எண்ண அலைகள்....

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 161

மடி வேண்டாம்...

சுறுசுறுப்பின்றிச் சோம்பியே வாழும் வாழ்க்கை, என்றும்
ஒரு பயனும் தராது என்பதை, வள்ளுவம் வலியுறுத்தும்!

அறிவும், அக்கறையும் இல்லாத சோம்பேறி பிறந்த குடி
அழியும், அவனது வாழ்வு முடியும் முன்பே, என்கின்றார்.

'மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து', என்பது குறள்.

குடிப் பெருமை குலைவதோடு, வாழ்வில் குற்றம் பெருகி,
நொடிந்து போவார், சோம்பலை குணமாகக் கொண்டவர்.

'குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு', என எச்சரிக்கை.

நன்கு வாழ்வு செழிக்காமல் போய்விட, ஒருவருக்கு வரும்
நான்கு குணங்களைக் கோடிட்டுக் காட்டுகிறார், வள்ளுவர்.

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அதிகத் தூக்கம் இவை,
ஞாலம் சிறக்க வாழாதவர், விரும்பி ஏறும் தோணி ஆகும்!

'நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்', என்கிறார்.

பிறந்த குடி கெடுக்கும், குற்றம் பெருக்கும், மடியை ஒழித்து,
சிறந்த நிலையை உலகில் பெற முயன்று, உயர்ந்திடுவோம்!

:angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 162

இகழ்ச்சி தரும் மடி...

முயற்சி செய்வதில் அக்கறை இல்லாது சோம்பல்படுபவர்,
முயற்சி செய்தால் வரும் எதுவும் சாதிக்காமலே இருப்பார்.

மகிழ்ச்சி அடைய வழியும் இல்லாது போய், உலக வாழ்வில்
இகழ்ச்சி அடைந்து, இடித்து உரைக்கும் இன்சொல் கேட்பார்.

'இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்', என்பது எச்சரிக்கை.

பெருமை மிக்க குடியில் பிறந்தாலும், சோம்பல், ஒருவரைச்
சிறுமை தரும் பகைவருக்கு அடிமை ஆக்கிவிடும், என்கிறார்.

'மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்', என்றும் எச்சரிக்கிறார்.

தாம் பிறந்த குடிக்கும், ஆண்மைக்கும் குற்றம் வந்தாலும்கூட,
தம் சோம்பலை ஒழித்து, உழைத்தால், குற்றம் விலகிவிடும்.

'குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்', என்கிறார்.

பெருமை தரும் முயற்சிகளை அயராது செய்து, உழைத்து,
சிறுமை தரும் சோம்பலை வெறுத்து ஒதுக்கி, சிறப்போம்!

:decision: ... :first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 163

விடாமுயற்சி...

எந்தச் செயலும் நம்மால் செய்ய இயலாது என எண்ணாது,
அந்தச் செயலில் முழு நம்பிக்கையுடன் ஈடுபடவேண்டும்.

அருமையான செயலாக இருப்பினும், முழு முயற்சிதான்,
பெருமையுடன் அதை முடிக்க, வலிமையைத் தந்துவிடும்.

'அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்', என அறிவுறுத்துகிறார்.

முயற்சி இல்லாதவரை உதவிக்கு வைத்துக் கொள்ளுவது,
உயர்விலாப் பேடி கையில் வாள்போலப் பயனில்லாதது!

'தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்', என்பது எச்சரிக்கை.

தன் இன்பத்தை விழையாது, தன் மேற்கொண்ட செயலை,
தன் தலையாய கடமையாக எண்ணி நிறைவேற்றுபவன்,

தன் சுற்றம் நட்பின் துயர் துடைத்து, அவர்களைக் காத்து,
தான் ஒரு தாங்கும் தூணாக நின்றிடுவான், என்கின்றார்.

'இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்', என்பது அந்தக் குறள்.

நாம் மேற்கொண்ட செயல்களைச் சிறப்புறச் செய்வோம்;
நாம் பயன் பெற்று, சுற்றத்தைத் தாங்கி மனம் மகிழ்வோம்!

:grouphug: ... :happy:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 163
.....................
தன் இன்பத்தை விழையாது, தன் மேற்கொண்ட செயலை,
தன் தலையாய கடமையாக எண்ணி நிறைவேற்றுபவன்,

தன் சுற்றம் நட்பின் துயர் துடைத்து, அவர்களைக் காத்து,
தான் ஒரு தாங்கும் தூணாக நின்றிடுவான், என்கின்றார்.

'இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்', என்பது அந்தக் குறள்.
..............
தலையாய கடமை!

மருத்துவப் பணியைத் தலையாய கடமையாகக் கொண்டு,
கருத்துடன் ஊர் மக்களைக் காத்த எம் தந்தை, ஒரு சான்று!

'தர்மம் தலை காக்கும்', என்பதைக் கொள்கையாகக் கொண்டு,
தர்ம மருத்துவம், ஏழை எளியவர் பலருக்குச் செய்தார், நன்று!

வள்ளுவரைப் போற்றும்போது, தந்தையையும் போற்றுகிறேன்! :hail:

மன நெகிழ்வுடன்,
ராஜி ராம்
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 164

முயற்சி வேண்டும்!

'முயற்சி உடையார் இகழ்ச்சி', அடையார் என அறிவோம்;
முயற்சி செய்து முனைந்தால், முடியாதது எதுவுமில்லை!

முயற்சி உடையவர்களுக்குச் செல்வம் வந்து குவியும்;
முயற்சி இல்லாவிடில், வறுமையே வந்து புகுந்துவிடும்!

'முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்', என்பது எச்சரிக்கை.

நல்ல விதி இல்லாதிருப்பது, எவருக்கும் பழி அல்ல; அதை
நன்கு அறிந்து, முயற்சியால் மாற்றாது இருப்பதே பழியாம்.

'பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மையே பழி', என உணர்த்துகிறார்.

தெய்வ அருள் இல்லாது, ஊழ் வெற்றியைத் தராவிடினும்,
மெய்வருந்த உழைத்தால், அதன் பயன் கிடைப்பது உறுதி!

'தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்', என உரைக்கிறார்.

உயர்வு தரும் முயற்சியை, விடாது வாழ்வில் கொண்டு,
உயர்வு அடைந்து சிறப்பதே, வள்ளுவம் காட்டும் பாதை!

:first:
 
முயற்சி...

இளைய சமுதாயம் மேன்மை பெறத் தாரக மந்திரம், முயற்சி!

இனிய இளமையைக் கல்வி மேம்பாட்டில் செலுத்தும் முயற்சி;

கணினி பார்த்து, நல்ல அறிவை வளர்த்துக்கொள்ளும் முயற்சி;

கனவை உயர்ந்த இலக்கில் கொண்டு, அதை எட்டிவிடும் முயற்சி;

காலத்தில் கற்பவை கற்று, வாழ்வில் உயர்வு அடைய முயற்சி;

ஞாலத்தில் சிறந்த மனிதனாக வாழ மேற்கொள்ளும் முயற்சி!

:typing: . . . :first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 165

துன்பம் நேர்கையில்...

இன்பமும் துன்பமும் வாழ்வில் வருவது உலக இயல்பு;
துன்பம் வரும்போது, நிலை குலைந்துவிடாததே சிறப்பு!

துன்பம் வரும் வேளையிலும், சிரிக்க அறிய வேண்டும்;
துன்பத்தை எதிர்கொள்ள, அதுவே ஒரு சிறந்த மார்க்கம்.

'இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்', என

கடினமான உபாயத்தை, எளிமையாகக் கூறுகிறார் அவர்!
கடினமாயினும், இதை அறிந்துகொள்ள முயன்றிடுவோம்!

வெள்ளம் போல அளவற்ற துன்பம் பெருகினாலும், அறிஞர்
உள்ளம், அதை வெல்ல நினைத்தவுடன், அது விலகி ஓடும்!

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்', என்கிறார் அவர்.

துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர், அந்தத் துன்பத்திற்கே
துன்பத்தைக் கொடுத்து, அதை வெல்லுவர் என்கின்றார்!

'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்', என்பது அந்தக் குறட்பா.

வள்ளுவர் காட்டும் வழிகளை அறிந்து, துன்பம் வருங்கால்,
தெள்ளிய மனத்துடன் இருந்து, துன்பத்தை வெல்லுவோம்!

:peace:
 
துன்பத்திற்கே துன்பம்!

ஒரு முள்ளை எடுக்க, இன்னொரு முள் வேண்டும்;

வைரத்தை அறுக்க, இன்னொரு வைரம் வேண்டும்.

இவை அறிந்த நாம், துன்பத்திற்கே துன்பம் தரும்

வகை அறிந்தால், என்றும் இன்பம் மட்டும் வரும்! :happy:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 166

துன்பம் துன்புறுத்தாது!

துன்பம் உடலுக்கு நேர்வது இயற்கையே என அறிந்தவர்,
துன்பம் உடலை வாட்டும் பொழுது கலங்கிவிட மாட்டார்.

'இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்', என்று கூறுகிறார்.

இன்பத்தை மட்டும் விழையாது, துன்பமும் இயல்பு என்பவர்,
துன்பத்தினால் துவண்டு போகவே மாட்டார்கள், என்கின்றார்.

'இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்', என்பது அந்தக் குறட்பா.

இன்பம் வந்த பொழுதில், சிலர் ஆட்டம் போட்டு மகிழ்வார்;
இன்பம் நீடித்து நிற்கும் என்றும் நினைத்துக் கொள்ளுவார்.

இவ்வாறு உள்ளவர், துன்பம் வரும்போது கலங்கிவிடுவார்;
இவ்வாறு இல்லாதவர், துன்பம் வந்தால் துன்புற மாட்டார்!

'இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்', என்று கணிக்கின்றார்.

இன்பம், துன்பம் இரண்டும் வாழ்வில் இயல்பென அறிவோம்;
துன்பம் நேர்ந்தாலும், கலங்காது, வெற்றி பெற முயலுவோம்!

:thumb:
 
உலக வாழ்க்கை...

சுடும் சூரியனும், குளிர் நிலவும் உலகில் உண்டு;
கடும் வெய்யிலும், இளம் பனியும் உலகில் உண்டு;

புயல் காற்றும், வீசும் தென்றலும் உலகில் உண்டு;
புதிரான சுனாமியும், மெல்லிய அலையும் உண்டு;

கொட்டும் பெரு மழையும், இளஞ்சாரலும் உண்டு;
வெட்டும் மின்னல், மின்னும் நட்சத்திரம் உண்டு;

இன்னும் பல எதிரிடைகள் இருக்கிற இவ்வுலகில்,
துன்பம், இன்பம் இரண்டும் இயற்கை; அறிவோம்!

:decision: ... :thumb:
 
Last edited:
உலக வாழ்க்கை...

சுடும் சூரியனும், குளிர் நிலவும் உலகில் உண்டு;
கடும் வெய்யிலும், இளம் பனியும் உலகில் உண்டு;

:

awesome..

samuel taylor coleridge, 'kubla khan',


The shadow of the Dome of Pleasure
Floated midway on the waves,
Where was heard the mingled measure
From the fountain and the caves.
It was a miracle of rare device:
A sunny Pleasure-Dome with caves of ice!

here is the full poem..

The Kubla Khan Poem
 
குறளமுதம்...

பொருட்பாலில், அரசியல் இத்துடன் முற்றும்;

பொருட்பாலில், அமைச்சியல் தொடந்து வரும்.

இத்தனை ஆண்டுகள் சென்ற பின்னும், வள்ளுவம்

எத்தனை பொருத்தமாக இருக்கின்றது, இன்றும்!

வாழ்க வள்ளுவம்! :cheer2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 167

நல்ல அமைச்சு...

பட்டியல் இட்டு நல்வழியை உணர்த்தும் திருவள்ளுவர்,
பட்டியல் இடுகின்றார், நல்ல அமைச்சின் தேவைகளை!

ஒரு செயலைச் செய்யத் தேவைப்படும் கருவிகளையும்,
பொருத்தமான காலத்தையும், எவ்வாறு செய்யவேண்டும்

என்பதையும், ஆற்றுகின்ற பணி எந்தத் தன்மை உடையது
என்பதையும் ஆராய்பவனே, சிறந்த அமைச்சன் ஆவான்!

'கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு', என்கிறார்.

துணிவுள்ள மனமுள்ளவன்; உயர்ந்த குடியில் பிறந்தவன்;
கனிவுடன் காப்பதை அறிந்தவன், அற நூல்களைக் கற்றவன்,

நல்ல அயராத முயற்சி உடையவன் என்ற ஐந்து குணங்கள்,
வல்லமையான ஒரு அமைச்சனுக்குத் தேவை, என்கின்றார்!

'வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்ட தமைச்சு', என்பது ஒரு பட்டியல்!

வல்லமையான நல்லமைச்சு அமைத்திட, எல்லாம் செய்ய
வல்ல இறைவன் நல்வழி காட்ட, வேண்டி வணங்குவோம்.

:hail: . . . :angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 167

நல்ல அமைச்சு............

துணிவுள்ள மனமுள்ளவன்; உயர்ந்த குடியில் பிறந்தவன்;
கனிவுடன் காப்பதை அறிந்தவன், அற நூல்களைக் கற்றவன்,

நல்ல அயராத முயற்சி உடையவன் என்ற ஐந்து குணங்கள்,
வல்லமையான ஒரு அமைச்சனுக்குத் தேவை, என்கின்றார்!
............

காலத்தின் கோலம்!

இன்றும், வல்லமையான அமைச்சர்களே உலவுகின்றார்!

இன்று, வள்ளுவன் வழியை மாற்றிப் புரிந்துகொண்டார்!

துணிவுள்ள மனம் .......... பாவத்திற்கும் பயமில்லை!

உயர்ந்த குடிப் பிறப்பு ..... உயர்ந்த வெளிநாட்டுச் 'சரக்கு'!

கனிவுடன் காப்பது ......... ஆம்! சுவிஸ் வங்கிகள் வழிய!

அறநூல்கள் கற்பது ........ கற்றதுபோல பாவனை கொடுக்க!

நல்ல அயராத முயற்சி ... அடுத்த ஆட்சியைப் பிடிக்க!

வாழ்க வள்ளுவம்!


:peace:
 
மனக் கவலை மாற்றும் மருந்தாக, இறைவனையே கூறுகின்றார் திருவள்ளுவர்.

இறைவன் யார்?

சூரியனுடன் ஒப்பிட முடியாது; வெப்பம் கோடையில் சுட்டெரிப்பதால்!

சந்திரனுடன் ஒப்பிட முடியாது; எந்த நாளிலும் தேய்ந்து, வளர்வதால்!

கடலுடன் ஒப்பிட முடியாது; தன் அலைகளை, சுனாமியாக்கி அழிப்பதால்!

ஆகாயத்துடன் ஒப்பிட முடியாது; தொட முடியாத தூரத்தில் உள்ளதால்!

பூமியுடன் ஒப்பிட முடியாது; பூகம்பத்தால் மக்களை அழித்துவிடுவதால்!

மழையுடன் ஒப்பிட முடியாது; அடிக்கடி பெய்ந்து, காய்ந்து கெடுப்பதால்!

தீயுடன் ஒப்பிட முடியாது; மூண்டு அழிக்கும் குணத்தைக் கொண்டதால்!

காற்றுடன் ஒப்பிட முடியாது; சூறாவளியாகிச் சுழற்றித் துயர் தருவதால்!

சூரிய சந்திரர் போலவும் இல்லாமல், பஞ்ச பூதங்கள் போலவும் இல்லாமல்,

சீரிய மாபெரும் சக்தியே இறைவன்; நம்மைக் காக்க, நம்மில் உள்ள பரமன்!


:clap2: .... :pray:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 168

நல்ல அமைச்சர்...

நல்ல அமைச்சர் என்பவரின் குணங்கள் என்று மூன்றைச்
சொல்ல முனைகிறார் திருவள்ளுவர், ஒரு குறட்பாவில்.

நாட்டின் நலனுக்காக எதிரிகளின் துணைகளைப் பிரித்தல்,
நாட்டின் நலத்தை விழைவோரைக் நன்கு காத்து இருத்தல்,

பிரிந்து சென்றவர் மனம் திருந்தி வந்துவிட்டால், ஆராய்ந்து
அறிந்து மீண்டும் சேர்த்தல், என்பவையே அந்த மூன்றும்!

அறநெறி நன்கு அறிந்தவராக, சிறந்த சொல்லாற்றலுடன்,
திறமையாகச் செயல்படுபவரே, நல்ல அமைச்சர் ஆவார்.

'அறனறிந்து ஆன்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை', என்கின்றார் அவர்.

நல்ல நூல்கள் கற்றதோடு, மதி நுட்பம் கூடிய ஒருவரை,
எந்த சூழ்ச்சிதான் எதிர்க்க முடியும், என்று கேட்கின்றார்!

'மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை', என்பது அந்தக் கேள்வி.

அறநெறியும், நல்ல கல்வி அறிவும், கூர் மதி நுட்பமும்,
பெறவேண்டும் நல்ல அமைச்சர், என்று அறிந்திடுவோம்!

:decision:
 
என்று விடியும்?

நாட்டின் நலனுக்காக, எதிரியின் துணைகளைப் பிரிக்க முயலாது,
நாட்டையே பல பகுதிகளாகப் பிரிக்க முனைகின்றார், இந்நாளில்!

சுயநலத்திக்காக கட்சிகள் தாவித் தாவிச் சென்று, தம்முடைய
சுய கௌரவத்தையும், மதிப்பையும் இழக்கவும் துணிகின்றார்.

பிரிந்து சென்றவர், திரும்பவும் வந்து கூடுவதை, எல்லோரும்
அறிந்துகொண்டாலும், அறியாதது போலவே இருப்பது சகஜம்!

நாட்டு நலன் கருதாது, எந்நேரமும் திட்டங்கள் பற்பல தீட்டி,
வீட்டு நலன் கருதும் தலைவர்கள் ஒதுங்கினாலே, விடியும்!

:dance:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 169

திறமையான அமைச்சர்...

'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது', என்று அறிவோம்;
ஏட்டு அறிவு போதாது; அனுபவ அறிவும் தேவையாகும்!

அறநெறி நூல்கள் கற்ற அறிவு நிறைவாக இருப்பினும்,
அனுபவ அறிவையும் கொண்ட அமைச்சரே வல்லவர்.

செயலாற்றும் முறைகளை, நூல் வழி அறிந்திருப்பினும்,
செயலாற்ற, உலக நடைமுறைகளும் அறிதல் அவசியம்!

'செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்', என அறிவுரை.

சொந்த அறிவும் இல்லாது, பிறர் அறிவுரையும் கேட்காது,
இந்த உலகில் உலவும் ஆட்சியாளர்களை, மிக உறுதியாக

அறிவுரைகளை எடுத்துக் கூறும், அறிவுடைய அமைச்சரே,
நெறி தவறாது வழி நடத்த முடியும், என்கிறார் வள்ளுவர்.

'அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்', எனக் குறள்.

சிறந்த நூல் அறிவும், உலக அனுபவமும் உள்ள அமைச்சர்,
சிறந்த வழிகாட்டியாக, அரசை நடத்த முடியும்; அறிவோம்!

:angel:
 
நல்ல நண்பன்....

நல்ல அமைச்சருக்குத் தேவையான குணங்கள் உடைய,
நல்ல நண்பன் உடன் இருந்தால், நம் வாழ்வு மேம்படும்!

நல்ல அமைச்சர், தம் அரசை நல்வழியில் நடத்துவார்;
நல்ல நண்பன், நம் உயர்வுக்குத் துணையாக நிற்பான்!

:first:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 170

தவறான அமைச்சர்!

நல்ல அமைச்சர் அமைந்தால், நாட்டிற்கு நன்மை வரும்;
அல்ல அமைச்சர் அமைந்தால், பற்பல தீமைகளே வரும்.

பழுதான எண்ணம் கொண்ட அமைச்சர் அருகில் இருப்பது,
எழுபது கோடி எதிரிகள் அருகில் உள்ளதைவிடக் கொடிது!

'பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்', என எச்சரிக்கை விடுக்கிறார்!

திறன் படைத்த அமைச்சரின் தேவையை மேலும் சொல்ல,
திறன் இல்லாமையால் வரும் விளைவுகளைக் கூறுகிறார்!

முறைப்படித் திட்டம் தீட்டிய செயலும், திறன் இல்லாவிடில்,
முறையாகச் செய்ய இயலாது போய்விடும், என்று கூறுகிறார்.

'முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்', என்பது அக்குறட்பா.

திறமை இல்லாதவரை அமைச்சராகக் கொள்ளுதல் தீயது;
அருமையாகத் திட்டங்களை அமல்படுத்தவும் அறிந்திடார்.

நன்கு கற்றறிந்த திறம் படைத்த அமைச்சரை நாடுவோம்;
நல்ல திட்டங்களால் நாடு முன்னேற வழிகள் தேடுவோம்!

:fish2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 171

சொல்வன்மை பற்றிச் சொல்லவே, ஒரு அதிகாரத்தைச்
சொல்வன்மையால் படைத்த திருவள்ளுவர், முன்னரே

இனிக்கும் கனிகள்போல நற்சொற்கள் இருக்கும்போது,
புளிக்கும் காய்போலச் சொற்கள் வேண்டாம் என்றவர்.

சொல்வன்மை என்பதே ஒரு செல்வம் போன்றது; அது
செல்வத்திலும் தனிச் சிறப்புடைய செல்வம்; ஆதலால்,

வேறு எவ்வகையிலும் அதைச் சேர்க்க முடியாது, என்று
ஒரு குறட்பாவில், மிகத் தெளிவாக உரைக்கிறார், அவர்.

'நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று', என்று குறள்.

ஆக்கமும், அழிவும் கூறும் சொல்லாலே வருவதால்,
காக்க வேண்டும், குறையுள்ள சொற்கள் வெளிவராது.

'ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு'.

குறை இல்லாத நல்ல சொற்களையே பயன்படுத்தி,
குறை இல்லாத நல்ல வாழ்வு, வாழ முனைவோம்!

:first:
 
அடக்கமும், வன்மையும்...

நாவடக்கம் பற்றி, அறத்துப்பாலில் உரைத்தார்;
நாவன்மை பற்றி, பொருட்பாலில் உரைத்தார்.

எண்ணங்கள் தூயதாய் மனத்தில் எண்ணினால்,
எண்ணற்ற துயரம் தரும், இன்சொற்கள் வராதே!

மற்றவரைக் காயப்படுத்தும் குணம் கொண்டதால்,
குற்றமுள்ள தீய சொற்களை அறவே ஒழிப்போம்!

நாவடக்கம் என்றும் கொள்ள, உறுதி பூணுவோம்!
நாவன்மை நயமாகப் பெற, நாளும் முயலுவோம்!


எண்ணங்களும், சொற்களும் தூய்மை காக்கட்டும்!
ராஜி ராம் :pray2:
 
வள்ளுவம் காட்டும் வழிமுறைகள்

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 171

சொல்வன்மை பற்றிச் சொல்லவே, ஒரு அதிகாரத்தைச்
சொல்வன்மையால் படைத்த திருவள்ளுவர், முன்னரே

இனிக்கும் கனிகள்போல நற்சொற்கள் இருக்கும்போது,
புளிக்கும் காய்போலச் சொற்கள் வேண்டாம் என்றவர்.


இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

மு.வ உரை
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.:high5:

thiruvalluvar[1].webp
Awaiting more posts from you
 
..........
மு.வ உரை
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
.......
நீங்கள் கொடுத்துள்ள மு. வ. உரையின் குறள்:

'அகமலர்ந்து ஈதலின் நன்றே முகமலர்ந்து
இன்சொல னாகப் பெறின்.'
கனியிருப்பக் காய் கவர்வது வேறு!! :peace:
 
Back
Top