A poem a day to keep all agonies away!

# 32. A poem a day to keep the agonies at bay.

ஊசி போல உடம்பு!

அமெரிக்காவில் வின்டரில் குளிர் துளைக்கும்

ஊசி போல, உடலை எலும்பு வழியே ஊடுருவி!

பனிக்கட்டியின் உறைநிலை நிலவும் போது

குளிர்காற்றும் சேர்ந்து கொண்டால் பிறகு!!!

sweater + cap + glouse போட்டுக் கொண்டு

முழங்காலால் நான் Morse கோடு அடிக்கும்போது

ஊசிபோல ஒருவரைக் கண்டு வியந்து நின்றேன்.

வெறும் ஒரு டீ ஷர்ட் + ஜீன்ஸ் மட்டும் அணித்து

டக் டக் டக் என்று நடந்து செல்வதைக் கண்டு!

அந்தக் குளிரில் சிவாஜி போல அந்த நடையா?

அவரும் ஓருவேளை "cold blooded" ஆனவரா???
 
# 33. A poem a day to keep the agonies at bay.

டம்ளர் என்று ஏன் பெயர்???

அடி குறுகியும் மேல் விட்டம் விரிந்து
அமைந்தது அந்தத் தம்ப்ளர் எதற்காக?

எல்லோருக்குமே தெரியும் அது கையால்
எளிதாக ஐந்தை எடுத்துச் செல்வதற்காக.

ஆறு விரல்கள் இருந்தால் எளிதாக
ஆறு தம்ப்ளர்களையும் எடுக்கலாம்!

வசதிக்காக செய்வதே சில சமயம்
வம்பில் மாட்டிவிடும் நம்மை.


விழித்த முகம் சரியில்லை என்றால்
விபரீதங்கள் விளைந்து விடும்!

காலையில் பால் தம்ப்ளர் பணால்!
பாலாறு பெருகி ஓடியது தரையில்.

நடுப்பகலில் நீரோடை பெருகியது.
நனைந்தது ஒரு FRIED RICE PLATE

அதன் பிறகு ஜூஸ் கிளாஸ் டமால்!
அதன் பிறகு புரிந்தது பெயர்க்காரணம்!

TUMBLE ஆவதால் அது தம்ப்ளர்!!!

 
# 34. A poem a day to keep the agonies at bay.

ஃப்ரீ ப்ரேக் ஃபாஸ்ட்

நல்ல லாட்ஜுகளில் இது கிடைக்கும்.
நல்ல முறையில் அமைக்கிறார்கள்

அத்தனை வகைச் சிற்றுண்டிகளையுமே!
எத்தனை வேண்டுமானாலும் உண்ணலாம்!

கூட்டமாக இருக்கும் என்று நினைத்தால்
கூட்டம் ஒரேசமயத்தில் வருவதில்லை.

ஆறு முதல் ஒன்பது வரை என்றால்
ஆட்கள் ஒன்பதுக்குப் பிறகும் வருகை!

எதுவும் உண்ணாமல் திரும்ப நேர்ந்தது!
எல்லாம் அங்கு வைத்து இருந்த போதிலும்.

ஒன்பது மணிக்கு SECTION IN CHARGE
ஒரு போர்டை மாட்டிவிட்டுச் சென்று விட்டார்.

BREAKFAST BAR CLOSED என்று!
ஃ ப்ரீ உணவை உண்ணவும் லேட்டாக வருவதா???


"பந்திக்கு முந்து! படைக்குப் பிந்து!" போன்ற
பழமொழிகள் அந்த ஊரில் கிடையாதோ???
 

'பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து' என்பதற்கு, திருமுருக கிருபானந்த வாரியார் நல்ல விளக்கம் அளித்தார்!

நம்ம ஊர்ச் சாப்பாட்டு ராமன்கள்
இதற்கு, 'இலை போட்டதும் முந்த வேண்டும்; படை திரட்டும்போது பிந்த வேண்டும்', என்று

அர்த்தம் சொல்லுவார்கள். ஆனால், இது ஒரு விடுகதையாகக் கேட்பது. 'பந்திக்கு முந்தும்; படைக்குப் பிந்தும்; அது என்ன?'

விடை: வலது கை. அது, சாப்பிடும்போது,
உணவை எடுக்க முன்னே செல்லும்; போரில், வாளை ஓங்கப் பின்னே செல்லும்! :)
 
ஒரு முறை சுமங்கலி பிரார்த்தனைக்குக் கோலம் போட்டது போல இருந்தால்
பந்திக்கும் கை பின்னால் தான் போகவேண்டி இருக்கும்!
ஏன் என்றால் இலை நமக்குப் பின்னால் இருந்து இருக்கும்!!!
:becky:
 
TUMBLE ஆவதால் அது டம்ப்ளர்?? :decision: TUMBLE ஆவதால் அது தம்ப்ளர்??
 
டம்பளர் கீழே டம்பள் ஆகாமல் இருக்க டபரா என்று ஒன்று கொடுக்கிறார்களே!!
 
· இது கவிதை என்று நான் கூறவில்லை.எல்லா கடைவீதிகளிலும், பேருந்துகளிலும் தினமும் காணும் காட்சியை இங்கு எழுதியுளேன். யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.



வெளியே பளிச்சென்று தெரியவேண்டிய மாங்கல்ய சரடு

உள்ளே மறைந்திருக்க,
ம்றைந்திருக்க வேண்டிய இளமையும் அழகும் பளீரென்று
துப்பட்டாவும் தலைப்பும் இல்லாமல்
வெளியே தெரிய
தன்னைப்பற்றிய சகல த்கவல்களும் தரும் கணிப்பொறி
வர்தகத்தின் முகவன் அட்டை க்ழுத்தில் தொங்கி
வெளியே தெரிய
சென்னையில் எங்கும் வலம் வரும் பெண்கள்!!
 
டம்பளர் கீழே டம்பள் ஆகாமல் இருக்க டபரா என்று ஒன்று கொடுக்கிறார்களே!!
நண்பரே! டம்ளர் Tumble ஆனது அமெரிக்க நாட்டில்! அங்கு ஏது டபரா?

எங்கள் மகன் வீட்டிலும் குடி நீர் வைக்கக் கண்ணடி டம்ளர்தான்! காபிக்கு Mug! :D

P.S: tum·bler / ˈtəmblər/

Noun:

1. A drinking glass with straight sides and no handle or stem.


2. An acrobat or gymnast, esp. one who performs somersaults.
 

மனோஹர் சார்!

நீங்கள் எழுதிய வரிகள் நிஜம் என்று எல்லோரும் அறிந்தாலும், இதைச் சொல்லுவோருக்கு

ஒரு பெயர் உண்டு: 'வக்ர புத்தி'!! ஏதோ அனுபவத்தில் சொல்லுகிறேன். :blah:
 

தாலியை அணிந்துகொண்டாலே சந்தோஷப்பட வேண்டிய காலமாக மாறிவருகின்றது!


நேரம் இருந்தால் கீழே காணும் Blog - ஐப் படியுங்கள்!


Thaali thevaiya???


'விவாத மேடை' அமைக்கும் நோக்கத்தால் இதை இடவில்லை;

எனவே, விவாதங்களைத் தவிர்க்கவும்!
மிக்க நன்றி. :)

 
டம்பளர் கீழே டம்பள் ஆகாமல் இருக்க டபரா என்று ஒன்று கொடுக்கிறார்களே!!

50 அல்லது 100 மில்லி காபிக்கு டவரா மிகவும் தேவை.

இல்லாவிட்டால் பிடிக்கமுடியாது அந்த மினி டம்ப்ளரை!

இங்கே 500 மில்லி காபி/ கூல் drink / தண்ணீர் தான் மினிமம் .

இதற்கு எவ்வளவு பெரிய டவரா தேவைப்படும் !!!
:faint:
 
· இதுகவிதைஎன்றுநான்கூறவில்லை.எல்லாகடைவீதிகளிலும், பேருந்துகளிலும் தினமும் காணும் காட்சியை இங்கு எழுதியுளேன். யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.



வெளியே பளிச்சென்று தெரியவேண்டிய மாங்கல்ய சரடு

உள்ளே மறைந்திருக்க,
ம்றைந்திருக்க வேண்டிய இளமையும் அழகும் பளீரென்று
துப்பட்டாவும் தலைப்பும் இல்லாமல்
வெளியே தெரிய
தன்னைப்பற்றிய சகல த்கவல்களும் தரும் கணிப்பொறி
வர்தகத்தின் முகவன் அட்டை க்ழுத்தில் தொங்கி
வெளியே தெரிய
சென்னையில் எங்கும் வலம் வரும் பெண்கள்!!

புண்படும் மனம் கொண்ட நல்ல பெண்கள்
பண்ண மாட்டார்கள் இது போன்ற செயல்களை!

எதற்கும் துணிந்தவர்களின் மோட்டோ தான்
எதையும் செய்யத் தயார் என்ற அறிவிப்பு!

இந்திய ஆண்கள் மிகவும் மனக் கட்டுப்பாடு உள்ளவர்கள்!
:thumb:
 
# 35. கிளுகிளு! கிசுகிசு!

ரோடோரம் நின்று கொண்டும் சீறி வரும்
ஆட்டோக்களையும் தவிர்த்துக் கொண்டும்

சுவாரசியமாகப் படிப்பது சுவரொட்டிகள்!
சுவையான, திகிலான செய்தித் தலைப்புகள்!

ஒரு நாள் செய்தி படிக்காவிட்டாலும் சரிதான்
நூறு துண்டுகள் ஆகிவிடும் போலும் மண்டை!

தமிழ்ப் பத்திரிகையில் உள்ள திடீர் சுவாரசியம்???
தமிழ் பற்று இல்லாதவர்களிடம் காணும் அதிசயம் !!!

குட்டு வெளிப்பட்டது ஒரு நன்னாள் மாலை நேரம்.
எட்ட நின்று கம்ப்யூடர் திரையைக் கண்ட போது!

வம்பை வளர்த்துவெம்பிப் பழுக்க வைக்கும்
நம்ப முடியாத பலானஅறிவுச் சுரங்கங்கள்!

குனித்து கொண்டு எப்போதும் எதையோ தேடும்
இனிக்(இளிக்)கும் அரைகுறை ஆடை அழகிகள்.

(அரை குறை ஆடை = 50% ஆடைகள். எனவே இவை
முக்கால் குறை ஆடைகள்... 25% மட்டுமே இருப்பதால்!)

கிளுகிளுவும், கிசுகிசுவும், படாத பாடு படுத்தும்
கிழ, வயோதிக, வாலிப அன்பர்களை! உண்மை!

 
Smt Vishalakshi madam
[h=1]Where Did the Term “Tumblers” For Drinking Glasses Come From and What Does the Word Mean?[/h] In 1945, Earl Tupper produced his first polyethylene plastic seven-ounce bathroom tumbler, so called because it could fall or tumble without breaking.
But a “tumbler” drinking glass had already been around for centuries before Tupperware.
It was specially designed with a round or pointed bottom so that it couldn’t stand upright and had to be drunk dry before it could be laid on its side, otherwise it would tumble and spill.
That’s why drinking glasses are sometimes called “tumblers”.
Where Did the Term “Tumblers” For Drinking Glasses Come From and What Does the Word Mean? | Big Site of Amazing Facts ®
 
கால் குறை பெரிதா அல்லது முக்கால் குறை பெரிதா?

எடுத்த எடுப்பில் எல்லோருமே முக்கால் குறை தான் பெரிது என்பார்கள்.

உண்மையில் கால் குறை தான் பெரிது.

காரணம்...???

அரை குறை என்றால் 50% குறைகிறது.

அதனால் அரை குறை = (100 - 50) = 50%

முக்கால் குறை என்றால் (100 - 75) = 25%

கால் குறை என்றால் (100 - 25) = 75%

இப்போது கூறுங்கள் எது பெரிது என்று!


முழுக் குறை ஆகாத வரையில் சரி
தான். :scared:
 
ref #1641.
dear sir,
thank you for your long post.
I am not doing research on tumblers or drinking glasses.
This is just a fun poem to share my recent experiences
involving my super naughty and over active grand son!
:)
 
In 1945, Earl Tupper produced his first polyethylene plastic seven-ounce bathroom tumbler,

so called because it could fall or tumble without breaking.


I am glad this agrees with what I had written! :)
 
This is just a fun poem to share my recent experiences
involving my super naughty and over active grand son!
:)
Dear VR maam,
God Bless your ever active & naughty grandson, for he ha sbeen responsible for bringing out many a nice poems on childrens & and their activities from you!!

Cheers.
 

'அரை குறை' என்பதைக் கேட்டுள்ளேன்! :ear:

'கால் குறை', 'முக்கால் குறை' என்று கேட்டதே இல்லையே!! :confused:

அப்படி இருந்தாலும்,

முக்கால் குறையில் குறை
பெரிது; நிறைதான் சிறிது!

கால் குறையில் குறை
சிறிது; நிறைதான் பெரிது!

ஃ கால் குறை, முக்கால் குறையை விடச் சிறந்தது!! :decision:
 

'அரை குறை' என்பதைக் கேட்டுள்ளேன்! :ear:

'கால் குறை', 'முக்கால் குறை' என்று கேட்டதே இல்லையே!! :confused:

அப்படி இருந்தாலும்,

முக்கால் குறையில் குறை
பெரிது; நிறைதான் சிறிது!

கால் குறையில் குறை
சிறிது; நிறைதான் பெரிது!

ஃ கால் குறை, முக்கால் குறையை விடச் சிறந்தது!! :decision:


​Great minds think alike!! :thumb:
 
# 36. A poem a day to keep agonies at bay!

JET LAG VS GET
TOGETHER

ஒன்றரை வயதுப் பேரன் இந்தியா வந்தான்
மூன்று வார விடுமுறையில் என் மகனுடன்
!

பிரார்த்தனைகளும் சில வேண்டுதல்களும்
பின் தொடர்ந்து வந்தன நான்கு ஆண்டுகளாக!

கல்யாண உற்சவம் முதன்மை வேண்டுதல் !
கந்தனின் தங்கத் தேர் இழுப்பது இரண்டாவது!

குலதெய்வங்களின் கோவில் விசிட் மூன்றாவது.
குடும்பத்தினரை விசிட் செய்வது நான்காவது.

இருப்பதோ ஏழு நாட்கள் மட்டுமே எங்களுடன்.
இருக்கும் அந்த ஏழு நாட்களில் என்ன முடியும்?


ஜெட் லேக் வந்தது போதாது என்பது போல
ஜெட் லேக் உடன் வந்தது ஜலதோஷமும் கூட!

பகல் முழுவதும் அவர்கள் அசந்து உறங்கினார்கள்.
பகல் ஆக்கினார்கள் நம்முடைய இரவுப் பொழுதை.

வீடு முழுவதும் ஓடி ஓடி இறைத்தான் பேரன்
வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும்.

மெர்குரி என்று அவனுக்குப் பேர் வைத்தேன்
.
மெர்குரி தினம் வீட்டில் செய்ததோ சுனாமி!

எப்படியோ பிரார்த்தனைகளை முடித்தோம்
எங்களுடன் இருந்த அந்த ஒரு வாரத்தில்.

கல்யாண உற்சவத்தில் கண்மூடி உறங்கிப் போனது
கண்டுபிடியுங்கள் யார் என்று! சாக்ஷாத் நானே தான்!

 
Back
Top