5#2a. தெய்வயானை திருமணம்.
பகைவனை அழித்து அருளியவனுக்கு ஓர்
உகந்த பரிசினை அளிக்க வேண்டுமே!
பொற்கொடி போன்ற தன் வளர்ப்புமகளை
உற்ற மனையாளாக ஆக்க விரும்பினான்.
இந்திரன் கருத்தினை அறிந்த தேவர்கள்
அந்தமில்லாத மகிழ்ச்சியை அடைந்தனர்.
"முந்நாளில் தவம் செய்தாள் தெய்வயானை,
இந்நாளில் முருகனை மணக்க விரும்பி!"
தூதுவனை அழைத்தான் அமரர்கோன்.
"ஏகுவாய் நீ காற்றெனக் கடுகி விரைந்து.
பொன் மேருவில் வாழ்ந்து வருகின்ற
என் மகளை, மனைவியைக் கொணர்க!'
மேருமலை சென்றான் தூதுவன் உடனே,
பேருவகையுடன் கண்டான் அவர்களை.
"சூரபத்மனை வென்றுவிட்டான் குமரன்,
சூரபத்மனின் சிறை மீண்டனர் அமரர்.
திருப் பரங்குன்றம் சேர்ந்த முருகனுக்குத்
திருமணம் செய்யவேண்டும் உம் மகளை.
உடன் புறப்பட்டு வரவேண்டும் தாயே!
தடையின்றித் திருமணம் நடை பெற்றிட."
ஒற்றனின் மொழி கேட்டு மகிழ்ந்தனர்
பொற்கொடியும் அவள் அன்னையும்
துன்பம் தொலைந்தது! இன்பம் வந்தது!
வெண்ணிறயானை மீது ஏறி அமர்ந்தனர்.
அரம்பையர் புடை சூழ அடைந்தனர்
பரங்குன்ற மலையை விண் வழியே!
கண்ணீர் விட்டாள் கணவனைக் கண்டு!
கட்டியணைத்து உச்சி மோந்தாள் மகனை.
காதல் மனைவியை, மகளைக் கண்டதும்
களிப்பு மிகவும் எய்தினான் அமரர்கோன்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
பகைவனை அழித்து அருளியவனுக்கு ஓர்
உகந்த பரிசினை அளிக்க வேண்டுமே!
பொற்கொடி போன்ற தன் வளர்ப்புமகளை
உற்ற மனையாளாக ஆக்க விரும்பினான்.
இந்திரன் கருத்தினை அறிந்த தேவர்கள்
அந்தமில்லாத மகிழ்ச்சியை அடைந்தனர்.
"முந்நாளில் தவம் செய்தாள் தெய்வயானை,
இந்நாளில் முருகனை மணக்க விரும்பி!"
தூதுவனை அழைத்தான் அமரர்கோன்.
"ஏகுவாய் நீ காற்றெனக் கடுகி விரைந்து.
பொன் மேருவில் வாழ்ந்து வருகின்ற
என் மகளை, மனைவியைக் கொணர்க!'
மேருமலை சென்றான் தூதுவன் உடனே,
பேருவகையுடன் கண்டான் அவர்களை.
"சூரபத்மனை வென்றுவிட்டான் குமரன்,
சூரபத்மனின் சிறை மீண்டனர் அமரர்.
திருப் பரங்குன்றம் சேர்ந்த முருகனுக்குத்
திருமணம் செய்யவேண்டும் உம் மகளை.
உடன் புறப்பட்டு வரவேண்டும் தாயே!
தடையின்றித் திருமணம் நடை பெற்றிட."
ஒற்றனின் மொழி கேட்டு மகிழ்ந்தனர்
பொற்கொடியும் அவள் அன்னையும்
துன்பம் தொலைந்தது! இன்பம் வந்தது!
வெண்ணிறயானை மீது ஏறி அமர்ந்தனர்.
அரம்பையர் புடை சூழ அடைந்தனர்
பரங்குன்ற மலையை விண் வழியே!
கண்ணீர் விட்டாள் கணவனைக் கண்டு!
கட்டியணைத்து உச்சி மோந்தாள் மகனை.
காதல் மனைவியை, மகளைக் கண்டதும்
களிப்பு மிகவும் எய்தினான் அமரர்கோன்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.