#19d. சம்பரன்
தனக்கே வேண்டும் ரதி என்ற ஆசையால்
தவித்தான் பலநாட்கள் அசுரன் சம்பரன்.
தனித்து இருந்த அபலைப் பெண்ணைக்
கனிபோலக் கவர்ந்து சென்றான் சம்பரன்.
ஆகாய மார்க்கமாக அசுரன் செல்கையில்
ஆகத்தியம் செய்து நழுவினாள் ரதி தேவி.
விடுவித்துக் கொண்டு விழுந்தாள் நீரில்!
விழுங்கிவிட்டது ஒரு கடல்மீன் அவளை!
கடல் முழுவதும் குடைந்து தேடிய போதும்
கிடைக்கவில்லை ரதிதேவி சம்பரனுக்கு.
ரதிதேவியை விழுங்கிய மீன் ஒருநாள்
அதிசயமாக மீனவன் வலையில் சிக்கியது.
ஜொலித்த அந்த மீனைப் பிடித்த மீனவன்
அளித்தான் காணிக்கையாக சம்பரனுக்கு.
மீனின் வயிற்றை அறுத்தபோது அதில்
மானின் கண்ணுடைய பெண் இருந்தாள்.
இறைவன் அளித்த தன் அன்பு மகளாகக்
குறைவின்றி வளர்த்தான் ரதியை அசுரன்.
மனைவி ஆக்கிக் கொள்ள விரும்பியவள்
மகளாக வளருவதை அறியவே இல்லை.
நாரத முனிவர் அறியாத ரஹசியமா?
நாரத முனிவர் புரியாத கலகங்களா?
பிரத்யும்னனிடம் சென்று சொன்னார்
பிரிய மனைவி சம்பரனின் மகள் என்று!
ரதி தேவியை மீட்டு வரப் போருக்கு
அதி விரைவாகப் போனான் பிரத்யும்னன்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
தனக்கே வேண்டும் ரதி என்ற ஆசையால்
தவித்தான் பலநாட்கள் அசுரன் சம்பரன்.
தனித்து இருந்த அபலைப் பெண்ணைக்
கனிபோலக் கவர்ந்து சென்றான் சம்பரன்.
ஆகாய மார்க்கமாக அசுரன் செல்கையில்
ஆகத்தியம் செய்து நழுவினாள் ரதி தேவி.
விடுவித்துக் கொண்டு விழுந்தாள் நீரில்!
விழுங்கிவிட்டது ஒரு கடல்மீன் அவளை!
கடல் முழுவதும் குடைந்து தேடிய போதும்
கிடைக்கவில்லை ரதிதேவி சம்பரனுக்கு.
ரதிதேவியை விழுங்கிய மீன் ஒருநாள்
அதிசயமாக மீனவன் வலையில் சிக்கியது.
ஜொலித்த அந்த மீனைப் பிடித்த மீனவன்
அளித்தான் காணிக்கையாக சம்பரனுக்கு.
மீனின் வயிற்றை அறுத்தபோது அதில்
மானின் கண்ணுடைய பெண் இருந்தாள்.
இறைவன் அளித்த தன் அன்பு மகளாகக்
குறைவின்றி வளர்த்தான் ரதியை அசுரன்.
மனைவி ஆக்கிக் கொள்ள விரும்பியவள்
மகளாக வளருவதை அறியவே இல்லை.
நாரத முனிவர் அறியாத ரஹசியமா?
நாரத முனிவர் புரியாத கலகங்களா?
பிரத்யும்னனிடம் சென்று சொன்னார்
பிரிய மனைவி சம்பரனின் மகள் என்று!
ரதி தேவியை மீட்டு வரப் போருக்கு
அதி விரைவாகப் போனான் பிரத்யும்னன்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.