• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

சிந்தனை தந்த இந்திர ஜாலம்


#010. பிரஹலாதன்

செந்தாமரை சேற்றில் வளர்ந்தாலும்,
வந்தனை செய்ய அவசியம் தேவை.
தாமரை மலரின்றி பூஜைகள் ஏது,
தாமரைக் கண்ணன் இறைவனுக்கு?


கர்வத்தில் உச்சியில் இருந்து கொண்டு
கடவுள் நானே என்று அறைகூவல் இட்ட
அரக்கர்களின் அரசன் இரண்யகசிபுவின்
அருமை மகனே பக்தப் பிரஹலாதன்.


மணி வயிற்றில் குடி இருந்தபோதே
மணிவண்ணன் மேல் பக்தி கொண்டு,
மாறாமல் உறுதியாக நின்று, இறுதியில்
மாதவனின் அருள் பெற்ற ஒரு குழந்தை.


பிஞ்சுக் குழந்தையாக இருந்த போதிலும்,
நஞ்சு கோப்பைக்கு அவன் கொஞ்சமும்
அஞ்சவில்லை; எடுத்து அருந்தினான்.
கெஞ்சவோ அன்றிக் கொஞ்சவோ இல்லை.


மலை உச்சியில் இருந்து உருட்டிய போதும்,
மன்னன் பட்டத்து யானை இடற வந்தபோதும்,
கல்லுடன் கட்டிக் கடலில் வீசப்பட்டபோதும்,
கனலில் இறங்கி நடக்கச் செய்தபோதும்,


ஹரியின் திருநாமத்தைத் தவிர வேறு ஏதும்
அறியவும் இல்லை, இயம்பவும் இல்லை.
ஹரி பக்தர்களைக் காப்பாற்றுவது அந்த
ஹரி பரந்தாமனின் கடமை அன்றோ?


இறுதியில் தன் பக்தன் வாக்கை மெய்ப்பிக்க,
வெறும் கல் தூணிலிருந்து தோன்றினான்,
தேவர்களும் காண அரும் தவம் இருக்கும்
தேவாதி தேவனான ஹரி நாராயணன்.


குப்பையில் கிடக்கும் மாணிக்கத்தையும்,
சிப்பியில் விளையும் நல்ல முத்தையும்,
சேற்றில் மலர்ந்த செந்தாமரையையும்
போற்றுவோம்; என்றுமே இகழ மாட்டோம்!


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


#010. BHAKTA PRAHLAADH


Lotus flower may bloom in a slushy pond but we can’t do pUjA to the lotus-eyed Lord, without that flower. PrahlAd was the son of HiraNya Kasipu – who proclaimed himself to be the God.


Even while PrahlAd was in his mother’s womb, he developed a staunch and unwavering bhakti (devotion) towards Lord VishnU. It never diminished or wavered even when PrahlAd was subjected to dire threats and severe punishments for uttering the name
of Sri Hari.


When PrahlAd was asked to drink the deadly poison, he never begged for mercy nor was he frightened to drink it. Then he was pushed down from the top of a mountain. Later the king’s royal elephant was ordered to trample on his head.


PrahlAd was tied to a rock and thrown into the sea. He was pushed into a pit of roaring flames, by the orders of his foolish and jealous father. He never cried or shouted. The only word he kept repeating was the name of Sri Hari.


He knew that saving Hari’s devotees from all sorts of dangers was the responsibility of Hari himself! Just to prove that PrahlAd’s words were true, the God – to get a glimpse of whom even the dEvAs have to wait for a long time – appeared as narahari (the half lion-half man) from a mere stone pillar.


A precious gem may be thrown in the mud; but that does not diminish its value. A pearl may grow in an unsightly oyster; but it does not make it less precious. A lotus flower may bloom in mud; but that does not defile or degrade it. We all think that lotus is the best flower to be offered to God.


PrahlAd may be the son of a sinful king but that does not diminish his fame in any which way.





 
bhagavathy bhaagavatam - skanda 12

12#8c. வசந்த ருது

தரும் ஆறு ருதுக்களின் பயன்களை ஒன்றாக!
வரும் குயிலோசையுடன் வண்டின் ரீங்காரம்!


ஓடும் சுவையுள்ள கனிரசம் போன்ற நதிகள்!
பாடும் கிளிகளுடன் பிற பறவைகள் இனிதாக.


தேடும் துணைகளை இளம் பெண்மான்கள்;
ஆடும் மரக்கிளைகள் மலர் மணம் பரப்பும்.


இருக்கிறது வடக்கில் தாமிரப் பிரகாரம்;
நறுமணம் கமழும் கற்பகத் தருக்களுடன்.


மிளுரும் மலர்கள் பொன் மலர்கள் போல!
ஒளிர்வான் வசந்த ருது அரசனாக இங்கு!


அமர்வான் புஷ்ப சிம்மாசனத்தில் வசந்தன்;
அமர்வான் புஷ்பக் குடையின் கீழ் வசந்தன்;


இருப்பான் புஷ்ப ஆபரணங்கள் தரித்து வசந்தன்;
இருப்பான் புஷ்பங்கள் சிந்தும் தேன் தாரையில்!


சுழலும் கண்களை உடைய ருது வசந்தனுடன்
சுகமாக இருப்பர் மாதுகள் மது ஸ்ரீ, மாது ஸ்ரீ!


நிறைந்திருக்கும் கந்தர்வர்கள் கானத்தால்;
நிறைந்திருக்கும் கந்தர்வர்கள் கூட்டத்தால்;


நிறைந்திருக்கும் பறவைகளின் சப்த ஜாலத்தால்;
நிறைந்திருக்கும் வசந்த ருதுவின் உல்லாசத்தால்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


12#8c. Vasanthan


Next comes the third enclosure wall of copper. Within this are forests of Kalpa Vrukshas which have leaves and flowers of gold and bear fruits of gems. Their perfume spreads far and wide and gives happiness to everyone around there.


The king of this season Vasanthan preserves this place. His throne is made of flowers;
his umbrella is made of flowers; his ornaments are made of flowers; he drinks the honey from the flowers. His eyes roll due to the intoxication from drinking the honey.


He lives here with his two beautiul wives named Madhu Sree and MAdhu Sree. The two wives of Spring have smiling countenance and they play with flower bunches.


This forest is very pleasant. The honey of the flowers is in abundance. The perfumes of the flowers spread far and wide. Gandharvas, the heavenly musicians, live here with their wives.


This place is filled with all the pleasures associated with spring and it intensifies the desires in the amorous persons!




 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்


#011. தேக அபிமானம்

பிறந்தவுடன் இருக்காது தேக அபிமானம்!
பிறகு நாம் வளர வளர உடன் வளரும்

நான், எனது என்கின்ற எண்ணங்களும்,
என் தேகம் என்கின்ற அபிமானமும்.

அபிமானம் முற்றும் அழிந்தால் அன்றி
ஆத்மாவைச் சற்றும் அறிய முடியாது!

ஆத்மாவை நன்கு அறிந்தவன், தேக
அபிமானத்தை முற்றிலும் துறப்பான்.

களித்து விளையாடிக் களைத்த பின்னர்,
குளிக்கச் சென்ற கோகுலப் பெண்களின்,

அவிழ்த்து வைத்த ஆடைகளைத் திருடியே,
அழித்தான் அவர்களின் தேக அபிமானத்தை!

கரங்களைக் கூப்பிக் கும்பிட்டபடியே
கரை ஏறும்படிக் கண்ணன் பணித்ததும்,

கண்ணீர் மல்கக் கதறினார் பெண்கள்; பின்
கண நேரத்தில் தேக மயக்கம் ஒழிந்தனர்.

பரம ஹம்சர்களுக்குத் தெரியாது தமக்கு
பாரமான உடல் ஒன்று இருக்கிறது என்றே!

ஆத்மாவில் திளைத்து, இறையில் நிலைத்து,
உடலையும் அறியார்; உடையையும் அறியார்.

அபிமானம் உள்ளவர்களுக்கே ஏற்படும்
அவமானம் என்ற மன மயக்கம் ஒன்று.

அபிமானத்தைத் துறந்துவிட்டால் பிறகு
அவமானம் ஏது? அல்லது மானம்தான் ஏது?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

#011. PRIDE AND SHAME

A new born child has no attachment to its body. As it grows up, it develops the concepts of ‘ I ‘ and ‘Mine’ and starts to identify itself with its physical body.

To realise one’s true Self, the Atman, one should lose completely one’s attachment to one’s physical body. One who has realized himSelf will stop identifying himself with his physical body.

The young girls of Gokulam, went to bathe in a river and KrishnA destroyed their attachment to the physical body and their sense of shem by stealing their clothes.

When KrishnA ordered them to come out of water, with their hands held over their heads, the girls broke down completely and wept bitterly, with a sense of shame.

KrishnA made them realize that they were all Atmans and not just female bodies. The gave up their attachment to their body and immediately and attained true knowledge.

A paramahamsa (an enlightened person) forgets that he has a physical body. He dwells in his Self and merges with God. He forgets all about his body and does not know whether he is dressed or not.

Only a person who has a sense of pride can suffer from a sense of shame. If there is no pride there is no shame either!

 
I am happy to note the increase in the traffic. It reminds me of ThirukkuraL since the traffic in the past 24 hours is 1330!

In 2010 I had just two blogs to my credit. The welcome the blogs received made me write more and more and blog them.

The current score is 72 blogs. My wish is to make 108 blogs as an offering to God. Let us wait and see whether I am able to realise my ambition!

I will be giving the links in the respective threads for easy access to anyone who is interested to read more. :pray2:
 
Last edited:
Kandapuranam blogs:

1. Kanda Puraanam (Urppathik Kaandam)

2. Kanda Puraanam (Asura Kaaandam)


3. Kanda Puraanam (Mahendra Kaandam)

4. Kanda Puraanam (Por Puri Kaandam)

5. Kanda Puraanam (Deva Kaandam)

6. Kanda Puraanam (Daksha Kaandam)


துய்யதோர் மறைக ளாலும் துதித்திடற் கரிய செவ்வேள்
செய்ய பே ரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க
வெய்ய சூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க அன்னான்

பொய்யில் சீர் அடியார் வாழ்க வாழ்க இப்புவனம் எல்லாம்.



Visalakshi Ramani
 
bhagavathy bhaagavatam - skanda 12

12#8d. ஆறு ருதுக்கள் (1)

கிரீஷ்ம ருது

உள்ளது வடக்கில் ஈயப் பிரகாரம் ஒன்று;
உள்ளன மனம் கமழும் சந்தன மரங்கள்.


உள்ளன பொன்னொளி வீசும் அற்புத மரங்கள்;
உள்ளன அமுதச் சுவையுடன் கற்பகத் தருக்கள்.


இருப்பான் இங்கு கிரீஷ்ம ருதுவின் நாயகன்;
இருப்பர் அவனோடு சுக்ரஸ்ரீ, சுசிஸ்ரீ இருவர்.


தாபம் தணிவதற்குத் தங்குவர் இங்கு;
வேதம் அறிந்த சீலர்களும் இருப்பர்.


மங்கையர் அணிவர் சந்தன மலர்களை;
தங்குவர் நீரின் குளுமையை விழைபவர்.


வர்ஷ ருது


உள்ளது பித்தளைப் பிரகாரம் இதற்கும் வடக்கே;
உள்ளன அரிச் சந்தன மரங்கள், புல்வெளிகள்.


காம வயப்பட்ட மனம் போல் கலங்கிய பொய்கைகள்;
களைக் கட்டுவர் சித்தர்கள், அமரர், தேவி பக்தர்கள்.


சுகித்திருப்பர் இங்கு மனைவியுடன் – நற்கர்மம்
இக வாழ்வில் பண்ணிய புண்ணிய சீலர்கள்.


மேக வாஹனன் வர்ஷ ருது வசிப்பான் இங்கே;
மேகமே அவன் கவசம்; மின்னலே அவன் கண்கள்;


இடியே அவன் குரல்; வானவில்லே அவன் வில்;
வடியும் வர்ஷ தாரைகள் அவன் கை பாணங்கள்;


*தேவியர் பன்னிருவர்* ஆவர் வர்ஷ ருதுவுக்கு!
மேவிய இன்பத்துடன் வாழ்ந்திருப்பான் இவன்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

*தேவியர் பன்னிருவர்* : -

(1) Nabhah Sree (2) Nabhahsya Sree (3) Svarasya (4) RasyasAlinee
(5) AmbA (6) DulA (7) Niratni (8) Abhramantee (9) Megha YantikA (10) Varshayantee (11) ChivuNikA and (12) VAridhArA


12#8d. Greeshma Ruthu and Varsha Ruthu


Next is the enclosure wall made of lead – within which there is the garden of the SantAnaka tree. The fragrance of its flowers extends far and wide. These flowers appear golden in color and are always in full bloom. Its fruits are very sweet like nectar.


Greeshma Rutu (or the Summer Season) resides here with his two wives Sukra Sree and Suchi Sree. The residents of this place remain under the trees – to escape being scorched by the heat of summer.


Various Siddhas and Devas reside in this place. The females get themselves fully anointed with the cool sandal paste and decorated with fresh fragrant flower garlands. They carry small fans in their hands. The water is very cool and very refreshing.


Next to this comes the enclosing wall made of brass. A garden of Hari Chandana trees is situated inside it. Its ruler is the Rainy Season. The lightnings are his eyes; the clouds are his armour, the thunder is his voice and the rainbow is his bow. The streaks
of rain are his arrows.


He has twelve wives namely (1) Nabhah Sree (2) Nabhahsya Sree (3) Svarasya (4) RasyasAlinee (5) AmbA (6) DulA (7) Niratni (8) Abhramantee (9) Megha YantikA (10) Varshayantee (11) ChivuNikA and (12) VAridhArA


All the trees, plants and creepers flourish well. It looks luscious green everywhere. The rivers flowing there have many strong currents. The tanks here look as disturbed as the minds of persons attached to the worldly things.


The devotees of the Devi, the Siddhas, the Devas and those who did good karmas during their lifetime on earth, live here happily with their spouse.



 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#012. தோற்றம், நோக்கம்


தோற்றமும் நோக்கமும் எதிர்மறை ஆகலாம்;
தோற்றங்கள் நம்மை முற்றிலும் ஏமாற்றலாம்.

நோக்கம் என்ன என்று அறியும் வரையில் நாம்
தோற்றத்தைக் கண்டு மயங்கிவிடக் கூடாது.

வேதனை இதுவே எவருமே அறியவில்லை,
பூதனை வந்தது கண்ணனை அழிக்க என்று!

மயக்கும் மனோகரப் பெண் போல வந்து
மாயக் கண்ணனைக் கொல்ல எண்ணினாள்.

வண்டுகள் மொய்க்கும் மலர்க் கூந்தல்;
வண்டுகளாகச் சுழலும் கரு விழிகள்;

பட்டு ஆடைகள் பலப்பல ஆபரணங்கள்;
தொட்டால் துவளும் மெல்லிய உடல்.

சொந்த பந்தம் போல வீட்டின் உள்ளே
வந்தவளைக் கண்டு மயங்கியவர்கள்,

சந்தேகிக்கவே இல்லை அவள் நோக்கத்தை;
சந்தித்த மகிழ்ச்சியில் தடுக்கவும் இல்லை!

கண்ணனைக் கொஞ்சி முத்தமிட்டவள்
கண் மறைவாகச் சென்று அமர்ந்து,

தாய் போலப் பாலூட்டும் பாவனையில்,
பேய் போலக் கொடும் நஞ்சை ஊட்டினாள்!

பாவியின் நோக்கம் அறிந்த கண்ணன், அவள்
ஆவியையும் பாலுடன் சேர்த்துப் பருகவே,

ஆவி பிரியும் வேதனையில் அந்தப் பாவி
கூவிக் கூவித் தன் உயிரையும் துறந்தாள்.

துறவியின் உடையிலும் கொல்லும் வாள்
மறைந்து இருந்த கதையை மறந்திடோம்!

வெளித் தோற்றத்துக்கு மயங்கிவிடாமல்
உள்நோக்கத்தின் உண்மையை உணர்வோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

#012. APPEARANCES AND INTENTIONS.

Appearance of a person may be the opposite of the real intention of the person. Appearances may be deceptive. We must learn to find out the real intention and not be carried away by the appearance.

When Poothana came to YasOdhA’s house, no one knew her real intention. She came dressed as a very beautiful woman with the intention of killing infant KrishnA.

Her hair was adorned with fragrant flowers and her lovely eyes swirled like two black beetles. She was draped in silk and decorated with jewels. She looked so pretty and delicate! She walked past everyone in the house with a sweet smile. No one either stopped her or suspected her.

She lifted KrishnA, kissed Him and sat down in a corner to breastfeed Him. But KrishnA knew her real intentions and sucked out her life along with her milk. She cried in pain and dropped down quite dead!

We have heard the story of a king who disguised himself as a hermit and killed his enemy king – with a sword hidden under his holy garments.

 
The story referred to in the above poem is given here!


7#05. மெய்ப்பொருள் நாயனார்

நடு நாடு என்னும் சேதி நாடு அமைந்திருந்தது
நடுநாயகமாக சோழ, தொண்டை நாடுகளுக்கு.

திருக்கோவிலூர் சேதி நாட்டின் தலைநகரம் – இங்கு
திரு அவதாரம் செய்தார் மெய்ப்பொருள் நாயனார்.

“மெய்ப்பொருள் சிவனடியார் திருவேடமே” என்றதால்
மெய்ப்பொருள் நாயனார் என்ற பட்டப்பெயர் பெற்றார்.

அரும் காவலன் அறநெறியின்று பிறழாதவன் – மேலும்
பெரும் நல்லாட்சி செய்பவன்; அவன் அஞ்சா நெஞ்சன்;

சோதனை ஏற்பட்டது இந்தச் சேதி நாட்டு மன்னனுக்கும்!
சாதனைகளில் அவனே தலை சிறந்து விளங்கியதால்!

முத்தநாதன் மெய்ப்பொருளாரின் ஜன்மப் பகைவன்;
எத்தனையோ முறை போரில் புறமுதுகிட்டு ஓடியவன்;

அற வழியில் வெல்ல முடியாத தன் பகைவனைப்
பிற வழிகளில் வெல்ல எண்ணினான் முத்தநாதன்;

சிவவேடம் ஒன்றே நாயனாருக்கு மெய்ப்பொருள்;
சிவனடியார் வேடத்தைத் தாங்கினான் முத்தநாதன்;

குளித்தான் வெண்ணீற்றில் விதிமுறை அறியாமல்;
ஒளித்தான் கூரிய வாளை ஓலைச் சுவடிகள் இடையே.

அடைந்தான் திருக் கோவிலூரைக் கள்ளத் தவசி;
அடையவில்லை ஐயம் எதுவும் குடிமக்கள் எவரும்;

தங்கு தடையின்றிச் சென்றடைந்தான் முத்தநாதன்
மங்காத புகழ் கொண்ட மன்னனின் பள்ளியறையை;

தத்தன் நின்றான் அன்று மெய்க்காப்பாளனாக அங்கு.
முத்தநாதனிடம் கூறினான் மன்னன் இளைப்பாறுவதாக.

சட்டை செய்யவில்லை தத்தனைக் கள்ளத் தவசி சற்றும்;
சட்டென்று நுழைந்து விட்டான் மன்னன் பள்ளியறையில்;

எழுந்துவிட்டாள் அமர்ந்திருந்த அரசியார் திடுக்கிட்டு;
எழுப்பினாள் மன்னனைத் துணுக்குறும் வண்ணம்;

ஐந்தெழுத்துக்களை ஓதினான் முத்தநாதன் – சிறிதும்
ஐயம் கொள்ளாமல் அடி தொழுதான் முடி மன்னன்.

“ஆகம நூல் ஒன்று உள்ளது என்னிடம்! நான் இங்கு
வேகமாக வந்தது அதை உனக்கு அளிப்பதற்கு” என

உயர்ந்த ஆசனம் அளித்தான் கள்ளத் தவசிக்கு- தான்
தயங்காமல் அமர்ந்தான் தரையில் தன் அரசியுடன்.

“மலரணி மங்கையர் இங்கு இருக்கலாகாது மன்னா!
பல காலமாகத் தொடரும் ஆகம நெறி இது” என்றான்.

அகன்று சென்று விட்டாள் அரசியார் தன் அந்தப்புரம்;
அமர்ந்திருந்தான் அரசன் மட்டும் வெறும் தரையில்;

அளித்தான் திருநீற்றை மெய்ப்பொருளாருக்கு – அவரை
ஒளித்திருந்த வாளால் தாக்கினான் வணங்கும் பொழுது.

குருதி பொங்கி வழிந்த போதிலும் மெய்ப்பொருளார்
சிறிதும் கொள்ளவில்லை சினம், வேதனை, வெறுப்பு!

திடுக்கிட்ட தத்தன் வெடுக்கென்று தன் வாளை ஓங்கிடத்
தடுத்தான் மன்னன்,”தத்தா! இவர் நமர்” என்று கூறினான்.

வீசினான் உடைவாளைத் தத்தன், தாங்கினான் மன்னனை;
பேசினான் மன்னன்,”எல்லை வரை அழைத்துச் செல்!’என.

பதறி அடித்து ஓடி வந்தாள் அரசி அங்கு செய்தி கேட்டதும்;
கதறி அழுதாள் கணவனை ரத்த வெள்ளத்தில் கண்டதும்.

எதிர் நோக்கி இருந்தார் மன்னன் தத்தனின் வருகையை;
எல்லையை அடைந்தபின் விரைந்து திரும்பினான் தத்தன்;

செய்தி விரைந்து பரவியது காட்டுத் தீ எனச் சேதி நாட்டில்;
செய்வது அறியாமல் மனம் குமுறினர் சேதி நாட்டு மக்கள்;

அறிந்து கொண்டார் முத்தநாதன் பத்திரமாகச் சென்றதை;
துறந்தார் தன் ஆவியை மெய்ப்பொருளார் அதன் பின்னர்.

பேரொளி ஒன்று தோன்றியது அந்த அறையில் அப்போது!
பெருமான் தோன்றினார் விடைமீது உமை அன்னையுடன்!

விழுந்தது இறைவனின் அருட்பார்வை நாயனாரின் மீது;
விழுந்து கிடந்த நாயனார் எழுந்தார் இளமைப் பொலிவோடு!

“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்”

(திருத் தொண்டத் தொகை)


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

7#05. MeipporuL nAyanAr

Nadu nAdu aka ChEdhi nAdu was situated in between ChOzha nAdu and ThoNdai nAdu. The capital of ChEdhi nAdu was Thiruk kOviloor. MeipporuL nAyanAr was born as the king of ChEdhi nAdu.

He believed that only being a true devotee of Siva was the true purpose in one’s life. Hence he was called by the name ‘Meip poruL’ meaning the ‘Real purpose in one’s life’.

He was a good as well as a righteous king. He was valorous and brave. He too had some enemies since he was far superior to many other kings.

Muththa nAthan was his enemy and had waged wars on ChEdhi nAdu. But every time he got defeated and had to take to his heels from the war front. He decided to kill MeipporuL nAyanAr by treachery – since he could not defeat him by honest methods.

Muththa nAthan disguised himself as a devotee of Siva. He bathed his whole body in the holy ash since he did not know how to smear it properly.

He hid his sharp sword in a bundle of manuscripts. He reached Thiruk kOviloor. No one suspected him since many devotees of Siva used to visit the king MeipporuL nAyanAr quite often.

Muththa nAthan entered the king’s palace and went straight up to the bedroom of the king. Dhaththan, the king’s bodyguard and was standing outside the room with his sword.

Dhaththan stopped Muththa nAthan disguised as a hermit and said, “The king should not be disturbed now. He is relaxing.” But Muththa nAthan ignored Dhaththan and entered king’s bedroom. The queen got startled and got up in a huff. She woke up the king who also got startled by this sudden entry of a stranger.

Muththa nAthan uttered the Siva panchAkshara as “Namah SivAya!” loudly. The king had no reason to suspect him and paid his obeisance to his treacherous enemy, in the guise of a hermit.

Muththa nAthan told the king.”I have a rare manuscript of Siva Agama. I came here in a hurry to present it to you”. The king offered him a high seat and he himself sat of the floor with his queen.

Muththa nAthan objected to the queen’s presence there and said, “It is the ancient practice not to have any women present at such times”. The queen took the hint and went to her quarters in the palace.

Now the king alone was sitting on the floor. Muththa nAthan gave him the holy ash. When the king bent down to pay his obeisance to the hermit, Muththa nAthan stabbed him hard.

The king MeipporuL nAyanAr started bleeding heavily but did not show any sign of anger or sorrow or hatred. Dhaththan the king’s bodyguard came running with his sword held high. MeipporuL nAyanAr stopped him from attacking the deceptive devotee by saying,”Stop! He is one of us!”

Dhaththan dropped the sword and lifted the king who uttered to him one more command, “Accompany him till he crosses the border of our country safely.”

The queen came running on hearing the sad news. She cried her heart out at the sight of the king lying in a pool of blood.

Dhaththan returned as fast as he could – after seeing off the murderer safely. The sad news about the king spread in the country like wildfire. The citizens were very angry but there was nothing they could do.

King was pleased to hear about the hermit’s safe passage through the country and gave up his ghost. A brilliant light lit up that palace.

Siva and Uma appeared on Nandhi Devan. Siva’s eyes showering loving grace fell on Meipporul nAyanAr and he got up quite alive – even more vigorous and handsome than ever before.

( refer to 7#05. SekkizhArin Periya Puranam )
 
bhagavathy bhaagavatam - skanda 12

12#8e. ஆறு ருதுக்கள் (2)

சரத் ருது

உள்ளது எதிரில் பஞ்ச லோகப் பிரகாரம்;
உள்ளது மந்திர சாலை அதன் நடுவில்.

வசிப்பர் சித்து வேலையில் வல்ல சித்தர்;
வசிப்பர் தம் பத்தினி, பரிவாரங்களுடன்.

வாசிப்பான் இங்கு இதன் நாயகன் சரத்ருது;
இசைவாக லக்ஷ்மி, ஊர்ஜ லக்ஷ்மியுடன்.

ஹேமந்த ருது


உள்ளது ஒரு வெள்ளிப் பிரகாரம் இதன் முன்பு;
உள்ளன இரு வரிசையாகப் பாரிஜாத மரங்கள்

பூத்துக் குலுங்கும் இந்த மரங்கள் – நல்ல
புத்துணர்ச்சி தரும் நற்பணி புரிபவருக்கு.

நாயகன் இந்த இடத்துக்கு ஹேமந்த ருது;
நாயகியர் இருவர் சஹஸ்ரீ, சாஸ்யஸ்ரீ!

தேவி விரதம் செய்து வந்த சித்தர்கள்
தேவி பக்தர்கள் வசிப்பர் இந்த இடத்தில்

சிசிர ருது


உள்ளது பொன் பிரகாரம் இதற்கு முன்பு;
உள்ளன கதம்ப வனங்கள் இதன் மத்தியில்.

பெருகி ஓடும் தேன் தாரைகள் வனத்தில்;
பருகினால் தரும் தேவியின் நிஜ ஆனந்தம்!

நாயகன் இவ்விடத்துக்குச் சிசிர ருது;
நாயகியர் இருவர் தபஸ்ரீ, தபச்யஸ்ரீ

வசிப்பர் தேவி விரதம் செய்யும் சித்தர்
இசைவான பத்தினி பரிவாரங்களுடன்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#8e. The six Rutus (2)


Next to the brass enclosure is the sixth enclosure made from an alloy of five metals. A
garden of ManDAra tree is in its middle. Creepers, flowers and leaves make this place look very beautiful.

The king of this region is Sarath Ruru. He lives here with his two wives Eshalakshmi and Oorjalakshmi. Siddhas live here happily with their families.

Next to this is the seventh enclosure wall made of silver. A garden of PArijAtA trees laden with flowers stands in its middle. The fragrance of these flowers extend far and wide and makes everyone feel very happy.

Devi bhatAs and those who served Devi or observed her vraths well live here and enjoy the fragrance. Hemanta Ruthu (Dewy season) rules over this region. His two wives are Saha Sree and Sahsya Sree.

Next to this is the eighth enclosure wall built of molten gold. It has a garden of Kadamba trees in the middle. The trees are full of fruits and flowers and ooze honey. The devotees of Devi enjoy the drink of honey to their heart’s delight!

Sisira Ruthu (Dewy Season) is the ruler of this region. He lives here with his two wives Tapah Sree and TapasyA Sree. Those who made Devi happy by the gifts they had made as well the great Siddha purushAs live here happily with their families
 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்


#013. துருவ நட்சத்திரம்

மன்னன் உத்தான பாதனுக்கு
மனைவியர் இருந்தனர் இருவர்;
மிகவும் பிரியமானவள் சுருசி,
மிகுந்த கர்வம் கொண்டவள்.


ஆதரவை இழந்து விட்ட சுநீதியோ
அதிக இறை பக்தி கொண்டவள்.
மகன் துருவனையும் தன் போன்றே
மாதவன் பக்தனாக வளர்த்தாள்.


சுருசியின் மகன் உத்தமனே
மன்னனின் செல்லப் பிள்ளை;
சுநீதியின் மகன் துருவனோ என்றும்
மன்னனை நெருங்கவும் முடியாது.


மன்னன் மடியில் அமர விரும்பியவனை
மாற்றாந்தாய் தொல்லைகள் செய்யவே,
தாயின் சொற்படி இறை அருள் வேண்டி
ஏகினான் கானகம் பச்சிளம் பாலகன்.


முனி நாரதரிடம் உபதேசம் பெற்று
மது வனத்தில் துவங்கினான் தவம்.
அன்னம், ஆகாரம், நீர், காற்று, உறக்கம்
என்று படிப்படியாகக் குறைத்து விட்டான்.


ஐந்து வயது பாலகன் செய்து வந்த
ஐந்து மாதத் தவத்தின் சுவாலை
அனைத்து உலகங்களையும் வாட்ட,
அருள் செய்ய விரைந்தான் பெருமான்.


கண்ணுக்குள் இருந்த அழகிய உருவம்
காணமல் போய்விடவே துணுக்குற்றுக்
கண்களைத் திறந்த துருவன் கண்டது
கண் முன்னேயும் அதே உருவத்தை!


புளகம் அடைந்து பேச்சற்றுப்போன
துருவன் கன்னங்களை, மெல்லவே
புன் சிரிப்புடன் வருடினான் தன்
வெண் சங்கத்தால் நம் இறைவன்!


துருவன் தவத்தை மெச்சி, அவனைத்
துருவ நட்சத்திரமாக ஆக்கிவிட்டான்!
அன்று மட்டும் அல்ல, இன்றுவரையில்
அனைவருக்கும் வழி காட்டுவது துருவனே!


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி


#013. Dhruva Nakshathram (The Pole Star)


King UththAnapAdhA had two wives – Suruchi and Suneethi. Suruchi was his favourite wife and her son Uththaman was the ‘apple of the eye’ of the king. Suneethi had lost the king’s favor and spent her time in prayers and pujA. Her son Dhruvan was not allowed to go near his father the king, by his step mother.


One day when Dhruvan wanted to sit in the king’s lap he was severely reprimanded and taunted by his step mother Suruchi. His mother Suneethi told Dhruva that only Lord NArAyaNA can give him all he wished for.


So the delicate prince who was just five years old went to the forest Madhu Vanam to do penance towards Lord NArAyaNA. He met Devarushi NAradhA on the way and learned the mahA mantrA for doing his penance.


Dhruvan slowly reduced his food intake, his sleep, the amount of water he drank and the air he breathed and was absorbed in doing intense penance. The intensity of his penance heated up the entire creation. No one could bear the scorching heat.


Lord NArAyaNA rushed to his side to bless the little boy. When the lovely form of God planted in his mind suddenly disappeared, Dhruvan got startled and opened his eyes. His joy was boundless when he saw the same lovely Lord standing right in front of him. He became speechless with excitement.


Lord stroked his cheeks with His divine conch PAnchajanyam and blessed Dhruvan with a long and righteous life while on earth and made him a nakshathram (The Pole Star) afterwards.


Dhruvan became the North Pole Star, The Dhruva Nakshathram and has been guiding all the humanity in the right directions ever since.


 
Bhagavathy bhaagavatam - skanda 12

12#8f. அஷ்ட திக்பாலகர்கள்(1)

உள்ளது புஷ்பராக மயமான பிரகாரம் இதன் முன்;
உள்ளன இங்கே எல்லாம் புஷ்பராக மயமாக.


பூமி, வனம், மணி மண்டபம், தூண்கள் மற்றும்
பொய்கைகள், தாமரைகள், பறவைகள் அனைத்தும்.


இரத்தின மயமாக விளங்கும் இந்தப் பிரகாரம்;
பிரகாசம் அதிகம் கொண்டுள்ளது இந்த பிரகாரம்!


இருப்பர் இங்கே தத்தம் ஆயுத, வாகனங்களுடன்
இருக்கும் பிரம்மாண்டங்களின் திக் பாலகர்கள்!


இருக்கும் கிழக்கில் அமராவதி பட்டணம்;
இருக்கும் உபவனங்களுடன் உன்னதமாக.


இந்திரன் வாசிப்பான் தேவர்கள் புடைசூழ,
இந்திராணி, தேவ கன்னியருடன் இன்பமாக.


வன்னிபுரி இருக்கும் அக்னி கோணத்தில் – இதில்
வசிப்பான் அக்னிதேவன் ஸ்வாஹா, ஸ்வதாவுடன்.


யமபுரி பட்டணம் உள்ளது யமதிக்கில் – வசிப்பான்
யமன் தன் நாயகியோடும், சித்திர குப்தனோடும்.


வருண திக்கில் வாசம் செய்வான் மது மயக்கத்தில்
வருணதேவன் நாயகியோடும், வாஹனத்தோடும்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


12#8f. Ashta Dik PAlakAs

Next to the golden enclosure is the ninth enclosure made of the red hued PadmarAga gemstones. Everything seen inside this is made of PadmaRAga gemstones.


Next to this wall there are other enclosure walls built of various other gems and jewels and everything inside the enclosure is made of the same gemstones.


The Cosmic DikpAlakAs ( those representing the sum total of all the DikpAlKAs of the various brahmANdAs ) reside here with their Devis, vAhanAs and retinues.


On the Eastern side is AmarAvati, the dwelling place of Indra. AirAvat, IndrANi, Apsaras and all the Devas live here in absolute pleasure and enjoyment.


Agni lives in his city situated in the south-eastern corner with his two wives SwAhA Devi and SwadhA Devi along with his VAhanA and the other Devas.


The city of Yama, the God of Death is situated in the South. Dharma RAja holding his dandam or punishing rod lives here with his assistant Chitragupta and several other hosts.



 
12#8g. அஷ்ட திக்பாலகர்கள்(2)

வாயு கோணத்தில் வசிப்பான் வாயுதேவன்
யோகியருடனும், மருத் கணங்களுடனும்.


பரந்த விழிகளுடனும், தன் நாயகியுடனும்,
விரைந்து செல்லும் மான் வாஹனத்துடனும்.


வடக்கு திசையில் வசிப்பான் யக்ஷ லோகத்தில்
விருத்தி, ரித்தி என்னும் தேவியருடன் குபேரன்.


நவ நிதிகளோடும், பெருத்த வயிற்றோடும்
நாயகனாக விளங்குவான் சம்பத்துகளுக்கு.


ஈசன கோணத்தில் உள்ளது ருத்ர லோகம்;
ரத்தினங்களால் அமைந்த அற்புத லோகம்.


வசிப்பார் ஈசானன் என்னும் ருத்திரர் – கோப
வசப்பட்டவராகப் பிரகாசமான விழிகளுடன்;


நாண் ஏந்திய வில்லுடன்; சூலாயுதத்துடன்;
மூன்று விழிகளுடன்; அக்னி முகத்துடன்;


பத்துக் கண்டம், பத்துப் பாதம், ஆயிரம் புஜத்துடன்
பத்திர காளி, 11 ருத்திரர்கள், வீர பத்திரர் புடைசூழ.


அணிவார் தலை மாலை, பாம்பு வளையங்கள்;
அணிவார் புலித் தோலை, யானைத் தோலை.


அணிவார் மஹா ஸ்மசானத்தின் சாம்பலை;
கணங்கள் புடை சூழ வீற்றிருப்பார் ருத்திரர்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


12#8g. Ashta Dik PAlakAs (2)


On the north-western corner, VAyu Deva lives with his wife and the Yogis who had perfected their practice of PrAnAyAma. VAyu holds a flag in his hand. His VAhana is a deer and the forty nine Maruth GaNas are his family members.


On the north lives Kubera – the King of Yakshas – with his Devis Vriddhi and Riddhi. He is in possession of the gems and jewels of Nava Nidhi. His generals and retinue also live here.


On the north eastern corner is situated the Rudra loka, decorated with priceless gems. Rudra Deva lives here. He holds a bow in his left hand. The
stock of his arrows is hung on his back. He looks very angry with his reddened eyes.


The other Rudras surround him carrying bows, spears and other weapons. Their faces inspire fear and terror ! Fire comes out from their mouths. Some of them have ten hands; some have a hundred hands and some others have a thousand hands.




 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#014. கஜேந்திரன்


பாண்டிய மன்னன் இந்திரத்யும்னன்,
பாற்கடலில் பாம்பணையின் மீது
பள்ளி கொண்ட பரந்தாமனின் பக்தன்;
பரமன் நினைவிலே திளைத்திருப்பவன்.


மலய பர்வதத்தில் ஆழ்ந்த தியானத்தில்
அமர்ந்து இருந்தவன் உணரவில்லை,
குறுமுனி அகத்தியர் தன்னை நாடி
ஒரு விருந்தினராக வந்ததையே!


கண்டும் காணாதது போல இருந்ததைக்
கண்டதும் முனிவர் கொண்ட கோபத்தால்,
கஜேந்திரனாகச் சென்று பிறக்கும்படிக்
கண நேரத்தில் ஒரு சாபம் அளித்தார்.


மறு பிறவியிலும் மாறாத பக்தியும்,
இறை நினைவும் பெற்றிருந்த யானை,
பெரும் யானைக் கூட்டத்தின் அரசனாக,
பெரு வலிவுடைய கஜேந்திரனாக ஆயிற்று!


கந்தர்வன் ஹூ ஹூ, முனிவர் தேவலர்
கால்களை நீரில் மூழ்கிப் பற்றி இழுக்க,
கோபம் கொண்ட முனிவர் கொடுத்தார்
சாபம் ஒரு பெரிய முதலை ஆகும்படி!


இருவரின் சாப விமோசனமும் அன்று
இருந்ததோ ஒரே இறைவன் கையில்!
இருந்தான் பரந்தாமனும் தகுந்த நேரம்
வரும் வரையிலும் காத்துக் கொண்டு!


ஆனையின் காலை முதலை இழுக்க,
ஆயிரம் ஆண்டுகள் இழுபறி நிலைமை!
தன் முயற்சியில் தோல்வியுற்ற யானை
முன் ஜன்ம பக்தியை நினைவு கூர்ந்தது!


தாக்கும் முதலையிடம் இருந்து காக்க,
காக்கும் கடவுள் தாமரைக் கண்ணனைத்
தூக்கிய துதிக்கையில் பற்றிய மலருடன்
நோக்கி அழைத்தது “ஆதி மூலமே” என!


சடுதியில் ஏறினான் தன் கருடன் மீது;
கடுகி விரைந்தான் மடுவின் நீரிடம்;
விடுத்த சக்கரம் பறந்து சென்றது;
அடுத்த நொடியில் முதலை மடிந்தது!


அடைந்தான் ஹூ ஹூ தன் சுய உருவம்;
அடைந்தான் கஜேந்திரன் சாருப்ய முக்தி;
கிடைத்தது மனித குலத்துக்கு உறுதி ஒன்று,
கிடைக்கும் உறுதியாக இறை உதவி என்று!


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

#014. GajEndhra MOksham.


Indradhyumnan was a PAndya vamsa king and a great devotee of Lord vishnU. He used to get lost in deep meditation on his dear God. One day he was in deep meditation while Agasthya maharishi visited him and he failed to receive the great rushi with due honors.


Angered by the king’s indifference, Agasthya cursed him to become a huge male elephant GajEndhran. The king became a mighty and huge elephant and became the king of a herd of elephants.


Hoo Hoo was a Gandarvan who playfully pulled the legs of DEvala rushi and got cursed to become a huge crocodile.


The S’ApavimOchanam (deliverance from the curse) of both the elephant and the crocodile was in the hands of Lord VishnU and He was waiting for an appropriate time to do that.


When GajEndhran was playing in water with his herd, the crocodile caught hold of his leg. The elephant struggled to become free from the jaws of the crocodile. The epic struggle lasted for one thousand years.


When GajEndhran realized that the struggle was beyond his power, he remembered Lord VishnU as he had not lost his devotion nor the memory of God’s glory. He called out God’s name as “Adhi moolamE!” (” The source of everything”) offering a lotus flower held up in his trunk.


The Lord VishnU rushed to the spot on his vAhanam (vehicle) Garuda and killed the crocodile with His divine discus Sudharsana chakrA.


The gandharvan Hoo Hoo was restored to his original form and glory. GajEndhran was blessed with S’Aroopya mukthi( one of the four modes of liberation). The human race got a promise that Lord will rush to save and protect His sincere devotees.


 
bhagavathy bhaagavatam - skanda 12


12#9a. சக்தி கணங்கள் (1)

உள்ளது குங்கும வர்ணப் பத்மராகப் பிரகாரம்;
உள்ளது புஷ்பராகப் பிரகாரத்துக்கு முன்னால்.


உள்ளன பல மண்டபங்கள் பத்மராகத் தூண்களுடன்;
உள்ளனர் மண்டபங்களில் அறுபத்து நான்கு சக்தியர்.


விளங்குவது சக்தியராக அறுபத்து நான்கு கலைகள்;
விளங்குபவர் தத்தம் லோகங்களின் அதிபதிகளாக.


வசிப்பர் அங்கு தம் வாகனங்கள், கணங்களோடு;
வசிப்பர் அங்கு சக்தி கணங்கள் தத்தம் சக்தியரோடு.


குறிப்பு


அறுபது நான்கு சக்தியரின் பெயர்கள் அளிக்கப்படும்
ஆங்கிலத்தில் மட்டுமே, சரியான உச்சரிப்பைக் காட்ட.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


12#9a. The sixty four Devis


The names of the sixty four KalAs who have become the sixty four Devis are:


PingalAkshi, VisAlAkshi, Samriddhi, Vriddhi,


SraddhA, SvAhA, SvadhA, MAyA,


SanjanA, VasundharA, TreelokadhAtri, SAvitri,


GAyatri, Tridasesvari, SuroopA, BahuroopA,


SkandamAtA, AchyutapriyA, VimalA, AmalA,


AruNi, AaruNi, Prakriti, Vikriti,


Srishti, Sthiti, Samrhiti, SandhyA,


MAtA, Sati, Hamsi, MardikA,


VajrikA, ParA, DevamAtA, Bhagavati,


Devaki, KamalAsanA, Trimukhi, Saptamukhi,


SurAsuravimardini, Lamboshti, Oordhakesi, BahusirshA,


Vrikodari, RatharekhAhvayA, SasirekA, GaganavegA,


PavanavegA,BhuvanapAlA, MadanAturA, AnangA,


AnangamathanA, AnangamekhalA, AnangakusumA, VisvaroopA,


SurAdikA, Kshayamkari, AkshyobhyA, SatyavAdini,


BahuroopA, SuchivratA, UdArA and VAgishee.


These are the names of the sixty four KalAs.



 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#015. வாமனன்

“மூர்த்தி சிறியது ஆனாலும் அவர்
கீர்த்தி மிகவும் பெரியது” என்பார்;
இந்தச் சொற்களின் விந்தைப் பொருளைச்
சிந்தையில் சேர்க்கும் வாமனன் கதை.


உலகம் மூன்றையும் வென்றதுடன்,
உவந்தவர் உவந்ததை அளிக்கவல்ல
பலிச் சக்கரவர்த்தியின் கர்வத்தை
பலி வாங்க வந்தவனே வாமனன்.


“பாரினில் இறங்கிய சனத்குமாரனோ?
சூரியனோ இவன்?” எனக் காண்பார் ஐயுற,
குறு வடிவு எடுத்துக்கொண்டு வந்த
திருமாலின் ஐந்தாவது அவதாரம்!


தன் காலடிகளால் அளக்கப்பட்ட
மூன்றடி மண் மட்டுமே தன் தேவை,
என்ற பாலகனிடம் பலி சொன்னான்,
“மூன்று உலகுமே கேள், நான் தருவேன்!”


“மூன்றடி மண் மனத் திருப்தி தராவிடில்,
மூன்று உலகமும் அதைத் தராது அன்றோ?
மூன்றடி மண்ணே எனக்குப் போதும்;
மூன்று உலகங்கள் வேண்டவே வேண்டாம்!”


மூன்று உலகங்களுக்கு அதிபதியானவன்,
மூன்று அடி மண் கொடுக்க இயலாதபடி,
வளர்ந்தான் வாமனன் வானளாவியபடி;
அளந்தான் ஈரடியால் ஈருலகங்களை!


மண்ணைத் தன் ஓரடியாலும், பின்னர்
விண்ணைத் தன் ஓரடியாலும் அளந்தவன்,
அடுத்த அடியை வைக்க இடம் கேட்டு,
கெடுத்தான் மகா பலியின் கர்வத்தை!


தன் தலையையே மூன்றாம் அடியைத்
தாங்க அளித்தான் தன் சொல் காக்க;
தயங்காமல் தன் அகந்தையை விட்டுத்
தந்ததால், பலிக்கு இன்று வரை ஓணம்!


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

#015. VAmana avatAr


There is a proverb in Tamil which says,”His moorthy (size) may be very small but his keerthi (fame) is very big!” This statement is best proved by the story of VAmana avatAr of Lord VishnU. VAmana was the fifth avatAr of Lord VishnU, in which He appeared as a short, young brahmachAri.


Bali had become very proud because he had conquered all the three worlds and was able to give as dhAnam (gigt) anything desired by anyone! VAmana came down to earth to demolish the pride of MahA Bali.


VAmana had such a brilliant tejas that whoever set his eyes on Him wondered whether the boy was the Sun God himself or Sanat KumAra!


VAmana asked for a gift of three strides of land measured with his own feet. Bali liked the brilliant brahmachari so much that he wanted to give away all the three worlds to him.


“If three strides of land will not satisfy a person, neither will the three worlds. I need only three strides measured by me and I do not need the three worlds!” was VAmana’s reply.


Even as all the people watched, VAmana grew sky high and measured the whole earth with one stride and the Heaven with his second stride. There was nothing left for the third step. Bali offered his head to VAmana to place His third step.


Since Bali happily gave away everything he possessed, his Atma nivEdanam ( offering of oneself) became total and exemplary. The World celebrates Onam festival in honor of Bali ever since.


 
bhagavathy bhaagavatam - skanda 12

12#9b. சக்தி கணங்கள் (2)

12#8b. The names of the 32 auspicious Shakti Devis

The names of the thirty two auspicious Shakti Devis

VidhyA, Hree, Pushti, PragnA,

SineevAli, Kuhoo, RudhrA, ViryA,

PrabhA, NandA, PoshaNi, RidhDhidhA,

SubhA, KAlarAthri, MahArAthri, Bhadhra KAIi,

KapardhDhini, Vikrithi, DaNdhi, MundiNi,

SendukhaNdA, SikhaNdini, Nisumbha Sumbha mathani, MahishAsura mardhini,

IndhrANi, RudhrANi, SankarArdha sareeriNi, NAri,

NArAyaNi, Thrisoolini, PAlini, AmbikAHlAdhini.

 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#016. குறும்புக்காரன்!

குறும்புகள் செய்யும் குட்டிக் கண்ணனை
விரும்புவரே அன்றி வெறுத்திடார் எவரும்!
குறும்புகள் செய்யும் குழந்தையை இன்றும்
குறும்புக்காரக் கண்ணன் என்கின்றோமே!


எழில் புன்னகையில் முத்துப் பற்கள்;
குழல் கற்றைகள் ஆடும் நெற்றியில்;
சிணுங்கும் பாதசரங்கள், தண்டைகள்;
குலுங்கும் கை நிறைய வளையல்கள்.


முன்னே ஓடும்போதும், திரும்பிப்
பின்னே பார்த்தபடிச் சென்று விழுந்து
புழுதியும் சேறும் பூசிய பின்னும் மிக
எழிலுருவாகக் காட்சி தருவது யார்?


இடைச் சிறுவருடன் ஆட்டம், பாட்டு;
இடையிடையே வெண்ணை பூனைக்கு!
கன்றுகளின் வாலைப் பற்றிக் கொண்டு
மண் மீது வழுக்கிச் செல்வது யார்?


கறந்த பாலைக் குடிப்பது மட்டுமின்றி,
கறக்கும் முன்பே பசுவிடம் குடிப்பது;
வெண்ணை, தயிர் எல்லோர் வீட்டிலும்
வேண்டுமளவு திருடித் தின்பது யார்?


நிலவைப் பழம் என்று நினைத்துக் கொண்டு,
நிலாப் பழத்தை வேண்டிக் கையை உயர்த்த,
வான் நிலவும் கீழே இறங்கி வந்து அவன்
வான் நோக்கிய கையில் அமர்ந்ததாமே!


குறும்புகள் செய்தால்தான் அது ஒரு குழந்தை;
வெறும் பொம்மையே வைத்தபடியே இருந்தால்!
குறும்புக்காரக் குழந்தைகளே வளர்ந்த பின்பு
துறு துறு மனிதர்களாக விளங்கிடுவார்!


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


#016. THE NAUGHTY CHILD!


BAla Krishnan was the very personification of mischief and yet none could really hate Him for that! Even today we hear people saying that a boy is as mischievous as Lord KrishnA Himself!


Krishna’s pretty smile revealed two rows of pearl-like teeth. His forehead was adorned by His lovely curly hair. Silver bells tinkled on His feet and bangles make a pleasant sound on his wrists.


When He ran forward but kept looking backwards. He tumbled on the ground and got coated with the mud and sand – only to become even more beautiful than before!


He sang and danced with His cowherd friends. He fed butter to the kitten now and then. He went skidding on the ground, holding on to the tail of a speeding calf!


He drank the milk stored in the houses. Not satisfied with that, He drank milk directly from the cows, pushing away their calves.


He would rob butter from every house and share it with his friends as well as His other animal friends.


Once He thought that the moon was a giant fruit and put out His palm asking for it. What a wonder! The moon came down and sat on His outstretched palm! Such was His loveliness, sweetness and charm!


The child who does a lot of mischief is the real child. If it sits quietly it is a mere doll! Only mischievous children grow up to become active and interesting personalities, in their adulthood.


 
I met two ladies while traveling. They had difficulty in keeping their eyes open.

Their eyebrows were stuck to the middle of their forehead and their eyes were looking dead and were of the color of lead!

I realised how beautiful it is to seem awake, alert and alive!
 
bhagavathy bhaagavatam - skanda 12

12#9c. சக்தி கணங்கள் (3)

வஜ்ரப் பிராகாரம் உள்ளது இதற்கு மேலே;
விளங்கும் பல அழகிய கோபுரங்களோடு.


தாளிடப் பட்டிருக்கும் கதவுகள் அங்கே;
விளங்கும் அனைத்தும் வைரமயமாக!


வசிப்பர் இங்கு தேவியின் பரிஜனங்கள்;
வசிப்பர் இங்கே தேவியின் பாத தாசிகள்.


எந்தியிருப்பர் பான பாத்திரங்கள், மலர்கள்;
ஏந்தியிருப்பர் விசிறிகள், வெண் சாமரங்கள்.


ஏந்தியிருப்பர் தாம்பூலம், சூர்ண வகைகள்;
ஏந்துவர் குங்குமம், சந்தனம், ஆடி, குடை.


தீட்டுவர் ஓவியம் சிலர்; பிடிப்பார் பாதம் சிலர்;
பூட்டுவர் ஆபரணங்கள், செய்வர் அலங்காரம்.


ஆடிப் பாடுவர் அழகிய சிங்காரிகள் இங்கே;
அனைத்தையும் துரும்பாக மதிப்பவர்கள்.


கொடியிடை உடையவர், மேகலை அணிபவர்;
அடி வைத்திடும்போது சிலம்பொலி செய்பவர்.


திறமை வாய்ந்தவர் எல்லாத் துறையிலும்;
திரிவர் பிரம்புகளை ஏந்தி உள்ளும், புறமும்.


காவல் செய்வர் வைரப்பிரகார வெளியில்;
ஏவல் செய்வர் இவர் பராசக்திக்கு மட்டுமே.


அனங்க ரூபா, அனங்க மதனா, மதனாதுரா,
புவனவேகா, புவனா பலிகா, சர்வசிசிரா,


அனங்க வேதனா, அனங்க மேகலா ஆவர்
அந்த மின்னற்கொடி அழகியர் எண்மர்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


12#9c. Shakti GanAs


Next one is the enclosure made of diamonds. Everything lying inside this enclosure is made of diamonds. Devi Bhuvaneswari lives here with her chief attendants. Each of them has one lakh attendant who are proud of their beauty.


Some of them hold fans in their hands; some others hold cups used for drinking; some others carry betel nuts; some others hold umbrellas; some hold cowries; some hold clothes; some others carry flowers; some hold mirrors; some attendants have saffrons; some collyrium, whereas some others are holding Sindoora.


Some are ready to paint; some to massage her feet; some are eager to make her wear ornaments; some are anxious to put garlands of flowers on her neck.


All of them are skilled in various arts and very young. They care for and obey nothing other than Devi’s commands. Each of them is very fair and is adorned with various ornaments. When they walk to and fro with canes and rods in their hands, they look like flashes of lightning.


AnangaroopA, AnangamadanA, MadanAturA, Bhuvanavegâ, BhuvanapAlikA, Sarvasisira, AnangavedanA and AnangamekhalA are these Eight Shaktis.




 
#017. உரலும், மரமும்

“கர்வம் தான் அழிவின் ஆரம்பம்” என்று
கற்றோர் மற்றோருக்கு கூறுவது உண்டு;

பதவி, பணம், இளமை ஒன்றானால்
பதவிசு என்பதையே அழித்துவிடும்!


குபேரனின் மகன் நளகூபரன்;
குபேர சம்பத்து குடும்பச் சொத்து!

மணிக்ரீவன் மாறா நட்புடையவன்;
மமதை தலைக்கேற இதுவே போதும்!


ஈஸ்வரனை நன்கு ஆராதித்து – அந்த
ஈசன் கருணையால் பெற்ற பெருமை,

பணிவைத் தரவில்லை; துணிவையும்
பணத்தின் மமதையையும் அளித்தது.


கங்கை ஆற்று நீரில் பல அழகிய
மங்கைகளுடன் செய்தனர் ஜலக்ரீடை;

மிருகங்கள் போலவே, மதுவெறியில்
ஒரு வித ஆடையும் அணியாமலேயே!


வழியே நடந்து வந்த நாரதரைக் கண்டு,
பழிக்கு அஞ்சிய இளம் பெண்கள் மட்டும்

விரைந்து ஆடைகள் அணிந்து கொள்ள;
விறைத்து மரம் போல நின்றனர் ஆண்கள்.


மரம் போல அசையாமல் நின்றவர்களை,
மரமாகும்படிச் சபித்து விட்டார் நாரதர்!

கண்ணன் அருளால் மட்டுமே அவர்கள்
கண்கவர் உருவம் மீண்டும் பெற முடியும்!


வருத்தத்துடன் பூமிக்கு இறங்கியவர்
மருத மரங்களாகி நின்றனர் நெடுநாள்!

உரலில் கட்டப்பட்டு ஊர்ந்த கண்ணன்
உருவம் முன்போல அளித்துக் காத்தான்!


ஒளி மயமான உடலை அடைந்தவர்
ஒளி மயமான உலகம் மீண்டனர்.

களியாட்டங்களை விட்டு ஒழித்து
கனவான்களாக வாழலாயினர்.


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

#017. THE MORTAR AND THE TREES.


“Pride comes before fall.”


Social status, wealth, youth and power can corrupt any person. When all these are combined in one person what would be his mentality and the degree of arrogance is revealed by the story of Nalakoobaran and MaNigreevan.


Nalakoobaran was the son of KubEran and MaNigreevan was his bosom friend. They had gained prosperity by serving Eshwaran and became very arrogant, obscene and proud.


One day both the men were enjoying their jalakrEdai with several young and pretty women, in the river GangA. All were completely undressed and shameless just like a herd of animals. NAradha happened to walk by.


All the women grabbed their clothes and hurriedly covered themselves up. But the two men stood rooted to the spot like two large trees. NAradha became furious and cursed them to become two trees and wait for deliverance by Krishna.


They became sad but it was too late to feel sorry. They came down to earth and became two arjunA trees in GOkulam. They had to wait for a very long time for their s’Apa vimOchanam (deliverance from the curse)


One day YasOdhA got annoyed with Krishna and tied Him up to a mortar. Krishna managed to pull the mortar behind Him and crawled in between the arjunA trees.


The trees fell down with a crashing sound and the two who were cursed to become those trees, got back their original form and glory. They returned to their land and lived respectable lives.


 
bhagavathy bhaagavatam - skanda 12


12#9f. சக்தி கணங்கள் (6)

உள்ளது மரகதப் பிரகாரம் அதற்கும் அப்பால்;
உள்ளன மரகத மயமாக இங்கு அனைத்துமே.


உள்ளது ஒரு ஷட் கோணம் இங்கே – அதில்
உள்ளார் பூர்வ கோணத்தில் பிரம்ம தேவன்.


உள்ளார் காயத்ரியுடன், அக்ஷ மாலையுடன்,
உள்ளார் குண்டிகையுடன், தண்டாயுதத்துடன்.


துலங்கும் மூர்த்திகளின் வடிவம் எடுத்து ஸ்மிருதிகள்,
சாஸ்திரங்கள், மந்திரங்கள், இதிஹாஸ, புராணங்கள்.


உள்ளார் நிருதி கோணத்தில் விஷ்ணு மூர்த்தி;
உள்ளார் சங்கு, சக்கரம், தாமரை, கதை ஏந்தி.


உள்ளார் தம் பெருமை, மேன்மைகள் தோன்ற;
உள்ளார் தம் தஸ அவதாரங்களோடு கூடியவராக.


உள்ளார் வாயு கோணத்தில் ருத்திர மூர்த்தி
பரசு, அக்ஷ மாலை, அபயம், வரதங்களுடன்.


இருப்பாள் சரஸ்வதி தேவியும் இங்கே;
இருக்கும் ருத்திர வேதங்களும் இங்கே.


வடிவெடுத்திருக்கும் இருபத்தெட்டு ஆகமங்கள்;
வடிவெடுத்திருக்கும் மற்றுமுள்ள ஆகமங்களும்.


உள்ளான் அக்னியின் கோணத்தில் குபேரன்;
உள்ளான் ரத்ன கும்பம், மணிக் கரண்டி ஏந்தி.


உள்ளான் மஹாலக்ஷ்மியோடும், கணங்களோடும்;
உள்ளான் தேவியின் நிதிகளுக்கு ஒரு அதிபதியாக.


உள்ளான் மேற்குக் கோணத்தில் மன்மதன்;
உள்ளான் தன் நாயகி அழகி ரதிதேவியுடன்.


உள்ளான் பாச, அங்குச, தனுஸு, பாணம் ஏந்தி;
உள்ளன சிருங்கார ரசங்கள் வடிவெடுத்து அங்கு.


உள்ளார் ஈசான கோணத்தில் விநாயகர்,
உள்ளார் பாசாங்குசதாரியாகப் புஷ்டியாக.


உள்ளன அவர் பெற்ற ஐஸ்வர்யங்கள் அங்கே;
உள்ளன அவர் பெற்றுள்ள விபூதிகள் அங்கே.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


12#9f. Shakti GaNAs (6)


Next is the sixteenth enclosure wall made of Emerald or Marakata. Everything inside this enclosure is made up of Marakata MaNi. This region has all the excellent objects for enjoyments.


There is a Yantra in a hexagonal shape. A DevatA resides in each of the six corners. BrahmA and GAyatree Devi resides on the eastern cornerof this Yantra.


BrahmA holds his KamaNdalu, his rosary, his dandAyudam and the abhya hastam. GAyatree Devi is also decorated similarly.


VedAs, Smritis and PunrANAs assume physical forms and reside here. All the avatars of BrahmA, GAyatree and VyAhrutis live here.


On the south-west corner resides MahA VishNu holding on to his Conch shell, club, discus and lotus. SAvitri Devi also lives here. All the various avatars of Vishnu and SAvitree are also there.


On the north western corner reside MahA Rudra and Sarasvati Devi. Both of them hold Paras’u, rosary, signs of granting boons and fearlessness in their four hands.


All the different AvatAras of Rudra and PArvati Devi live here. The sixty four main AgamAs and the various tantras live here with their respective physical forms assumed by them.


On the south-eastern corner lives Kubara the Lord of wealth holding a jar or jewels and gems. MahA Lakshmi also lives here.On the western corner live KAma DEva and Rati Devi. Madana holds a noose, a goad, a bow and arrows. All his retinue and attendants live here, incarnate in their forms.


On the north-eastern corner lives GaNEs'A – the Remover of all obstacles, holding a noose and a goad and with his Pushti Devi. All his glories and vibhootis also live here.


These six DevatAs are the cosmic integral form of the various Devatas in all the other brahmANdAs. They all worship Devi from their respective regions.



 

Latest ads

Back
Top