#39n. பாலலீலைகள் (14)
நாகாஸ்திரத்தை எய்தான் கனலாசுரன்;
நாகாஸ்திரத்தை அழித்தது கருடாஸ்திரம்.
வாளேந்தி எதிர்த்த அசுரனின் ஓங்கியகை
வாளுடன் வீழ்ந்தது தரையில் அறுபட்டு.
உண்டாயினர் ரத்தத்திலிருந்து அசுரர்கள்!
உண்டது அவர்களை மூன்றாவது கண் தீ!
ருத்திராஸ்திரத்தை எய்தான் கனலாசுரன்;
பத்திரமாகப் பெற்றுக் கொண்டார் கணேசன்.
தண்டத்தால் அடிக்க ஓடி வந்த அசுரனைத்
துண்டித்தது கணேசர் விடுத்த சூலாயுதம்.
சிந்து ராஜன் கலங்கினான் செய்தி கேட்டு;
நொந்து நூலானான் பொங்கும் அச்சத்தால்!
கட்டளையிட்டான் தன் அடிமைகளான
கதிரவன், நிலவு, வருணன், வாயு, தீயை.
"செல்லக் கூடாது திரிசந்தி க்ஷேத்திரம்!"
செல்வதை நிறுத்தி விட்டனர் ஐவரும்.
சூரிய, சந்திரர் உதிக்கவில்லை அங்கே!
நீரோ, காற்றோ, தீயோ இல்லை அங்கே!
முனிவர்கள் பணிந்த்னர் கணேசனை;
முனிவர்கள் துயர் தீர்த்தான் கணேசன்!
தோன்றினர் கதிரவன், வாயு ,மேகங்கள்,
கணேசனின் வலது திருவிழியிலிருந்து!
தோன்றினர் அக்னியும், சந்திரனும்,
கணேசனின் இடது திருவிழியிலிருந்து!
"சிந்து ராஜன் என்னைத் தேடி வராததால்,
சிந்து ராஜனைத் தேடி நானே செல்வேன்!"
அறிந்தார் கணேசனின் கருத்தைச் சிவன்,
தோற்றுவித்தார் ஒரு கோடி பூதங்களை.
மயூரத்தின் மேல் அமர்ந்து சென்றான் கணேசன்,
முருகன், நந்தி, வீரபத்திரர் மற்றும் பூதர்களுடன்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
.
நாகாஸ்திரத்தை எய்தான் கனலாசுரன்;
நாகாஸ்திரத்தை அழித்தது கருடாஸ்திரம்.
வாளேந்தி எதிர்த்த அசுரனின் ஓங்கியகை
வாளுடன் வீழ்ந்தது தரையில் அறுபட்டு.
உண்டாயினர் ரத்தத்திலிருந்து அசுரர்கள்!
உண்டது அவர்களை மூன்றாவது கண் தீ!
ருத்திராஸ்திரத்தை எய்தான் கனலாசுரன்;
பத்திரமாகப் பெற்றுக் கொண்டார் கணேசன்.
தண்டத்தால் அடிக்க ஓடி வந்த அசுரனைத்
துண்டித்தது கணேசர் விடுத்த சூலாயுதம்.
சிந்து ராஜன் கலங்கினான் செய்தி கேட்டு;
நொந்து நூலானான் பொங்கும் அச்சத்தால்!
கட்டளையிட்டான் தன் அடிமைகளான
கதிரவன், நிலவு, வருணன், வாயு, தீயை.
"செல்லக் கூடாது திரிசந்தி க்ஷேத்திரம்!"
செல்வதை நிறுத்தி விட்டனர் ஐவரும்.
சூரிய, சந்திரர் உதிக்கவில்லை அங்கே!
நீரோ, காற்றோ, தீயோ இல்லை அங்கே!
முனிவர்கள் பணிந்த்னர் கணேசனை;
முனிவர்கள் துயர் தீர்த்தான் கணேசன்!
தோன்றினர் கதிரவன், வாயு ,மேகங்கள்,
கணேசனின் வலது திருவிழியிலிருந்து!
தோன்றினர் அக்னியும், சந்திரனும்,
கணேசனின் இடது திருவிழியிலிருந்து!
"சிந்து ராஜன் என்னைத் தேடி வராததால்,
சிந்து ராஜனைத் தேடி நானே செல்வேன்!"
அறிந்தார் கணேசனின் கருத்தைச் சிவன்,
தோற்றுவித்தார் ஒரு கோடி பூதங்களை.
மயூரத்தின் மேல் அமர்ந்து சென்றான் கணேசன்,
முருகன், நந்தி, வீரபத்திரர் மற்றும் பூதர்களுடன்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
.