1#13a. ஊர்வசியின் காதல்
சாயுஜ்ய முக்தி அடைந்தான் சுத்யும்னன்;
சக்கரவர்த்தி ஆனான் பூவுலகில் புரூரவன்.
ஆணழகன், குணவான்; அறிவு மிகுந்தவன்;
ஆட்சி செய்து வந்தான்.அரசியல் நெறியுடன்.
பிரசித்தி பெற்றது அவன் ஆண்ட நகரம்
பிரதிஷ்டா என்ற பெயரில் உலகெங்கும்.
யாகங்கள் செய்தான் நாட்டு நன்மைக்காக;
தானங்கள் தந்தான் மக்கள் நன்மைக்காக.
பரவியது புரூரவன் புகழ் உலகமெங்கும்;
பறி கொடுத்துவிட்டாள் ஊர்வசி மனதை!
நடனம் ஆடினாள் சுவர்க்கத்தில் – ஆனால்
நாடியது மனம் பூவுலகத்துப் புரூரவனை!
பிரமன் அறிந்தான் அவள் மனத்தை;
“சுரர்களை விரும்ப வேண்டியவள் நீ!
மண்ணுலக மன்னனுக்கு ஏங்குகின்றாய்;
விண்ணுலகில் வாழும் தகுதி இழந்தாய்!
மண்ணுலகம் செல்லக் கடவாய்” என்றான்;
எண்ணம் நிறைவேறிடச் சென்றாள் பூவுலகு.
கந்தர்வ மணத்தில் கலந்தாள் புரூரவனுடன்;
இந்த வரைமுறைகளை விதித்தாள் ஊர்வசி.
“இன்று போலவே என்றும் அன்பைப் பொழிவீர்!
இனி நான் தரும் நெய்யை மட்டுமே உண்பீர்!
சலங்கைகளைத் தந்துவிடுகின்றேன் உம்மிடம்;
சலங்கைகள் களவு போகலாகாது ஒருபோதும்!
காணக் கூடாது நான் உம்மை நிர்வாணமாக!
காணக் கூடாது உம்மை வேறு பெண்ணுடன்!
கடைப் பிடிக்க வேண்டும் இவற்றை நீர்!
தடைப் பட்டால் சென்று விடுவேன் பிரிந்து”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
சாயுஜ்ய முக்தி அடைந்தான் சுத்யும்னன்;
சக்கரவர்த்தி ஆனான் பூவுலகில் புரூரவன்.
ஆணழகன், குணவான்; அறிவு மிகுந்தவன்;
ஆட்சி செய்து வந்தான்.அரசியல் நெறியுடன்.
பிரசித்தி பெற்றது அவன் ஆண்ட நகரம்
பிரதிஷ்டா என்ற பெயரில் உலகெங்கும்.
யாகங்கள் செய்தான் நாட்டு நன்மைக்காக;
தானங்கள் தந்தான் மக்கள் நன்மைக்காக.
பரவியது புரூரவன் புகழ் உலகமெங்கும்;
பறி கொடுத்துவிட்டாள் ஊர்வசி மனதை!
நடனம் ஆடினாள் சுவர்க்கத்தில் – ஆனால்
நாடியது மனம் பூவுலகத்துப் புரூரவனை!
பிரமன் அறிந்தான் அவள் மனத்தை;
“சுரர்களை விரும்ப வேண்டியவள் நீ!
மண்ணுலக மன்னனுக்கு ஏங்குகின்றாய்;
விண்ணுலகில் வாழும் தகுதி இழந்தாய்!
மண்ணுலகம் செல்லக் கடவாய்” என்றான்;
எண்ணம் நிறைவேறிடச் சென்றாள் பூவுலகு.
கந்தர்வ மணத்தில் கலந்தாள் புரூரவனுடன்;
இந்த வரைமுறைகளை விதித்தாள் ஊர்வசி.
“இன்று போலவே என்றும் அன்பைப் பொழிவீர்!
இனி நான் தரும் நெய்யை மட்டுமே உண்பீர்!
சலங்கைகளைத் தந்துவிடுகின்றேன் உம்மிடம்;
சலங்கைகள் களவு போகலாகாது ஒருபோதும்!
காணக் கூடாது நான் உம்மை நிர்வாணமாக!
காணக் கூடாது உம்மை வேறு பெண்ணுடன்!
கடைப் பிடிக்க வேண்டும் இவற்றை நீர்!
தடைப் பட்டால் சென்று விடுவேன் பிரிந்து”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.