A poem a day to keep all agonies away!

 
01. தீர்த்த மஹிமை

தீர்த்தமாட விரும்பினான் ஓரந்தணன்;
யாத்திரை நீளும் நெடுங் காலம் என

உற்றார் உறவினரிடம் விடை பெற்றுப்
பிற்பாடு யாத்திரை செல்வது வழக்கம்.

கனவிலே தோன்றினார் மஹாவிஷ்ணு!
“கருதுகின்றாய் அகல தீர்த்த யாத்திரை!

புஷ்கர சைலம் என்பது சேஷாச்சலம்;
புனித தீர்த்தங்கள் உள்ளன பதினேழு.

புவனமெங்கும் உள்ள தீர்த்தங்கள் - அப்
புண்ணிய தீர்த்தங்களிலும் உள்ளன!

சகல பாவங்களிலிருந்து விடுதலையும்,
சகல சம்பத்துக்களும் கிடைப்பது உறுதி.

நாடெங்கும் அலைந்து திரிய வேண்டாம்.
நாடுவாய் நீ சேஷாச்சலத்தை!” என்றார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது – மேலும்
பலன் இரண்டுக்கும் ஒரு போலானது.

பதினேழு தீர்த்தங்களிலும் சென்று நீராடிப்
பரம பாவனம் அடைந்தார் அந்த அந்தணர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
#01. The greatness of the teertham

A Brahmin wanted to go on a theerta yaaathra. It would take many months in olden days. It was customary to take leave of all one’s kith and kin before setting out on such a journey.

Vishnu appeared in the dream of the Brahmins and said, “You are contemplating on a teertha yaatra. Pushkaram is the Seshaachalam . There are seventeen different theertams there. In fact they represent all the holy theertams of the whole word.

If you take a holy dip in all of them, you will be rid of all the sins committed earlier. It will bestow on you all the ashta aiswaraym. You need not travel the length and breadth of this country. Just go to Seshaahchalam!”

The Brahmin felt very happy since it would save his precious time and a lot of expenditure. He went to Seshaachalam and bathed in all the seventeen theerthama and got purified.
 
படைப்பதனால் கிடைத்துவிடாது :nono:

எல்லோருக்கும், எல்லாமும்! :popcorn:

கொடுப்பினை உள்ளவர்களுக்கே

கிடைக்கும் அரியவை, பெரியவை!

கொடுப்பினை கிடைக்கும் - அருள் :angel:

கொடுப்பவன் கொடுத்தால் மட்டுமே! :hail:
 
மூவகை மனிதர்கள்


உலகின் அனைத்துப் பொருட்களிலும்
உண்டு மூன்று வெவ்வேறு வகைகள்;
உத்தமம் எனவும், மத்தியமம் எனவும்,
உருப்படா அதமம் எனவும் மூவகைகள்.

தேனைத் தவிர எதையுமே உண்ணாத
தேனீக்கள் உன்னதமான உத்தம வகை;
தேன் கிடைக்காவிடில் இறக்குமேயன்றி,
தேடிச் செல்லா அவை வேறு உணவை!

தேனை உண்ட பின்னும், தேடிச் சென்று
தெருவில் இருக்கும் கழிவுகளையும்
பேதம் இன்றி உண்ணும் வெறும் ஈக்கள்
பெயர் பெரும் மத்தியம வகை என்று!

சாணப் புழுக்கள் என்ற ஒரு வகையோ
சாணத்திலே பிறந்து, வளர்ந்து, வாழ்பவை.
தேனில் இட்டால் உடனே மடிந்து போகும்,
சாணத்திலே ஊறும் அவ்வகைப் புழுக்கள்.

நாம் காணும் மனிதரும் மூவகையினர்.
நல்லதை மட்டுமே நாடிச் செல்பவர்;
நல்லதையும், அல்லதையும் நாடுபவர்;
அல்லதை மட்டுமே என்றும் நாடுபவர்.

ஆறு அறிவும், அரிய மனிதப் பிறவியும்
அடைந்தும், அவற்றை வீணாக்கலாமா?
நல்லதையே நாடி, நன்மைகளே செய்து,
நல்லதையே எண்ணி நலம் பெறுவோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

மூவகை மனிதர்கள்
 
பிறவிப்பயன்




இறைவன் அளித்த இச்சிறந்த உடலின்
பிறவிப்பயன் என்ன என்று அறிவீரா?
மறைகள் புகழும் இறைவன் அவனை, இப்
பிறவியிலேயே அறிந்து கொள்வதே!

கயிலாயத்துறை காஞ்சன வண்ணனை
கணப்பொழுதேனும் காணாத கண்கள்,
மயில் தோகையில் மாண்புடன் விளங்கும்
பயனில்லாத கண்களைப் போன்றவே!

திருவுடன் கூடி உலகினைக் காக்கும்
திருமால் பெருமை கேளாத செவிகள்,
கம்மல், கடுக்கன், தோடு, ஜிமிக்கி என
கல் நகையணியும் வெறும் காதுகளே!

வனமாலை அணியும் மனம் கவர் கள்வன்
புனைந்த மாலையைப் பெற்று நுகராத,
இரு துவாரம் உடைய நாசியோ, காற்றை
இழுத்து விடுகின்ற இருமான் துருத்தியே.

கமல மலர் அமர்ந்து கருணை பொழியும்
கமலக் கண்ணியைப் பாடிப் பரவாத நாவு,
குவளை மலரிடை அமர்ந்து இரைச்சலிடும்
தவளையின் நீள் நாவுக்கு ஒப்பானதே!

எண் குணத்தானை மனத்தில் நினைத்து
எட்டு அங்கமும் நிலம்பட வணங்காத,
மண்டிய கர்வம் கொண்டவன் தலை
முண்டாசையே தாங்கும் மூளையை அல்ல!

கண் முன் அழகனாய் காட்சி அளிக்கும்
ஷண்முகன் திருவடி வணங்காத கைகள்,
இயக்கமும் இரத்தமும் இழந்து போன
குயவன் செய்த மண் கைகளை போன்றவே!

திருவருள் தேடி அவன் திருவடி நாடி
தீர்த்த யாத்திரை செல்லாத கால்கள்,
விண் முட்ட ஓங்கி வளர்ந்து நிற்கும்
மண்ணில் இருக்கும் மரத்தின் வேர்களே!

தாளாத காதலுடன் அவன் துதி கேட்டு
இளகாத நெஞ்சம் இரும்பு நெஞ்சமே!
கண்ணீர் மல்கி கனியாத மனங்கள்
மண்ணில் வாழ் விலங்குகள் மனமே!

பிறவிப்பயனை அறிந்தோம் இன்று,
பிறவிப் பயனுக்கு முயல்வோம் இன்றே!
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்,”
அரிதிலும் அரிது விடுதலை அடைதல்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

பிறவிப்பயன்
 
மூன்று பதுமைகள்






மனிதர்களில் மூன்று வகைகள் உண்டு,
முதல் வகை, நடு வகை, கடை வகை;
முதல் இரு வகையினர் அறிவார் தாங்கள்
முதலையின் பிடியில் சிக்கி உள்ளதை!

மூன்றாம் வகையினர் அறியார் தாம்
முதலையிடம் மாட்டிக் கொண்டதையே!
முதலையும், மூர்க்கனும் கொண்டது விடா;
முதலை என்பது மூழ்கடிக்கும் சம்சாரமே!

முழுவதும் உலக விஷயங்களிலேயே
மூழ்கித் திளைத்து வாழ விழைபவர் பலர்;
முயன்று முக்தி அடைய விரும்புவார் சிலர்;
முக்தி அடைந்து விட்டவர்களோ மிகச் சிலரே!

மூன்று பதுமைகள் நீரில் விழுந்தன,
முற்றிலும் அவை நீரில் மூழ்கலாயின;
முதல் பதுமையோ உப்பால் செய்தது,
முற்றிலும் கரைந்து மறைந்தே போனது!

இரண்டாம் பதுமை பஞ்சினால் ஆனது,
இருக்கும் நீரைத் தன்னுள் உறிஞ்சி
பெரிய வடிவம் எடுத்துக்கொண்டது;
பெரிய எடையும் அடைந்து விட்டது!

கல்லினால் செய்த மூன்றாம் பதுமை,
கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கி விட்டது.
கரையவும் இல்லை கனக்கவும் இல்லை;
கண நேரத்தில் நீரின் அடியில் அமர்ந்தது!

கரைந்த பதுமையோ முக்தி அடைந்தது;
கரைந்து நீருடன் அது ஒன்றாகி விட்டது!
இத்தகைய மனிதர்களே இப் பூவுலகில்,
முக்தர்கள் எனப்படும் முதல் வகை ஆவர்.

நீரை உறிஞ்சி கனமான பதுமையோ,
நிறைந்த அருள் மொழிகளைக் கேட்டு,
முக்தி அடையப் பற்று அறுக்க முயலும்,
முமுக்ஷு என்ற இரண்டாம் வகையினர்.

மூழ்கிக் கண நேரத்தில் அடியில் கிடப்பவர்,
மூன்றாம் வகையாம் லௌகீகர் ஆவார்.
இவர்கள் முக்திக்கு முயல்வதும் இல்லை;
இவர்கள் முக்தியை விழைவதும் இல்லை.

கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்;
கேட்டு அறிவோம் விடுதலை பெறும் வழியை!
முயன்றால் முடியாதது இல்லை அல்லவா?
முயலுவோம் முதலையின் பிடியிலிருந்து தப்ப!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
மூன்று பதுமைகள்
 
மூன்று திருடர்கள்


12475004362111dp.jpg


காட்டுவழியில் தனியே சென்றான்,
கால் நடையாக ஒரு வழிப்போக்கன்,
மூட்டையில் தன் பொருட்களை எல்லாம்,
கட்டித் தன்னுடன் எடுத்துச் சென்றான்.

மூன்று திருடர்கள் வழி மறித்தனர்;
மூட்டைப் பொருளையும் கைப்பற்றி,
தனியனைக் கொன்று வீசிவிடவும்,
தமக்குள் பேசி முடிவு செய்தனர்.

கத்தியை உருவினான் முதல் திருடன்,
கட்டி போட்டான் இரண்டாம் திருடன்,
மூன்றாம் திருடன் அவ்விருவரையும்,
முயன்று தடுத்து அவன் உயிர் காத்தான்!

முதல் இருவரும் முன்னே செல்ல,
மூன்றாம் திருடன் கட்டை அவிழ்த்து
வழித்துணையாக உடன் வந்தான்,
வழிப்போக்கன் செல்லும் வீடு வரை.

உள்ளே அழைத்தும் வர மறுத்து,
உடனே மறைந்தான் அத்திருடன்.
வீட்டை அடைந்ததும் அப்பயணி,
விட்டான் ஒரு நிம்மதி பெருமூச்சு!

உலகமே அந்தக் காடு, அதில் தனியே
உலவிடும் ஜீவனே வழிப்போக்கன்;
மூட்டையின் செல்வம் ஆத்மஞானம்,
மூன்று திருடர்களும் முக்குணங்கள்.

கத்தியை எடுத்த திருடனே ராஜசன்,
கட்டிப் போட்ட திருடனே தாமசன்,
கட்டை அவிழ்த்து விட்டவன் சத்துவன்,
வீட்டை அடைவித்தவனும் அவனே.

வீடே வீடு பேறு! வீட்டை அடைந்தால்
விட்டுப்போகும் நம் அச்சமெல்லாம்.
சத்துவன் நல்லவன் நமக்கு உதவிடினும்,
சத்தியமாய் அவனும் ஒரு திருடனே!

முக்குணம் முற்றிலும் ஒழிந்தால்
மட்டுமே கிட்டும் நமக்கு வீடுபேறு.
வீட்டுக்கு வழி காட்டிய சத்துவனாலும் ,
வீட்டினுள் நம்மோடு வரமுடியாது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
மூன்று திருடர்கள்

 

Attachments

  • 12475004362111dp.webp
    12475004362111dp.webp
    13.8 KB · Views: 58
[h=1]நாலு வகை பக்தர்[/h]


பக்தி, இறைவன் அருள் வேண்டியே
பக்தர்களால் நன்கு அனுசரிக்கப்படும்;
பலன் எதிர்பாராமல் பக்தி செய்பவர்,
பல ஆயிரம் பேர்களில் ஒரே ஒருவரே!

கோவில்களில் ஜனக் கூட்டம் அலைமோதும்;
காவி உடைக்கும், பூஜைக்கும் பஞ்சமில்லை;
இத்தனை பக்தர்கள் இருந்த போதிலும்
இத்தனை மோசமான உலகம் எப்படி?

விசித்திரமான இந்த வினாவுக்கு
விடை அளிப்பவன் மாயக் கண்ணன்;
படைத்தவன் அறிவான் நம் மனத்துள்
அடைத்துக் கிடக்கும் ஆசைகள் எல்லாம்!

உலகின் போகங்கள் அனைத்தையும்
உல்லாசமாக அனுபவிக்க வேண்டியே
கடவுளிடம் நன்கு பக்தி செய்வார் பலர்;
கடை நிலை பக்தர்கள் ஆவர் இவரே!

செல்வம் சேரவேண்டும் தம் மனம் குளிர;
செல்லாதிருக்க வேண்டும் தம்மை விட்டு;
நில்லாமல் ஓடி ஓடிக் கும்பிடுவர் வேறு சிலர்
எல்லாக் கோவில்களுக்கும் சென்று சென்று!

மூன்றாம் நிலை பக்தர்கள் இவர்களின்
மூச்சு பேச்சு எல்லாம் சொத்துச் சேர்ப்பதே;
எதுவும் தருவான் இறைவன் ஆனால்
இது மட்டுமே இவர்களின் கோரிக்கை!

இறைவனிடம் இரண்டாம் நிலை பக்தர்
இறைஞ்சி வேண்டுவதோ பகுத்தறிவு.
இறைவனையும் மாயையும் வேறு வேறாக
அறிந்துகொள்ளும் சக்தியும், ஞானமுமே!

முதல் நிலை பக்தனோ முழு ஞானி!
மனத்தை அடக்கி, இறையில் திளைத்து,
மமகாரத்தையும், அகங்காரத்தையும்
முற்றிலுமாகத் தொலைத்தவன் அவன்!

தாயும் தந்தையும் ஆன நம் இறைவன்
தருவான் நாம் விரும்பி விழைவதை;
கோடீஸ்வரனிடம் கோடிகள் பெறாமல்
வாடி நிற்போமேயானால் அது யார் தவறு?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
hqdefault.jpg



பராசக்தி



முழுமுதற்கடவுள் விஷ்ணு என்பர் சிலர்.
முழு முதற்கடவுள் சிவன் என்பர் சிலர்.

முழு முதற்கடவுள் சூரியன் என்பர் சிலர்.
முழு முதற்கடவுள் வருணன் என்பர் சிலர்.

சக்தி ஆற்றுகின்றாள் முத்தொழில்களை!
சக்தி விகசிக்கின்றாள் மூன்று விதங்களாக!

உள்ளாள் படைக்கும் சக்தியாக பிரமனிடம்;.
உள்ளாள் காக்கும் சக்தியாக விஷ்ணுவிடம்;.

உள்ளாள் அழிக்கும் சக்தியாக சிவனிடம்;.
உள்ளாள் ஒளிரும் சக்தியாக சூரியனிடம்;.

உள்ளாள் உந்தும் சக்தியாக வாயுவினிடம்;.
உள்ளாள் எரிக்கும் சக்தியாக அக்கினியிடம்;.

உள்ளாள் குண்டலினி சக்தியாக மனிதனிடம்;.
உள்ளாள் உயிர்ச் சக்தியாக உயிரினங்களிடம்;

செய்ய முடியாது எச்செயலையும் சக்தியின்றி!
செய்வாள் சக்தி செயலைத் தன்னிச்சைப்படி!

உபாசிக்கின்றனர் தேவியை மோக்ஷ காமிகள்,
உபாசிக்கின்றனர் தேவியை இகபோக காமிகள்,

தருவாள் தேவி அறம், பொருள், இன்பம், வீடு.
தரமாட்டாள் தண்ணருளை அவிவேகிகளுக்கு.


தொழுவர் பராசக்தியை மும்மூர்த்திகளும்;
பெறுவார் தம் தொழிலுக்கு உகந்த சக்தியை.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
[h=1]மாயையின் சக்தி.[/h]

“மாயையின் வயப்பட்டவர்களால்
மாயையை அறியவே முடியாது!”
கூறும் இறைவனிடம் நாரத முனிவர்
கூறினார்,”நானும் காணவேண்டுமே!”

நீண்ட நெடிய பயணம் சென்றனர்,
நீல வர்ணனும் நாரதரும் ஒருநாள்.
“நீர் வேட்கை மிகுந்து உள்ளது!
நீர் கொண்டு வாரும் நாரதரே!”

நீர் நிலையை அடைந்த நாரதர்;
நிகரற்ற ஓரழகியைக் கண்டார்.
அவளும் இன்சொல் பயிலவே,
அவரும் மதி மயங்கலானார் .

இருவரும் கூடி இன்புற்றிடவே,
பிறந்தன பலப் பல குழந்தைகள்.
கொடிய நோய் ஒன்று தோன்றியது;
நொடியில் மரணம் விளைவித்தது!

“வேறிடம் போவோம்” எனக் கூறி
வேகமாகக் குடும்பத்துடன் செல்ல,
பொங்கிய ஆற்று நீர் அனைவரையும்
எங்கோ இழுத்துச் சென்று விடவே,

தனித்து விடப்பட்ட நாரதர் கண்கள்
பனித்து அழுது புலம்பும் பொழுது,
“நீர் என்ன செய்து கொண்டுள்ளீர்?
நீர் கொண்டுவர இவ்வளவு நேரமா?”

“ஒரே நிமிடத்தில் இத்தனையும்
ஒருசேர நிகழ்ந்தனவா, இறைவா?
உன் மாயைக்கு ஒரு நமஸ்காரம்!
உனக்கு ஒரு கோடி நமஸ்காரம்!

மாயையை என்னிடம் நெருங்கிவிட,
மறந்தும் கூட நீ அனுமதியாதே!
மானிடர்கள் படும் துன்பங்கள்,
மாதவா! மலைப்பூட்டுதே!” என்றார்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
[h=1]இறை பக்தி.[/h]

கனவான் வீட்டில் பூஜை செய்தவர்,
காரியமாக வெளியூர் சென்றார்.

பூஜையை நிறுத்தக் கூடாது என்று
பூஜையை மகனிடம் ஒப்படைத்தார்.

தினமும் தவறாமல் இறைவனுக்குத்
திருஅமுது செய்விக்கச் சொன்னார்.

சிறுவன் திருஅமுதை வைத்துவிட்டு,
பொறுமையாக அங்கே காத்திருந்தான்.

இறைவன் இறங்கி வரவுமில்லை!
இறைவன் அதை உண்ணவுமில்லை!

எத்தனை நேரம் இருந்தாலும்,
எதுவுமே அங்கு நடக்கவில்லை.

“தந்தையார் அளித்தால் உண்கின்றீர்;
நான் செய்த பிழை என்ன கூறும்” என

விம்மி விம்மி அவன் அழுது புரளவே,
நிம்மதி இழந்தார் நம் இறைவனும்

மனித உருவில் இறங்கி வந்து,
மனிதக் குழந்தைக்காக உண்டார்.

“பிரசாதம் எங்கே?” என வீட்டார் கேட்க,
“பிரசாதம் இறைவன் புசித்துவிட்டார்!”

சிறுவனுக்கு இரங்கிய இறை பெரிதா?
இறை பக்தியால் சிறுவன் பெரியவனா?

விடையினை நீங்களே கூறுங்கள்!
விடை எனக்கு எட்டவேயில்லை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Good morning VR Mam, Enjoyed the pre -pongal ,pongal & post pongal given sweet articles 2481 -2488 ,Ahha ,Romba nalla irrukku madam, Thanks & Good luck for these work , :thumb: :clap2: :cheer2: :yo: .Please take care of your health also.Once again thanks.
 
dear Dr. C.N,
Namaste! These are the re-telecasts (!) of the poems which have appeared already in this thread.
I am just keeping the thread alive so that in 2015, I can post the Devi Bhaagavatam here.
I am really surprised that not many people from the forum visit the WordPress to read the new blog.
I am NOT supplying the meals-on-wheels in the forum in 2014 with the poems of the new blog
I too have some targets to reach and reviews to fetch!
I wish people realize what they are missing! :)
 
[h=1]கண்ணன் என் கடவுள்.[/h]

எண்ண இனிப்பவன் கண்ணன்,
என்றும் இனியவன் கண்ணன்;
எங்கும் இருப்பவன் கண்ணன்,
எங்கள் இதயத்தில் கண்ணன்.

மண்ணை உண்டவன் கண்ணன்,
விண்ணை அளந்தவன் கண்ணன்;
மங்கையைக் காத்தவன் கண்ணன்,
மாயங்கள் செய்தவன் கண்ணன்.

குன்றை எடுத்தவன் கண்ணன்,
கோகுலம் காத்தவன் கண்ணன்;
கன்றை மயக்கிடும் கண்ணன்,
கன்னியர் விரும்பிடும் கண்ணன்.

இசையின் கடவுளும் கண்ணன்,
இடையர் பிள்ளையும் கண்ணன்;
கீதையைத் தந்தவன் கண்ணன்,
கிரிதரனும் அந்தக் கண்ணன்.

மேதைகள் போற்றிடும் கண்ணன்,
பேதைகள் வணங்கிடும் கண்ணன்;
தேவர்கள் தொழுதிடும் கண்ணன்,
தெய்வங்களின் தலைவன் கண்ணன்.

நீயே கதி என்று சொன்னால்,
நித்தமும் காத்திடும் கண்ணன்;
தாயும் தந்தையுமாகி நல்ல
தயை புரிந்திடும் கண்ணன்.

வெண்ணை திருடிய கண்ணன்,
வெள்ளை மனம்கொண்ட கண்ணன்;
மண்ணில் இவனைப் போல் உண்டோ?
எண்ணித் தெரிந்தவரை இல்லை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


என்னைப் பொறுத்த வரையில்
குட்டிக் கண்ணன் = பால முருகன்

இது இன்றைய தைப் பூசம் ஸ்பெஷல் . :)
 
[h=1]பார்வதி தேவி[/h]

முருகனும் கண்ணனைப் போன்றே
குறும்புகள் பல செய்பவன்தானே!

ஒரு முறை சிறு பூனை ஒன்றின்
ஒரு கன்னத்தை அவன் கீறி விட,

ஓலமிட்டபடியே ஓடிச் சென்று
ஒளிந்து கொண்டது அந்தப் பூனை.

அன்னையின் கன்னத்திலும் அதே
அடையாளத்தைக் கண்ட முருகன்,

“என்ன ஆயிற்று என் அன்னையே?
என்னிடம் கூறுங்கள்” என்று மன்றாட,

“உன்னால்தான் ஆயிற்று இப்படி”
என்றாள் அகில உலக நாயகியும்!

“அன்னையை நான் கீறுவேனோ?
என்ன இது வீண் பழி என் மேல்?” என,

“இன்று நீ ஒரு சிறு பூனையின்
கன்னத்தைக் கீறவில்லையா?”

“அது எப்படித் தங்கள் மீது அம்மா?
எதுவுமே எனக்குப் புரியவில்லையே!”

“உலகின் பொருட்கள் அனைத்திலும்
உள் உறைந்து தாங்குவது நான்தான்!

எதை யார் எப்படி வருத்தினாலும்,
அது என்னையே வந்து சேரும் !”

இறை வேறு, பொருள் வேறு, என்ற
குறைவான அறிவைப் போக்குவோம்!

பார்க்கும் பொருட்கள் அனைத்துமே
பார்வதி தேவியின் பல உருவங்களே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
வைராக்கியம்

"பொறாமை உடைய மனிதனுக்கு ஏது சுகம்?
பொருள் இல்லாதவன் எனில் செல்லாக் காசு!

பொருள் சேர்த்தவனும் அடைவதில்லை திருப்தி;
விருத்தி செய்வான் சேர்த்த பொருளை மேன்மேலும்.

இந்திரனும் அஞ்சுகிறான் பதவி பறிபோகும் என!
தொந்தரவு செய்கின்றான் தவம் செய்பவர்களை!

கலைமகளால் சுகம் அடையவில்லை பிரமன்;
அலைமகளால் சுகம் அடையவில்லை விஷ்ணு.

தொடரும் துக்கச் சங்கிலி ஆகும் சம்சாரம்;
கொடுக்க வேண்டும் மிகுந்த செல்வம் ஈட்டி.

வாழ வேண்டும் நயந்தும், பயந்தும் உழைத்தும்!
வயிற்றை வளர்க்க வேண்டும் குடும்பத்தினரின்.

மூடர்கள் மோஹிக்கிறார்கள் சிந்திக்காமல்,
மங்கையரின் நளின வளைவுகளைக் கண்டு

ஆடவரின் ரத்தத்தையே உறிஞ்சுகிறார்கள்
அட்டைகள் போலவே அழகிய பெண்களும்.

அபகரிக்கிறார்கள் செல்வத்தை போகத்தால்;
அபகரிக்கிறார்கள் பலத்தை மோஹத்தால்;

அபகரிக்கிறார்கள் மனதை சாதுர்யத்தால்;
அபகரிக்கிறார்கள் அறிவைத் தம் அழகால்!


புரிகின்றான் திருமணம் நித்திரை கெடுவதற்கு.
அறிவதில்லை அவன் நித்திரை கெடுவதையும்.

துக்கத்தையே சுகம் என்று எண்ணிக்கொண்டு
மொத்தமாக மயங்குகின்றான் மனிதன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

Devi Bhaagavatam (Skanda 1 and 2) - Visalakshi Ramani
 
இறைவழிபாடு.





“இறை வழிபாட்டால் நன்மைகள்
இருக்கின்றனவா இல்லையா?”

தொன்று தொட்டு கேட்கப்படும்,
இன்று நேற்று அல்ல, இக்கேள்வி!

நண்பர்கள் இருவர் நடந்தனர்
நண்பகலில் ஒரு தனிவழியில்.

தென்பட்டது இறைவனின் ஆலயம்,
என்றோ எவராலோ கட்டப்பட்டது.

“வணங்கி வழிபடுவோம் வா” என
வருந்தி அழைத்த நண்பனிடம்,

“நான் வரவில்லை கோவிலுக்கு!
நான் இங்கே நிற்பேன் நீ செல்!”

என்றவன் நின்றான் வெளியே
நன்று எனச்சென்றான் மற்றவன்.

இறைவனை வழிபட்டவனை
கருந்தேள் கடித்து விட்டது!

வெளியே நின்றவனுக்கு ஒரு
வெள்ளிப் பணம் கிடைத்தது!

நினைக்க நினைக்க தாளவில்லை,
நிற்காமல் குருவிடம் சென்றான்.

“வணங்கிய எனக்கு தேள்கடியாம்,
வணங்காமுடிக்கு வெள்ளிப்பணம்!

குருவே இது என்ன நியாயம்?
இறைவனின் செயல்களிலே?”

கண்டார் ஞானதிருஷ்டியில் குரு,
கண்களால் காணமுடியாதவற்றை.

“மகனே! உனக்கு இன்று
மரணம் நிகழ இருந்தது.

இறை வழிபாட்டினாலேயே,
பாம்புக்கடி தேள்கடியாயிற்று!

உன் உயிரும் பிழைத்தது
உன் தெய்வ பக்தியினாலே!

வெளியே நின்ற நண்பனுக்கு
வெகு யோகமான நாள் இன்று!

புதையல் கிடைக்கும் யோகம்,
பூரணமாகப் பொருந்தியிருந்தாலும்,

இறைவழிபாடு இல்லாததால்,
சிறு வெள்ளிப் பணமே பரிசு!

ஆண்டவன் செயல்களை நாம்
ஆராய்ந்து அறிய முடியுமா?

நம்பிக்கையை இழக்காதே நீ!
தும்பிக்கையான் கைவிடான்”

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Kanda Puraanam (Urppathik Kaandam): A blog of 55 Tamil poems on Kaandam 1 of Kanda puranam with meaning in English.

Kanda Puraanam (Asura Kaaandam): A blog of 95 Tamil poems on Kaandam 2 of Kanda puranam with meaning in English.

Kanda Puraanam (Mahendra Kaandam): A blog of 42 Tamil poems on Kaandam 3 of Kanda puranam with meaning in English.

Kanda Puraanam (Por Puri Kaandam): A blog of 66 Tamil poems on Kaandam 4 of Kanda puranam with meaning in English.

Kanda Puraanam (Deva Kaandam): A blog of 14 Tamil poems on Kaandam 5 of Kanda puranam with meaning in English.

Kanda Puraanam (Daksha Kaandam): A blog of 100 Tamil poems on Kaandam 6 of Kanda puranam with meaning in English


These links have been added to my website for easy access to the blogs


Visalakshi Ramani - My Blog of Blogs
 
[h=1]ஏழு ஜாடித் தங்கம்![/h]

அரசனுக்கு நாவிதனான அவன்
பரம சுகமாகவே வாழ்ந்து வந்தான்.

இல்லை எந்தக் குறையும், அரசன்
அள்ளித் தந்த தங்கக் காசுகளால்.

காட்டு வழியே செல்லும்போது, ஒரு
காட்டுக் குரல் அவனிடம் கேட்டது,

“வேண்டுமா உனக்கு ஏழு ஜாடித் தங்கம்?”
“வேண்டும்! வேண்டும்!” என்றான் அவன்.

மரத்தில் வாழ்ந்த யக்ஷனின் குரலே அது!
மரத்திலேயே அவன் மறைந்திருந்தான்.

“வீட்டுக்குப் போவாய்! நான் உன்னுடைய
வீட்டிலேயே வைத்து விட்டேன் அதை!”

ஓட்டமும் நடையுமாக, மூச்சிரைக்க
வீட்டை அடைந்தவன் அங்கு கண்டது

அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த
ஏழு ஜாடிகளில் தங்கக் காசுகள்!

ஆறு ஜாடிகள் நிரம்பி வழிந்தாலும்,
ஒரு ஜாடியில் குறைவாக இருந்தது.

மறு எண்ணம் இல்லாமல் அவன்
நிரப்ப முயன்றான் அந்த ஜாடியை.

தன் செல்வங்கள் அனைத்தையும்,
தன் முன் உள்ள ஜாடியில் இட்டான்.

வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம்
விற்றுத் தங்கமாக மாற்றி இட்டான்.

அரசனிடம் கெஞ்சியும், கூத்தாடியும்,
அதிகக் காசுகள் பெற்று இட்டான்.

பிச்சை எடுத்தும் கூட முயன்றான்;
இச்சை மட்டும் நிறைவேறவில்லை.

மாய ஜாடி நிறையவே இல்லை!
மன்னன் அவனிடம் கேட்டான்,

“முன்னம் நன்றாக இருந்தாய் நீ!
இன்னம் கூலி அதிகம் பெற்றாலும்,

சின்னத்தனம் ஏன் சொல்? உனக்கு
மின்னும் ஏழு ஜாடிகள் கிடைத்தா?”

திடுக்கிட்ட நாவிதனிடம், அரசன்
வெடுக்கென்று சொன்னான் இதை,

“ஒரு தங்கக் காசு கூட உன்னால்
விரும்பிச் செலவு செய்ய முடியாது!

ஒரு நாளும் அந்த மாய ஜாடியை
ஒருவராலும் நிரப்பவே முடியாது!

அது இருந்தாலே உன் குடும்பம்
அகதி ஆகிவிடும் திருப்பிக் கொடு!”

காட்டையடைந்து யக்ஷனிடம் சொன்னான்,
“மீட்டுக்கொள் உன் ஏழு தாங்க ஜாடிகளை;

வீட்டை விட்டுப் போனாலே போதும்;
மாட்டி விட்டு வேடிக்கை வேண்டாம்!”

“நல்லது அப்படியே” என்றான் யக்ஷன்.
நல்ல காலம் பிறக்கும் என்று நம்பி,

வீட்டை அடைந்தால் ஜாடிகளை அவன்
போட்டிருந்த செல்வத்துடனே காணோம்!

புது வெள்ளம் பழைய வெள்ளத்தை அடித்துப்
போவதுபோல எல்லாமே மறைந்து விட்டன!

பேராசை பெரு நஷ்டம் ஆனதால்,
நிராசை மிகவும் அடைந்தான்.

அனைத்தையும் இழந்து நின்றதால்,
களைத்துப் போய்விட்டான் அவன்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
“சுகம் யாது? துக்கம் யாது? கூறுவீர் ஐயா!
பகைவன் யார்? நண்பன் யார்? பகருவீர் ஐயா!

நலத்தை நாடுபவன் செய்ய வேண்டியது யாது?
விளக்க வேண்டும் நீர் இவற்றை எனக்கு!” என

“சம்சாரத்தை விரும்புபவன் ஆவான் ராகி.
சம்சாரத்தில் அடைவான் ஒரு மனமயக்கம்.

விரும்புவது கிடைத்துவிட்டால் வரும் சுகம்;
விரும்புவது கிடைக்காவிடில் பெரும் துக்கம்.

விருப்பத்துக்கு துணை நிற்பவனே மித்திரன்.
விருப்பத்துக்குத் தடை செய்பவனே சத்ரு.

விராகி அனுபவிப்பான் ஆத்ம சுகத்தை!
விரும்பமாட்டான் அவன் விஷய சுகத்தை!

விசாரம் செய்வான் ஆத்மாவைக் குறித்து,
விலைபோக மாட்டான் மோக வேகத்துக்கு!

சம்சார சுகமும் அவனுக்கு ஒரு துக்கமே.
சம்சாரத்தை வெறுப்பவனுக்கும் உள்ளன

பலவிதப் பகைவர்கள் – காமம், குரோதம்,
லோபம், மதம், மாச்சர்யம், போன்றவை.

உண்டு ஒன்று நண்பன் உறவு என்று;
உள்ளத்தில் நிலவும் ஆனந்தமே அது!”

1#17b. ராகியும், விராகியும் Devi Bhaagavatam (Skanda 1 and 2)
 
[h=1]தன்னைப் போலவே![/h]
உலகைத் துறந்து, மனத்தை அடக்கி,
உண்மை சமாதியில் இருந்தார் ஒருவர்.

களவு புரிந்து ஓடி வந்தவன், அவரைக்
களவாளி ஒருவன் என்றே நினைத்தான்.

“வீரர்கள் வருமுன் நான் ஓடிச் சென்று
வீட்டை அடைந்தால் பிழைப்பேனே!”

நொடியில் மறைந்தான் அக்களவாளி.
ஆடியபடியே வந்தான் மிடாக்குடியன்.

“வயிறு முட்டக் கள் குடித்து விட்டு
வழியில் கிடப்பதைப் பாருங்களேன்!

ஒரு பானைக் கள் நான் குடித்தாலும்
தெருவில் விழுந்து புரண்டதுண்டோ ?”

யார் வந்து போனதையும் அறியாமல்,
யார் சொன்ன சொல்லையும் கேளாமல்,

வசை மொழிகளையும் கூட உணராமல்,
அசையாமலேயே இருந்தார் அம்மனிதர்.

மகான் ஒருவர் வந்தார் அவ்வழியே.
மண்ணில் கிடக்கும் மா மனிதனைக்

கண்டதும் கீழே அமர்ந்து மிருதுவாக,
கால்களை வருடலானார் மகிழ்வுடன்!

“எத்தனை பெரிய மகானோ இவர்!
என் பாக்கியம் தொண்டு செய்வதே!”

தன்னைப் போலவே சக மனிதர்களை
உன்னுகின்றான் ஒவ்வொரு மனிதனும்.

நல்லவருக்கு எல்லோரும் நல்லோரே!
அல்லாதவருக்கு அனைவரும் தீயோரே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Back
Top