VINAAYAKA PURAANAM 1
30b. காமதேனு
“மன்னனாலும் அளிக்க இயலாத உணவைச்
சொன்ன மாத்திரத்தில் அளித்தது எங்கனம்?
ஐயா! இது மந்திரமா? அன்றித் தந்திரமா?
மாயையா? அன்றிக் கண் கட்டு வித்தையா?”
“காமதேனுவை ஆராதித்து உணவைத்
தாமதம் இன்றித் தருவித்தேன் மன்னா!”
காமதேனுவை அடையவேண்டும் என்னும்
காமம் எழுந்தது கார்த்த வீர்யன் மனத்தில்.
“வனத்தில் பற்றை ஒழித்து வாழ்ந்திடும்
முனிவருக்குக் காமதேனு எதற்கு ஐயா?
அனைத்து உலகையும் ஆண்டுவரும் புவன
அதிபதியிடம் அன்றோ இருக்க வேண்டும்?”
“ஆசைக்கோர் அளவில்லை மன்னா! நாம்
நேசிக்கக் கூடாது பிறரது உடைமைகளை.”
“தந்தே ஆகவேண்டும் காமதேனுவை – பல
வந்தமாகக் கவர்ந்து செல்வேன் அன்றேல்!”
முனிவருக்குக் கோபம் மூக்குக்கு மேலே!
கனிவால் இயலாதது சினத்தால் இயலுமே!
“அதிதியாக வரவேற்று உணவு அளித்தேன்;
அதிகாரம் செலுத்த முயற்சி செய்கின்றாய்!
பலவந்தமாகக் கவர்ந்து செல்வாயா? உன்
பலத்தைச் சோதித்துப்பார் காமதேனுவிடம்!”
அரசன் உணரவில்லை தபோவலிமையை!
அரசன் ஆணையிட்டான் படை வீரருக்கு,
“கட்டி இருக்கும் காமதேனுவை அவிழ்த்து
இட்டுச் செல்வீர் நம் நாட்டுக்கு!” என்றான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
30b. காமதேனு
“மன்னனாலும் அளிக்க இயலாத உணவைச்
சொன்ன மாத்திரத்தில் அளித்தது எங்கனம்?
ஐயா! இது மந்திரமா? அன்றித் தந்திரமா?
மாயையா? அன்றிக் கண் கட்டு வித்தையா?”
“காமதேனுவை ஆராதித்து உணவைத்
தாமதம் இன்றித் தருவித்தேன் மன்னா!”
காமதேனுவை அடையவேண்டும் என்னும்
காமம் எழுந்தது கார்த்த வீர்யன் மனத்தில்.
“வனத்தில் பற்றை ஒழித்து வாழ்ந்திடும்
முனிவருக்குக் காமதேனு எதற்கு ஐயா?
அனைத்து உலகையும் ஆண்டுவரும் புவன
அதிபதியிடம் அன்றோ இருக்க வேண்டும்?”
“ஆசைக்கோர் அளவில்லை மன்னா! நாம்
நேசிக்கக் கூடாது பிறரது உடைமைகளை.”
“தந்தே ஆகவேண்டும் காமதேனுவை – பல
வந்தமாகக் கவர்ந்து செல்வேன் அன்றேல்!”
முனிவருக்குக் கோபம் மூக்குக்கு மேலே!
கனிவால் இயலாதது சினத்தால் இயலுமே!
“அதிதியாக வரவேற்று உணவு அளித்தேன்;
அதிகாரம் செலுத்த முயற்சி செய்கின்றாய்!
பலவந்தமாகக் கவர்ந்து செல்வாயா? உன்
பலத்தைச் சோதித்துப்பார் காமதேனுவிடம்!”
அரசன் உணரவில்லை தபோவலிமையை!
அரசன் ஆணையிட்டான் படை வீரருக்கு,
“கட்டி இருக்கும் காமதேனுவை அவிழ்த்து
இட்டுச் செல்வீர் நம் நாட்டுக்கு!” என்றான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி