• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 194. தப்பான சித்தப்பா.

அவர் மனைவியின் அக்கா பெண்ணுக்குப்
பாடம் சொல்லிக் கொடுக்க வருவார் தினமும்.
ரொம்பவும் ரெகுலர் வருகை. ரெகுலர் டைம்.:clock:


என்ன சொல்லிக் கொடுத்தார்
என்பது பிறகு தெரிய வந்தது. :rolleyes:

அகஸ்மாத்தாக வந்த வேலைக்காரி
அவர்களை மிகவும் நெருக்கத்தில் :hug: :kiss:

பார்த்ததோடு நில்லாமல் உடனேயே :shocked:
ஊரெல்லாம் தண்டோரா! :horn:

எப்போது காலி செய்தார்களோ
எங்கள் யாருக்குமே தெரியாது!

திருவிளையாடலில் வரும் பாடகர்
ஏமநாதன் தன் சிஷ்யர்களுடன்
நள்ளிரவில் சொல்லாமல் கொள்ளாமல்
ஊரை விட்டு ஓடினதைப் போல. :bump2:​
 
For some men WIFE is just a robot - attending to all his needs and remaining invisible, inaudible, undemanding, and unsung at the background.

To make such a man understand that his wife is real human with intellect and emotions (just like himself) he needs a little separation from her.

But that enlightenment WILL be short lived- just as in O Henry's tale 'The Pendulum'.
 
# 195. Cost Of Food ...no problem!

நிறைய மனிதர்கள் உணவுக்காக
எவ்வளவு பணம் வேண்டுமானாலும்
செலவழிக்கத் தயாராக இருப்பர்.

கேட்டால், "அது ஒன்று தானே நமக்கு
உள்ளே போகிறது!" என்று தத்துவம். :hungry:

உள்ளே போனது உள்ளேயே இருக்குமா?

அடுத்த நாள் தன் அழகிய உருமாறி
வெளியே வந்துவிடும் அல்லவா? :scared:

படிக்கும் புத்தகங்கள் எல்லோருக்கும்
பயன்படும் இன்றும் ... என்றும்.

பாடல்கள் அடங்கிய டிஸ்க்குகள்
எல்லோருக்கும் எப்போதும் பயன்படும்.

எதுவுமே எல்லோருக்கும் பயன் தரும்!

அவற்றை வாங்க ஆயிரம் முறை
யோசிப்பவர்கள் எல்லோரும் :decision:
உணவுக்காக மட்டும் சிந்திக்காமல்
ஏராளமாகச் செலவு செய்வது ஏன்?! :noidea:
 
# 196. Female Eiffel tower!

மழைக்காலம் வந்துவிட்டாலே போதும், :rain:
எங்கும் இதே காட்சி தான் காணப்படும்.

பெரு நீரோடு கலந்து மக்கள் தங்கள்
சிறு நீரையும் பாய்ச்சுவது வழக்கம். :doh:

பெண்களுக்கும் அது குளிர்! அதே மழை!!

ஆனால் அவர்கள் ஆண்கள் அங்கங்கே நின்று
ஜிப்பை இறக்குவது போலச் செய்வதில்லையே!

நமக்கு இருக்கும் அடக்கும் திறன்
அவர்களுக்கு இல்லாமல் போனதா? :confused:

அல்லது ஆண்கள் என்ன வேண்டுமானாலும்
செய்யலாம் என்று எழுதப்படாத விதியா?

ரயிலில் போகும் போது சிலர் சொம்புகளை
எண்ணுவார்கள் பொழுது போவதற்கு.

இங்கு தலைகளை எண்ணலாம் போல.

"பெண்கள் பெண்கள் தான்!" என்று நினைத்த போது
அங்கே பார்த்தேன் ஒருத்தியை ஒரு மரத்தடியில்,
A Female Eiffel tower போல நிற்பதை.

ஆகாயத்தில் எதையோ தேடிக்கொண்டு இருந்தாள்!
கீழே மும்மரமாக வேலை நடந்து கொண்டு இருந்தது!

இந்திர ஜாலம் செய்பவர்கள் நம்மை
திசை திருப்ப ஏதாவது பேசுவார்கள்
அல்லது செய்வார்கள். அதே technique.

அவள் எதைத் தேடுகிறாள் என்று பார்ப்போம்!
அவள் செய்வதை நாம் பார்க்க மாட்டோம்.

அவள் காட்சி தந்த அளவுக்கு முட்டாள் அல்ல! :loco:​
 
Thinking back and looking at the other thathas around me in the world, I realise how simple and how great my own grandfather had been. :hail:

His needs were very few.

He made his own tooth powder from the charred husk of paddy and salt. I don't know how he smelled good even without using any soap.

He washed his own clothes without any soap and they were always clean.

He would wear his (only/ one the two) shirt only on formal occasions and while going out.

His demands were nil. Lodging Complaints were N/A for him.

He was happy with his frugal gruel of wheat and a saucer of cooked vegetables.

Even if he felt one tablespoon of the wheat gruel was extra, he would keep it aside. I had the good fortune and the good sense of eating the sesham of this great man.

He was soft spoken, unassuming, undemanding, understanding and affectionate. He was at peace with himself and the external world.

WHAT had made this feat possible?

It must have been the constant chanting of the tAraka nAma of sree rAma - which was synchronized with his very breath.

Will I ever find anywhere in the world another venerable old man like him?
 
The new thread with the lyrics and audio link to the compositions of
Sree K.R. Narayanan (Hari dasa) has been launched in the
Music and Dance section By Smt . Raji Ram as promised!
Welcome to make the most of it!
 
# 197. WHO WAS (S)HE?

முதல்முறை அமெரிக்கா சென்றபோது
அவளை (அவனை?) பஸ்ஸில் கண்டேன்.

நெடு நெடு என்று நல்ல உயரம்.
ஒல்லி உடம்பு. கருப்பு skirt.

bobbed ஹேர், ரத்தச் சிவப்பு உதடுகள்.

தினமும் shave செய்வதைப் போல
பச்சை நிறக் கன்னங்களும், முகவாயும்.

mascara , eyeliner, eyeshade எல்லாமே!
அவனா? அவளா? அதுவா? தெரியாது! :confused:

பாவமாகவும் இருந்தது பார்ப்பதற்கு. :tsk:

அத்தனை heavy மேக்கப் போடாமல் இருந்தால்
யாரும் கவனித்து இருக்க மாட்டார்களே! :hippie:

பிறகு எதற்கு அத்தனை heavy
makeup செய்து கொண்டாள்??? :noidea:

WAS the need for heavy makeup the real problem with him/ her?​
 
# 198. DON'T MESS WITH THEM!

மதியம் புறப்பட்டு இரவு சென்னை
செல்லும் தினசரி train அது.

சிடி பஸ் போல அலைமோதும் கூட்டம்.

ஸ்டான்டிங்கிலேயே சென்று விடுவார்களா
அத்தனை பேரும் சென்னை வரையில்?

அந்த குரூப் ஒன்று ஏறிற்று ரயிலில்.
ஆண் போலக் குரல்! பெண் போல உடல்.

ரொம்ப பிஸியாக அவர்கள்
ரயில் முழுக்க அலைந்தனர். :roll:

ஒரு பையன் துணிந்து ஒருத்தியைத்
தொட்டுவிட்டான்! இளிப்பு வேறே! :becky:

"தொட்டதற்குக் காசு கொடு!"
என்று பிடித்துக் கொண்டு விட்டாள்.

"உன் கையைத்
தானே தொட்டேன்!"

" ஏன் இங்கே உக்காந்து இருக்கிற பொம்பளைங்க
கையெல்லாம் போய் தொட வேண்டியது தானே "

அவன்
காசு கொடுக்க மறுக்கவே
மொத்தக் கூட்டமும் corner செய்தது அவனை. :grouphug:

முதலிலேயே அவன் கொடுத்திருந்தால்
சின்ன அமௌன்ட்டோடப் போயிருக்கும்.
எல்லோரும் வந்ததால் நன்றாகப் பழுத்தது. :popcorn:

போயும் போயும் சபலப் பட்டு,
இப்படி அவர்களிடம் ஒருவன்
போய் மாட்டிக் கொள்ளுவானா? :doh:

"Don't mess with them" என்று :nono:
popular tune இல் பாடத் தோன்றியது.

 
# 199. Tamil terimaa?

"போண்டா டீ" என்று வியாபாரம்!

ரயிலில் இருந்தவன் சிரித்தான்,
"பொண்டாட்டி?" என்று சொல்லியபடி.

"ஏய்! உனக்கு தமிழ் தெரியுமா?"
ஒருவன் அவனிடம் கேட்டான்.

அவ்வளவு தான் ஆவேசம் வந்தவன் போல

"ஹிந்தி தேரி மா! கன்னடா தேரி மா!
தெலுகு தேரி மா! இங்கிலீஷ் தேரி மா"
என்று சண்டை போடத் துவங்கினான். :argue:

(தேரி மா = your mother in Hindi.)

அவன் அம்மாவைப் பழித்ததாக
அவன் எண்ணிவிட்டான். :suspicious:

பெரியவர்கள் புகுந்து விளக்கி
சமாதானம் செய்யவேண்டி இருந்தது.



 

# 201. THE COMPLEMENTING COUPLES.

ஒரு கதையில் வரும் இரு நண்பர்களில்
ஒருவனுக்குக் கண் இல்லை, கால் உண்டு.
மற்றவனுக்கு கண் உண்டு, கால் இல்லை.

கண் உள்ளவன், கால் உள்ளவன்
தோள் மீது அமர்ந்து வழி சொல்வான்.
கண் இல்லாதவன் அவனையும் சுமந்து நடப்பான்.

"இப்படியெல்லாம் கூட இருப்பார்களா?" என்று
குழந்தைப் பருவத்தில் வியந்தது உண்டு. :shocked:

இப்போது கண்கூடாகப் பார்க்கின்றேன்
விந்தையான பல தம்பதிகளை.

கணவனுக்குக் காது கேட்காது! :ear:
மனைவிக்குப் பார்வை மங்கி விட்டது! :cool:

கேட்டு பதில் சொல்லுவாள் மனைவி.
பார்த்து எடுத்துக் கொடுப்பான் கணவன்.

அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை இருந்தால்
இந்தக் குறைபாட்டைக் கண்டு பிடிக்கவே முடியாது.

கணவனுக்கு நல்ல உடல் பலம் இருக்கும்.
மனைவிக்கு நல்ல புத்தி பலம் இருக்கும்.

கணவன் எளிதில் உணர்ச்சி வசப்பட்டால்
மனைவி தைரியமானவராக இருப்பார்.

ஒருவர் காலில் கஞ்சி ஊற்றிக்கொண்டது போல
பரபரப்பாக இருந்தால், மற்றவர் கொள்கை
"தானத்தில் சிறந்தது நிதானம்!" என்பதே.

இறைவன் நன்றாகத்தான் ஜோடி சேர்க்கிறான். :hail:

Truly marriages are made in Heaven.

Do you wonder why thunder, lightning and rain form
inevitable parts of a marriage ? :confused:


It is because the thunder and lightning
are also made in heaven - just like the marriage! :moony:
 
# 202. BLOOD TRANSFUSION !

சின்ன அறுவை சிகிச்சை ஆனாலும் சரி,
லப்ரோஸ்கோபிக் முறையானாலும் சரி,
அட்டை போல நம் இரத்தத்தை உறிஞ்சிவிடுவர்.

ஒவ்வொன்றுக்கும் கணக்கு உண்டு;
எத்தனை unit ரத்தம் நாம் தரவேண்டும் என்று!

ஆனால் அதை அவர்கள் patient டுக்குக்
கொடுப்பதே இல்லை ஒரு போதும்!

அவசியம் இல்லை என்பார்கள் நாம்
விடாமல் துரத்தித் துரத்திக் கேட்டால்!

பின் எதற்கு அத்தனை ரத்தம்
தேவைப்படுகிறது அவர்களுக்கு!

எதிர் வீட்டு ஆன்ட்டி கால் மடிந்து விழ,
மேஜையின் விளிம்பு தலைப் பதம் பார்க்க,

மண்டை பிளந்து குழாய் நீர் போல
வழிந்து கொண்டிருந்து ரத்தம்.

எத்தனை அழுத்தினாலும் கட்டுப்படவே இல்லை.

பிறகு தெரிந்தது அவருக்கு stroke வந்ததால்
anti coagulant drug எடுத்துக் கொள்ளுவது.

ஒரு வழியாக emergency வார்டு செல்வதற்குள்
எனக்கு ரத்த அபிஷேகம் செய்தது போலாயிற்று!
என்றால் அவரைப் பற்றி சொல்லவே வேண்டாம் :faint:
கழுவக் கழுவ அறை முழுவதும் diluted blood !!!

தைக்க நேரமும் இல்லை, வசதியும் இல்லை;
வரிசையாக 15 staple பின்கள் தலைமேல் அடித்து
ஒரு வழியாக ரத்தப் போக்கை நிறுத்தினார்கள்!

அதற்குள் அவர் ஒரிஜினல் நிறமே மாறி
பழைய வேஷ்டி போல ஆகிவிட்டார்.

"மூன்று லிட்டர் ரத்தம் சேதம்" என்ற
டாக்டரிடம் ரத்தம் கொடுக்கச் சொன்னால்
"தேவை இல்லை அதுவே ஊறிவிடும்" என்கிறார். :nono:

அறுவை சிகிச்சைக்குப் பின் நமக்கும் தருவதில்லை!
ரத்தம் சேதம் ஆனவர்களுக்கும் தருவதில்லை.

என்ன தான் செய்கிறார்கள் அதை? ! :shocked:


 
# 203. VEENA TUNERS

இசைக்கருவிகளுக்கு மெட்டுக்கட்ட
செவிப்புலன் தேவை இல்லையோ? :noidea:

விசாகாவில் வீணைக்கு மேளம் கட்டியவர்
ஒரு முழுச் செவிடர்! நம்பமுடியவில்லை

வீணையின் மேளம் சரியாக இருந்தது. :happy:

கோவையில் வீணை மேளம் கட்டியவரும்
கொஞ்சம் ஹியரிங் impaired தான். :ear:

Harmonics கணித பின்னங்கள் தான்.

அந்த விகிதங்கள் தெரிந்ததால் தான்
அவர்கள் செவிப்புலன் இன்றியே
செம்மையாகத் தம் பணியைச் செய்தனர்! :clap2:​
 
# 204. "நீ எப்போதான் சமையல் பண்ணுவே?" "

சில இல்லத்தரசிகள் நாள் முழுவதும்
சமையல் அறையே கதி என்று இருப்பர்கள்.

அவர்களுக்கு எதற்கும் நேரம் இருக்காது.
அவர்கள் எப்போதும் ரொம்ப பிசி.

"அப்படி என்னதான் செய்கின்றீர்கள்?"
என்று கேட்டுத் தான் பாருங்களேன்.

"சமைச்ச்சுச் சாப்பிடறேன்!" என்று
எக்ஸ்ட்ரா அழுத்ததுடன் பதில் வரும்.

We must eat only to live.
We must not live only to eat.

But apparently these people eat to live so that
they can live to eat more and more fancy foods!!!

எனக்குப் பத்து நிமிடங்களுக்கு மேல்
சமையல் அறையில் நின்றால் தலை சுற்றும். :dizzy:

பாதிவேலை dining ரூமில் செய்வேன். :bolt:

அடுப்படிக்கு வந்தே ஆகவேண்டும் என்றவை
மட்டுமே அடுப்படியில் செய்யப்படும்.

எப்போதும் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும், :dance:
வரைந்து கொண்டும், டியுஷன் எடுத்துக்கொண்டும்

இருக்கும் என்னிடம் பக்கத்து வீட்டு மாமி கேட்டார்,
"நீ எப்போதான் சமையல் பண்ணுவே?" :confused:
 
All's well that ends well!

I can make only very few sweets perfectly. Mysore pAku, Kesari , Coconut Burfi and Corn flour Halwa are among them.

I am happy with these since they are good enough to celebrate the festivals with and are easy to make and take to the temple as nivedhyam and prasadham.

But yesterday the sweet making became an ordeal literally. The mysore pAkku would not set and would not allow me to cut it into pieces! :(

I had to make more sugar syrup, add it to the half set sweet scraped out of the plate and redo the whole thing.

But the mixing became extremely difficult and painful to the shoulder joint due to the semi solid consistency of the mass.

After fighting with all my strength with the wooden ladle on the mass, I poured it again on another plate coated with molten ghee, but it showed no intention of setting to solid consistency.

I gave up all hope and decided to make small balls out of the mass to be eaten as mysore halwa.

Finally the mass set and I could cut. Whoever tasted the sweet swear that it is the best sweet I have prepared till now!

The wearer knows where the shoe pinches.

The maker knows what had gone into making the final edible product!
 
# 205. கண்ணீர் அஞ்சலி.

காலனி செக்ரெட்டரி மாரடைப்பால்
இறந்து போனதும், அவருக்குப் போஸ்டர்ஸ்
ஒட்டினார்கள் "கண்ணீர் அஞ்சலி" என்று!

அதற்கு முன்பும் பார்த்துள்ளேன் - ஆனால்
அதைப் பற்றி சிந்தித்ததில்லை அதிகம்.

பிறகு வெளியில் செல்லும் போதெல்லாம்​
அது ஒரு பொழுது போக்கு ஆனது.

ஊர் பேர் தெரியாத தாத்தாக்கள், :crutch:
பல்லுப் போன பாட்டிகள் போட்டோக்கள்!!!​

ஒருநாள் கண்டேன் கழுதைக்குப் போஸ்டர். :doh:

"தரணியில் உன்னைப்போல
யாரும் இருந்ததில்லை!

நீ இல்லாத இந்த தரணியும்
ஒரு வாழத் தகுந்த தரணியா?"

கழுதைக்குக் கண்ணீர் அஞ்சலியா???

சொத்தையே pet animals களுக்கு :wof:
தத்தம் செய்யும் பெரிய மனிதர்களைப்
பற்றி படித்தும், கேட்டும் உள்ளேன்!

ஆனால் அவர்கள் எல்லோருமே
WESTERN COUNTRIES ஐச் சேர்ந்தவர்கள்.

தமிழ் நாட்டிலுமா இந்த புதிய மோகம் ?? :shocked:​
 
# 206. நாய்-வாய்-நெய்!

கல்யாண மண்டபம் கட்டப்பட்டது
எங்கள் அனைவரின் வசதிக்காகவும்.

வெளியே மண்டபம் எடுத்தால் செலவும் அதிகம்.

வாஹன வசதிகள் செய்து தரா விட்டால்
ஒரு மனிதன் வரமாட்டான் (20 K.M) திருமணத்திற்கு.

அதற்கு முன்பு.... வெளியே open air ஷாமியானா!
அதனுள் dining மேஜைகள், dning நாற்காலிகள்.

பரிமாறிய நெய் பக்கெட்டை ஒருவர்
கீழே நிலத்தில் வைத்தது தான் தாமதம்!

ஒரு தெரு நாய் வந்து அதில் முகத்தை விட்டு
ஆனந்தமாக நெய்யைப் பருகலாயிற்று.

நான் தான் பார்த்துவிட்டு அதை விரட்ட, அது
வாயிலிருந்து நெய் சொட்டச் சொட்ட ஓடுகிறது.

எங்கெல்லாம் என்னத்தை எல்லாம் மேய்ந்ததோ? :doh:

"நெய்யைக் கீழே கொட்டி விடு!" என்றால்
"மாட்டேன்" என்று மல்லுக்கு நிற்கிறான் சர்வர். :nono:

"நாய் வாய் தானே வைத்தது! போகட்டும்"
அதனால் ஒன்றும் பாதகம் இல்லையாம். :shocked:

அது எங்கெல்லாம் வாய் வைத்ததோ?
நானும் விடவில்லை; அவனும் தான்.

பிறகு கல்யாண பார்ட்டியிடம் சென்று சொல்ல
அவர் அந்த நெய்யைக் கீழே கொட்டினார்.

நினைத்துப் பார்த்தால் குமட்டியது.
நாய் வேறு எதில் எல்லாம் வாய் வைத்ததோ?
எதை எல்லாம் நமக்குப் பரிமாறினார்களோ?

ஈஸ்வரோ ரக்ஷது... :pray:​
 
The body knows its requirements!

The person may NOT know the names of the minerals, vitamins and others things his body needs but the body inherently recognizes the food items which have what his body needs so very badly.

During the Alumni meet in February 20108, the rich food served in the
5* restaurant, tilted the balance of my sensitive system so badly that I could hardly rise my head ( the whole world went reeling around me).

The very sight of food made me want to throw up - though my tummy was really empty. I had to eat but I could not even think about it.

The only things that looked stomach-friendly were the juicy oranges my niece had brought for me. For almost 10 days I survived on oranges and lost weight considerably.

While looking up for the liver friendly foods yesterday I saw oranges and citrus fruits in the list in addition to apples and avocado.

So my body KNEW what it needed and which food had it!

Does this explain why pregnant women want to eat many weird things ranging from raw mangoes to the ashes from burnt wood?

May be these contain something their body needs - which they can neither name nor buy in any store?
 
# 207. தேவர் வீட்டு விருந்து.

நெருங்கிய உறவில் திருமணம்,
மணமகன் நம்மவன் தான்;
மணமகள் தேவர் இனம்.

வருந்தி அருந்தி அழைத்ததால்,
போகாமல் இருக்க முடியவில்லை.

கோவிலில் தான் திருமணம்.
அன்றைக்கு சூப்பர் முஹூர்த்தம்
ஏராளமான திருமணங்கள். :grouphug:

ஜோடி மாறினால் கூடத் தெரியாது! :rolleyes:
ஒரு மனிதரையும் தெரியவில்லை.
எல்லோரும் புஸ்தி மீசையுடன்.

திரும்பிவிடலாம் என்னும் போது :bolt:
மணமகனின் தாயைக் கண்டேன்.
அவருடன் சேர்ந்து கொண்டோம்.

தாலி கட்டிய பின் தரும் விருந்தில்
நான் வெஜ் ஐடம்ஸ் இருக்குமோ? :fear:

ஆடி வெள்ளி நினைவுக்கு வந்தது!

நல்ல காலம் திருமண விருந்தை
டிபனுடன் முடித்துக் கொண்டனர்.

கோவில் அருகிலேயே பெரிய ஹோட்டல்!

கால் நடையாகவே சென்று அங்கே
அவர்கள் கொடுத்தவற்றை உண்டு விட்டு
எல்லோரும் திரும்பிச் சென்றார்கள்.

பயப்படும் தருணங்களில் இவ்வாறு நிகழும்!
எதிர்பாராத தருணங்களில் என்ன நிகழும்?

அதையும் சொல்வேன் பிறகு!
 
# 208. "ராஜுகாரு விந்து போஜனம்!"

என் மாணவியின் கல்யாணம் நடந்தது
பெரிய விளையாட்டு மைதானத்தில்.

ஆண்களுக்குத் ஒருத் தனி பகுதி.
பெண்களுக்கு வேறு ஒரு பகுதி!

ஊர் முழுக்க அழைத்து இருப்பார்களோ?
கூட்டமோ கூட்டம்; கண்காட்சி போல! :flock:
இவர் நிற்கின்றார் நான்வெஜ் க்யூவில். :whoo:
கூப்பிட்டாலும் கேட்காது அந்த சந்தடியில். :ear:

என் நண்பியின் கணவர் அவர் அருகே.
அவர் தன் மனைவியை அடிக்கடி பார்ப்பார்.

அவருக்கு ஜாடைசெய்து மேலே இருந்த
நான்வெஜ் போர்டைச் சுட்டிக் காட்டினேன்.

பிறகு அவர் அதை விளக்கி இவரை :blabla:
வெஜிடரியன் க்யூவுக்கு அனுப்பினர்.

"மேலே போர்டைப் பார்க்கவில்லையா?"
என்றால் இவர் என்னிடம் சொல்கிறார்,

"கல்யாணத்தில் Non
veg போட மாட்டார்கள்"

பிறகு தெரிந்தது ராஜூ காரு கல்யாணத்தில்
Non vegetarian items தான் speciality !

All living things which can walk / fly /crawl / swim were served!:dizzy:
 
The older we get... the longer it takes to come out of jetlag!

It took me thirty days to come back to Indian Time Zone!

Till then I was lying awake with little mice racing in my tummy during the nights.

The days were drowsy, dull, lackluster and oppressive.

I read about a reset button inside the brain to come out of jet lag faster.

I am sure it will have its own consequences. We must not try to rush Nature!
 
# 209. நாயர் வீட்டுக் கல்யாணம்.

இரண்டு மகன்களுக்கும் திருமணம்;
இடையே ஒரு வாரம் இடைவெளி.

"இரண்டுக்கும் வர வேண்டும்!" என்று
அவர்கள் அன்புக் கட்டளை இட்டனர்.

இருவரும் எனது பழைய மாணவர்கள்.

"உங்களுக்காக special items எடுத்து வைப்போம்;
Food is no problem at all !" என்று உறுதி அளித்தனர்.

அந்த ஊருக்கு மதியம் passenger தான் போகும்.
அதில் reservation செய்யவும் முடியாது.

ஆடி அசைந்து ஏறினோம் - அதற்குள்
கால் வைக்க இடம் இல்லை அங்கே.

உட்காரவோ, நிற்கவோ, முடியாமல்
போனதால் ஊர் வரையில்
தொங்கிக் கொண்டு ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தால்...

ஃ புல் மேக் அப்பில், பட்டு சாரியில், நகை நட்டுக்களில்
மின்னிய பெண்கள் group போட்டோவுக்கு அழைக்கின்றனர்!

வேர்த்து விறுவிறுத்து அழுது வடியும் முகத்துடன் போட்டோ?
அதுவும் அந்த அப்சரஸ்களின் க்ரூப்புடன்?

முகம் கழுவி உடை மாற்றிய பின்பு கால்நடையிலிருந்து
உருமாறி வழக்கமான ராஜ நடையாக மாறினேன்

பெரிய விருந்து! எல்லாம் நான்வெஜ்!!
vegetable rice, raitaa, பாயசம் தவிர
வேறு எதையும் தொடமுடியவில்லை. :bolt:

வைட் ரைஸ் உடன் தயிர் கேட்டால்
வெங்காயத் தயிரைக் கொண்டு ஊற்றிப்
பிசைந்து உண்ணச் சொல்கிறார்கள். :shocked:

தொங்கிக் கொண்டு வந்தது போதாது??? :whoo:
வயிற்றிலும் வேறு அடிக்க வேண்டுமா??? :doh:

இந்த அழகில் "சாப்பாடு எப்படி?"
என்று கரிசனத்துடன் விசாரணை வேறு!

நல்ல கல்யாணம்! நல்ல விருந்து! :doh:

தம்பியின் திருமணத்துக்கு நாங்கள்
போகவில்லை. போகமுடியவும் இல்லை.

ஒரு வாரத்தில் இரு முறை தாங்காது
அந்த ரயில் பயணமும் இந்த விருந்தும்.
:scared:

 
இந்த ஐம்பது ரூபாய் எப்படி வந்தது?"​

#210.

அப்பா மெடிக்கல் கான்ஃபரன்சுக்குப் போகையில்
குழந்தைகள் எங்களையும் அழைத்துச் செல்வார். :grouphug:

வழிக்குத் தேவையான உணவு, நீர் எல்லாமே
அம்மா வீட்டிலேயே ரெடி பண்ணி விடுவார். :popcorn:

எங்காவது மரத்து நிழலில் நிறுத்துவார் அப்பா.
காரில் அமர்ந்து அங்கே சாப்பிட்டு விடுவோம். :hungry:

கார் கூல் ஆகும், அப்பாவுக்குச் சின்ன பிரேக்.
வயிறும் ரிப்பேர் ஆகாது! நல்ல யோஜனை தான்.

அன்று அம்மா காரில் இருந்து இறங்கிய போது
எங்கோ தவறவிட்டு விட்டார் ஓர் ஐம்பது ரூபாய்!

அது பவுன் ஐம்பது ரூபாய்க்கு விற்ற காலம்!!!

அம்மா எத்தனை தேடியும் கிடைக்கவில்லை.
காற்றுக்குப் பறந்து விட்டதா தெரியவில்லை.
அப்பாவுக்கு நேரம் ஆகிக் கொண்டிருந்து; :clock:

அம்மாவோ அதைக் கண்டு பிடிக்காமல்
காரில் ஏறப் போவதில்லை! அது நிச்சயம்.

அப்பா ஒரு சின்ன பிளான் செய்தார்.

தன் பர்சிலிருந்தே ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை
எடுத்துக் கீழே போட்டுவிட்டு, அதை மீண்டும் எடுத்து
அம்மாவிடம் தந்தபடிக் கூறினார் சிரிக்காமல்.

"இங்கேயே இருந்திருக்கு. யாருமே பார்க்கவில்லை!"

அதே சமயத்தில் அம்மாவின் கண்களில் பட்டு விட்டது
அவர்கள் தொலைத்த அதே ஐம்பது ரூபாய் நோட்டு!

"அப்போ இந்த ஐம்பது ரூபாய் எப்படி வந்தது?"​

அப்பா வகையாக மாட்டிக் கொண்டார் அம்மாவிடம்!

அந்த 'ஓ ஹென்றி திருப்ப'த்தினால்
எங்களுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. :becky:
எங்களைப் பார்த்து அவர்களும் சிரித்து விட்டார்கள். :laugh:​
 
# 205. கண்ணீர் அஞ்சலி.

காலனி செக்ரெட்டரி மாரடைப்பால்
இறந்து போனதும், அவருக்குப் போஸ்டர்ஸ்
ஒட்டினார்கள் "கண்ணீர் அஞ்சலி" என்று!

அதற்கு முன்பும் பார்த்துள்ளேன் - ஆனால்
அதைப் பற்றி சிந்தித்ததில்லை அதிகம்.

பிறகு வெளியில் செல்லும் போதெல்லாம்​
அது ஒரு பொழுது போக்கு ஆனது.

ஊர் பேர் தெரியாத தாத்தாக்கள், :crutch:
பல்லுப் போன பாட்டிகள் போட்டோக்கள்!!!​

ஒருநாள் கண்டேன் கழுதைக்குப் போஸ்டர். :doh:

"தரணியில் உன்னைப்போல
யாரும் இருந்ததில்லை!

நீ இல்லாத இந்த தரணியும்
ஒரு வாழத் தகுந்த தரணியா?"

கழுதைக்குக் கண்ணீர் அஞ்சலியா???

சொத்தையே pet animals களுக்கு :wof:
தத்தம் செய்யும் பெரிய மனிதர்களைப்
பற்றி படித்தும், கேட்டும் உள்ளேன்!

ஆனால் அவர்கள் எல்லோருமே
WESTERN COUNTRIES ஐச் சேர்ந்தவர்கள்.

தமிழ் நாட்டிலுமா இந்த புதிய மோகம் ?? :shocked:​

After reading the news item about a monkey held as a sex slave for several years, an unholy thought flashed on my mind.

If the world becomes empty and life becomes not worth living by the death of a mere donkey, then it must have been more than a mere donkey!

Was she just a Minnal RANi? :decision: or a Kannal RANi??? :hug:
 

Latest ads

Back
Top