#17a. தக்ஷனின் யாகம்
தக்ஷப் பிரஜாபதி பிரமனின் மைந்தன்;
தவம் செய்தான் இவ்வரங்களைக் கோரி;
"தேவர்கள் அடிபணிய வேண்டும் எனக்கு;
தேவி உமை பிறக்க வேண்டும் மகளாக!"
பிறந்தாள் தேவி உமை தாட்சாயணியாக;
சிறந்தாள் கயிலை நாதன் மனைவியாக.
மகளைக் காணக் கயிலை சென்றான் தக்ஷன்
மகேஸ்வரன் மரியாதை தரவில்லை எழுந்து.
"மாமனாருக்கு மரியாதை தராத மருமகனா?"
மகேஸ்வரனிலும் உயர்ந்தவன் ஆவேன் நான்!"
யாகத்தைத் துவக்கினான் தக்ஷப் பிரஜாபதி.
யாவருக்கும் அழைப்பு சிவபிரானைத் தவிர
தாட்சாயணிக்கும் வரவில்லை அழைப்பு!
தாங்கவில்லை அவளுக்குத் தள்ளி வைத்தது.
தந்தைப் பாசம் உந்தித் தள்ளியது அவளை!
தந்தையின் யாகத்துக்குச் செல்ல வேண்டும்
"மதியாதார் வாயில் மிதியாமை நன்று
மதியணி நாதன் விளக்கிக் கூறினான்
அழையாதார் இல்லம் நாடிச் சென்றால்
அவமானம் தான் மிஞ்சும் என்றறிவாய்!"
"பிறந்த வீட்டுக்குச் செல்ல அழைப்பா?
அறிந்தவர் பேசும் பேச்சா இது நாதா?"
"சரியே நீ சொல்வது வெறும் நாட்களில்
அரிய யாகம் நடக்கும்போது அல்லவே!
பிடிவாதம் பிடித்தாள் தாட்சாயணி .
நடராசனால் தடுக்க இயலவில்லை.
கணவன் கட்டளையை மீறிச் சென்றாள்
கணவனை பழிக்கும் யாகத்தைக் காண!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
தக்ஷப் பிரஜாபதி பிரமனின் மைந்தன்;
தவம் செய்தான் இவ்வரங்களைக் கோரி;
"தேவர்கள் அடிபணிய வேண்டும் எனக்கு;
தேவி உமை பிறக்க வேண்டும் மகளாக!"
பிறந்தாள் தேவி உமை தாட்சாயணியாக;
சிறந்தாள் கயிலை நாதன் மனைவியாக.
மகளைக் காணக் கயிலை சென்றான் தக்ஷன்
மகேஸ்வரன் மரியாதை தரவில்லை எழுந்து.
"மாமனாருக்கு மரியாதை தராத மருமகனா?"
மகேஸ்வரனிலும் உயர்ந்தவன் ஆவேன் நான்!"
யாகத்தைத் துவக்கினான் தக்ஷப் பிரஜாபதி.
யாவருக்கும் அழைப்பு சிவபிரானைத் தவிர
தாட்சாயணிக்கும் வரவில்லை அழைப்பு!
தாங்கவில்லை அவளுக்குத் தள்ளி வைத்தது.
தந்தைப் பாசம் உந்தித் தள்ளியது அவளை!
தந்தையின் யாகத்துக்குச் செல்ல வேண்டும்
"மதியாதார் வாயில் மிதியாமை நன்று
மதியணி நாதன் விளக்கிக் கூறினான்
அழையாதார் இல்லம் நாடிச் சென்றால்
அவமானம் தான் மிஞ்சும் என்றறிவாய்!"
"பிறந்த வீட்டுக்குச் செல்ல அழைப்பா?
அறிந்தவர் பேசும் பேச்சா இது நாதா?"
"சரியே நீ சொல்வது வெறும் நாட்களில்
அரிய யாகம் நடக்கும்போது அல்லவே!
பிடிவாதம் பிடித்தாள் தாட்சாயணி .
நடராசனால் தடுக்க இயலவில்லை.
கணவன் கட்டளையை மீறிச் சென்றாள்
கணவனை பழிக்கும் யாகத்தைக் காண!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
Last edited: