• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Absence makes the heart grow fonder ... to most people - even if not for all!

So there was pindrop silence when sang the songs requested by the listeners in the mahA sashti pooja.

Singing has become a very pleasant experience - after I got corrected for one major mistake I was committing and which no one could point out before my music guru and fondest sibling did.

She did it on the very first day.

The overspeed in rendering the songs - which was not really necessary!

So all my maanaseeka gurus taught me their lovely songs.
But they could not correct my extra speed- since they hardly knew me!

Well better late than never.

"GurukEka etuvanti guNiki theliyaka pothu!" is true!
There is no excelleling without the grace of a sadhguru.

https://youtu.be/PDsOxy9Pd9A

Attachments area

Preview YouTube video Guruleka Yetuvanti || Saint Tyagaraja`s Sampradaaya Pancharatna Kritis


Guruleka Yetuvanti || Saint Tyagaraja`s Sampradaaya Pancharatna Kritis









 
# 181. FASTER THAN GRAVITY!

"Free Fall" தான் Fastest என்று
நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி.

அதை விடவும் fast மனிதன் தான்!
பார்த்
தால் நீங்களும் நம்புவீர்கள்.

ஒரு ஸ்பூன் நெய்யை ஒரு பந்திக்கு
பரிமாறிவிட்டு, அதை பத்திரமாகத்
திரும்பக் கொண்டு வர முடியுமா? :shocked:

நம்மால் நிச்சயம் முடியாது! :nono:
ஆனால் அவரால் அது முடியும்.
ஏனென்றால் அவர் faster than gravity! :rolleyes:

மேலே இருந்து ஊற்றிவிட்டு அதையே
கீழே ஸ்பூனில் மீண்டும் பிடித்து விடுவார். :thumb:

நெய்யை இலையில் யாரேனும் தேடினால்
தேடிக்கொண்டே இருக்க வேண்டியது தான்!

இவரிடம் இன்னொரு specialty உண்டு!
எல்லோரும் "தொப்பை மாமா" ஆவார்கள்!
இவரோ "சப்பை மாமா" ஆகிவிட்டார்!
 
என்ன சம்பளம் கிடைத்திருக்கும் அந்தச் சின்ன ஆஞ்சநேயர் கோவில் பூஜாரிக்கு? என்ன அதிசயம் அவர் சப்பை மாமாவாக இருந்ததில்?

ஆனால் உண்மையிலேயே அதிசயம் இது தான் !

அவர் சலங்கையைக் கட்டிக் கொண்டு ஆடும் ஆடல்!

என் முதல் சலங்கை அவரிடம் வாங்கினது தான்,

"என்ன கஷ்டமோ நஷ்டமோ?" என்று இன்று நினைக்கின்றேன்
எதற்காகச் சலங்கையை விற்க நேர்ந்ததோ?

அது மாட்டுச் சலங்கை என்று பின்பு கண்டுபிடித்தேன்

மாட்டுச் சலங்கை கண் இமைகள் போல இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

நாட்டியச் சலங்கை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கும்


அதையும் விட அதிசயம் எதுவுமே இல்லாமல் அன்று மக்கள் கொண்டுருந்த "திருப்தி!" :hail:


காசை வாரி இறைத்தாலும் இன்றைய மக்கள் காண இயலாத பரம திருப்தி! :(
 
# 182. "அவரைப்போலவே பாடுகிறாய்!"

அவள் பெயருடன் "குட்டி"
என்ற அழகிய அடைமொழி
பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டது.

அவள் திருமணம் முடிந்த பிறகும்
அவள் ஒரு குட்டியே. :moony:
சிறியவள் ஆக இருப்பாள்.

"மாதாட பாரதேனோ" பாடலையே
எங்கும், எப்போதும் பாடுவாள்.

ஒரு பிரபல நடிகை / பாடகி போலவே
இவளும் மூக்கால் பாடி, ஒரு தனித்துவம்
மகத்துவம் ஏற்படுத்திக் கொண்டாள்.

"எல்லாரும் சொல்லறா! நான்
அவரை மாதிரியே பாடுகிறேனாம்!" :sing:

"ஆமாம் ஆமாம் நீ அவரை மாதிரியே
அச்சு அசல் பாடுகிறாய்!" என்போம். :high5:

அதுவும் உண்மை தானே! :rolleyes:
 
Remember Cherry the all white kitty with a black tail?

The latest addition in my son's family members?

Kitty chased thatha!
Thatha chased Kutty!
Kutty chased the kitty!

Well coming to the main story ( after the proper introduction of Cherry and the dynamic equilibrium it managed to maintain in the house), I was explaining to my grandson the idiom "Looking like something the cat had brought in during the night"

It took a lot of explaining since he could not imagine a wild cat living outside the safety of a cosy home.

And I got the gift of what a wild cat had managed to bring in to me during the night. I saw a half eaten bandicoot at my door step, on my door mat - the day after I landed in Coimbatore.

As if the jetlag, the absence of the servant and the strain of setting up the house and kitchen were NOT enough for me, I got this surprise gift.

The old lady across expected ME to clean up the mess.

There are to maids employed exclusively to maintain the common areas .

And I was hungry, angry, sleepy and high strung

I said to myself, " I am not going to do the funeral service for bandicoot and and went into my house.

Later on those maids cleaned up the bloody mess. I told them them to toss the doormat along with the dead bandicoot.

As they say "NO good deed ever goes unpunished"

My good deed deserving punishment was that I as the ONLY one who had laid out a door mat for the cat to sit on and eat in the cold winter!

My grandson had a side splitting laughing session listening to this story
I like happy people - even if they are happy at my expense! :)

So no door mat now! Better to allow some dust/ dirt inside the house than
find a bloody bandicoot at the doorstep - the first thing in the morning!
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்


# 183. "எனக்கு நிருபதம்" தாத்தா.

என் தாத்தாவின் நெருங்கிய நண்பர்.
எங்கிருந்தோ தினமும் வருவார்.

கரு கருவென்ற களையான முகம்;
அடர்ந்த, நரைத்த, புஸ்தி மீசை!

நெற்றியில் சிவப்பு நிற ஒற்றை நாமம்;
நல்ல கம்பீரமான குரல் வளம்!

தாத்தாவுடன் திண்ணையில் அமர்ந்து
காலை முழுவதும் அளவளாவுவார்.

பிறகு உணவு உண்ணும் நேரம் ஆனதும்
தன் வீட்டுக்கு எழுந்து போய் விடுவார்.

அவர் பெயர் என்ன? எனக்குத் தெரியாது.

அவர் அடிக்கடி பாடும் பாடல்
ஒரு ராம நாடகக் கீர்த்தனை!

"எனக்குநிருபதம் நினைக்க
வரம் அருள்வாய் ஸ்ரீ ராமச்சந்திரா".

அவர் பெயர் எங்களைப் பொறுத்த வரை
"எனக்குநிருபதம் தாத்தா" என்று ஆகிவிட்டது.

"எனக்கு உன் இரு பதம்" என்று
அதைப் பதம் பிரிக்க வேண்டும்

என்பதே வெகு நாட்களுக்குப் பின்னர்
தான் எனக்கே தெரிய வந்தது. :doh:
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்

# 184. "LADKI HAI YAA LADKAA" ?

பெரியவன் குழந்தையில் ஒரு அழகிய
பெண்குழந்தை போலவே இருப்பான்!

அலை அலையாகச் சுருட்டைமுடி,
தினமும் அதில் கிருஷ்ணர் கொண்டை!
அதில் நிறையப் பூச் சுற்றி விடுவேன்.

[இப்போது கேட்கிறான் என்னிடம்
"Did you have to do it in
every single photo?" :shocked: என்று]

ஒரு வட இந்திய நண்பர் வந்தார்!
குழந்தையைப் பிரியமாகக் கொஞ்சினார்.

அவனை எடுத்துக் கொள்ளும் போது
அவர் கேட்டார்,"லட்கி ஹை யா லட்கா?"

"யே தோ லட்கா ஹை" என்றவுடன்
அவனைத் திருப்பித் தந்து விட்டார். :bolt:

குழந்தையாக இருக்கும் போது கூட
பையனைக் கொஞ்சக் கூடாதாம். :nono:

இது எப்படி இருக்கு!!! :rolleyes:
 
Quality VS Quantity.

I believe in Quality ( as the pANdavas did ) and not in Quantity (as the kouravas did). The story referred to here goes thus:

pAndavas and kouravas were asked to fill a small hut given to them - with anything they can.

The pANdavas cleaned the hut and filled it with bright light by lighting lamps.

The koravas bought and brought hay and filled the hut completely.:loco:

The Quality VS Quantity in everyday life!

Even if we talk to a person for a few seconds it must be done with undivided attention.

I do not advocate people talking while reading newspaper/ catching up with the Whatsapp; watching TV and (the worst is yet to come) while eating food!

Who needs to listen to the 'sabdha jAlam' of chewing and gulping food? Not me definitely! :nono:

As they say"Whatever is worth doing is worth doing well"
"No time?" Then do not talk or make it brief - if unavoidable.

Respect the time, energy and commitments of the other people - even if you yourself do NOT have any.

It sounds strange but is true.. the busy people always find time for everything.

The lazy people do not have TIME for anything except for being lazy!
 
A little civic sense will make the life bearable!

Here the night comes accompanied by the weird sounds and toxic smells. May be some strange sights too. But I live on the ground floor and could see anything outside my house.

I did not realise that I had cut short my bare necessity of sleep by one hour (by getting up one hour earlier after landing in India).

I realised it and decided to go to bed an hour early from yesterday.

I could hear people moving furnitures in some floors overhead.

This was spiced up by the loud conversation of two females - catching up with the news spread over an eon! I think conversations are meant to be private!

Not to outdone by these sounds the fragrance of freshly fried fish filled the air! :dizzy:

When I decided to shut the windows to keep out the disturbing sounds and smells I was vetoed!

I had reconcile to the fact I am back in India! :eek:hwell:
 
# 186. "ராமன் எத்தனை ராமனடி!"

ஆந்த்ராவில் மிகவும் பிரபலம் ஆன பெயர்கள்
ராமாராவ், கிருஷ்ணாராவ்,
சுப்பா ராவ், அப்பா ராவ் என்பவையே.

ஒருவர் இருந்தால் அடையாளம் சொல்ல வேண்டாம்.

ஒரே பேரில் நிறைய பேர் இருந்தால்
அடைமொழிகள் வந்து கூடும்!

கருப்பு x, வெள்ளை x ;
குண்டு y, ஒல்லி y ;
குட்டை z , நெட்டை z என்று.

ராம ராவ்களில் எத்தனை பேர்!
எங்கள் ரோடிலேயே மூவர் இருந்த
ர்.

மாடு, கன்று வைத்திருந்தார் 'கௌபாய்'
ராமாராவ் ஆனார்.
குச்சி போல இருந்தவே குச்சு
ராமாராவ் ஆனார்.
குண்டாக இருந்தவர் குண்டு
ராமாராவ் ஆனார்.

இப்போது நோ confusion at all.

கௌபாய் ராமராவ் வேறு, :flock:

குச்சு ராமராவ் வேறு, :cool:

குண்டு ராமராவ் வேறு :bowl:

Adjectives தினசரி வாழ்க்கையில்
எவ்வளவு உபயோகமாக இருக்கின்றன!!! :rolleyes:
 
# 186. A.I.R. ப்ரோக்ராம்.

லேடீஸ் கிளப் வழியாக எங்களுக்குச்
chance கிடைத்தது A.I.R. ப்ரோக்ராம்.

யார் பாடுவது, என்ன பாடுவது
எல்லாம் ஒரு வழியாக முடிவாயிற்று.

அன்னமையாவின் "பாவமுலோன"
என்னும் சுத்த தன்யாசி கீர்த்தனை.

எல்லோருக்கும் வார்த்தைகளைக் கொடுத்து
சாட்டை இல்லாத ரிங் மாஸ்டர் போல, :whip:

ஸ்ருதியும், தாளமும் விலகாமல் பாட
நல்ல பயிற்சியும் கொடுத்தாயிற்று.

ரெகார்டிங் செய்ய வந்தார்கள். :sing:

நான் தான் பயிற்சி அளித்து
lead செய்யப் போகின்றவள்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா?
எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு

எனக்கு முன்னால் வந்து ஜம்பமாக
அமர்ந்து கொண்டு விட்டார்கள்.

சுருதி பாக்ஸ் என்னிடம்.

அவர்களுக்கு அதிலிருந்து சுருதி
எடுக்கவும் தெரியாது! தொடங்கவும் தெரியாது.​

உரலில் தலையைக் கொடுத்துவிட்டு
உலக்கைக்கு பயந்தால் முடியுமா?

இருந்த இடத்தில் இருந்தே பாடினேன்.

ஒரு எண்ணம் மனதில் தோன்றுவதைத்
என்னால் தடுக்க முடியவில்லை.

ரேடியோ ப்ரோக்ராமுக்கே இப்படி
மேலே வந்து விழுந்தவர்கள் :flock:

T.V. ப்ரோக்ராம் ஆக இருந்திருந்தால்....
stampede ஆகி இருக்குமா???:noidea:​
 
A similar thing happened during the Mass Marriage conducted by Our Lioness Club.

No one would come forward for the group photo.

I being the president went and stood first. I hoped that the others would follow the lead and we could get the group photo taken.

The others who followed the lead also started taking the lead! They all walked on and started standing in front of me.

In the group photo I could be located only with the help of a convex lens since I was in the last row.

But it also proved a hidden truth.

I was the pivot supporting the whole wretched club and I was organizing the one-(wo)man-show.

Pandhikku mattum mundhubavargaL alla ivargaL! :nono:
photovukum thaan! :doh:
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்

# 200. பூனைக்கும் ஒரு காலம் வரும்.

A.I.R. ப்ரோகிராம் முடிந்துவிட்டது.

எல்லோருக்கும் தலை கழுத்தில் நிற்கவில்லை. :drama:
என்னமோ ஆடிஷனுக்குச் சென்று வென்றது போல். :eek:hwell:

அடுத்த ladies Club மீட்டிங் வந்தது.

எல்லோருடைய வேண்டுகோள்,
"மீண்டும் அந்தப் பாடலைப் பாடவேண்டும்!" :sing:

பாடியவர்கள் ஹாலில் பிரிந்து அமர்ந்து இருந்தனர்.

எல்லோரும் ஒரே இடத்துக்கு வருமாறு சொன்னால்
எழுந்து வர அவ்வளவு சோம்பல். :bored:

நெம்புகோல் வைத்துத் தான் எழுப்ப வேண்டுமா? :doh:

சொல்லிச் சொல்லிச் சலித்துப் போனது.
பாட்டைப் பாட ஆரம்பித்தேன்.

எல்லோரும் சேர்ந்து கொண்டனர்.

ஆனால் அத்தனை பெரிய ஹாலில்
அனைவரையும் தூக்கிப் பிடித்து
வழி நடத்த (மைக்கும் இல்லாமல்)
நோ சான்ஸ் அட் ஆல்!

Unless I have the voice of a military commander-
in which case I won't be able to sing with that voice!

எல்லோரும் எல்லா
த் திசைகளிலும் மேயச் செல்லவே :flock:​
நான் பாடுவதை நிறுத்திவிட்டேன்.

எல்லோரும் தொடர்ந்து
சென்று மேய்ந்து விட்டு
ஒருவழியாக வந்து சேர்ந்தனர்.

எல்லோருக்கும் ஒரே திகைப்பு.

"அன்று ரேடியோவில் அவ்வளவு
நன்றாக இருந்ததே இந்தப் பாட்டு?" :shocked:

சங்கீதமும், இங்கிதமும் தெரிந்த
என் நண்பி கூறினாள் சத்தமாக,

"அன்று பாடிய ஒரே ஒருவர் மட்டும்
இன்று இங்கு பாடவில்லை! அவ்வளவு தான்" :moony:

Moral:

A little knowledge is NOT a dangerous thing

UNLESS it is mistaken to be a great knowledge! :moony:
 
# 187. ஒவ்வொன்று அழகு.

அழகற்றவர் என்று யாருமே
இருக்க முடியாது. :nono:

ஒவ்வொருவரிடம் ஒவ்வொன்று அழகு.
கடவுள் வஞ்சனை செய்பவர் இல்லையே.

சிலருக்குத் தலைமுடி அழகாக இருக்கும்;
சிலருக்கு உதடுகள் ஆப்பிள் துண்டுகள்.

சிலருக்குக் காதளவோடிய கண்கள்;
சிலருக்கு நேரான எள்ளுப்பூ நாசி!

சிலருக்கு முத்துப் பல்வரிசை;
சிலருக்கு மூன்றாம் பிறை நெற்றி!

சிலருக்கு வில் புருவங்கள்;
அவளுக்கு அழகிய கண் இமைகள்!

கண்ணை மூடித் திறக்கும்போது,
பட்டுப் பூச்சி பூவின் மேல் அமர்ந்து,

தேன் அருந்துவது போல இருக்கும்.
எப்போதும் slow motion போலவே.

தூங்கும் விழிகள் அல்ல அவை.
மயக்கும் விழிகளும் அல்ல.

ஆனால் பார்த்தால் ரொம்ப
relaxing ஆக இருக்கும். :couch2:

கோஷ்டி கானத்தில் முதல் வரிசையில் நிற்பார்.

பெயர் கூடத் தெரியது.
குரல் எப்படியோ தெரியாது.

ஆனால் அந்த ரசிகனான camera man
அவரையே அடிக்கடி காட்டுவான். :photo:

பாட்டுக்கு நன்கு பொருந்தும் அந்தப்
பட்டுப்பூச்சி கண் இமை அசைவுகள். :clap2:
 
பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்!

அவள் பாவம் ரொம்பவும் physically challenged.
ஆனாலும் அவள் ஒரு பொன் முட்டை இடும் வாத்து.

"மேடம் மேடம்" என்று அவள் கணவன் கொண்டாடுவான்.
அவளை உள்ளங் கையில் வைத்துத் தாங்குவான்

அத்தனை வீட்டு வேலைகளையும் தானே செய்வான்
அவன் ஒரு house-husband என்ற ஐயம் உண்டு எனக்கு

இவை அத்தனைக்கும் காரணம்... அவள் ஒரு பொன் முட்டையிடும் வாத்து.
அவள் நல்ல கல்லூரியில், நல்ல வேளையில், நல்ல சம்பளத்தில் இருந்தாள் !
 
பெண்ணின் கோணல்.... :

முதல் பத்து நாட்கள் housemaid வேலைக்கு வரவில்லை.
பத்து நாட்களில் நிறையப் பாடம் கற்றுக் கொண்டேன்.

எனக்கு வேண்டாத ( ஆனால் அவர்களுக்கு வேண்டிய )
சாமான்களை எடுத்துச் செல்ல முற்றுகை இட்டவர்கள்
என்னிடம் இருந்து ஒளிந்து மறைந்து திரிந்தனர். :peep:
( ஒருவேளை உதவிக்குக் கூப்பிட்டு விட்டால் மறுக்க முடியாதே என்று)


மூன்று பெயர்களைக் கொண்ட ஒருத்தி ஒரு நாள் மட்டும் வந்தாள்!
மூன்று ஆட்கள் செய்யும் சப்தம் செய்தாள் வேலை செய்யும் போது.

wet-floor-phobia இருக்கும் என்னைத் தண்ணீரை கொட்டி அச்சுறுத்தினாள்
கூட்டி எடுத்த குப்பையை பாத்ரூமில் கொட்டி அங்கு சோக் ஏற்படுத்தினாள்.

நடப்பதற்குக் கஷ்டப்படும் என்னைக் கண்டு மனம் இரங்கினாள்.
அது தன் மாதச் சம்பளத்தை உயர்த்திக் கொள்வதற்காக மட்டுமே!

" தடி இல்லாமல் உங்களால் நடக்க முடியாதா? ஐயோ பாவம்!
அப்போ சம்பளத்தை ஆயிரம் ரூபாயாகக் கொடுத்திடுங்க!"

500 சதுர அடி வீட்டை மெழுகுவதற்கு 1000 ரூபாய் போதுமாம்.
இது எப்படி இருக்கு??? :doh:
 
முற்பகல் செய்யின்...

பெருந்தனக்காரர் அவர் முதாதையோர்!
பெருமை அதிகம் இருப்பது இயல்பே!

"மற்றவரோடு பழகுவது நம்முடைய
சுற்றத்தின் மதிப்பைக் குறைத்துவிடும்!" :nono:

எதற்கும் எப்போதும்
அவர் போவதில்லை!
எதற்கும் அனுப்புவார்
அவர் தம் கைத்தடியை!!

பணியாள் அதைக் கொண்டு செல்வான்.
பணியாள் அதைக் கொண்டு வருவான். :roll:

பெரியவர் காலம் ஒருநாள் முடிந்தது!
மரியாதை செலுத்த வந்தவர் எவர்??? :confused:

அத்தனை வீட்டிலிருந்தும் வந்து சேர்ந்தன
எத்தனையோ விதமான கைத்தடிகள் !!! :rolleyes:
 



# 188. ONE HUNDRED PENNIES IN A BUNDLE!

நம்மூரில் கடைகளில் சில்லறையை
நம்மிடம் வாங்கிக் கொண்டு அவர்கள்
நமக்கு முழு நோட்டுகளாகத் தருவார்கள்.

அமெரிக்காவில் சரியான சில்லறை கொடுத்தால்,
"NO NO I HAVE TO GIVE YOU THE BALANCE.
YOU DON'T HAVE TO PAY ME MORE MONEY!"

பலன் பலப்பல 'பென்னி' என்னும் ஒரு பைசாக்கள்
சேர்ந்து கொண்டே போகும் நம்மிடம்! :popcorn:

"BUS FARE கொடுக்கலாமா இவற்றை?
"TRY YOUR LUCK ! NO ONE WILL SCOLD YOU "

நூறு காசுகளை எண்ணி எடுத்துச் சென்று
சின்ன packet போலக் கட்டி அதை BUS
டிரைவர்-கம்-கண்டக்டர் இடம் தந்தேன்.

சிரிப்பை அடக்கிக் கொண்டு அவர் கேட்டார்,
"HOW LONG HAVE YOU BEEN COLLECTING?" :rolleyes:

"NOT FOR VERY LONG REALLY! :nono:
WE KEEP GETTING THEM ALL THE TIME!"

அவர் வாய்விட்டுச் சிரித்து விட்டார். நானும் தான். :becky:

 
# 189. RAdha MAdhavam.

சிட்டி பாபுவின் அற்புத படைப்பு இது.

மாணவ மாணவிகளுடன் குழுவாக
ராகமாலிகையில் அமைக்கப்பட்டது.

சுமார் 25 நிமிடங்கள் தொடர்ந்து
இசை வெள்ளத்தில் மூழ்க வைக்கும்.

குட்டிப் பெண்களை வைத்து ஒரு
நாட்டிய நாடகம் ஆக்கினேன் இதை.

அவர்களுக்கு ராகம் மாறுவதெல்லாம்
அவ்வளவு நிச்சயமாகத் தெரியாது. :confused:

அதனால் ஒவ்வொருவரும் அவரவர்
ஸ்டெப்களை நினைவு கூற வேண்டும்.

கடைசியில் கண்ணன் நுழைவான்.

பயிற்சி என்றுமே வீண் போகாது.
நன்றாக அமைந்து விட்டது அது.

எல்லா பெற்றோர்களும் வந்து,
"என் பெண் இவ்வளவு நல்ல ஆடுவானே
எனக்குத் தெரியாது!" என்ற போது

பட்ட பாடு வீண் போகவில்லை என்ற
மனத் திருப்தி ஏற்பட்டது. :thumb:

நாட்டியம் படித்தவள் ஒரே ஒரு பெண்
அவளுக்கு நீளமான இசையை அளித்துவிட்டேன். :dance:

கண்ணன் வேடம் யார் போட்டாலும் கண்ணைக் கவருமே! :love:
 
# 190. "Stand up for the prayer!"

Prayer பாடச் சொல்லுவார்கள், ஆனால்
அமைதி காக்க மாட்டார்கள் 1 நிமிடம் கூட. :blabla:

மைக்கு முன்னே நின்று நாம் பாட, :sing:
நமக்குப் பின்னே இருந்து இவர்கள் பேச,

இரண்டுமே மைக் வழியாக அவியலாக
வெளியில் கேட்கும் என்ற அறிவும் இருக்காது. :crazy:

ஒருமுறை ரொம்பக் கோபம் வந்துவிட்டது எனக்கு! :mad2:

Prayer என்ற சொன்ன கையேடு organizer
தொடர்ந்து வேறு யாரிடமோ பேசியதால்.

அன்றிலிருந்து சொல்லத் தொடங்கினேன்,
"Please stand up for the prayer!"

நிற்கும்போது பேசாமல் இருப்பது பலருக்கு
எளிது போலத் தோன்றியதால், அதுவே
பிறகு எல்லா இடங்களிலும் தொடர்ந்தது.​
 
# 191. MAGNETIC PARTNERS !

Annual G.C.T. ALUMNI meet இன் போது
சுலபமான சில கேம்ஸ் இருக்கும்.

போன முறை வைத்திருந்தேன்
FINDING ONE 'S PARTNER .

பிரபல ஜோடிகளின் பெயர்களைத்
நிறையத் தேர்ந்து எடுத்தேன்.

ஆண்களின் பெயர்கள் எழுதிய ஸ்லிப்
பெண்களுக்கு அளிக்கப்பட்டது.

பெண்கனின் பெயர் எழுதிய ஸ்லிப்
ஆண்களுக்கு அளிக்கப்பட்டது.

விசில் அடித்தவுடன் பிரிந்து
நின்று இருந்த இரண்டு குழுக்களும்

கடல் போல் ஆர்ப்பரித்துக் கொண்டு,
ஒன்றை நோக்கியொன்று ஓடத் தொடங்கி

"ரோமியோ!" "ஜூலியட்!"
"வள்ளுவர்!" "வாசுகி!"

"அம்பிகாபதி!" "அமராவதி!"
என்று கூச்சல் காதைப் பிளந்தது.

அம்பிகாபதியும், அமராவதியும்
பிரிந்திருந்த இரண்டு காந்தங்கள் போல
சேர்த்து ஓடி வந்து பரிசு பெற்றனர்.

எழுபதுகளில் இப்படி இருக்கும் இவர்கள்
இருபதுகளில் எப்படி இருந்திருப்பார்களோ!​
 
# 192. Double share for the bachelor brother?

அவர்களை ஒரு கை விரல்களால்
எண்ணிவிட முடியாது நம்மால்! :bump2:

முன்பு எல்லாம் அது சஹஜம் தானே?

நிறைய நிறைய அண்ணன்கள்!
ஒரே ஒரு அன்புத் தங்கை!

எல்லோரும் பேரன் பேத்தி
எடுத்த பின் பாகப் பிரிவினை!

வளைத்துப் போட்டிருந்த நிலத்தின்
விலையே பல லகரம் பெறும்.

மணம் ஆகாத அண்ணன் சொன்னான்,

"இரண்டு பங்கு எனக்குத் தந்தால் தான்
இந்த ஏற்பாட்டுக்கு உடன் படுவேன்!"

கல்லூரியில் படிக்கும் பேரன்கள், :typing:
கல்யாணத்துக்கு தயாராக மதமதவென்று
வளர்ந்து நிற்கும் பேத்திகள்! :music:

அவர்கள் தாத்தாக்கள் கேட்காத
இரட்டைப் பங்கு சொத்துக்கள்
கட்டை பிரம்மச்சாரிக்கு எதற்கு? :wacko:

வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர். :eek:hwell:

எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம்
உலவுகின்றார்கள் இந்த நிலவுலகில்!!! :tsk:

P.S:

The greedy brother died soon while still a bachelor.

I have no idea who has inherited his share of property.​
 
The husband won't reveal his whereabouts or his travel plans to his wife.

She cut a sorry figure among her friends and family when she had to admit that she did not know about where he was or when he would return home!

Some people would not believe her words and suspected that she wanted to remain utterly secretive!

One day when she cornered her husband regarding this matter he replied callously,

"I am NOT P.M. Modi that I should tell you my plans for the day!"

The wife replied without wasting a moment,

"If you are indeed P.M. Modi, I will know your plans for the day from the Media. Since you are not our P.M. YOU yourself will have to tell me your plans for the day!

She can't be more correct! Can she be?
 
# 193. Teen-age girl looking for trouble!

ஏன் நடு இரவில் சத்தம் செய்கின்றீர்கள் என்று கேட்டதற்கு
என்னைக் காட்டுக்குப் போகச் சொன்ன
அந்த பிரம்மச்சாரிகள் வசிக்கும் வீட்டில்,

இரண்டும் கெட்டான் பெண்ணுக்கு
தினம் தினம் என்ன வேலை வைத்திருந்தது? :noidea:

தினமும் அவளே அங்கு சுயேச்சையாகப் போவாள்.

பிறகு "வீல்! வீல்!" என்று அலறிக் கொண்டு
அவள் வெளியே ஓடி வருவாள். :bolt:

நான்கு ஐந்து hairy hands வெளியே நீளும்.

மீண்டும் அவளை உள்ளே இழுக்கும்!
மீண்டும் தொடரும் அவள் அலறல்!

என்ன தான் நடக்கும் அங்கே! :shocked:

அவள் அம்மா சிரித்துக் கொண்டு
தன் வீட்டில் இருப்பாள். :couch2:

அவர்கள் சில்மிஷம் செய்தார்களா?
அல்லது வேறு ஏதும்....? :scared:

மண்டுப் பெண் விளக்கில் விழும்
வீட்டில் பூச்சியைப் போல :loco:
தினம்
தினம் அங்கே ஏன் சென்றாள்???
 

Latest ads

Back
Top