கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
அப்4யாகதாபி4: (9)

திரிலோக சுந்தரன் ஆன குருவாயோரப்பா! தங்கள் சமீபம் வந்த கோபிகளின் மனோஹரமான புன்னகையால் கனிந்த முகத்தை உடையவரும்; கருணையுடன் பார்ப்பவரும்; எல்லையற்ற காந்தியின் கடல் போன்றவரும்; நாற்புறங்களில் இருந்து தரிசிகப்படுபவருமாகிய தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 66

த4ர்மோபதே3ச', ராஸக்ரீட3 வர்ணனம்

உபயாதானாம் (1)

மன்மத பாணத்தால் அடிபட்டு, பரவசர்களாகி, அதனால் சமீபத்தில் வந்த, கட்டழகிகளின் ஆசைகளை நிறைவேற்றத் தீர்மானித்து இருந்தும், அவர்களிடம் விபரீத வார்த்தைகளைக் கூறினீர்கள் அல்லவா?
 
க3க3னக3தம் (2)

ஆகாயத்தில் வந்து நிற்கும் முனிவர் கூட்டத்தை கேட்கச் செய்வதற்காக குலஸ்திரீக்களின் தர்மத்தை எடுத்து உரைத்தீர்கள் அல்லவா? தங்கள் திருவாக்கு தர்மத்தை விட்டு அகன்றதே இல்லை. ஆனால் மாசற்ற, புண்ய பாப சம்பந்தம் இல்லாத தங்களுடைய பிரவ்ருத்தி நம்பத் தகுந்தது அல்ல!
 
ஆகர்ண்ய தே ப்ரதீபாம் (3)

அந்த மான் கண்ணியர் தங்களுடைய விபரீதமான திருவாக்கினைக் கேட்டு, "கருணைக் கடலே! எங்களைக் கை விடாதீர்கள் !" என்று வெகு நேரம் புலம்பினார்கள அல்லவா?
 
தாஸாம் ருதி3தை:லபிதை: (4)

முராரியே! தாங்கள் அவர்கள் வருந்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் கருணை பொங்கிய மனத்துடன் அந்தப் பெண்களுடன் யமுனையின் மணல் திட்டுக்களில் இஷ்டம் போல விளையாடத் தொடங்கினீர்கள் அல்லவா?
 
சந்த்3ரகரஸ்யந்த3 (5)

நிலவொளி பொழிந்த அழகிய யமுனைநதிக் கரையில் கோபஸ்த்ரீக்களின் மேலாடைகளால் உண்டு பண்ணப்பட்ட விரிப்பில் தாங்கள் அமர்ந்தீர்கள் அல்லவா?
 
ஸுமது4ர (6)

காதுகளுக்கு இனிமையான பரிஹாச வசனங்களாலும்; கைகளைப் பிடித்துக் கொண்டும்; பலவகை முத்தங்கள் தந்தும்; கெட்டியாகத் தழுவிக் கொண்டும்; தாங்கள் அந்தப் பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்தினீர்கள் அல்லவா?
 
வாஸோஹரணதி3னே (7)

பிரபுவே! வ
ஸ்த்ராபஹாரம் செய்த தினத்தில் இடுப்பில் இருந்து எந்த வஸ்திரத்தை அவிழ்ப்பது பிரதிக்ஞை செய்யப்பட்டிருந்ததோ, சிருங்கார ரசத்தில் மூழ்கிய அந்தக் கட்டழகிகளுக்குத தாங்கள் அதையும் செய்தீர்கள் அல்லவா?
 
கந்த3லிதக4ர்மலேச'ம் (8)

சரீரத்தில் தோன்றிய சிறு சிறு வியர்வைத் துளிகளை உடைய; முல்லைப்பூ போன்ற இளம் புன்னகை தவழும் முகத்தை உடைய; த்ரிலோக சுந்தரன் ஆன உம்மைக் கட்டித் தழுவி அப்பெண்கள் ஆனந்தம் அடைந்தனர் அல்லவா?
 
விரஹேஷ்வங்கா3ரமாய: (9)

தாங்கள் விட்டுப் பிரியும் பொழுது தீக்கனல் போன்றவர். சேர்ந்திருக்கும்போது சிங்கார ரூபியாக ஆவீர்கள். ஆனால் அந்த இராசக்ரீடையில் சேர்ந்து இருக்கும் போதும் தீக்கனல் போன்று இருந்தீர்கள் என்பது அதிசயம்.
 
ராதா4துங்க3 பயோத3ர (10)

ராதையின் உயர்ந்த ஸ்தனங்களைக் நன்றாக அணைத்துக் கொள்வதில் ஆசைகொண்ட மனத்தை உடைய உங்களை நான் ஆராதிக்கின்றேன். ஹே குருவாயூரப்பா! என் வியாதிகள் எல்லாவற்றையும் தணிக்கவேண்டும் .
 
நாராயணீயம் தசகம் 67
பகவஸ்திரோதா4னாதி3 வர்ணனம்

பிரகாசிக்கின்ற பரமானந்த ஸ்வரூபியான தங்களால் சுகபோகங்களை அடைந்து; அதனால் எல்லையற்ற ஆனந்தம் அடைந்த அவர்கள்; அதன் காரணமாக மிகுந்த செருக்கு அடைந்தார்கள்.
 
நிலீயசௌ (2)

"லக்ஷ்மி காந்தனும், எல்லாருடைய மனத்தையும் கவரும் இந்தக் கிருஷ்ணன் கபடம் இல்லாமல் என்னிடமே மயங்கி இருக்கின்றான்! என்னிடமே மயங்கி இருக்கின்றான்!" என்றே ஒவ்வொரு பெண்ணும் கர்வம் அடைந்ததைக் கண்டு, ஹே கோவிந்தா! தாங்கள் அவர்களிடமிருந்து மறைந்து போய்விட்டீர்கள்.
 
ராதா4பி4தா4ம் (3)

ஹே முராரி! அப்போது தாங்கள் கர்வம் கொள்ளதவளும், அதனால் தங்களுக்குப் பிரியமானவளும் ஆன ராதை என்னும் கோபியை அழைத்துக் கொண்டு வெகு தூரம் சென்று அவளுடன் விளையாடிக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா?
 
திரோஹிதேத2 (4)

பகவன்! தாங்கள் மறைந்தவுடன் தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை உடைய அந்த கோபிகைகள் ஒரே போல தாபம் அடைந்து, ஒன்றாகச் சேர்ந்து, ஒவ்வொரு காட்டிலும் சென்று, தங்களைத் தேடி, எல்லையே இல்லாத வருத்தத்தை அடைந்தார்கள்.
 
ஹா சூத ஹா சம்பக (5)

ஏ மாமரமே! ஏ சண்பக மரமே! ஏ கர்ணிகார மரமே! ஏ மல்லிகையே! ஏ மாலதியே! ஏ இளம் கொடிகளே! எங்கள் மனத்தைக் கவர்ந்து சென்ற ஒருவனை நீங்கள் கண்டீர்களா? என்று கதறினார்கள்.
 
நிரீக்ஷிதோயம் (6)

ஒருத்தி தங்களை மனக்கண்ணில் கண்டு," ஏ தோழிகளே! தாமரைக் கண்ணன் என் எதிரில் காணப்பட்டான்!" என்று பரபரப்புடன் கூறி தோழிகளின் வருத்தத்தை இரண்டு மடங்கு ஆக்கினாள்.
 
த்வதாத்மிகாஸ்தா (7)

தங்களிடம் லயித்து தன்மயம் ஆகித் தாங்களாகவே மாறிவிட்ட அந்த கோபிகைகள், யமுனைக் கரையில் பூதனா மோக்ஷம் போன்ற தங்கள் சேஷ்டிதங்களை அனுகரணம் செய்தார்கள் அல்லவா? மறுபடியும் உங்களைத் தேடி வரும்போது , அவளும் கர்வம் கொண்டதால் தனியே விடப்பட்ட ராதையையும் கண்டார்கள் அல்லவா?
 
தத: சமம் தாம் விபினே (8)

அதன் பிறகு அவர்கள் ராதையுடன் கூட, காட்டில் நான்கு பக்கங்களிலும் இருட்டும் வரையில் தேடி, மீண்டும் யமுனைக் கரையில் ஒன்று சேர்ந்து வருந்தி நின்றனர். தங்களைப் புகழ்ந்து பாடவும் செய்தனர்.
 
ததா வ்யதா (9)

ஹே கிருஷ்ணா! அவ்வாறு வருந்திய மனத்தை உடைய கோபஸ்திரீகள் எதிரே மூவுலங்களையும் மயக்குகின்ற சுந்தர வடிவுடனும், மந்தஹாசத்துடனும் தாங்கள் தோன்றினீர்கள் அல்லவா?
 
ஸந்தி3க்3த4 (10)

"மீண்டும் காண்போமா?" என்று ஏங்கிய அந்தப் பெண்கள் தங்களின் ப்ரியதமனாகிய உங்களைக் கண்டு ஆனந்தத்திலும் அதிசயத்திலும் விரைந்து என்னென்ன செய்யவில்லை! அப்படிப்பட்ட குருவாயூரப்பா! என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 68

ப4கவத் ஸமாக3மாதி3 வர்ணனம்

தவ விலோகனாத் (1)

செந்தாமரைக் கண்ணா! கோபிகைகள் தங்களைக் கண்டதால் ஆனந்தம் மேலிட்டவர்களாகி அமிர்த வர்ஷத்தில் நனைந்தவர்கள் போல உங்கள் முன்வந்து அசைவற்ற தன்மையை அடைந்தார்கள் அல்லவா?
 
தத3னு காசன (2)

அதன் பிறகு ஒருத்தி விரைவாகத் தங்கள் கராரவிந்தத்தைப் பற்றி அச்சம் இன்றி தன் பெருத்த ஸ்தனத்தில் வைத்துக் கொண்டு வெகு நேரம் மயிர் கூச்சம் அடைந்தாள் அல்லவா?
 
தவ விபோs பரா (3)

மற்றொருத்தி மிகவும் சந்தோஷம் அடைந்தவளாய் தங்களுடைய அழகான கையைத தன் கழுத்தில் இருந்து வெளிச் செல்லும் பிராண வாயுவைத் தடுத்து நிறுத்துகின்றவள் போலத் தன் கழுத்தில் சுற்றிக் கொண்டாள் அல்லவா?
 
அபக3தத்ரபா (4)

வேறு ஒரு பெண் வெட்கத்தை விட்டவளாகித் தங்கள் திருமுகமலரில் இருந்து தாங்கள் மென்ற தாம்பூலத்தை வாங்கிக் கொண்டு அதைத் தன் வாயில் இட்டுச் சுவைத்து தன் மனோரதத்தை நிறைவேற்றிக் கொண்டாள்.
 
Status
Not open for further replies.
Back
Top