!#11d. அரசு பரிசு!
பட்டத்துயானை புதுஅரசனாக மாலை சூட்டி;
பல்லி நகர அரசன் வல்லவராஜனின் மகன்
தக்கனைத் தேர்வு செய்த செய்தி பரவியது
தீக்காற்றுப் போல திசை எங்கும் உடனேயே!
நல்வினைப் பயனைக் கேட்டறிந்த அரசன்
வல்லவராஜன் விரைந்தான் மகனைக் காண!
தக்கனும் எதிர் சென்றான் தாய் கமலையுடன்;
தக்க மரியாதைகள் அளித்து வரவேற்றான்.
விநாயகர் மேலும் கருணை பொழிந்தார்.
வீரசேன அரசன் கனவில் தோன்றினார்.
"கௌண்டின்யபுர மன்னன் தக்கனுக்கு
குமாரியை மணம் புரிந்து தருவாய்!" என;
கனவைக் கூறினான் மதி மந்திரிகளிடம்,
காலை எழுந்தவுடன் அரசன் வீரசேனன்.
தக்கனைப் பற்றி அறிந்து இருந்த அவர்களும்
"தக்க மணமகன் தக்கனே!" என்று கூறினர்.
சென்றான் வீரசேனன் கௌண்டின்யபுரம்;
செப்பினான் கனவை பெற்றோர்களுக்கு!
வல்லவராஜனும், கமலையும் மகிழ்ந்திட
நல்ல நாளில் நடந்தது அந்தத் திருமணம்.
வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி.
பட்டத்துயானை புதுஅரசனாக மாலை சூட்டி;
பல்லி நகர அரசன் வல்லவராஜனின் மகன்
தக்கனைத் தேர்வு செய்த செய்தி பரவியது
தீக்காற்றுப் போல திசை எங்கும் உடனேயே!
நல்வினைப் பயனைக் கேட்டறிந்த அரசன்
வல்லவராஜன் விரைந்தான் மகனைக் காண!
தக்கனும் எதிர் சென்றான் தாய் கமலையுடன்;
தக்க மரியாதைகள் அளித்து வரவேற்றான்.
விநாயகர் மேலும் கருணை பொழிந்தார்.
வீரசேன அரசன் கனவில் தோன்றினார்.
"கௌண்டின்யபுர மன்னன் தக்கனுக்கு
குமாரியை மணம் புரிந்து தருவாய்!" என;
கனவைக் கூறினான் மதி மந்திரிகளிடம்,
காலை எழுந்தவுடன் அரசன் வீரசேனன்.
தக்கனைப் பற்றி அறிந்து இருந்த அவர்களும்
"தக்க மணமகன் தக்கனே!" என்று கூறினர்.
சென்றான் வீரசேனன் கௌண்டின்யபுரம்;
செப்பினான் கனவை பெற்றோர்களுக்கு!
வல்லவராஜனும், கமலையும் மகிழ்ந்திட
நல்ல நாளில் நடந்தது அந்தத் திருமணம்.
வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி.