த3ச’கம் 10 : ஸ்ருஷ்டி பே4த3 வர்ணனம்
ருத்3ராபி4 ஸ்ருஷ்ட ப4யதா3க்ருதி ருத்3ர ஸங்க
ஸம்பூர்யமாண பு4வனத்ரய பீ4த சேதா : |
மா மா ப்ரஜா:ஸ்ருஜ தபஸ் சர மங்க3லாயேதி
ஆசஷ்ட தம் கமலபூ4ர் ப4வதீ3ரிதாத்மா || (10 – 6)
ருத்திரனால் சிருஷ்டிக்கப்பட்ட பயங்கரமான ருத்திரகணங்களால் மூவுலகங்களும் நிறைந்து விட்டன அதைக் கண்டு பயந்த பிரமன், தங்களால் ஏவப்பட்டு,”இனிப் பிரஜைகளை சிருஷ்டிக்க வேண்டாம்.
உலக நன்மைக்காகத் தவம் புரிவாய்!” என்று ருத்திரனிடம் கூறினான்.
--------------------------------------------------------------------------------------------------------------------
தஸ்யாத2 ஸர்க3 ரஸிகஸ்ய மரீசி: அத்ரி:
தத்ராங்கி3ரா: க்ரது முனி: புலஹ: புலஸ்த்ய : |
அங்கா3த3 ஜாயதப்4ருகு3ச்’ச வஸிஷ்ட2 த3க்ஷௌ
ஸ்ரீ நாரத3ச்’ய ப4க3வான் ப4வத3ங்க்3ரி தா3ஸ: || (10 – 7)
ருத்திரன் தவம் செய்யச் சென்ற பிறகு சிருஷ்டியில் ஈடுபட்டிருந்த பிரமனின் சரீரத்திலிருந்து மரீசி, அத்ரி, அங்கிரஸ், க்ரது, புலஹர், புலஸ்த்தியர் , ப்ருகு, வசிஷ்டர் , தக்ஷர், தங்கள் பாதங்கின் மேல் பக்தி கொண்ட நாரதர் ஆகியோர் ஜனித்தார்கள். (10 – 7)
----------------------------------------------------------------------------------------------------------
த4ர்மாதி3கானபி4 ஸ்ருஜன்னத2 கர்த3மம் ச
வாணீம் விதா4ய விதி4ரங்க3ஜ ஸங்குலோபூ4த் |
த்வத்3 போ3தி4தை: ஸனக த3க்ஷ முகை2ஸ் தனூஜை:
உத்3போ3தி4தச்’ச விரராம தமோ விமுஞ்சன் || (10 – 8)
பிரமன் அதன் பிறகு தர்மதேவன், கர்த்தமன் முதலியோரைச் சிருஷ்டித்தான். சரஸ்வதி தேவியை சிருஷ்டித்ததும் அவள் மீது காம விகாரம் கொண்டான். சனகன், தக்ஷன் போன்றவர்களால் அந்த தவற்றை உணர்த்தப்பட்டு தன் அஞ்ஞானம் விலகப் பெற்றான்.
---------------------------------------------------------------------------------------------------------
வேதா3ன் புராண நிவஹானபி ஸர்வ வித்4யா:
குர்வன் நிஜானன க3ணாச் சதுரானனோs சௌ |
புத்ரேஷு தேஷு வினிதா4ய ஸ ஸர்க3 வ்ருத்3தி4ம்
ப்ராப்னுவம்ஸ்தவ பதா3ம்பு3ஜமாச்’ரிதோs பூ4த் || (10 – 9 )
பிரமன் தன் முகத்திலிருந்து வேதங்கள், புராணங்கள், பிற வித்தைகள் எல்லாவற்றையும் சிருஷ்டித்து அவற்றை அந்தப் புத்திரர்களுக்குக் கொடுத்தான். அப்போதும் சிருஷ்டி அபிவிருத்தியை அடையாததால் அவன் மீண்டும் தங்கள் பாதங்களைச் சரணடைந்தான்.
--------------------------------------------------------------------------------------------------------
ஜானன்னுபாயமத2 தே3ஹமஜோ விப4ஜ்ய
ஸ்த்ரீபும்ஸபா4வமப4ஜன் மனுதத்3 வதூ4ப்4யாம் |
தாப்4யம் ச மானுஷ குலானி விவர்த4யம்ஸ் த்வம்
கோ3விந்த3 மாருதபுராதீ4ப ருந்தி3 ரோகா3ன் || (10 -10)
அதன் பிறகு பிரமன் பிரஜைகளை உற்பத்தி செய்யும் உபாயத்தை அறிந்து கொண்டு தன் தேஹத்தையே இரண்டாகப் பிரித்தான். மனு, சதரூபை என்ற ஒரு புருஷனின், ஒரு ஸ்திரீயின் ரூபத்தை அடைந்தான். இவர்களைக் கொண்டு மனித இனத்தைப் பெருக்கினான். குருவாயூரில் இருக்கும் கோவிந்தா! தாங்கள் என் வியாதிகளை நீக்க வேண்டும். (10 – 10)
----------------------------------------------------------------------------------------------------------