• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

#58. காரண வாரணன்!





அகில உலகுக்கும் காரணன்;
அவன் ஒரு அழகிய வாரணன்!
அதிசயக் கருநிற அழகன்.
அதனால் அவன் ஒரு வாரணன்!

வெண்ணை பால் தயிர் எல்லாம்
வஞ்சனை இன்றி உண்டதாலே,
கண்ணனும் ஒரு வாரணம்,
குஞ்சரம் போலத் திகழ்வதாலே!

நேரம் போவதே தெரியாமல்
நின்று ரசிப்போம் வாரணத்தை,
நேசம் மிகுந்த காரணனோ
நினைவையே மறக்கடிப்பான்!

கன்றினில் எல்லாமே அழகு,
குன்றை போன்ற வாரணமுமே.
என்றென்றும் நிஜ அழகன்
என் கண்ணன், அவன் மட்டுமே!

பட்டு துகில் உடுத்தினாலும்,
புழுதி படிய விளையாடுவான்.
பட்டுப்போல் குளித்த பின்னர்
புழுதி வாரிச் சொரியும் வாரணம்!

அவன் வாய் மொழிகளே ஆரணம்;
அவன் ஒரு கற்பக வாரணம்;
அவனே ஸ்ருஷ்டிகளின் காரணம்;
அவன் அருள் என்றும் நாம் கோரணும்!

அவன் திவ்ய பரி பூரணன்;
அவனே உயர் திரு நாரணன்!
எல்லாவற்றுக்கும் வேர் அவன்;
ஆயிரம் நாமத் தோரணன்!

எட்டு திக்கினுள்ளும் சென்று
எங்கெங்கு தேடினாலும்,
தட்டுப்பட மாட்டான், இன்னொரு
காரண வாரணக் கண்ணன்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




 
#59. பிரம்மமும், மாயையும்!





நிறைந்த சக்தியே பிரம்மம்; அதன்
சிறந்த வெளிப்பாடே மாயை ஆகும்!

இயங்காத சக்தி என்பது பிரம்மம்;
இயங்கும் சக்தி என்பது மாயை!

சலனமற்றது பிரம்மம் என்றால்,
சலனம் உடையது மாயை ஆகும்!

எரியும் நெருப்பு பிரம்மம் என்றால்,
எரிக்கும் சக்தி அதன் மாயை ஆகும்!

பிரம்மம் ஒரு முப்பட்டைக் கண்ணாடி;
பிறக்கும் வர்ண ஜாலமே மாயை ஆகும்.

படைப்புகளுக்குக் காரணம் பிரம்மம்;
படைப்புகள் என்னும் காரியம் மாயை.

காண முடியாதது பிரம்மம் ஒன்றே;
காணும் பொருட்கள் எல்லாம் மாயை!

என்றும் தனித்து நிற்கும் பிரம்மம் ;
என்றும் மனத்தை மயக்கும் மாயை!

தோற்றம் இல்லாதது பிரம்மம் என்றால்,
தோன்றி ஒடுங்குவது அதன் மாயை!

பாலும் நீரும் போலக் கலந்த இவற்றை,
பரமஹம்சர்களே பிரிக்க வல்லவர்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




Cancel reply


Your email address will not be published.
 
I request you to read the lines of Subramania Bharathi in his "Nirpadhuve, Nadappadhuve, Parappadhuve ... ", before discussing further the concept of 'Maya' or 'Illusion'.
 
Last edited:
Dear Mr. Pannvalan,

I have a collection of Bharathiyarin kavithaigal. Surely I will read the poem suggested by you and get back to you for further discussions.

with warm regards,
V.R.
 
Dear Mr. Pannvalan,

Everything that is tangible, that which can be seen, heard, touched, tasted and smelt is Maya.

Brahman is the only thing which is beyond perception by our sense organs.

Brahman is the cause and Maya is the visible and tangible creation of Brahman.

I think I have made it clear in my poem. Any contradictions as seen by you?

with warm regards,
V.R.
 
Dear friends,

All the poems presented here are from my blog
<visalramani.wordpress.com>

There were originally written by me and were illustrated by my second
daughter-in- law Mrs. Rupa Raman, using Google images.

Mrs. Raji Ram did the hard job of editing the poems and polishing them-since i could not spot my own spelling mistakes :)

with warm regards.
V.R.
 
Last edited:
#60. பரிணாம வளர்ச்சி!





டார்வின் கண்டு அறிந்து சொன்னார்,
உலகில் பரிணாம வளர்ச்சியினை;
பரமன் நமக்குச் செய்தே காட்டினான்,
உலகில் பரிணாம வளர்ச்சியினை!

முன்னர் நீரில் உயிரினம் தோன்றியது;
பின் நீரிலும், நிலத்திலும் வாழ்பவை;
தரையில் வாழ்பவை என உயிரினங்கள்,
தர வரிசைப்படி தோன்றின என்பார்.

மறைகளைக் காப்பதற்கு இறைவன்,
நீரில் வாழும் மீனாய்த் தோன்றினான்.
மந்தர மலையைத் தாங்கிப் பிடிக்க,
நீர், நிலம் வாழும் ஆமை ஆனான்.

பூமியை மீட்டு, முன் போல் நிறுத்த,
பூமியில் வாழும் வராகமானான்.
மிருகமும், மனிதனும் கலந்த ஒரு
உருவமாக நரசிம்மன் ஆனான்.

குறு மனிதனாய் வாமனனாகி, பின்
முழு வடிவில் பரசுராமன், ரகுராமன்,
கண்ணன், பலராமன் என்பவர்களாக,
கண் நிறையும் படி அவதரித்தான்!

அரிய ஆராய்ச்சியால் டார்வின் அறிந்ததை,
புரிய வைத்தான் எளிதாய் நம் இறைவனே!
விஞ்ஞானிகளுக்குள் எல்லாம் மிகப் பெரிய
விஞ்ஞானியும், மெய்ஞானியும் அவன்தானே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




 
#61. “நாராயணா!”





“நாராயணா!” எனும் நாமத்தை
நாவாறச் சொன்னாலே போதும் ;
நன்மைகள் நம்மைச் சூழும், பல
வண்மைகள் நம்மை வந்தடையும் .

அந்தண குலத்தில் பிறந்து, குலத்தின்
அறங்களைக் கைவிட்டு வாழ்ந்தும்,
நாராயண நாம வைபவத்தாலேயே
நரகத்தைத் தவிர்த்தவன் கதை இது!

அந்தணன் அஜாமிளன் ஒரு நாள்
தந்தை சொற்படிக் கானகம் சென்றான்.
காமத்தின் வசப்பட்டவனாய், அங்கு ஒரு
காரிகையைக் கண்டு விரும்பினான்.

இழி குலத்தில் பிறந்தவள் அவள்;
இன்பம் அளிப்பதில் கைதேர்ந்தவள்;
குலம், ஆசாரம், கல்வி, தவம் கெடக்
கூடி வாழ்ந்தான், குடும்பம் பெருகிற்று.

கடைக் குட்டியின் பெயர் நாராயணன்;
கடைத்தேறவும் அதுவே உதவியது!
மரண காலத்தில் தன் முன் தோன்றிய
முரட்டுக் கிங்கரரைக் கண்டு அஞ்சினான்.

நடுங்கிய வண்ணம் நாவாற அழைத்தான்,
“நாராயணா!” என்று தன் செல்ல மகனை!
விஷ்ணு தூதர்கள் வந்தனர் விரைவிலே
யே;
விவாதம் துவங்கிற்று குழுக்களிடையே!

பாவங்களைப் பட்டியல் இட்டு
படித்துக் காட்டினர் யம கிங்கரர்;
பகவான் நாமத்தைச் சொன்னதுமே,
பாவம் தொலைந்தது என்றனர் தூதர்.

இறுதியில் வென்றனர் விஷ்ணு தூதர்கள்.
சடுதியில் நற்கதி அடைந்தான் அஜாமிளன்.
விண்ணப்பித்த கிங்கரரிடம் கூறினான் யமன்,
“விஷ்ணு பக்தரை இனி அணுக வேண்டாம்”.

நெருப்பு, சருகுகளை எரிப்பது போலும்,
மருந்து, நோய்களை அழிப்பது போலும்,
நாராயணனின் நாமம், நவின்றவர்களின்
நூறாயிரம் பாவங்களை அழித்துவிடும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
#62. பிரஹலாதன்.





செந்தாமரை சேற்றில் வளர்ந்தாலும்,
வந்தனை செய்ய அவசியம் தேவை.
தாமரை மலரின்றி பூஜைகள் ஏது,
தாமரைக் கண்ணன் இறைவனுக்கு?

கர்வத்தில் உச்சியில் இருந்து கொண்டு
கடவுள் நானே என்று அறைகூவல் இட்ட
அரக்கர்களின் அரசன் இரண்யகசிபுவின்
அருமை மகனே பக்தப் பிரஹலாதன்.

மணி வயிற்றில் குடி இருந்தபோதே
மணிவண்ணன் மேல் பக்தி கொண்டு,
மாறாமல் உறுதியாக நின்று, இறுதியில்
மாதவனின் அருள் பெற்ற ஒரு குழந்தை.

பிஞ்சுக் குழந்தையாக இருந்தபோதிலும்,
நஞ்சு கோப்பைக்கு அவன் கொஞ்சமும்
அஞ்சவில்லை; எடுத்து அருந்தினான்.
கெஞ்சவோ அன்றிக் கொஞ்சவோ இல்லை.

மலை உச்சியில் இருந்து உருட்டிய போதும்,
மன்னன் பட்டத்து யானை இடற வந்தபோதும்,
கல்லுடன் கட்டிக் கடலில் வீசப்பட்டபோதும்,
கனலில் இறங்கி நடக்கச் செய்தபோதும்,

ஹரியின் திருநாமத்தைத் தவிர வேறு ஏதும்
அறியவும் இல்லை, இயம்பவும் இல்லை.
ஹரி பக்தர்களைக் காப்பாற்றுவது அந்த
ஹரி பரந்தாமனின் கடமை அன்றோ?

இறுதியில் தன் பக்தன் வாக்கை மெய்ப்பிக்க,
வெறும் கல் தூணிலிருந்து தோன்றினான்,
தேவர்களும் காண அரும் தவம் இருக்கும்
தேவாதி தேவனான ஹரி நாராயணன்.

குப்பையில் கிடக்கும் மாணிக்கத்தையும்,
சிப்பியில் விளையும் நல்ல முத்தையும்,
சேற்றில் மலர்ந்த செந்தாமரையையும்
போற்றுவோம்; என்றுமே இகழமாட்டோம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
#63.அபிமானமும், அவமானமும்.





பிறந்தவுடன் இருக்காது தேக அபிமானம்!
பிறகு நாம் வளர வளர உடன் வளரும்
நான், எனது என்கின்ற எண்ணங்களும்,
என் தேகம் என்கின்ற அபிமானமும்.

அபிமானம் முற்றும் அழிந்தால் அன்றி
ஆத்மாவைச் சற்றும் அறிய முடியாது!
ஆத்மாவை நன்கு அறிந்தவன், தேக
அபிமானத்தை முற்றிலும் துறப்பான்.

களித்து விளையாடிக் களைத்த பின்னர்,
குளிக்கச் சென்ற கோகுலப் பெண்களின்,
அவிழ்த்து வைத்த ஆடைகளைத் திருடியே,
அழித்தான் அவர்களின் தேக அபிமானத்தை!

கரங்களைக் கூப்பிக் கும்பிட்டபடியே
கரை ஏறும்படிக் கண்ணன் பணித்ததும்,
கண்ணீர் மல்கக் கதறினார் பெண்கள்; பின்
கண நேரத்தில் தேக மயக்கம் ஒழிந்தனர்.

பரம ஹம்சர்களுக்குத் தெரியாது தமக்கு
பாரமான உடல் ஒன்று இருக்கிறது என்றே!
ஆத்மாவில் திளைத்து, இறையில் நிலைத்து,
உடலையும் அறியார்; உடையையும் அறியார்.

அபிமானம் உள்ளவர்களுக்கே ஏற்படும்
அவமானம் என்ற மன மயக்கம் ஒன்று.
அபிமானத்தைத் துறந்துவிட்டால் பிறகு
அவமானம் ஏது? அல்லது மானம்தான் ஏது?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




Cancel reply
 
#63.அபிமானமும், அவமானமும்.





பிறந்தவுடன் இருக்காது தேக அபிமானம்!
பிறகு நாம் வளர வளர உடன் வளரும்
நான், எனது என்கின்ற எண்ணங்களும்,
என் தேகம் என்கின்ற அபிமானமும்.

அபிமானம் முற்றும் அழிந்தால் அன்றி
ஆத்மாவைச் சற்றும் அறிய முடியாது!
ஆத்மாவை நன்கு அறிந்தவன், தேக
அபிமானத்தை முற்றிலும் துறப்பான்.

களித்து விளையாடிக் களைத்த பின்னர்,
குளிக்கச் சென்ற கோகுலப் பெண்களின்,
அவிழ்த்து வைத்த ஆடைகளைத் திருடியே,
அழித்தான் அவர்களின் தேக அபிமானத்தை!

கரங்களைக் கூப்பிக் கும்பிட்டபடியே
கரை ஏறும்படிக் கண்ணன் பணித்ததும்,
கண்ணீர் மல்கக் கதறினார் பெண்கள்; பின்
கண நேரத்தில் தேக மயக்கம் ஒழிந்தனர்.

பரம ஹம்சர்களுக்குத் தெரியாது தமக்கு
பாரமான உடல் ஒன்று இருக்கிறது என்றே!
ஆத்மாவில் திளைத்து, இறையில் நிலைத்து,
உடலையும் அறியார்; உடையையும் அறியார்.

அபிமானம் உள்ளவர்களுக்கே ஏற்படும்
அவமானம் என்ற மன மயக்கம் ஒன்று.
அபிமானத்தைத் துறந்துவிட்டால் பிறகு
அவமானம் ஏது? அல்லது மானம்தான் ஏது?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




Cancel reply

Madam Visalakshi Ramani,

Your poem reminded me of Ramana Maharishi who gave up body consciousness.

The Bhagavan Sri Ramana Maharshi website

Good work.

Please keep it up

All the best
 
Dear Mr. R.V.R,

All great men 'became great' only because they gave up completely not only

body-consciousness but also EGO and all kinds of attachments to the world!

We can at least keep these in mind and strive for spiritual evolution.

Thank you for your feedback.
with warm regards,
V.R.
 
Madam, Can you help my little friend with a poem. "கனிவு, எழில், அமைதி, தியாகம், பாசம், நேசம், பிணைப்பு, உறுதி, ஒற்றுமை, சண்டை, கலவரம், இழப்பு" எனும் வார்த்தைகளிலிருந்து குறைந்தது ஆறு வார்த்தைகளின் எதுகை - மோனை பிரயோகத்துடன் 15 முதல் 20 வரிகளுக்குள் கவிதை எழுதவேண்டும்.
 
கற்க வேண்டியை சில.

பாசம் நிறைந்த நெஞ்சங்களே
நேசத்தைப் பொழிய முடியும்.

பிரிந்து நின்றால் எல்லோரும்
சரிந்து விடுவோம் அறிவீர்!

பிணைப்பே நம் உறவுகளை
இணைக்கும் சங்கிலி ஆகும்.

கனிவும் பணிவுமே நமக்கு
இனிய குணத்தை தரும்.

தியாகத்தில் கிடைக்கும் அமைதி
போகத்தில் என்றமே கிடைக்காது.

ஒற்றுமை வளர்ந்தால் நன்மை
வேற்றுமை வளர்ந்தால் கலகம்.

சண்டை செய்வதாலும் மற்றும்
தொண்டை வறளக் கூவுவதாலும்;

சாதிக்க முடியாததை நம்மால்
போதித்து சாதிக்க முடியும்.

கலவரம் செய்வதால் பயன்
நிலவரம் மோசம் அடைவதே.

அமைதியை விரும்பினால் நாம்
அமைதி வழியிலே செல்வோம்.
 
#64. தோற்றமும், நோக்கமும்.





தோற்றமும் நோக்கமும் எதிர்மறை ஆகலாம்;
தோற்றங்கள் நம்மை முற்றிலும் ஏமாற்றலாம்.
நோக்கம் என்ன என்று அறியும் வரையில் நாம்
தோற்றத்தைக் கண்டு மயங்கிவிடக் கூடாது.

வேதனை இதுவே எவருமே அறியவில்லை,
பூதனை வந்தது கண்ணனை அழிக்க என்று!
மயக்கும் மனோகரப் பெண் போல வந்து
மாயக் கண்ணனைக் கொல்ல எண்ணினாள்.

வண்டுகள் மொய்க்கும் மலர்க் கூந்தல்;
வண்டுகளாகச் சுழலும் கரு விழிகள்;
பட்டு ஆடைகள் பலப்பல ஆபரணங்கள்;
தொட்டால் துவளும் மெல்லிய உடல்.

சொந்த பந்தம் போல வீட்டின் உள்ளே
வந்தவளைக் கண்டு மயங்கியவர்கள்,
சந்தேகிக்கவே இல்லை அவள் நோக்கத்தை;
சந்தித்த மகிழ்ச்சியில் தடுக்கவும் இல்லை!

கண்ணனைக் கொஞ்சி முத்தமிட்டவள்
கண் மறைவாகச் சென்று அமர்ந்து,
தாய் போலப் பாலூட்டும் பாவனையில்,
பேய் போலக் கொடும் நஞ்சை ஊட்டினாள்!

பாவியின் நோக்கம் அறிந்த கண்ணன், அவள்
ஆவியையும் பாலுடன் சேர்த்துப் பருகவே,
ஆவி பிரியும் வேதனையில் அந்தப் பாவி
கூவிக் கூவித் தன் உயிரையும் துறந்தாள்.

துறவியின் உடையிலும் கொல்லும் வாள்
மறைந்து இருந்த கதையை மறந்திடோம்!
வெளித் தோற்றத்துக்கு மயங்கிவிடாமல்
உள்நோக்கத்தின் உண்மையை உணர்வோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




Cancel reply
 
[FONT=&quot]கலவரம் [/FONT][FONT=&quot]கன[/FONT][FONT=&quot]ன்றிடக் கண்டே[/FONT]
[FONT=&quot]கலங[/FONT][FONT=&quot]்கிடும் கருணை நெஞ்சே,[/FONT]
[FONT=&quot]த[/FONT][FONT=&quot]ுறவரம் நாடித் துணியா - நீ[/FONT]
[FONT=&quot]த[/FONT][FONT=&quot]ுவன்றிட்டாய் தனியே என்றும்.[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]தண[/FONT][FONT=&quot]ிந்திடும் நிலவரம் என்றே[/FONT]
[FONT=&quot]தவ[/FONT][FONT=&quot]ிப்புடன் தியானமும் செய்து,[/FONT]
[FONT=&quot]கர[/FONT][FONT=&quot]ுதுவாய் உளமே உலகில்[/FONT]
[FONT=&quot]உறுதியாய் அமைதி காண.[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]கன[/FONT][FONT=&quot]ிவுடன் கடவுளைத் தொழுது[/FONT]
[FONT=&quot]கர[/FONT][FONT=&quot]ை சேர்த்திட இதமாய் அழுது[/FONT]
[FONT=&quot]இனி உடன் அவனே என்று[/FONT]
[FONT=&quot]இரைஞ்சிடும் நெஞ்சே கேளாய்.[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]த[/FONT][FONT=&quot]ியாக திடவுளம் ஏதுமின்றி[/FONT]
[FONT=&quot]ய[/FONT][FONT=&quot]ோக மதங்கள் மதியா மனமே,[/FONT]
[FONT=&quot]ஒற்றுமை ஒவ்வா துலகில் - நீ[/FONT]
[FONT=&quot]ப[/FONT][FONT=&quot]ெற்றது துயரொன்று தானே?[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]ப[/FONT][FONT=&quot]ிணைப்புகள் பலவும் எழிலாய்[/FONT]
[FONT=&quot]இணைப்புகள் போற்றும் அறிவாய்.[/FONT]
[FONT=&quot]ப[/FONT][FONT=&quot]ிரிவினை பிணிதீர் மருந்து[/FONT]
[FONT=&quot]ப[/FONT][FONT=&quot]ிறழா நேசமும்பாசமு மன்றோ?[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]த[/FONT][FONT=&quot]ுயறுறா மாந்தர் என்றும்[/FONT]
[FONT=&quot]த[/FONT][FONT=&quot]ுணிந்ததே இல்லை மனமே,[/FONT]
[FONT=&quot]உறுதியாய் [/FONT][FONT=&quot]ப[/FONT][FONT=&quot]ிறன்துயர் தீர்த்து[/FONT]
[FONT=&quot]அமைதியை உலகுக் குணர்த்து.[/FONT]
[FONT=&quot] [/FONT]
[FONT=&quot]- அனந்தஸ்ரீ[/FONT][FONT=&quot] ஐயர்[/FONT]

Aunty. This is what we made. I am taking your lines also tomorrow. Thanks.


My dance performance is there at Vani Mahal on 25th. Please come.
Dear Mr. R.K.B,

i will do my best if the kutty friend still needs my help:)
with warm regards,
V.R.
 
hello kutty friend! (reply to # 119)
I have no idea of how kutty you are! So i made the poem as simple as possible. Your poem is much more mature than what i am writing!
Keep up the good work.
Thanks for the invitation to attend your dance performance. I live in coimbatore and i am not free to travel as i wish.
However I wish you 'All the Best' to give wonderful performance on 25th in
Vani Mahal.
i was a dance teacher too. I remember my students now. Most of them have got married and are mothers now! :)
Good luck with your poem competition and your dance recital.
with best wishes and blessings,
Visalakshi aunty.
 
துறவறம் என்பதே சரி.

அதே போல, இன்னும் சில எழுத்துப் பிழைகளையும் திருத்திக் கொள்ளவும்.

இறைஞ்சிடும்

துயருறா
 
#65. துருவ நட்சத்திரம்!





மன்னன் உத்தான பாதனுக்கு
மனைவியர் இருந்தனர் இருவர்;
மிகவும் பிரியமானவள் சுருசி,
மிகுந்த கர்வம் கொண்டவள்.

ஆதரவை இழந்து விட்ட சுநீதியோ
அதிக இறை பக்தி கொண்டவள்.
மகன் துருவனையும் தன் போன்றே
மாதவன் பக்தனாக வளர்த்தாள்.

சுருசியின் மகன் உத்தமனே
மன்னனின் செல்லப் பிள்ளை;
சுநீதியின் மகன் துருவனோ என்றும்
மன்னனை நெருங்கவும் முடியாது.

மன்னன் மடியில் அமர விரும்பியவனை
மாற்றாந்தாய் தொல்லைகள் செய்யவே,
தாயின் சொற்படி இறை அருள் வேண்டி
ஏகினான் கானகம் பச்சிளம் பாலகன்.

முனி நாரதரிடம் உபதேசம் பெற்று
மது வனத்தில் துவங்கினான் தவம்.
அன்னம், ஆகாரம், நீர், காற்று, உறக்கம்
என்று படிப்படியாகக் குறைத்து விட்டான்.

ஐந்து வயது பாலகன் செய்து வந்த
ஐந்து மாதத் தவத்தின் சுவாலை
அனைத்து உலகங்களையும் வாட்ட,
அருள் செய்ய விரைந்தான் பெருமான்.

கண்ணுக்குள் இருந்த அழகிய உருவம்
காணமல் போய்விடவே துணுக்குற்றுக்
கண்களைத் திறந்த துருவன் கண்டது
கண் முன்னேயும் அதே உருவத்தை!

புளகம் அடைந்து பேச்சற்றுப்போன
துருவன் கன்னங்களை, மெல்லவே
புன் சிரிப்புடன் வருடினான் தன்
வெண் சங்கத்தால் நம் இறைவன்!

துருவன் தவத்தை மெச்சி, அவனைத்
துருவ நட்சத்திரமாக ஆக்கிவிட்டான்!
அன்று மட்டும் அல்ல, இன்றுவரையில்
அனைவருக்கும் வழி காட்டுவது துருவனே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
#66. கஜேந்திரன் கதை.





பாண்டிய மன்னன் இந்திரத்யும்னன்,
பாற்கடலில் பாம்பணையின் மீது
பள்ளி கொண்ட பரந்தாமனின் பக்தன்;
பரமன் நினைவிலே திளைத்திருப்பவன்.

மலய பர்வதத்தில் ஆழ்ந்த தியானத்தில்
அமர்ந்து இருந்தவன் உணரவில்லை,
குறுமுனி அகத்தியர் தன்னை நாடி
ஒரு விருந்தினராக வந்ததையே!

கண்டும் காணாதது போல இருந்ததைக்
கண்டதும் முனிவர் கொண்ட கோபத்தால்,
கஜேந்திரனாகச் சென்று பிறக்கும்படிக்
கண நேரத்தில் ஒரு சாபம் அளித்தார்.

மறு பிறவியிலும் மாறாத பக்தியும்,
இறை நினைவும் பெற்றிருந்த யானை,
பெரும் யானைக் கூட்டத்தின் அரசனாக,
பெரு வலிவுடைய கஜேந்திரனாக ஆயிற்று!

கந்தர்வன் ஹூ ஹூ, முனிவர் தேவலர்
கால்களை நீரில் மூழ்கிப் பற்றி இழுக்க,
கோபம் கொண்ட முனிவர் கொடுத்தார்
சாபம் ஒரு பெரிய முதலை ஆகும்படி!

இருவரின் சாப விமோசனமும் அன்று
இருந்ததோ ஒரே இறைவன் கையில்!
இருந்தான் பரந்தாமனும் தகுந்த நேரம்
வரும் வரையிலும் காத்துக் கொண்டு!

ஆனையின் காலை முதலை இழுக்க,
ஆயிரம் ஆண்டுகள் இழுபறி நிலைமை!
தன் முயற்சியில் தோல்வியுற்ற யானை
முன் ஜன்ம பக்தியை நினைவு கூர்ந்தது!

தாக்கும் முதலையிடம் இருந்து காக்க,
காக்கும் கடவுள் தாமரைக் கண்ணனைத்
தூக்கிய துதிக்கையில் பற்றிய மலருடன்
நோக்கி அழைத்தது “ஆதி மூலமே” என!

சடுதியில் ஏறினான் தன் கருடன் மீது;
கடுகி விரைந்தான் மடுவின் நீரிடம்;
விடுத்த சக்கரம் பறந்து சென்றது;
அடுத்த நொடியில் முதலை மடிந்தது!

அடைந்தான் ஹூ ஹூ தன் சுய உருவம்;
அடைந்தான் கஜேந்திரன் சாருப்ய முக்தி;
கிடைத்தது மனித குலத்துக்கு உறுதி ஒன்று,
கிடைக்கும் உறுதியாக இறை உதவி என்று!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




Cancel reply
 
#67. மூர்த்தியும், கீர்த்தியும்!





“மூர்த்தி சிறியது ஆனாலும் அவர்
கீர்த்தி மிகவும் பெரியது” என்பார்;
இந்தச் சொற்களின் விந்தைப் பொருளைச்
சிந்தையில் சேர்க்கும் வாமனன் கதை.

உலகம் மூன்றையும் வென்றதுடன்,
உவந்தவர் உவந்ததை அளிக்கவல்ல
பலிச் சக்கரவர்த்தியின் கர்வத்தை
பலி வாங்க வந்தவனே வாமனன்.

“பாரினில் இறங்கிய சனத்குமாரனோ?
சூரியனோ இவன்?” எனக் காண்பார் ஐயுற,
குறு வடிவு எடுத்துக்கொண்டு வந்த
திருமாலின் ஐந்தாவது அவதாரம்!

தன் காலடிகளால் அளக்கப்பட்ட
மூன்றடி மண் மட்டுமே தன் தேவை,
என்ற பாலகனிடம் பலி சொன்னான்,
“மூன்று உலகுமே கேள், நான் தருவேன்!”

“மூன்றடி மண் மனத் திருப்தி தராவிடில்,
மூன்று உலகமும் அதைத் தராது அன்றோ?
மூன்றடி மண்ணே எனக்குப் போதும்;
மூன்று உலகங்கள் வேண்டவே வேண்டாம்!”

மூன்று உலகங்களுக்கு அதிபதியானவன்,
மூன்று அடி மண் கொடுக்க இயலாதபடி,
வளர்ந்தான் வாமனன் வானளாவியபடி;
அளந்தான் ஈரடியால் ஈருலகங்களை!

மண்ணைத் தன் ஓரடியாலும், பின்னர்
விண்ணைத் தன் ஓரடியாலும் அளந்தவன்,
அடுத்த அடியை வைக்க இடம் கேட்டு,
கெடுத்தான் மகா பலியின் கர்வத்தை!

தன் தலையையே மூன்றாம் அடியைத்
தாங்க அளித்தான் தன் சொல் காக்க;
தயங்காமல் தன் அகந்தையை விட்டுத்
தந்ததால், பலிக்கு இன்று வரை ஓணம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




Cancel reply
 
#68. குறும்புக்காரன்!





குறும்புகள் செய்யும் குட்டிக் கண்ணனை
விரும்புவரே அன்றி வெறுத்திடார் எவரும்!
குறும்புகள் செய்யும் குழந்தையை இன்றும்
குறும்புக்காரக் கண்ணன் என்கின்றோமே!

எழில் புன்னகையில் முத்துப் பற்கள்;
குழல் கற்றைகள் ஆடும் நெற்றியில்;
சிணுங்கும் பாதசரங்கள், தண்டைகள்;
குலுங்கும் கை நிறைய வளையல்கள்.

முன்னே ஓடும்போதும், திரும்பிப்
பின்னே பார்த்தபடிச் சென்று விழுந்து
புழுதியும் சேறும் பூசிய பின்னும் மிக
எழிலுருவாகக் காட்சி தருவது யார்?

இடைச் சிறுவருடன் ஆட்டம், பாட்டு;
இடையிடையே வெண்ணை பூனைக்கு!
கன்றுகளின் வாலைப் பற்றிக் கொண்டு
மண் மீது வழுக்கிச் செல்வது யார்?

கறந்த பாலைக் குடிப்பது மட்டுமின்றி,
கறக்கும் முன்பே பசுவிடம் குடிப்பது;
வெண்ணை, தயிர் எல்லோர் வீட்டிலும்
வேண்டுமளவு திருடித் தின்பது யார்?

நிலவைப் பழம் என்று நினைத்துக் கொண்டு,
நிலாப் பழத்தை வேண்டிக் கையை உயர்த்த,
வான் நிலவும் கீழே இறங்கி வந்து அவன்
வான் நோக்கிய கையில் அமர்ந்ததாமே!

குறும்புகள் செய்தால்தான் அது ஒரு குழந்தை;
வெறும் பொம்மையே வைத்தபடியே இருந்தால்!
குறும்புக்காரக் குழந்தைகளே வளர்ந்த பின்பு
துறு துறு மனிதர்களாக விளங்கிடுவார்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
.




 

Latest ads

Back
Top