#42d. தருமதத்தர்
பிறந்திருந்தான் பிரமன் தருமதத்தனாக;
பிறந்திருந்தனர் சித்தி, புத்தி மகள்களாக.
"விரைந்து வந்த காரணம் என்ன?" என்று
வினவினான் மன்னன் தருமதத்தரிடம்.
"காசியபர் குமாரர் மகோற்கடருக்கு நான்
நேசிக்கும் மகள்களை திருமணம் செய்திட".
அரசன் மகிழ்ந்தான் இம்மொழி கேட்டு
அனுமதி தந்தான்," அங்கனமே ஆகுக!"
"நல்ல நண்பர்கள் உன் தந்தையும் நானும்;
செல்ல மகள்களை ஏற்று அருளவேண்டும்."
புறப்பட்டனர் இருவரும் செல்வதற்கு;
எதிர்ப்பட்டனர் இரு அசுரர் அழிப்பதற்கு.
கழுதை உருவில் வந்த காம, குரோதர்
புழுதியில் புரண்டு சண்டை இட்டனர்.
மூச்சு முட்டியது அனைத்து மக்களுக்கும்!
தீச்செயலைத் தடுத்து விட்டார் மகோற்கடர்.
புல்லை இரண்டாகக் கிள்ளி ஏவினார்;
பொல்லா அரக்கர் வீழ்ந்து மாண்டனர்!
குண்டன் வந்தான் மதயானை வடிவில்
ஆண்டவனைத் தாக்க முயன்றான் அவன்.
வலைப் பற்றிச் சுழற்றி அடக்கிவிட்டு;
மேலேறி அமர்ந்தார் யானை முதுகில்.
விரட்டி ஓடச்செய்ததில் களைத்துப் போய்
நுரை கக்கி வீழ்ந்து மடிந்தது மதயானை.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
பிறந்திருந்தான் பிரமன் தருமதத்தனாக;
பிறந்திருந்தனர் சித்தி, புத்தி மகள்களாக.
"விரைந்து வந்த காரணம் என்ன?" என்று
வினவினான் மன்னன் தருமதத்தரிடம்.
"காசியபர் குமாரர் மகோற்கடருக்கு நான்
நேசிக்கும் மகள்களை திருமணம் செய்திட".
அரசன் மகிழ்ந்தான் இம்மொழி கேட்டு
அனுமதி தந்தான்," அங்கனமே ஆகுக!"
"நல்ல நண்பர்கள் உன் தந்தையும் நானும்;
செல்ல மகள்களை ஏற்று அருளவேண்டும்."
புறப்பட்டனர் இருவரும் செல்வதற்கு;
எதிர்ப்பட்டனர் இரு அசுரர் அழிப்பதற்கு.
கழுதை உருவில் வந்த காம, குரோதர்
புழுதியில் புரண்டு சண்டை இட்டனர்.
மூச்சு முட்டியது அனைத்து மக்களுக்கும்!
தீச்செயலைத் தடுத்து விட்டார் மகோற்கடர்.
புல்லை இரண்டாகக் கிள்ளி ஏவினார்;
பொல்லா அரக்கர் வீழ்ந்து மாண்டனர்!
குண்டன் வந்தான் மதயானை வடிவில்
ஆண்டவனைத் தாக்க முயன்றான் அவன்.
வலைப் பற்றிச் சுழற்றி அடக்கிவிட்டு;
மேலேறி அமர்ந்தார் யானை முதுகில்.
விரட்டி ஓடச்செய்ததில் களைத்துப் போய்
நுரை கக்கி வீழ்ந்து மடிந்தது மதயானை.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.