
வெகுளியுடன் எதிர்த்த இரண்யனைக் கொன்றது!
நிலை நாட்டியது பூமியை அதன் இருப்பிடத்தில்;
வேலை முடிந்ததும் திரும்பியது தன் வைகுந்தம்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.