முடிவுரை
வேதங்களின் சாரமே தேவி பாகவதம் – தரும்
வேத பாராயணப் பலனைத் தேவி பாகவதம்!
புன்மையும், மேன்மையும் கலந்தே உள்ளன!
நன்மையையும், தீமையும் கலந்தே உள்ளன!
அழிக்க முடியாது புன்மைகளை முற்றிலும்;
அழிக்க முடியாது தீமைகளை முற்றிலும்.
விலக்கி வைக்க முடியும் புன்மைகளை!
விலக்க முடியும் வருகின்ற தீமைகளை!
கவசமாக இருந்து காப்பாள் உலக அன்னை
தவறாமல் அவளை உன்னும் அன்பர்களை!
தாயிடம் செலுத்தும் அன்பையே விரிவாக்கி
தாயினும் சிறந்த தேவியிடம் செலுத்துவோம்.
கண்ணை இமைபோல் காப்பாள் அவள் நம்மை!
எண்ண இயலாத அற்புதங்களை நிகழ்த்துவாள்!
“உண்டு!” என்றால் அவள் உண்டு! உண்டு!
“இல்லை!” என்றால் அவள் இல்லை! இல்லை!
“உருவம்!” என்றால் அவளுக்கு உண்டு உருவம்;
“அருவம்!” என்றால் அவள் ஒரு வெறும் அருவம்.
“சகுணை!” என்றால் அவள் ஒரு சகுணை!
“நிர்குணை!” என்றால் அவள் ஒரு நிர்குணை!
கருணை மிக்க தாய் மாயையாக இருந்தால் என்ன?
கருணையால் அகற்றுவாள் மாயையை அவளே!
மாயையை அகற்ற வல்லவள் மஹாமாயை அவளே!
சேயைப் போல் காப்பாள் சேவடி பணிபவரை அவளே!
இரு பாதங்களே துணை தேவி!
பிறவா வரம் தருவாய் தாயே
பிறந்தாலும் உன் திருவடிகளை
மறவா வரம் தருவாய் நீயே!
பின் குறிப்பு
தேவியின் பெருமையைக் கூறுவதே – எளிய தமிழில்
தேவி பாகவதத்தைப் படைத்ததன் முக்கிய நோக்கம்.
சுருக்கியுள்ளேன் ஆண்கள் மட்டும் அறிய வேண்டியதை
சுருக்கியுள்ளேன் குருமுகமாகக் கற்க வேண்டியவற்றை
சுருக்கவில்லை தேவியின் மஹிமைகளை
சுருக்கவில்லை தேவியின் மேன்மைகளை
தேவி பாகவதத்தைச் சமர்ப்பிக்கின்றேன்
தேவி திருவடிகளில் பணிவு, பக்தியுடன்.
இங்கனம் உங்கள் உண்மையுள்ள
விசாலாக்ஷி ரமணி
வேதங்களின் சாரமே தேவி பாகவதம் – தரும்
வேத பாராயணப் பலனைத் தேவி பாகவதம்!
புன்மையும், மேன்மையும் கலந்தே உள்ளன!
நன்மையையும், தீமையும் கலந்தே உள்ளன!
அழிக்க முடியாது புன்மைகளை முற்றிலும்;
அழிக்க முடியாது தீமைகளை முற்றிலும்.
விலக்கி வைக்க முடியும் புன்மைகளை!
விலக்க முடியும் வருகின்ற தீமைகளை!
கவசமாக இருந்து காப்பாள் உலக அன்னை
தவறாமல் அவளை உன்னும் அன்பர்களை!
தாயிடம் செலுத்தும் அன்பையே விரிவாக்கி
தாயினும் சிறந்த தேவியிடம் செலுத்துவோம்.
கண்ணை இமைபோல் காப்பாள் அவள் நம்மை!
எண்ண இயலாத அற்புதங்களை நிகழ்த்துவாள்!
“உண்டு!” என்றால் அவள் உண்டு! உண்டு!
“இல்லை!” என்றால் அவள் இல்லை! இல்லை!
“உருவம்!” என்றால் அவளுக்கு உண்டு உருவம்;
“அருவம்!” என்றால் அவள் ஒரு வெறும் அருவம்.
“சகுணை!” என்றால் அவள் ஒரு சகுணை!
“நிர்குணை!” என்றால் அவள் ஒரு நிர்குணை!
கருணை மிக்க தாய் மாயையாக இருந்தால் என்ன?
கருணையால் அகற்றுவாள் மாயையை அவளே!
மாயையை அகற்ற வல்லவள் மஹாமாயை அவளே!
சேயைப் போல் காப்பாள் சேவடி பணிபவரை அவளே!
இரு பாதங்களே துணை தேவி!
பிறவா வரம் தருவாய் தாயே
பிறந்தாலும் உன் திருவடிகளை
மறவா வரம் தருவாய் நீயே!
பின் குறிப்பு
தேவியின் பெருமையைக் கூறுவதே – எளிய தமிழில்
தேவி பாகவதத்தைப் படைத்ததன் முக்கிய நோக்கம்.
சுருக்கியுள்ளேன் ஆண்கள் மட்டும் அறிய வேண்டியதை
சுருக்கியுள்ளேன் குருமுகமாகக் கற்க வேண்டியவற்றை
சுருக்கவில்லை தேவியின் மஹிமைகளை
சுருக்கவில்லை தேவியின் மேன்மைகளை
தேவி பாகவதத்தைச் சமர்ப்பிக்கின்றேன்
தேவி திருவடிகளில் பணிவு, பக்தியுடன்.
இங்கனம் உங்கள் உண்மையுள்ள
விசாலாக்ஷி ரமணி