#29b. பத்மாவதியின் கனவு
"அழிவுக்கு ஆளாகாமல் வந்துள்ளோம்!
பழிச் செயலைச் செய்திருந்த போதும் !"
கூறினர் பூலோகத்தில் நடந்தவற்றை;
மாறினான் இந்திரன் அதைக் கேட்டதும்.
ஓடினான் பத்மஸரோவருக்கு உடனே;
தேடினான் தவம் செய்யும் பகவானை.
விடவில்லை பற்றிய பாதங்களை அவன்;
எழவில்லை மன்னித்தேன் என்னும் வரை!
"தவறு ஒன்றும் நிகழவில்லை இந்திரா!
தவத்தில் திருப்தி செய்தோம் லக்ஷ்மியை
மனம் உருகி வருந்திடும் ஒருவருக்கு
மன்னிப்பு உண்டு நிச்சயம்!" என்றான்.
இந்திரன் திரும்பினான் இந்திரலோகம்.
சொந்தமாக சிருஷ்டித்த தேவதையிடம்,
"வன தேவதையாக இருந்து காப்பாற்றுவாய்
தினமும் தேடி வரும் பக்தர்களை!" என்றான்.
தவம் தொடர்ந்தது மீண்டும் நெடுங்காலம்;
தவத்துக்கு இரங்கி வரவே இல்லை லக்ஷ்மி.
இருபத்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன;
வருத்தத்தில் மூழ்கியிருந்தாள் பத்மாவதி.
'லக்ஷ்மியுடனேயே தங்கி விட்டாரா அவர் ?
லக்ஷ்மியைத் தேடித் திரிகின்றாரா அவர் ?
கண்டு பிடிக்கவே முடியாதபடி எங்கோ
கண் காணாது ஒளிந்து இருக்கின்றாளா?'
இரவு முழுவதும் உறங்கவில்லை அவள்;
துறவுக் கோலத்தில் கனவினில் கண்டாள்
விடியற்காலை நேரத்தில் ஸ்ரீனிவாசனை!
இடி விழுந்தது போலாகிவிட்டது உள்ளம்!
வகுள மாலிகையிடம் கூறினாள் கனவை;
வெகுவாகத் துயருற்றாள் அதை எண்ணி!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
"அழிவுக்கு ஆளாகாமல் வந்துள்ளோம்!
பழிச் செயலைச் செய்திருந்த போதும் !"
கூறினர் பூலோகத்தில் நடந்தவற்றை;
மாறினான் இந்திரன் அதைக் கேட்டதும்.
ஓடினான் பத்மஸரோவருக்கு உடனே;
தேடினான் தவம் செய்யும் பகவானை.
விடவில்லை பற்றிய பாதங்களை அவன்;
எழவில்லை மன்னித்தேன் என்னும் வரை!
"தவறு ஒன்றும் நிகழவில்லை இந்திரா!
தவத்தில் திருப்தி செய்தோம் லக்ஷ்மியை
மனம் உருகி வருந்திடும் ஒருவருக்கு
மன்னிப்பு உண்டு நிச்சயம்!" என்றான்.
இந்திரன் திரும்பினான் இந்திரலோகம்.
சொந்தமாக சிருஷ்டித்த தேவதையிடம்,
"வன தேவதையாக இருந்து காப்பாற்றுவாய்
தினமும் தேடி வரும் பக்தர்களை!" என்றான்.
தவம் தொடர்ந்தது மீண்டும் நெடுங்காலம்;
தவத்துக்கு இரங்கி வரவே இல்லை லக்ஷ்மி.
இருபத்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன;
வருத்தத்தில் மூழ்கியிருந்தாள் பத்மாவதி.
'லக்ஷ்மியுடனேயே தங்கி விட்டாரா அவர் ?
லக்ஷ்மியைத் தேடித் திரிகின்றாரா அவர் ?
கண்டு பிடிக்கவே முடியாதபடி எங்கோ
கண் காணாது ஒளிந்து இருக்கின்றாளா?'
இரவு முழுவதும் உறங்கவில்லை அவள்;
துறவுக் கோலத்தில் கனவினில் கண்டாள்
விடியற்காலை நேரத்தில் ஸ்ரீனிவாசனை!
இடி விழுந்தது போலாகிவிட்டது உள்ளம்!
வகுள மாலிகையிடம் கூறினாள் கனவை;
வெகுவாகத் துயருற்றாள் அதை எண்ணி!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.