2 # 41. அஜமுகி அரற்றுதல்.
அத்தாணி மண்டபத்தை அடைந்தவுடன்
கத்தி அழலானாள் அசுரமன்னன் தங்கை.
"என்னைக் காத்துத் திரிவேன் என்றாயே!
என்னைக் கை விட்டு விட்டாயே தாயே!"
ஆபத்துக்கு உதவாத சகோதரர் எதற்கு?
ஆண்மையின்றிச் சிலையென நின்றீரே!
இந்திரன் மீன் சுமந்து திரிகின்றானாம்.
இந்திரனின் ஏவலாள் செய்தது காணீர்!
கதிரவனைக் கைப்பற்றிக் கட்டிப்போட்ட
அதிசய மருமகனே என் நிலையைப் பார்!
மாலின் ஆழியை அணிகலன் ஆக்கியவா!
மாதின் கை வெட்டுண்டது அறியாயோ?
முனிவன் பிழைத்திருக்கின்றான் இன்னும்,
தனித்தே என் மகன்களை அழித்த பின்னும்!
நல்லாட்சி நடத்துகின்றாய் அண்ணா நீ!
பொல்லாத உயிர் இனி எனக்கெதற்கு?
அவமானமே என்னைக் கொன்று விடும்.
எவர் முகத்திலும் இனி விழிக்கமாட்டேன்!'
அரற்றிக்கொண்டு துன்முகியுடன் சென்று
புரண்டாள் அண்ணன் கால்களில்விழுந்து!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
அத்தாணி மண்டபத்தை அடைந்தவுடன்
கத்தி அழலானாள் அசுரமன்னன் தங்கை.
"என்னைக் காத்துத் திரிவேன் என்றாயே!
என்னைக் கை விட்டு விட்டாயே தாயே!"
ஆபத்துக்கு உதவாத சகோதரர் எதற்கு?
ஆண்மையின்றிச் சிலையென நின்றீரே!
இந்திரன் மீன் சுமந்து திரிகின்றானாம்.
இந்திரனின் ஏவலாள் செய்தது காணீர்!
கதிரவனைக் கைப்பற்றிக் கட்டிப்போட்ட
அதிசய மருமகனே என் நிலையைப் பார்!
மாலின் ஆழியை அணிகலன் ஆக்கியவா!
மாதின் கை வெட்டுண்டது அறியாயோ?
முனிவன் பிழைத்திருக்கின்றான் இன்னும்,
தனித்தே என் மகன்களை அழித்த பின்னும்!
நல்லாட்சி நடத்துகின்றாய் அண்ணா நீ!
பொல்லாத உயிர் இனி எனக்கெதற்கு?
அவமானமே என்னைக் கொன்று விடும்.
எவர் முகத்திலும் இனி விழிக்கமாட்டேன்!'
அரற்றிக்கொண்டு துன்முகியுடன் சென்று
புரண்டாள் அண்ணன் கால்களில்விழுந்து!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.