கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
images

Image courtesy iskcondesiretree.net

உபகர்ண்ய ப4வன் (10)

பகவானே! அந்த மான் கண்ணியர் தங்கள் திருமுகத்தில் இருந்து வெளிவந்த, தேனைப் பெருக்குகின்ற திருவாக்கினைக் கேட்டு, பிரேமையுடன் திரும்பிப் பார்த்தபடியே மெல்லத் தங்கள் வீட்டுக்குத் திரும்பினார்கள் அல்லவா?
 
இதி நன்வனுக்3ருஹ்ய (11)

ஹே ஸ்ரீதரா! இவ்விதம் கோபிகைகளை அனுக்ரஹித்து முன்போலவே காடுகளில் சுற்றிக் கொண்டிருந்த தாங்கள் எனது எல்லா வியாதிக் கூட்டத்தையும் விரைவில் போக்க வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 61

யஜ்வ பத்னீ உத்3த4ரண வர்ணனம்

ததச்'ச ப்ருந்தா3வன (1)

அதன் பிறகு தாங்கள் மனதில் தங்களுடைய பக்த சிரேஷ்டைகள் ஆகிய பிராமணப் பெண்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு கோபாலர்களுடனும், பசுக் கூட்டத்துடனும் பிருந்தாவனத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ள காட்டுக்குச் சென்றீர்கள் அல்லவா ?
 
ததோ நிரீக்ஷ்ய சரணே (2)
பிறகு
புகலிடம் ஒன்றும் இல்லாத காட்டின் நடுவில் கோபகுமாரர்கள் பசியாலும், தாகத்தாலும் வருந்துவதைக் கண்டு அருகில் யாகம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் பிராமணர்களிடத்தில் அன்னத்தை யாசிப்பதற்கு அவர்களை அனுப்பினீர்கள் அல்லவா?
 
கதேஷ்வதோ (3)

ஹே பிரபோ! அதன் பிறகு அவ்விதம் சென்ற அந்தச் சிறுவர்கள் தங்கள் திருநாமத்தைச் சொல்லி யாசிக்கும்போது, அந்த பிராமண உத்தமர்கள் வேதங்களை நன்கு அறிந்தவர்கள் ஆயினும் (காது நன்றாகக் கேட்பவர்கள் ஆன போதிலும்) வேதங்களை அறியாதவர்கள் போல (காது கேட்காதவர்கள் போல) அபிநயித்து ஒன்றும் பதில் கூறவில்லை.
 
Last edited:
அனாத3ராத் (4)

பிராமணர்கள்
அநாதரவு செய்ததால் அந்தச் சிறுவர்கள் மனம் வருந்தித் திரும்பி வந்தார்கள் அல்லவா? விதிப்படி யாகம் அனுஷ்டிக்கும் தீட்சிதர்கள் அநாதரவு செய்வது என்பது யுக்தம் தான். என்றால் அந்த பூலோகத் தேவர்கள் வெகு காலமாகவே தங்களிடம் பக்தி இல்லாதவர்கள் (அன்னம் இல்லாதவர்கள்) அல்லவா? அப்படிப்பட்ட அவர்களால் தங்களிடத்தில் அன்னத்தை (பக்தியை) எப்படிக் கொடுப்பார்கள்?
 
Last edited:
நிவேத3யத்4வம் (5)

"தீக்ஷித பத்தினிகள் இடத்தில் என்னைப் பற்றித் தெரிவியுங்கள். கருணை கூர்ந்த அவர்கள் அன்னத்தைக் கொடுப்பார்கள்!" என்று புன்னகையுடன் தாங்கள் கூற, அந்தச் சிறுவர்கள் தீக்ஷித பத்தினிகள் இடத்தி
ல் சென்று அன்னம் யாசித்தனர்.
 
க்3ருஹீதநாம்னி (6)

தங்கள் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் வெகு கலாமாகத் தங்களை தரிசிக்கும் ஆவல் கொண்டிருந்த அந்த தீக்ஷித பத்தினிகள் பரபரப்பு அடைந்தவர்களாகி காத்தியம், சோஷ்யம், லேஹியம், பேயம் என்ற நான்கு வகை பக்ஷணங்களையும் எடுத்து கொண்டு, தங்கள் கணவர்களால் தடுக்கப்பட்டவர்கள் ஆனபோதும் விரைந்து வந்தனர்.
 
விலோல பிச்சம் சிகுரே (7)

கொண்டையில் சலிக்கின்ற மயில் தோகையை உடையவரும், இரு கன்னங்களில் நன்கு பிரகாசிக்கும் குண்டலங்களை உடையவரும், கடைக் கண்களில் கனிவுகொண்டவரும், தோழனின் தோளில் கை வைத்து நிற்பவரும் ஆன தங்களைக் கண்டனர்.
 
ததா3 ச காசித் (8)

மற்றவர்கள் எல்லோரும் சென்றபோது தங்களிடம் வரயத்தனித்த ஒருவள் அவன் கணவனால் கைகளால் பிடித்துத் தடுக்கப்பட்டு, தங்களை தியானித்துக் கொண்டு தத்க்ஷணமே சிரமம் இல்லாமல் மோக்ஷத்தை அடைந்தாள். அவள் அன்றோ பாக்கியசாலி!
 
ஆதா3ய போஜ்யான் (9)

பக்ஷணங்களை அங்கீகரித்துக் கொண்டு; அவர்களை அனுக்ரஹித்துப் பிறகு, தங்களுடைய அங்க சங்கம் விரும்பி அவர்கள் வீடுகளை புறக்கணிப்பதைக் கண்டு, யாகத்தை நிறைவேற்றுவதற்காக அவர்களை அனுப்பினீர்கள். அவர்கள் கணவர்களையும் தீய எண்ணம் அற்றவர்களாகச் செய்தீர்கள் அல்லவா?
 
நிரூப்ய தோ3ஷம் (10)

ஹே குருவாயூரப்பா! தம் தோஷங்களை உணர்ந்த; தம் பத்தினிகளின் பக்தியைக் கண்டு விசாரம் செய்த; அதன் மூலம் உண்மை அறிந்த; அந்தணர்களால் நன்கு துதிக்கப்பட்ட; தாங்கள் என் வியாதிகளைப் போக்க வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 62

இந்த்3ரயாக3 விகா4த வர்ணனம்


images

Image courtesy iskconmumbai.com

கதா3சித்3 கோ3பாலான் (1)

ஹே கிருஷ்ணா! ஒருநாள் தங்கள் கோபாலர்கள் யாகத்திற்கு வேண்டிய பண்டங்களை சேகரிப்பதைக் கண்டு; இந்திரனின் மமதையை ஒழிக்க எண்ணி இருந்தபோதிலும் ,"அப்பா! இந்த முயற்சி எதற்காக?" என்று மிகுந்த வணக்கத்துடன் நந்தன் முதலிய கோபர்களைக் கேட்டீர்கள் அல்லவா?
 
th

Image courtesy Free Encyclopedia & Web Portal on Indian Culture & Lifestyle

ப3பா4ஷே நந்த3ஸ்த்வாம் (2)

"பிள்ளாய்! ஒவ்வொரு வருஷமும் நாம் இந்திர யாகம் செய்தே தீரவேண்டும். இந்திரன் மழை பொழியச் செய்து பூமிக்குச் சுகம் அளிக்கின்றான். பூமியில் உள்ளவர்களின் ஜீவன் மழையை அனுசரித்தே உள்ளது. விசேஷமாக நமக்கு மழையே வாழ்வாதாரம். ஏனென்றால் பசுக்களுக்கு புல்லும், நீரும் முக்கிய ஆகாரம்" என்று நந்தன் தங்களிடம் உரைத்தான் அல்லவா?
 
th

Image courtesy Stock Photos and Royalty Free Image Subscription from 123RF Stock Photography

இதி ச்'ருத்வா வாசம் (3)

ஹே கிருஷ்ணா! தந்தையின் இந்த வார்த்தையைக் கேட்டுத் தாங்கள், "மழை இந்திரனால் உண்டு பண்ணப் படுவது என்பது உண்மையல்ல. பிராணிகளின் அதிருஷ்டமே மழையை உண்டு பண்ணுகிறது. பெருங்காடுகளில் மரங்கள் இந்திரனுக்கு பலியைக் கொடுக்கின்றன" என்று சரசமாக உரைத்தீர்கள் அல்லவா?
 
th


இத3ம் தாவத் ஸத்யம்(4)

"இவ்விடத்தில் பசுக்கள் நம் குலதனம் என்பது தான் உண்மை. இந்த யாகம் அவற்றின் உப ஜீவனத்திற்கு காரணமான மலையரசுக்குக் கொடுப்பது தான் உசிதம். பூவுலகில் அந்தணர்கள் தேவர்களைக் காட்டிலும் மேன்மை பெற்றவர்கள் அன்றோ? ஆகையால் அவர்களும் ஆராதிக்கத் தகுந்தவர்களே!" என்று தாங்கள் தங்கள் பந்துக்களிடம் கூறினீர்கள் அல்லவா?
 
Last edited:
images

Image courtesy iskconcenters.com

ப3வத்3வாசம் (5)
அந்த கோபாலர்களும் தங்கள் திருவாக்கை கேட்டு வெகுமானத்துடன் பிராமணர்களை பூஜித்து மலை அரசன் கோவர்த்தனனுக்கு உயர்ந்த பலியைக் கொடுத்தனர். மிகுந்த பணிவுடன் வலம் வந்தனர். வணங்கினர். மலை ரூபியாகத் தாங்களே கோபாலர்களுக்கு எதிரில் பலி முழுவதையும் உண்டீர்கள் அல்லவா?
 
அவோசச்'சைவம் (6)

"இப்போது என் வாக்கு வீணாகவில்லை அல்லவா? இந்த மலை தன் சரீரத்துடன் தனக்கிட்ட பலியை உண்டது"

என்று அவர்களைப் பார்த்துக் கூறினீர்கள். "மலைகளின் பகைவன் இந்திரன் கோபம் அடைந்தாலும் பூமியைக் காக்கும் இந்த மலை நம்மைக் காக்கும் சக்தியுடையதே!" என்று கூறப்பட்டதும் கோகுல வாசிகள் சந்தோஷித்தார்கள் அல்லவா.
 
பரி ப்ரீதா யாதா (7)

கோகுலவாசிகள் மிகவும் சந்தோஷம் அடைந்தவர்களாக தங்களுடன் எப்போது கோகுலத்துக்குச் சென்றனரோ
அப்போதே இந்திரன் தன் யாகம் தடைப்பட்டதை அறிந்தான். தங்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், தாங்கள் அளித்த இந்திரப் பதவியில் அமர்ந்து இருந்தும் கூட அதிக ரஜோ குணம் கொண்டதால் இந்திரனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
 
மனுஷ்யத்வம் (8)

மதுவைக் கொன்ற விஷ்ணுகூட மனுஷ்யத் தன்மை அடைந்தவராக தேவர்களிடம் அபராதம் செய்வார் ஆகில் சமஸ்த தேவர்களின் மகிமை நாசம் அடைந்துவிட்டது. இடைப் பிள்ளை கிருஷ்ணனின் ஐஸ்வரியத்தை நான் நாசம் செய்கின்றேன்!" என்று மமதைகொண்ட இந்திரன் தங்களை வெற்றி கொள்ள எண்ணினான் அல்லவா?
 
த்வதா3வாஸம் (9)

அந்த இந்திரன் தங்கள் இருப்பிடத்தை அழிப்பதற்கு ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டு வஜ்ஜிராயுததைக் கையில் எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் பிரளய கால மேகங்களை ஏவி விட்டு, அக்னி, வாயு முதலியவர்கள் மனதுக்குள் பரிஹசிக்கும்படி புறப்பட்டான் அல்லவா? மூவுலகங்களுக்கும் அதிபதியான கிருஷ்ணா!

தங்கள் மாயை யாரைதான் மயக்காது?
 
ஸுரேந்த்3ர: (10)

"தேவந்திரன் கோபம் அடைந்தாலும் பிராமணர்கள் கருணையினாலும், மலையின் அருளாலும் நமக்கு க்ஷேமம் நிச்சயம்!" என்று கோபாலர்களை நம்பச் செய்தீர். "இந்திரன் ஏன் இன்னமும் வரவில்லை?' என்று ஆலோசித்துக் காத்திருந்த முரவைரியான குருவயூரப்பா! என் வியாதிகளைத் தாங்கள் அகற்ற வேண்டும்.
 
நாராயணீயம் தசகம் 63

கோ3வர்த்த4நோத்3தா4ரண வர்ணனம்

images


image courtesy
iskcon.net.au

தத்3ருஷிரே கில (1)

அப்போதே கோகுலத்தின் மேல் இடைவிடாத இடிமுழக்கத்தால் திக்குகளை நடுங்கச் செய்த, நிறத்தில் தங்கள் திருமேனிக்கு நிகரான மேகங்கள் காணப்பட்டன அல்லவா?
 
images

Image courtesy brihadmrdanga.com

விபுலகரக மிஸ்ரை: (2)


ஒருவராலும் ஜெயிக்கமுடியாத கிருஷ்ணா! பெருத்த ஆலங்கட்டிகளுடன் கூடிய மழைத் தாரை வீழ்ந்து எல்லா இடங்களிலும் இடையர் கூட்டத்தை தண்டிக்க, "கோபம் கொண்ட இந்திரனிடமிருந்து எங்களைக் காப்பாற்று! காப்பாற்று!" என்று இறைஞ்சும் இடையர்களின் வசனத்தைக் கேட்ட தாங்கள், "பயப்படாதீர்கள்!" என்று உரைத்தீர்கள் அல்லவா?
 
images

Image courtesy chakra.org

குல இஹ கலு கோத்ரோ (3)


"இந்த கோகுலத்தில் பசுக்களைக் காப்பாற்றும் கோவர்த்தனமலை அல்லவா தெய்வம்? அம்மலை எல்லா மலைகளுக்குப் பகைவனாகிய இந்திரனின் இந்தக் கெடுதியைத் தடை செய்யும். இதில் உங்களுக்கு என்ன சந்தேஹம்?" இவ்விதம் சொல்லிக் கொண்டே பிரசாக ரூபியான தாங்கள் அம்மலையை சிரித்துக் கொண்டே இளம் கரங்களால் விரைவாக வேருடன் பிடுங்கி எடுத்தீர்கள் அல்லவா?
 
Status
Not open for further replies.
Back
Top