கின்னஸன்னதனு (6)
அதன் பிறகு வியர்த்து விட்ட, சோர்வுற்ற, கொடி போன்ற சரீரம்
உடைய ஒரு கோபிகை, மிக அதிகமான களைப்பினால் கண்களை
மூடிக் கொண்டு தங்கள் தோள் மீது சாய்ந்துவிட்டாள் அல்லவா?
வேறொருத்தி அவிழ்ந்து அசையும் கூந்தலுடன், புதிய சந்தனக்
குழம்பின் நறுமணம் கொண்ட தங்கள் கையை, முகருவது போல
மயிர் கூச்செறியும் வண்ணம் நன்கு முத்தம் இட்டாள் அல்லவா?