கண்ணனின் கதை இது.

Status
Not open for further replies.
யோகமாயையைக் கொண்டு வருவது.


gifts for all.webp
ப4வத் குச'ல காம்யயா (39:10)

நந்த கோபரும் ஆனந்த பரவசத்தில் தங்களுடைய க்ஷேமத்தை விரும்பி பிராமணர்களுக்கு எதைத்தான்

தரவில்லை? அவ்வண்ணமே மற்ற இடையர்களுக்கும் என்ன மங்கலத்தைத் தான் செய்யவில்லை.

மூவுலகங்களிலும் மங்கலங்களைச் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணா காப்பாற்று!

 
யோகமாயையைக் கொண்டு வருவது.

ப4வந்தமயமுத்3வஹன் (39:1)

யதுகுல சிரேஷ்டரான வசுதேவர் தங்களை எடுத்துக்கொண்டு போகும்போது யமுனை நதி ஆகாயம் வரை உயர்ந்து எழுந்த ஜலப் பிரவாஹத்துடன் கூடி இருந்தது. ஆனால் அந்த ஜலப் பிரவாஹம் இந்திர ஜாலத்தால் தோன்றியது போன்றே அக்கணமே வெறும் கணுக்கால் அளவுக்குக் குறைந்துவிட்டது. ஆச்சரியம்!

ப்ரஸுப்த பசு'பாலிகாம் (39:2)

இந்த வசுதேவர், நன்கு நித்திரை செய்யும் கோப ஸ்த்ரீக்களையும், மெதுவாக அழுகின்ற பெண் குழந்தையையும், திறக்கப்பட்ட கதவுகளையும் உடைய நந்தகோபருடைய வீட்டுக்குச் சென்றார். தங்களைப் பிரசவப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்த கபடப் பெண் குழந்தையை எடுத்துக் கொண்டுமிக வேகமாகத் தம் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.

ததஸ்த்வத3னுஜாரவக்ஷபித (39:3)

தங்கள் தங்கையான யோகமாயையின் அழுகையால் நித்திரை கலைந்து, வேகமாக ஓடிய சேவக சமூஹம் கம்சனுக்குப் பிரசவ சமாச்சாரத்தை அறிவித்தது. வருத்தம் அடைந்தவனாக , தலை விரிகோலமாக கம்சன் ஓடிவந்தான். சந்தோஷம் அடையாத அவன் கண்டது இரங்கத் தக்க தங்கையின் கரங்களில் ஒரு பெண் குழந்தையை.

த்4ருவம் கபடசா'லினோ (39:4)

இந்தக் கன்னிகை கபடசாலியாகிய மதுசூதனனின் மாயையாக இருக்கவேண்டும் என்று எண்ணிய கம்சன், இளம் தங்கை தன் கைகளால் அணைத்துக் கொண்டிருக்கும் பெண் குழந்தையை, தாமரைக் குளத்தின் நடுவில் இருக்கும் ஒரு தாமரைத் தண்டைப் பிடுங்கும் யானையைப் போல் பிடுங்கினான். உடனேயே ஒரு கற்பாறையில் மாயாதேவியை ஓங்கி அடித்தான்.

ததோ ப4வதுபாஸக: (39:5)

அப்போது தங்களை உபாசிக்கும் பக்தன் யமபாசத்தில் இருந்து விடுபடுவது போன்றே விரைவாக யோகமாயை கம்சனின் கைகளில் இருந்து விடுபட்டாள். பூமிக்கு வராமலேயே
வேறு ஒரு ரூபத்தை அடைந்தாள். எட்டுக் கரங்களையும் அவற்றில் விளங்கும் அற்புத ஆயுதங்களுடனும் அவள் ஆகாயத்தில் ஆச்சரியமயமாக விளங்கினாள்.

ந்ருச'ம்ஸதர கம்ஸ (39:6)

"மிகக் கொடியவனான ஹே கம்சனே! என்னைக் கொல்லுவதால் உனக்கு என்ன லாபம்?
உன்னைக் கொல்பவன் எங்கோ ஓரிடத்தில் ஒளிந்திருக்கிறான். உன்னுடைய நன்மையைப் பற்றிச் சிந்திப்பாய்!" துஷ்டனான கம்சனிடம் இவ்வாறு கூறிவிட்டு, தேவ கணங்களால் துதிக்கப்பட்டவளாக, அங்கிருந்து அகன்று அனேக ஆலயங்களைச் சென்று அடைந்தாள் யோக மாயை.

ப்ரகே3புனரகாத்மஜாவசன (39:7)

கம்சன் மறுநாள் காலையில் யோகமாயையின் வசனத்தை பிற அசுரர்களுக்குச் சொன்னான்.
துரபிமானம் உடைய பிரலம்பன், பகன், பூதனை முதலிய அசுரர்கள் தங்களைக் கொல்ல விரும்பி, பிற குழந்தைகளைக் கொன்று குவித்து, பயமற்று உலகில் திரிந்தனர். கருணை அற்றவர்களால் என்ன தான் செய்ய இயலாது?

தத: பசு'பமந்தி3ரே (39:8)

முக்தியளிக்கும் கண்ணனே! அதன் பிறகு நந்தகோபன் வீட்டில் நந்தனின் மனைவி யசோதையின் பிரசவப் படுக்கையில் படுத்துக் கொண்டு கால்களை உதைத்துக் கொண்டு நீங்கள் அழுதீர்கள். நித்திரை விட்டு எழுந்த ஸ்திரீக்கள் புத்திரப் பேற்றை எல்லோருக்கும் எடுத்துக் கூற, கோகுலம் முழுவதுமே ஆனந்த வெள்ளத்தில் பரவசம் அடைந்தது அல்லவா?

அஹோ க2லு யசோத3யா (39:9)

புதுக் காயாம்பூ போல் மனத்தைக் கவருகின்ற தங்கள் மேனியை அருகில் முதல் முதலில் பார்த்து; தன் ஸ்தனங்களைப் பருகச் செய்து; சந்தோஷமாக உங்கள் மனோஹரமான சரீரத்தைத் தொடும் பாக்கியம் பெற்ற யசோதை; உலகில் உள்ள அத்தனை புண்ணிய சீலர்களையும் ஜெயித்துவிட்டாள் அல்லவா? என்ன ஆச்சரியம்!

ப4வத் குச'ல காம்யயா (39:10)

நந்த கோபரும் ஆனந்த பரவசத்தில் தங்களுடைய க்ஷேமத்தை விரும்பி பிராமணர்களுக்கு எதைத்தான் தரவில்லை? அவ்வண்ணமே மற்ற இடையர்களுக்கும் என்ன மங்கலத்தைத் தான் செய்யவில்லை. மூவுலகங்களிலும் மங்கலங்களைச் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணா காப்பாற்று!

 
பூதனா மோக்ஷம்


images


A kathakali artist portraying Putana

தத3னு நந்த3 மமந்த3சு'பா4ஸ்பதம் (40:1)

அதன் பிறகு கம்சனுடைய சகாய பூதர்களின் பிரயத்தனத்தை அறிந்த வசுதேவர்,

கப்பம் கட்ட மதுராபுரிக்குச் சென்ற, அளவற்ற
நற்குணங்களின் இருப்பிடமாகிய,

உங்கள் தந்தை நந்த கோபனிடம் இங்ஙனம் உரைத்தார்.

 
பூதனா மோக்ஷம்

அயி ஸகே தவ பா3லக(40:2)

"தோழனே! உமக்குப் பிள்ளை பிறந்த செய்தி எனக்குப் பிள்ளை பிறந்ததைப் போலவே என்னை

ஆனந்தப்படுத்துகின்றது இப்போது. " வசுதேவர் தங்கள் பிதாவாக இருக்கும் தன்மையை நந்தகோபரிடம்

ஆரோபணம் செய்து அந்த நண்பனை ஆதரவுடன் துதித்தார்.

 
பூதனா மோக்ஷம்

இஹ ச ஸந்த்யநிமித்தச'தானி (40 :3)

"உமக்கு இவ்விடத்திலேயே அனேக அபசகுனங்கள் தோன்றுகின்றன.

ஆகையால் கோகுலத்துக்கு விரைந்து செல்லவேண்டும்!" என்கின்ற

வசுதேவரின் சொற்களால் நந்தகோபன் தங்களுக்கு ஆபத்து உண்டாகும்

என்றஞ்சி விரைந்து கோகுலம் வந்தார்.
 
பூதனா மோக்ஷம்

images


அவஸரே க2லு தத்ர (40:4)

"ஹே கபட சிசுவே! அந்த சமயத்தில் சலிக்கின்ற வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவளும்

மனோஹரமான உருவம் உடையவளும் ஆகிய ஒரு ஸ்த்ரீ

கோகுலத்தில் தங்கள் அருகே வந்தாள் அல்லவா ?
 
பூதனா மோக்ஷம்

ஸபதி3 ஸா ஹ்ருதபா3லக (40:5)

உடனே குழந்தைகளின் பிராணனை அபஹரிப்பவளும், அரக்கர் குலத்தில் ஜனித்தவளும் ஆகிய அந்த

பூதனையை, கோகுலத்தில் பார்த்த கோபஸ்திரீகள் "இவள் யார்?" என்று ஆலோசிக்கும் போதே அவள்

தங்களைக் கைகளில் எடுத்துக் கொண்டாள் அல்லவா?

 
பூதனா மோக்ஷம்

images


லலிதபா4வவிலாஸ (40:6)

அந்த பூதனையின் மனோஹரமான சாத்விகபாவங்களாலும், அங்க அசைவுகளாலும் கவரப் பட்ட மனத்தை

உடைய கோப ஸ்த்ரீக்களால் அவளைத் தடுக்க இயலவில்லை. அவள் வீட்டினுள் அமர்ந்து கபட ரூபியாகிய

தங்களுக்கு முலைப்பால் கொடுத்தாள் அல்லவா?
 
பூதனா மோக்ஷம்


putanA.webp

ஸமதிருஹ்ய த்வத3ங்க (40:7)

உடனே தாங்கள் பல குழந்தைகளை அவள் கொன்றதால் கோபம் அடைந்தவராக, அச்சம் என்பதே

அற்றவராக, அவள் மடியில் ஏறி அமர்ந்தீர்.

பெரிய மாம்பழத்தைப் போன்றதும் கடும் விஷத்தால் கெடுதியுற்றதுமான

ஸ்தன மண்டலத்தை அடியோடு உறிஞ்சிக் குடித்தீர் அல்லவா?

 
பூதனா மோக்ஷம்


putana3.webp

அஸுபி4ரேவஸமம் த4யதி (40:8)

தாங்கள் அவள் பிராணனோடு கூடவே அவள் முலைப் பால் குடிக்கும் போது, அந்தப் பூதனை இடிக்கு

ஒப்பான குரலுடன், பயத்தை உண்டு பண்ணும் தன் நிஜ உருவத்தை அடைந்து இரண்டு கைகளையும்

விரித்துக் கொண்டு கீழே விழுந்தாள் அல்லவா?

 
பூதனா மோக்ஷம்


putanA.webp

ப4யத3 கோ3ஷண பீ4ஷண (40:9)

பயம் தரும் குரலைக் கேட்டும், பயங்கர சரீரத்தைக் கண்டும் மயக்கம் அடைந்தனர் கோகுலவாசிகள்.

அவள் மார்பில் விளையாடிக் கொண்டிருந்த தங்களை கோபிகைகள் வந்து எடுத்தார்கள் அல்லவா?

 
பூதனா மோக்ஷம்

putana2.webp

பு4வனமங்க3ள நாமபி4ரேவ (40:10)

ஜகத் மங்கள ரூபியாகிய குருவாயூரப்பனே! பெண்கள் தங்கள் திரு நாமங்களைக் கொண்டே தங்களுக்குப் பல

விதங்களிலும் ரக்ஷை செய்தது விந்தை அல்லவா? என்னை ரோகம் அற்றவனாகச் செய்து தங்களின்

சேவகனாகச் செய்திட வேண்டும்.
 
பூதனையின் சரீர தஹனம்.


nanda nandanan.webp

வ்ரஜேச்'வர: சௌ'ரிவசோ (41:1)

வசுதேவர் கூறியதைக் கேட்டு நந்தகோபர் விரைந்து திரும்பி வரும்போது; வழியி
ல் மரங்களை எல்லாம்

பொடியாக்கிவிட்டு இன்னதென்று இனம் காண முடியாத ஒரு பெரிய வஸ்துவைக் கண்டார். பயந்து

கொண்டு, தங்கள் ரக்ஷைக்காக பரபிரம்மா ஸ்வரூபியும் சித்பதத்தில் வசிப்பவனும் ஆகிய தங்களையே

சரணமடைந்து வீட்டுக்கு அருகே வந்து தங்கள் அருகிலும் வந்தார் அல்லவா?

 
Last edited:
பூதனையின் சரீர தஹனம்.

நிச'ம்யகோ3பிவசனா (41:2)

அதன் பிறகு கோப ஸ்த்ரீக்களின் வசனத்தால் நடந்த வற்றை அறிந்து கொண்ட கோபர்கள், பயத்தாலும்

ஆச்சரியத்தாலும் பீடிக்கப் பட்டனர் . தாங்கள் வீழ்த்திய அந்த பயங்கரமான பூதனையின் உடலை மழுவால்

வெட்டி வெகு தூரத்தில் கொண்டு சென்று எரித்தனர் அல்லவா?

 
Last edited:
பூதனையின் சரீர தஹனம்.

த்வத்பீதபூதனஸ்தன (41:3)

தங்களால் பானம் செய்யப் பட்டதுமே பரிசுத்தம் அடைந்த ஸ்தனங்களை உடைய அந்த பூதனையின்

தேஹத்தில் இருந்து மிக உயரமாகக் கிளம்பிய புகை "இது அகிற்கட்டையின் புகையா, சந்தனந்தின் புகையா

அல்லது குங்கிலியத்திலிருந்து வரும் புகையா" என்ற சந்தேஹத்தை உண்டு பண்ணிற்று அல்லவா?

 
Last edited:
பூதனையின் சரீர தஹனம்.

மதங்க3ஸங்க3ஸ்ய (41:4)

என்னுடைய அங்க சங்கத்திற்கு (அங்கங்களின் சேர்க்கைக்கு) பலன் வெகு தூரமாகிய ஜன்மாந்தரத்தில்

இல்லை. உங்களுக்கு சீக்கிரமே கிடைத்துவிடும். இதை கோப சிரேஷ்டர்களுக்குக் கூறுவதுபோல பரிசுத்தமான

நாமங்கள் உடைய தாங்கள் பூதனையின் உடலைச் சுகந்தம் உடையதாகச் செய்தீர்கள் அல்லவா?
 
பூதனையின் சரீர தஹனம்

சித்ரம் பிசா'ச்யா நஹத: (41:5)

பிசாசி ஆகிய பூதனையால் குழந்தை கொல்லப் படவில்லை! இது ஆச்சரியம்! வசுதேவர் இதை முதலிலேயே

கூறினார். அதுவும் ஒரு ஆச்சரியம். இதைச் சொல்லிக் கொண்டே இடையர் குலத்தினர் தங்கள் திரு முகத்தைக்

காணும் ஆனந்தத்தில் மூழ்கி விட்டார்கள் அல்லவா?

 
பூதனையின் சரீர தஹனம்


mudhdhu krishna.webp

தி3னே தி3னேsதப்ரதிவ்ருத்3த4 (41:6)

அதன் பிறகு வாசுதேவனே! தங்கள் அங்கு வசித்ததால் அந்த கோகுலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஓங்கி

வளர்ந்த ஐஸ்வர்யத்தை உடையதாகவும், என்றும் குன்றாத மங்கள காரியங்கள் நிறைந்ததாகவும், ஆனந்தம்

மேலிட்டதாகவும் இருந்தது அல்லவா?

 
Last edited:
பூதனையின் சரீர தஹனம்

க்3ருஹே ஷு தே கோமலரூப (41:7)

கோபிகைகள் தங்கள் தங்கள் வீடுகளில் உமது அழகான உருவத்தையும், மந்தஹாசத்தையும், பற்றி

ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர். வீட்டு வேலைகள் முடிந்ததும் ஒவ்வவொரு
நாளும் தங்களைக்

காணவந்தனர். கண்டு மகிழ்ந்தனர்.
 
Last edited:
பூதனையின் சரீர தஹனம்

அஹோ குமாரோ மயி (41:8)

"ஆச்சரியம்!" "குழந்தை என்னைப் பார்த்தான்!" "குழந்தை என்னைப் பார்த்துப் புன்னகை செய்தான்." "வா வா

என்னிடம் வா!" என்று கைகளை நீட்டிய கோபிகள் தங்களுக்காக என்ன தான் செய்யவில்லை.

 
Last edited:
பூதனையின் சரீர தஹனம்

கோ3பவதூ4ஜனேன (41:9)

தங்களின் திருமேனியை ஸ்பரிசிக்கும் குதூஹலத்தில் கோப ஸ்த்ரீக்களின் கையிலிருந்து கைக்கு மாறிய

தாங்கள் சிவந்த தாமரைப்புஷ்பமாலையில் உள்ள ஒரு கரிய வண்டினைப் போன்று காட்சி தந்தீர் அல்லவா ?
 
Last edited:
பூதனையின் சரீர தஹனம்


suckling.webp

நிபாயயந்தி (41:10)

மடியில் அமர்த்திக் கொண்டும், ஸ்தனங்களைப்பருகச் செய்தும், தங்களின் திரு முகத்தைக் கண்டு

சிரிக்கின்ற யசோதை எத்தகைய உத்தம நிலையை அடைந்தாள்.

ஹே கிருஷ்ணா! என்னை வியாதிகளில் இருந்து காப்பாற்று!

 
ச'கடாசுர வத4 வர்ணனம்


sakatasuran.webp

கதா3பி ஜன்மர்க்ஷதி3னே (42:1)


பிரபுவே!ஒருமுறை தங்களுடைய பிறந்தநாள் அன்று கோகுல நாயகியாகிய அந்த யசோதை

பந்துக்களையும், பெண்களையும், அந்தணர்களையும் வீட்டுக்கு அழைத்தாள். ஒரு பெரிய வண்டியின்

பக்கத்தில் தங்களைப் படுக்க வைத்துவிட்டு அடுக்களையில் வேலை செய்து கொண்டு இருந்தாள்.

 
ச'கடாசுர வத4 வர்ணனம்

ததோ ப4வத்ராண நியுக்த (42:2)

அப்போது சட சட என்ற மரம் உடையும் பெரும் சப்தம் கேட்டது. தங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட

சிறுவர்களின் பயந்த குரல் எழுப்பிய ஆரவாரமும் உடன் கேட்டது.
 
Status
Not open for further replies.
Back
Top