கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
images

Image courtesy 3rdplanetxpress.com

தத3னு கி3ரிவரஸ்ய (4)


அதன் பிறகு உயரத் தூக்கப்பட்ட அம்மலையின் அடியி
ல், வெகு தூரத்துக்கு தடுக்கப்பட வெள்ளத்தை உடைய மிருதுவான இடத்தில், வீட்டுச் சாமான்களுடன் , பசுக்களையும், கோபர்களையும் இருக்கச் செய்து , தாமரை போன்ற கைகளால் மலையைத் தாங்கிக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா?
 
images

Image courtesygovardhanhill.blogspot.com

ப3வதி வித்4ருத சை'லே (5)


தாங்கள் மலையைத் தூக்கிக் கொண்டும், சிறு பெண்களுடனும் , தோழர்களுடனும் பேசுவதில் ஈடுபட்டுக் கொண்டும், பக்கத்தில் வந்த பசுக்களை ஒரு கையால் தடவிக் கொண்டும் இருந்தபொழுது எல்லா கோபர்களும் சந்தோஷம் அடைந்தனர் அல்லவா?
 
images

Image courtesy dollsofindia.com

அதிமஹான் கி3ரிரேஷ (6)

"இந்த மலையோ மிகவும் பெரியது. இந்தக் கிருஷ்ணனோ தாமரைப் பூ போன்ற தன் இடக் கையால் அதை நெடுநேரம் சுமக்கின்றான். இது என்ன மாயம்? மலையின் சக்தியாக இருக்குமோ?" என்று தங்களின் மகிமையை அறியாத கோபர்கள் கூறினார்கள் அல்லவா?
 
images

Image courtesy digplanet.com

அஹஹ தா4ஷ்டர்யமமுஷ்ய (7)

"இந்தச் சிறுவனுக்கு என்ன துணிச்சல்! இவன் கை வேதனை அடைந்தால் மலையைக் கீழே இறக்கி வைப்பான்!" என்று இந்திரன் ஏழு நாட்கள் முழுவதும் கடுமையான மழையைப் பெய்யச் செய்தான் அல்லவா?
 
அச்சலதி த்வயி தேவ (8)

ஹே தேவ! தாங்கள் நின்ற இடத்தில் இருந்து ஓர் அடி கூட அசையாதிருந்தபோது ஜலம் பொழிந்த மேகங்கள் காற்றால் விரட்டப்பட்டுவிட தேவர்களின் அரசன் இந்திரன் தங்கள் விஷயத்தில் பலவித சந்தேகங்கள் எழ அங்கிருந்து சென்று விட்டான் அல்லவா?
 
ச'மமுபேயுஷி (9)
அப்பொழுது பெரு மழை ஓய்ந்துபோக; கோபர்களும் பசுக்களும் வெளிவர; சர்வ சக்தனான தாங்கள் மலையைக் கீழே வைத்தீர்கள். மிகவும் மகிழ்ந்த கோபர்கள் தங்களைக் கட்டி அணைத்தார்கள் அல்லவா?
 
த4ரணி மேவ புரா (10)
லக்ஷ்மி காந்தனான குருவாயூரப்பா! முன்பு தாங்கள் பூமியையே தூக்கி இருக்கின்றீர்கள்! அப்படிப்பட்ட தங்களுக்கு ஒரு மலையைத் தூக்குவதில் என்ன கஷ்டம்?": என்று தேவர்கள் தங்களைத் துதித்தனர். அப்படிப் பட்ட தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 64

கோவிந்த3 பட்டாபிஷேக வர்ணனம்

ஆலோக்ய (1)

எல்லா கோபர்களும், மலையைத் தூக்கியது முதலான தங்களுடைய மகா உன்னதமான மகிமையைக் கண்டு வியந்து, தாங்கள் சர்வேஸ்வரன் என்ற எண்ணம் கொண்டு, நந்தனிடம் தங்கள் ஜாதகத்தைப் பற்றி விசாரித்தார்கள்.
 
க3ர்கோ3தி3தோ (2)

முன்பு கர்க்கர் கூறிய தங்கள் மகிமையைத் தங்கள் தகப்பனார் தன் மித்ர பந்துக்களுக்கு எடுத்து உரைக்க, அன்று முதல் அவர்கள் தங்கள் மீது கொண்டிருந் வாச்தல்யமும் பிரேமையும் முன்பு இருந்ததைவிட அதிகம் விருத்தி அடைந்தது.
 
images

Image courtesy harekrishnarevolution.wordpress.com

ததோவமாநோதி3த (3)

அதன் பின்னர் அவமானத்தால் உண்மையை அறிந்து கொண்ட இந்திரன், தன் கர்வம் அழிந்தவனாகக் காமதேனுவுடன் வந்து, தன் ரத்னகிரீடம் தங்கள் பாதங்களில் படுமாறு நமஸ்கரித்தான் அல்லவா?
 
ஸ்நேஹஸ்னுதைஸ்த்வாம் (4)

காமதேனு சிநேகத்தால் பெருக்கிய பாலைக் கொண்டு தங்களை கோவிந்தன் என்ற பெயரில் பிரசித்தி பெற்றவனாக அபிஷேகம் செய்தது. இந்திரனும் சந்தோஷம் அடைந்து ஐராவதத்தால் கொண்டு வரப்பட்ட ஆகாச கங்கா ஜலத்தால் தங்களை அபிஷேகம் செய்தான் அல்லவா?
 
ஜக3த் த்ரயீசே (5)

மூவுலகிற்கும் நாயகன் ஆகிய தங்களை கோகுலத்துக்கு நாயகன் ஆக அபிஷேகம் செய்தபோது, தங்கள் மகிமையால் கோகுலம் சுவர்க்கத்திலும், வைகுண்டதிலும் அடையமுடியாத ஐஸ்வர்யத்தை அடைந்தது.
 
கதா3சித்3 அந்தர்யமுனம் (6)

ஒருநாள் விடியலில் யமுனா நதியில் நீராடிக் கொண்டிருந்த தங்கள் தந்தை வருணனுடைய ஒரு தூதனால் கொண்டு போகப் பட்டான். அவரைத் திருப்பி அழைத்து வருவதற்குக் ஒரு காரணத்தால் அவதரித்து மனித உருவம் கொண்டத் தாங்கள் அந்த வருண லோகத்திற்குச் சென்றீர்கள் அல்லவா?
 
ஸ ஸம்ப்3ரமம் (7)

ஜலத்துக்கு அதிபதி ஆகிய வருணன் பரபரப்புடன் தங்களைப் பூஜித்து தங்கள் பிதாவையும் தங்களுடன் அனுப்பி வைத்தான். தங்கள் இருப்பிடத்துக்கு வந்த பிறகு தங்கள் தந்தை அந்தச் சரிதத்தைத் தன் பந்துக்களுக்கு எடுத்து உரைத்தார்.
 
ஹரிம் விநிச்'ரித்ய (8)

எங்கும் நிறைந்திருக்கும் ஈசா! தங்களை சாக்ஷாத் விஷ்ணு என்று நிச்சயித்துக் கொண்டு தங்களுடைய லோகத்தைக் காண ஆசை கொண்டவர்கள் ஆன இவர்களுக்குத் தாங்கள் மற்றவர்களால் அடைய முடியாத பரம பதத்தைக் காட்டினீர்கள் அல்லவா?!
 
ஸ்புரத் பரானந்த3 (9)

ஹே பரிபூர்ண ஸ்வரூபியே அந்த கோபர்கள் எல்லாம் பிரகாசிக்கும் பரமானந்த ரசத்தின் பெருக்கால் நன்கு நிறைந்து விளங்கும் மோக்ஷம் என்னும் பெருங்கடலில் வெகு நேரம் மூழ்கி விட்டார்கள் அல்லவா? அவர்கள் தங்களாலேயே மீண்டும் கரை ஏற்றப் பட்டனர்.
 
கரப3த3ரவதே3வம் (10)

ஹே தேவா! ஒருவராலும் அடைய முடியாத தங்களுடைய ஸ்தானம் வேறு எந்த அவதாரத்தில் இவ்விதம் இலந்தைக் கனி போல பக்தர்களுக்குக் காண்பிக்கப்பட்டது? ஆகையால் இவ்விடத்தில் கோபால ரூபியாக இருக்கின்ற தாங்கள் சந்தேகமே இல்லாமல் சாக்ஷாத் பரமாத்மாவே தான்! என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 65

ராஸக்ரீடா3யாம் கோ3பீனாம் ப4க3வத் ஸமீபாக3மன வர்ணனம்.

images


Image courtesy boldsky.com

கோ3பீஜனாய கதி2தம் (1)

பிறகு தாங்கள் கௌரீ விரதத்தின் முடிவில் கோபிகைகளுக்குப் பிரதிக்ஞை செய்தபடி, காமோத்ஸவத்தை நிறைவேற்ற முயன்றவராக, நிலவினால் குளிர்ந்த யமுனா நதிக்கரையில் உள்ள ஒரு வனத்தில்இருந்து வேணுகானம் செய்தீர்கள் அல்லவா?
 
images


Image courtesy luthar.com

ஸம்மூர்ச்ச2னாபி4: (2)

ஹே பிரபு! வேணுவிலிருந்து வெளிக் கிளம்பிய ஸ்வரக் கூட்டங்களால், ஸப்த ஸ்வரங்களின் அரோஹண அவரோஹண கிரமங்களால், பூலோகம் முழுவதையும் நன்கு மயக்கும் தங்களின் வேணு கானத்தைக் கேட்டதால் , இளம் பெண்கள் உவமை அற்றதும் இன்னது என்று இனம் காட்ட முடியாததும் ஆகிய ஒரு மதி மயக்கத்தை அடைந்தனர்.
 
தா கே3ஹ க்ருத்ய (3)

ஹே சுந்தரமூர்த்தியே! வீட்டு வேலைகளில் ஈடுபட்டவர்களும்; குழந்தைகளை லாலித்துக் கொண்டு இருப்பவர்களும்; பதிதேவனின் சிஸ்ருஷையில் ஈடுபட்டிருந்தவர்களும் ஆகிய அந்தத் தாமரைக் கண்ணிகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டுக் காட்டுக்கு வந்தார்கள் அல்லவா?
 
காச்'சித் நிஜாங்க3பரி பூ4ஷணம் (4)

சிலர் தாங்கள் அலங்கரித்துக் கொண்டு இருக்கும் பொழுது வேணு நாதத்தால் இழுக்கப்பட்டு பாதி அணிந்த ஆபரணங்களுடன் அப்படியே தங்களிடம் வந்துவிட்டார்கள் அல்லவா? நன்கு அலங்கரித்துக் கொண்டு வந்தவர்களை விடவும் அவர்களே தங்களுக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆனார்கள்.
 
ஹாரம் நிதம்ப பு4வி (5)

ஹே தேவா! ஒருவள் தன் இடையில் முத்து மாலையையும், கழுத்தில் ஒட்டியாணாத்தையும் அணிந்துகொண்டு தங்களிடம் வந்தாள் அல்லவா? அந்த அழகி தன் இடைப் பிரதேசத்தின் விசஷமான மனோ ஹரிதையைத் (முத்து மாலையுடன் விளங்கும் தன்மையைத் ) தங்களிடம் இப்படி வெளிப்படுத்தினாள் போலும்.
 
காசித் குசே (6)

வேறொருத்தி மயக்கத்தால் ரவிக்கையே அணியாமல்; மற்ற ஸ்த்ரீக்களால் காணப்படாதவளாக; தன் இரு ஸ்தனங்களில் உவமையற்ற பிரேமை ஆகின்ற ராஜ்ஜியத்தில் பட்டாபிஷேகம் செய்வதற்கு இரண்டு குடங்களைத் தாங்கியவள் போலத் தங்களிடம் வந்தாள் அல்லவா?
 
காசித் க்3ருஹாத்கில (7)

ஹே தேவ! சில கோபிகள் வீட்டிலிருந்து வெளியில் வரமுடியாதவர்களாகத் உங்களையே த்யானித்துக் கொண்டு சரீரத்தை விடுத்து சச்சிதானந்த ரூபியான உம்முடன் ஒன்றிவிட்டார்கள் அல்லவா? அவர்கள் மகா பாக்கியசாலிகள்!
 
ஜாராத்மனா (8)

கோபஸ்த்ரீகள் பரமாத்மா என்று உங்களை எண்ணாமல், ஒரு சோர நாயகன் என்று எண்ணத்தினாலே தங்களை தியானித்துக் கொண்டு ஒரு நொடிப் பொழுதில் ஞானிகள் அடையும் மோக்ஷத்தை அடைந்தார்கள். பிரத்யக்ஷமாக விளங்கும் பரமாத்ம ஸ்வரூபினான உங்களை எவ்விதமாகிலும் நான் மனதில் தியானம் செய்து மோக்ஷத்தைச் சிரமம் இன்றி அடைவேனாகுக.
 
Status
Not open for further replies.
Back
Top