A poem a day to keep all agonies away!

# 37. A poem a day to keep agonies at bay!

கூழும் வேண்டும், மீசையும் வேண்டும்!

ஜூலை மாதம் வருந்தி வருந்தி அழைத்தனர்
ஜம்மென்று மௌண்ட் ரஷ்மோர் செல்வதற்கு!

நல்ல கிளைமேட் ! உடல் நிறைய சக்தி இருந்தது.
பொல்லாத மனம் மட்டும் ஒத்துழைக்கவில்லை.

"வேண்டாம் வேண்டாம்!" என்று மறுத்துவிட்டு
"வேண்டும் வேண்டும்!" என்றோம் நவம்பரில்.

SUB ZERO TEMPERATURE என்றவுடனே
சப்த நாடியும் அடங்கி விட்டது இருவருக்கும்!

விடவும் மனம் இல்லை! போகவும் துணிவில்லை!
விட்டால் இன்னமும் வயது கூடும் அல்லவா?

இறுதியில் வென்றது கூழ் தான்! மீசை அல்ல!
உறுதியுடன் குளிரை சமாளித்துச் சென்று வந்தோம்.

ஊதல் காற்று என்று ஏன் பெயர் தெரியுமா?
ஊதல் சப்தம் கேட்கிறது அது வீசும் போது!

உடையைத் துளைத்து, எலும்பைத் துளைத்து
உடலையும் துளைக்கும் வல்லமை வாய்ந்தது!

கார்கள் எல்லாம் frost icing உடன் நின்றன
காலையில் கலர்ஃ புல் கேக்குகளாக மாறி!

சிகரெட் இல்லாமலேயே புகை விட்டோம்
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும்!

விரல் நுனிகள் மட்டும் ஐஸ் கட்டிகள் ஆயின.
விரல் நுனிகளில் ரத்த ஓட்டம் குறைவு தானே!
 
# 38. A poem a day to keep agonies at bay!

சிரிப்பு எங்கே போனது?

மூன்று மாதக் குழந்தையுடன் முழுதாக
மூன்று மாதங்கள் தங்கி விட்டு வந்தால்

என்ன என்ன மாறுபடும்? எது வேறுபடும்?
மின்னும் சிரிப்பு மறைந்து விடும் முதலில்!

எண்ணவே என்னவோ செய்யும் அடுத்தது!
கண்ணனுக்கும் கூட அது போலவே தான்!

கண்கள் விரியக் கன்னம் குழியச் சிரிக்கும்
கண் திருஷ்டிபடும் சிரிப்பு எங்கே போனது?

 
......... கண்கள் விரியக் கன்னம் குழியச் சிரிக்கும்
கண் திருஷ்டிபடும் சிரிப்பு எங்கே போனது?
கணினி எதற்கு?

கண்ணனைப் பிரிந்து வந்த பின்னும்,
இன்னமும் மனம் அவனை எண்ணும்!

மழலைக் குரலும், அழகுச் சிரிப்பும், நம்
மனதை விட்டே அகலாமல் இருக்கும்!

கணினி ஓர் அடிப்படைத் தேவையான
இனிய இந்நாளில் புலம்புதல் நலமோ?

தினமும் அவனைக் கண்டு களித்திட,
மனமும் நிறைவாய் மகிழ்ச்சி எய்திட,

உண்டு 'விடியோ காமரா'ப் பேச்சுக்கள்!
நன்று; அவைகளில் பேசி மகிழுங்கள்!

மனம் நிறையக் கண்ணன் இருந்தாலும்,
தினம் காணலாம் அவனை, கணினியில்!

:ranger: . . . :dance:
 
கணினியில் கண்டதும் நம்மிடம் எடுத்துக்
கண்ணன் கொஞ்சச் சொல்லும்
பொழுது

கணினி வழியாகக் கொஞ்சுவது எப்படி???
கண்ணனின் அழுகையை மாற்றுவது எப்படி???
 
கணினி வழியாகக் கொஞ்சுவது எப்படி???
நினப்பத்தெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை

நடந்ததயே நினத்திருந்தால் அமைதி என்றுமில்லை!!
க்ண்ணனை தினமும் கவிதையில் உருவகபடுத்தி நீங்கள் எழுதி மனநிறைவு காணலாம்!!
நாங்களும்அற்புதமான கவிதயை ரசிக்கலாம்....
 
# 39. A poem a day to keep agonies at bay!

Restaurant style!

நாக்குச் செத்துக் கிடப்பவர்களுக்கு
நம்ம ஊர் சமையல் ரொம்பப் பிடிக்கும்!

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
என்று அழைப்பர் நண்பர்களை
விருந்துக்கு!

எல்லாமே restaurant ஸ்டைல் தான் அப்போது.
எல்லோரும் உண்பதும் அப்போது unlimited food
!

அப்படித் தானே விளம்பரம் செய்கிறார்கள் இங்கு!
unlimited masal dosa - one of the top ten foods !

இதிலும் கூடவா அந்த ' டாப் டென்' வரிசை??
?
எதிலும் அது இருக்கும் போலத் தோன்றுகிறது.

முதலில் தொடங்கிய அந்த restaurant ஸ்டைல்
முடிவு வரையிலும் தொடருவது உண்மைதான்!

எல்லோரும் உண்ட பிளேட்டை
வைத்துவிட்டு
செல்வார்கள் ஸ்டைலாக எழுந்து நடந்து.

Restaurant என்றால் செக்கும், மேலே டிப்சும்
மறக்காமல் வைத்துவிட்டுப் போவர்கள்
!

மறந்து விடுவார்கள் இங்கே செக்கும் டிப்சும்.
மறக்காமல் இங்கே விடுவது plate மட்டுமே!

'மகன் எடுக்கக் கூடாது' என நான் முந்திக் கொள்ள
மகன் 'நான் எடுக்கக்கூடாது' என்று வந்து முந்த

பெண்களின் புத்தி பின்புத்தியாக வேலை செய்து
பெண்களே பின் எடுத்தார்கள் தட்டுக்களை
.

அன்பினால் செய்கின்றோம் நாம் நம்முடைய
உடல் சக்திக்கு மீறிய
கடின வேலைகளை.

துன்பம் விளைகிறது மனதில் ...அதே அன்பு
உண்பவர்கள் மனதில் இல்லாது போனால்.

 
# 40. A poem a day to keep agonies at bay!

Unlimited craze!

Unlimited என்று உற்சாகமாக
உள்ளே தள்ளுவதன் பலன்...

ஸ்மால், மீடியம், லார்ஜ் மாறி
XL, XXL, XXXL என்றாகிவிட்டது!

உணவு unlimited ஆனாலும்
உடலும், இதயமும் limited!!!

கால்கள் எத்தனை பளு தாங்கும்?
கால்வரை ரத்தம் செல்வதற்கு

எப்படித் துடிக்கும் இதயம் என்று
என்றாவது சிந்திக்க வேண்டாமா?
 
சிந்தைக் கவரும் Disney On Ice
இந்த வெள்ளியன்று காண்போம்.

சிந்தையில் நிற்கும் பலவிதமான
விந்தை மனிதர்களைக் காண்பேன்.

இந்தத் தொடர் தொடரும் மீண்டும்
சொந்த நாடு நான் திரும்பிய பின்னர். :wave:
 
# 41. A poem a day to keep agonies at bay!

ஸ்டேட் பேங்க் சார்லி.

சிலருக்குப் பிறரைக் காக்க வைப்பதில்
அலாதி ஆனந்தம் ஏற்படுவது உண்மையே!

எத்தனை நேரம் காக்க வைக்கின்றார்களோ
அத்தனை பெரிய புள்ளி என்று நினைப்பு.

ஸ்டேட் பேங்க் டெல்லர் சார்லீயும்
சந்தேகம் இல்லாமல் இந்த ரகம் தான்!

கால் மணி நேரம் கால் கடுக்க நிற்கணும்
காலியாக பேங்க் இருந்த போதிலும்!

ஒரு நாள் சிரித்துக் கொண்டே சொன்னேன்
"இரு வழிகள் உள்ளன பெருமையைக் காட்ட!

ஒரு வழி ஓடி வந்து உதவி செய்வது என்றால்
மறு வழி முடிந்த அளவு உபத்ரவம் செய்வது !"

மனிதர் முகத்தில் ஈயாடவில்லை ...அவரே
இனிய நண்பர் ஆகிவிட்டார் அதன் பிறகு!

அப்புறம் என்ன ராஜ பாட்டைத்தான்
எப்போதும் என் பேங்க் வேலைகளுக்கு!



 
# 42. A poem a day to keep agonies at bay!

யாருக்கும் வெட்கம் இல்லை.

ரொம்பும் பொருத்தம் தான் இந்த
ரொம்பவும் சுவையான தலைப்பு.

இருக்கும் மரத்தை வெட்டினால்
இருப்பது சிறந்த மரம் என்பார்கள்!

இது இன்று நிஜம் ஆகிவிட்டது
இங்கு அங்கு என்னாதபடி எங்கும்!

முந்த முடியவில்லையா அதை/ அவரை
முயன்று முடித்து விடுங்கள் எப்படியாவது.

அரசியலில் கொலை சர்வ சாதாரணம்.
அரசியலில் இல்லாத சாதாரணமான

பிறரால் இதைச் செய்ய முடியாது!
பிற வழிகளை நாடுவார்கள் அவர்கள்.

எட்ட நின்று பார்க்கும் போது தெரியும்
எட்டப்பன் வேலைகள் எல்லாம நன்றாக!

அப்போது மனதில் தோன்றும் இந்த தலைப்பு
எப்போதும் வெட்கம் இல்லை மனிதனுக்கு!


 
# 43. அழகிய ஹான்டில்!!!

Modular கிட்சன் தான் இன்று
மாடர்ன் கிட்சன் உலகெங்கும்!

எவ்வளவு சிறியதோ கிட்சன்
அவ்வளவு சிறந்தது கிட்சன்!

அங்கே
அத்தனை பொருட்களும்
எங்கோ ஒளிந்திருக்கும் உள்ளே

எல்லா கதவுகளுக்கும் அழகிய
நல்ல கைப்பிடி பொருத்த வேண்டும்.

அத்தனை வடிவுகளிலும் பிடித்தது
அத்தனை பேருக்கும் ஒன்றே தான்!

எங்கோ பார்த்திருக்கிறேன் இதை!
எங்கு பார்த்தோமோ நினைவில்லை!

முப்பது கைப்பிடிகள் வந்தன இல்லம்
அப்போதே பொருத்தலானான் மகன்.

டெஸ்க் டாப் அருகே சென்று அமர
டெஸ்க் டாப் draw வில் அதே ஹன்ட்டில்!!!

ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும்
எவ்வளவு முறை அதைப் பார்த்திருப்போம்!!!

பார்ப்பது வேறு, கவனிப்பது வேறு என்று
ஏற்பட்டது நல்ல ஞானம் அன்று!!!

 
Last edited:
#46. Play dough

களிமண் மண்ணாங்கட்டி என்று
இழிவாகப் பேசுகின்றோமே நாம்!

களிமண் மகிமை எங்கு வந்தால்
தெளிவாகப் புரியும் எல்லோருக்கும்.

பிளாஸ்டிக் மாவுபோல உள்ளது அது.
play dough என்ற பெயர் அதற்கு.

அதில் விளையாடாத குழந்தை இங்கு
அபூர்வம் என்றே சொல்லலாம் இன்று.

அத்தனை கலர்களிலும் உள்ளது.
அத்துடன் வரும் அழகிய மோல்ட்கள்.

எந்த உருவத்தை வேண்டுமானாலும்
எளிதாக உருவாக்கலாம் எவரும்.

வருங்காலச் சிற்பிகளை எளிதாக
உருவாக்கும் திட்டமோ இது???
:noidea:
 
#47. ஊர் முழுக்க A .C !

Thanks Giving Day அன்று வெளியே
தின்பண்டம் எதுவும் கிடைக்காது!

அன்றைக்கு வேண்டிய உணவு முழுதும்
அன்றைக்குப் பேக் செய்து கொண்டோம்.

ஒரு வேளை உணவு கெட்டு விட்டால்....?
ஒரே வார்த்தையில் மகன் சொன்னான்!

"ஊர் முழுக்க ஓசியிலேயே A. C மம்மி!
உணவு கெடவே வாய்ப்பில்லை!" என்று.

உண்மை ஆயிற்று அவன் சொன்னது.
உணவு புதியது போலவே இருந்தது

ஒருமுறை மைக்ரோ வேவ் செய்ததும்!
விரும்பி உண்டோம் அதை அனைவருமே!
:hungry:
 
#48. Twice the cash and half the dress

டூர் போகும் போது அனைவரும்
செய்ய வேண்டுமாம் இவ்வாறு!

பேக் செய்த உடைகளில் ஒரு
பாதியை எடுத்து விட வேண்டும்.

எடுத்துக் கொண்ட பணத்தை
இரு மடங்காக்க வேண்டும்!

அதன் சுலபமான பார்முலா
இதன் ஆங்கிலத் தலைப்பு!!!

But in the age of credit cards and ATM found everywhere
this does not make sense except for the old fashioned people!

 
#49. உலகம் சிறியதே!

மார்கழி பிறந்தால் பாடவேண்டும் கோவிலில்
பார்புகழும் திருப்பாவை, திருவெம்பாவைகள்.

பார்த்தது யாரை அன்னையின் கோவிலில்???
பார்க்க விரும்பாத அந்த மூன்று தேவியரை!

கருத்தம்மா! கண்ணம்மா!! கிண்ணம்மா!!!
கருத்தம்மா ஒரு காரணப் பெயர் தான்.

கண்ணாம்மா சின்னத் திரைத் தாரகை!
கிண்ணம்மா
வும் காரணப்பெயர் தான்...

கண்ணம்மா கிண்ணம்மா என்று அல்ல!!!
கிண் என்று high density பேக்கிங் அதனால்!
 
இது என்ன சோதனை?

மின்னல் ராணி மறைந்து ஓராண்டு
மின்னல் வேகத்தில் ஓடிவிட்டதே!

கண்ணீர் அஞ்சலி என்று வால்போஸ்ட்
கண்கண்ட இடமெல்லாம் உண்டு இன்று!

இதயக்கனி அவர்களுக்கும் வால்போஸ்ட்
இதயம் வருந்தும்படி மின்னல் ராணி அருகே!

"மறக்க முடியுமா உன்னை?" என்ற வாசகம்
இரண்டிலுமே கண்டதும் மனவேதனை ஏன்???

மின்னல் ராணி ஒரு வெள்ளி மூக்கு குதிரை.
அண்ணலுக்குச் சமமான இடம் அதற்குமா???
 
"சிந்தி அல்லது பிந்து!" வந்த பிறகு
விந்தை மனிதர்களைப் பற்றி நான்

சொந்தக் கவிதைகளை எழுதும் தேவை
இந்த நாள் முதல் இல்லை அல்லவா?

வினாயகர் பற்றி எழுதும் ஆவல்
வெகு நாட்களாக உள்ளது உள்ளத்தில்.

குணநிதியாகிய கணபதியே அதற்கு
அனுமதியும் அருளும் தரவேண்டும்.

விரைவில் மீண்டும் சந்திப்போம் நாம்
விநாயகனின் கதைத் தொடருடன்! :pray2:
 
சங்கரன் மகன் விக்ன விநாயகன் கதை

சங்கடஹர சதுர்த்தியன்று கிடைத்தது.

விரும்பியபடியே விநாயகர் புராணம்

விரைவில் வளரும் இந்த இழையில்! :pray2:
 
images



வாக்கு உண்டாம்: நல்ல மனமுண்டாம்: மாமலராள்
நோக்கு உண்டாம்: மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து

பிடி அதன் உரு உமை கௌமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.
 
Last edited:
I am trying to catch up with the blogging of the poems
in Kandapuranam from 6 #13 d onward.

Nearly 50 more poems need to be blogged.

Vinayaka puranma will be blogged after
completing Kanda puraanam in easy instalmentsl
 
Back
Top