• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
த3ச’கம் 17 : த்4ருவ சரித வர்ணனம்

உத்தான பாத3 ந்ருபதேர் மனு நந்த3னஸ்ய
ஜாயாப3பூ4வ ஸுருசிர் நிதராம பீ4ஷ்டா |
அன்யா ஸுநீதிரிதி ப4ர்துரனாத்3ருதா ஸா
த்வாமேவ நித்யமக3தி: ச’ரணம் க3தாsபூத் || (17 – 1)

ஸ்வயம்பு மனுவின் புதல்வன் உத்தானபாதனுக்கு சுருசி என்பவள் பிரியமான பத்தினி. சுநீதி என்ற இன்னொரு பத்தினி கணவன் ஆதரவைப் பெறவில்லை. ஆதரவற்ற அவள் தங்களையே சரணம் அடைந்திருந்தாள்.

-------------------------------------------------------------------------------------------------------

அங்கே பிது: ஸுருசி புத்ரக முத்தமம் தம் த்3ருஷ்ட்வா
த்4ருவ :கில ஸூநீதி ஸுதோsதி4ரோக்ஷ்யன் |
ஆசிக்ஷிபே கில சி’சு’ : ஸுதராம் ஸுரூச்யா
து : ஸந்த்யஜா க2லு ப4வத்3விமுகை2ரஸூயா || (17 – 2)

சுருசியின் மகன் உத்தமன் தன் தந்தைசியின் மடியில் அமர்ந்திருப்பதைக்கண்ட துருவன் தானும் மடி மேல் ஏறி அமர முயன்றான். அப்போது சுருசி அந்தக் குழந்தையைக் கடுஞ் சொற்களால் அதட்டினாள். உங்களிடம் மனதைச் செலுத்தாதவர்களால் பொறாமையைக் கைவிட முடியாது.

----------------------------------------------------------------------------------------------------------

த்வன் மோஹிதே பிதரி பச்’யதி தா3ரவச்’யே தூ3ரம்
து3ருக்தி நிஹத: ஸ கா3தோ நிஜாம்பா3ம் |
ஸாsபி ஸ்வகர்ம க3தி ஸ ந்த்தரணாய பும்ஸாம்
த்வத் பாத3மேவ ச’ரணம் சி’ச’வே ச’ச’ம்ஸ || (17 – 3)

தங்களால் மோஹவயப் படுத்தப்பட்ட துருவன், மனைவி சுருசியின் வசப்பட்ட தகப்பன் கண்முன்னரே கடுஞ் சொற்களால் புண்படுத்தப்பட்டான். தன் தாய் சுநீதியை நாடிச் சென்றான். துஷ்கர்ம பலன்கள் விலக உங்கள் திருவடிகளைப் பற்றிக் கொள்ளுமாறு சுநீதி துருவனிடம் கூறினாள்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆகர்ண்ய ஸோsபி பவத3ர்சனா நிச்’சிதாத்மா
மானீ நிரேத்ய நக3ராத் கில பஞ்ச வர்ஷ : |
ஸந்த்3ருஷ்ட நாரத3 நிவேதி3த மந்த்ர மார்க்க3 :
த்வாமாரராத4 தபஸா மது4 கானனாந்தே || (17 – 4)

ஐந்து வயது நிறைந்தவனும், ரோஷம் மிகுந்தவனும் ஆன அந்தத் துருவன், தாயின் உபதேசத்தைக் கேட்டுத் தங்களை ஆராதிக்க நிச்சயித்தான். பட்டணத்தை விட்டு வெளியேறி, வழியில் நாரதரிடம் மந்திர உபதேசம் பெற்று, மது வனத்தில் தங்களை ஆராதிக்கத் தொடங்கினான்.

----------------------------------------------------------------------------------------------------------

தாதோ விஷண்ண ஹ்ருத3யே நக3ரீம் க3தேன
ஸ்ரீ நாரதே3ன பரிஸாந்த்வித சித்த வ்ருத்தௌ |
பா3லஸ் த்வத3ர்பித மனா: க்ரம வர்த்3தி4தேன
நின்யே கடோ2ர தபஸா கில பஞ்ச மாஸான் || (17 – 5)

மனம் வருந்திய மன்னனை அவன் நகருக்குச் சென்ற நாரத முனிவர் தேற்றினார். துருவன் தங்களிடம் மனத்தை அர்ப்பணித்து விட்டுக் கிரமமாகக் கடின தவத்தை ஐந்து மாதங்கள் செய்தான்.

---------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 17 : த்4ருவ சரித வர்ணனம்

தாவத் தபோப3ல நிருச்ச்2வஸிதே தி3க3ந்தே
தே3வார்தி2தஸ் த்வமுத3யத் கருணார்த்3ரசேதா: |
த்வத்3 ரூப சித்3ரஸநிலீனமதே: புரஸ்தாத்
ஆவீர் ப3பூ4வித2 விபோ4 க3ருடா3தி4 ரூட4: ||(17 – 6)

பிரபோ! துருவனின் தபோபலத்தால் மூச்சுத் திணறிய தேவர்கள் பிரார்த்திக்க, பொங்கி எழும் கருணையால் கனிந்த மனத்துடன், தங்களின் ரூபமாகிய ஞானானந்தத்தில் லயித்திருந்த துருவன் முன்பு, கருடன் மேலமர்ந்து தாங்கள் காட்சி அளித்தீர்கள் அல்லவா?

-----------------------------------------------------------------------------------------------------

த்வத்3 த3ர்ச’ன ப்ரமத3பா4ர தரங்கி3தம் தம்
த்3ருக்3ப்4யாம் நிமக்3னமிவ ரூப ரசாயனே தே |
துஷ்டூஷமாணமவக3ம்ய கபோல தே3சே’
ஸம்ஸ்ப்ருஷ்டவானஸி த3ரேண ததா2ssத3ரேண || (17 – 8)

தங்களின் தரிசனத்தால் உண்டான ஆனந்தப் பெருக்கில் தன்னை மறந்து விட்டான் துருவன். தங்கள் ரூப அமிர்தம் அவன் கண்கள் வழியே பாய்ந்து அவனை மூழ்கடித்தது. அவன் தங்களைத் துதிக்க விரும்பியதை அறிந்து கொண்டு தங்கள் சங்கினால் அவன் கன்னத்தைத் தொட்டீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------------

தாவத்3 விபோ3த4 விமலம் ப்ரணுவந்தமேனம்
ஆபா4ஷதா2ஸ் த்வமவகம்ய ததீ3ய பா4வம் |
ராஜ்யம் சிரம் ஸமனுபூ4ய ப4ஜஸ்வ பூ4ய :
ஸர்வோத்தரம் த்4ருவ பத3ம் விநிவ்ருத்திஹீனம் || (17 – 8)

அப்போதே அஞ்ஞானம் நீங்கியதால், ஞானம் உதயமாகிப் பரிசுத்தம் அடைந்து, தங்களைத் துதித்தான் துருவன். “வெகு காலம் அரசாண்ட பிறகு மீண்டு வருதல் இல்லாத ஒரு மேலான பதவியை அடைவாய் “என்று துருவனை வாழ்த்தினீர்கள்.

------------------------------------------------------------------------------------------------------

இத்யூசுஷி த்வயி க3தே ந்ருப நந்த3னோsசௌ
ஆனந்தி3தாகி2ல ஜனோ நகரீமுபேத: |
ரேமே சிரம் ப4வத3னுக்ரஹ பூர்ண காம:
தாதே க3தே ச வனமாத்3ருத ராஜ்ய பா4ர: || (17 – 9 )

இவ்விதம் சொல்லி விட்டுத் தாங்கள் சென்ற பின்பு துருவன் மீண்டும் தன் நகரத்தை அடைந்தான். எல்லா மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் அனுகிரஹத்தால் எல்லா ஆசைகளும் பூர்த்தி ஆன அவன் தகப்பன் வனம் சென்றான். துருவன் அரசாட்சியை ஏற்றுக் கொண்டான்.

---------------------------------------------------------------------------------------------------------

யக்ஷேண தே3வ நிஹதே புனருத்தமேsஸ்மின்
யக்ஷை :ஸ யுத்3த4 நிரதோ விரதோ மனூக்த்யா |
சா’ந்த்யா ப்ரஸன்ன ஹ்ருத3யாத் த4ன தா33துபேதாத்
த்வத்3 பக்தி மேவ ஸு த்3ருடா4 மவ்ருணோன் மஹாத்மா || (17 – 10)

உத்தமன் ஒரு யக்ஷனால் கொல்லப்பட்ட போது துருவன் யக்ஷர்களுடன் போரில் இறங்கினான். பிறகு சுவாயம்பு மனுவின் வாக்கின்படி யுத்தத்தில் இருந்து நிவிருத்தி அடைந்தான். சந்தோஷமடைந்து தன் அருகில் வந்த குபேரனிடம் தங்களிடம் திடமான பக்தியையே ஒரு வரமாகத் தருமாறு வேண்டினான். (17 -10)

------------------------------------------------------------------------------------------------------

அந்தே ப4வத் புருஷ நீத விமான யாதோ
மத்ரா ஸமம் த்4ருவபதே3 முதி3தோsயமாஸ்தே |
ஏவம் ஸ்வப்4ருத்ய ஜனபாலான லோல தீ4ஸ்த்வம்
வாதாலயாதி4ப நிருந்தி4 மமாமயௌகா4ன் || (17 – 11)

தங்கள் தாசர்களால் கொண்டு வரப்பட்ட விமானத்தில் துருவன் தன் தாயுடன் ஏறித் துருவ மண்டலத்தை அடைந்தான். அங்கு ஆனந்தமாக இருக்கின்றான். குருவாயூரப்பா! தங்களுக்குப் பணி புரிவோரைக் காப்பாற்றுவதில் இளகிய மனம் உடைய தாங்கள் என் வியாதிக் கூட்டதைப் போக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 18 : ப்ருது2 சரித வர்ணனம்

ஜாதஸ்ய த்4ருவகுல ஏவ துங்க3கீர்த்தே:
அங்க3ஸ்ய வ்யஜனி ஸுத: ஸ வேன நாமா : |
தத்3தோ3ஷ வ்யதி2த மதி: ஸ ராஜவர்ய:
த்வத்பாதே3 விநிஹித மனா வனம் க3தோs பூத் || (18 – 1)

துருவனின் வம்சத்தில் பிறந்த மஹா கீர்த்திமானாகிய அங்க ராஜனுக்கு வேனன் என்னும் புத்திரன் பிறந்தான். அந்த வேனனுடைய கெட்ட நடத்தையால் மனம் நொந்த அங்க ராஜன், தங்கள் பாதங்களில் மனத்தைச் செலுத்திக் கானகம் சென்று விட்டான்.

----------------------------------------------------------------------------------------------------------

பாபோsபி க்ஷிதிதல பாலனாய வேன:
பௌராத்3யைருபநிஹித கடோ2ர வீர்ய : |
ஸர்வேப்4யோ நிஜப3லமேவ ஸம்ப்ரச’ம்ஸன்
பூ4சக்ரே தவ யஜனான்யயம் ந்யௌரௌத்ஸீ த் || (18 – 2)

கடுமையான வீர்யம் படைத்த வேனன் கொடியவனாக இருந்த போதிலும், மக்களையும் நாட்டையும் ரக்ஷிப்பதற்காகப் பட்டம் சூட்டப்பட்டான் அவன் தன் பலத்தையே பெருமையாகக் காட்டிக் கொண்டான். தங்களின் யாக, யக்ஞங்களைத் தடுத்து விட்டான்.

----------------------------------------------------------------------------------------------------------

ஸம்ப்ராப்தே ஹிதக2தனாய தாபசௌகே4
மத்தோsன்யோ பு4வனபதிர் ந கச்’சநேதி |
தாவன்நிந்தா3 வசனபரோ முனீஸ்வரைஸ்தை :
சா’பக்3னௌ ச’லப4த3சா’மனாயி வேன || (18 – 3)

தபஸ்விகளின் கூட்டம் அவனிடம் வந்து நன்மையை உபதேசித்த போது “என்னைத் தவிர உலகில் வேறு ஈஸ்வரன் எவரும் இல்லை!” என்று கூறித் தங்களை நிந்தித்தான். அந்த முனிகள் சினந்து இட்ட சாபத்தில் விட்டில் பூச்சி போல எரிந்து போனான்.

---------------------------------------------------------------------------------------------------------

தன் நாசா’த் க2லஜனபீ4ருகை: முனீந்த்ரை:
தன் மாத்ரா சிரபரி ரக்ஷிதே தத3ங்கே3 |
த்யக்தாகே4 பரிமதி2தாத3தோ2ரு த3ண்டா3த்
தோ3ர் த3ண்டே3 பரிமதி2தே த்வமாவிராஸீ : || (18 – 4)

அந்த வேனின் இறந்த பிறகு அவன் தாய் சுநீதை காப்பாற்றி வைத்திருந்த வேனனின் தண்டம் போன்ற தொடையைக் கடைந்தனர் முனிவர்கள். பாவம் விலகிய அந்தத் தொடையிலிருந்து தாங்கள் ஆவிர்பவித்தீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------------

விக்2யாத: ப்ருது2ரிதி தாபஸோபதி3ஷ்டை:
ஸூதாத்3யை: பரிணுத பா4விபூ4ரிவீர்ய |
வேனார்த்யா கப3லிதஸம்பத3ம் த4ரித்ரீம்
ஆக்ராந்தாம் நிஜத4னுஷா ஸமாமகார்ஷீ: ||(18 – 5)

பிருது என்று பிரசித்தி பெற்ற தாங்கள் எதிர் காலத்தில் செய்யவிருக்கும் வீரச் செயல்களைத் தபஸ்விகள் எடுத்துக் கூறினார்கள். வேனனின் உபத்திரவத்துக்கு அஞ்சி மூலிகைகளையும் பிற சம்பத்துக்களையும் ஒளித்து வைத்துவிட்ட பூமியைத் தாங்கள் தங்களுடைய வில்லினாலேயே சமப்படுத்தி விட்டீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 18 ( 6 to 10)

த3ச’கம் 18 : ப்ருது2 சரித வர்ணனம்

பூ4யஸ்தாம் நிஜகுல முக்2யவத்ஸ யுக்தை:
தே3வாத்3யௌ: ஸமுசித சாரு பா4ஜனேஷு |
அன்னாதீ3ன்யபி4லஷிதானி யானி தானி
ஸ்வச்ச2ந்தம் ஸுரபி4தனூ மதூ3து3ஹஸ்த்வம் || (18 – 6 )

பிறகு காமதேனுவின் ரூபமுடைய பூமியிலிருந்து, வம்சத் தலைவர்களாகிய கன்றுகள் தேவர்கள் உதவியுடன், அழகான பாத்திரங்களில் அவரவர்களுக்குப் பிரியமானவற்றை எல்லாம் கறக்கச் செய்தீர்கள்.

------------------------------------------------------------------------------------------------------

ஆத்மானம் யஜதி மகை2ஸ்த்வயி த்ரிதா4மன்
நாரப்3தே4 ஸததமவாஜி மேக4யாகே3 |
ஸ்பர்தா4லு ச’தமக2 ஏத்ய வேஷோ
ஹ்ருத்வாSச்’வம் தவ தனயாத் பராஜிதோS பூ4த் || (18 – 7)

மும்மூர்த்திகளாகிய விஷ்ணுவே ! தாங்கள் யாகங்கள் புரிந்து தங்களையே பூஜித்து வந்தீர்கள். நூறாவது அச்வமேத யாகத்தைத் தொடங்கியவுடன் பொறாமை கொண்ட இந்திரன் நீச வேஷத்தில் வந்து யாகக் குதிரையை அபகரித்துக் கொண்டு போனான். பிறகு தங்கள் புத்திரனாகிய விஜிதாஸ்வனிடன் தோல்வி அடைந்தான்.

----------------------------------------------------------------------------------------------------

தே3வேந்த்3ரம் முஹிரிதி வாஜினம் ஹரந்த்ம்
வஹ்நௌ தம் முனிவர மண்ட3லே ஜுஹூஷௌ |
ருந்தா4னே கமலப4வே க்ரதோ ஸமாப்தௌ
ஸாக்ஷாத் த்வம் மது4ரிபு மைக்ஷதா ஸ்வயம் ஸ்வம் || (18 – 8 )

இப்படி அடிக்கடி குதிரையை அபஹரிக்கும் அந்த தேவேந்திரனை முனிவர்கள் அக்கினியில் ஹோமம் செய்ய விரும்பியபோது பிரம்மன் வந்து அதைத் தடுக்க, யாகத்தின் முடிவில் தாங்கள் மகாவிஷ்ணுவைப் பிரத்தியக்ஷமாக தரிசித்தீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------

தத் த3த்தம் வரமுபலப்4ய ப4க்திமேகாம்
க3ங்கா3ந்தே விஹித பத3: கதா3பி தேவ |
ஸத்ரஸ்த2ம் முனி நிவஹம் ஹிதானி ச’ம்ஸன்
ஐக்ஷிஷ்டா: ஸனக முகா2ன் முனீன் புரஸ்தாத் || (18 – 9)

பக்தி ஒன்றையே அவரிடம் வரமாகப் பெற்றுக் கொண்டீர்கள். கங்கா தீரத்தில் வசித்துக் கொண்டு சரத் யாகத்திலிருந்த முனிவர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருக்கையில் சனகர் முதலிய முனிவர்களை நேரில் கண்டீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------------

விஞ்ஞானம் ஸனக முகோ2தி3தம் த3தா4ன :
ஸ்வாத்மானம் ஸ்வயமக3மோ வனாந்த ஸேவீ |
தத்தாத்3ருக் ப்ருது2 வபுரீச’ ஸத்வரம் மே
ரோகௌ3க4ம் ப்ரச’ம்ய வாதகே3ஹவாஸின் || (18 – 10)

சனகாதிகளால் உபதேசிக்கப்பட்ட ஆத்ம ஞானத்தை நன்கு அறிந்து கொண்டீர். தபோ வனத்துக்குச் சென்று தாமாகவே ஸ்வரூபத்தை அடைந்தீர். குருவாயூரில் வாழும் ஈசா! பிருதுச் சக்கரவர்த்தியின் ஸ்வரூபத்தோடு கூடிய தாங்கள் என் வியாதிகளை விரைவாகத் தணிக்க வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------------
 
A word to those who may wish to get

Sriman Naaraayaneeyam ALSO translated into English:

Please buy one of the Many printed books available and read it thoroughly!

I took the pain of translating all my original Tamil poems

since no printed version is available for those poems.

I still consider my original poems as the main product

and their English translation as the by product.

Last edited:
த3ச’கம் 19 : த3க்ஷோத்பத்தி வர்ணனம்

ப்ருதோ2ஸ்து நப்தா ப்ருது2 த4ர்ம கர்மட2 :
ப்ராசீன ப3ர்ஹிர் யுவதௌ ச’த த்3ருதௌ |
ப்ரசேதஸோ நாம ஸுசேதஸ : ஸுதான்
அஜீஜனத் த்வத் கருணாங்குரானிவ || (19 – 1)

பிருது சக்கரவர்த்தியின் பௌத்திரனின் புத்திரனும், பிருதுவைப் போலவே தர்மங்களை உடையவனும், கர்மடனும் ஆன பிராசீன பர்ஹிஸ் என்பவன் சதத்ருதி என்ற யுவதியிடம் தங்கள் கருணையால் நல்ல புத்தி படைத்த பிரசேதஸ்கள் என்னும் புத்திரர்களைப் பெற்றார்.

----------------------------------------------------------------------------------------------------------

பிது: ஸிஸ்ருக்ஷா நிரதஸ்ய சா’ஸனாத்3
ப4வத் தபஸ்யா நிரதா த3சா’பிதே |
பயோநிதி4ம் பச்’சிம மேத்ய தத்தடே
ஸரோவரம் ஸந்த3த்3ருஷுர் மனோஹரம் || (19 – 2)

சிருஷ்டி செய்வதில் ஈடுபட்ட தகப்பனின் கட்டளையால், உங்களை உத்தேசித்து தவம் புரிவதில் ஈடுபட்ட அந்தப் பத்து பேர்களும், மேற்கு சமுத்திரத்தை அடைந்து, அதன் தீரத்தில் ஒரு மனோஹரமான தாடாகத்தைக் கண்டனர்.

--------------------------------------------------------------------------------------------------------

ததா3 ப4வத் தீர்த்த2 மித3ம் ஸமாக3தோ
ப4வோ ப4வத் ஸேவக த3ர்ச’னாத்3ருத: |
ப்ரகாச’மாஸாத்3ய புர :ப்ரசேதஸாம்
உபாதி3ஷத்3 ப4க்த தமஸ்தவ ஸ்தவம் || (19 – 3 )

அப்போது உங்கள் தீர்த்தமாகிய அந்தத் தடாகத்துக்குத் தங்கள் பக்தர்களில் சிறந்தவரான ஸ்ரீ ருத்திரர் வந்தார். தங்கள் பக்தர்களைத் தரிசிக்கும் ஆவலுடன் அவர் பிரசேதஸ்கள் முன்பு தோன்றினர். தங்கள் ஸ்தோத்திரத்தை அவர்களுக்கு உபதேசித்தார்.

----------------------------------------------------------------------------------------------------------

ஸ்தவம் ஜபன்தஸ்தமமீ ஜலாந்தரே
ப4வந்த மாஸேவிஷதாயுதம் ஸமா : |
ப4வத் ஸுகா2 ஸ்வாத3 ரஸாத3மீஷ்வியான்
ப3பூ4வ காலோ த்4ருவவன்ன சீ’க்3ரதா || (19 – 4 )

பிரசேதஸ்கள் அந்த ஸ்தோத்திரத்தை ஜபம் செய்து கொண்டு, ஜலத்தின் மத்தியில் பதினாயிரம் வருஷங்கள் இருந்தார்கள். இவர்களுக்கு பிரம்மானந்தத்தை அனுபவிக்கும் ருசியினால், துருவனைப் போல சீக்கிரம் சித்தி அடைய வேண்டும் என்ற ஆவல் இருக்கவில்லை.

------------------------------------------------------------------------------------------------------------

தபோபி4ரேஷா மதி மாத்ர வர்த்தி4பி4 :
ஸயக்ஞ ஹிம்ஸா நிரதோsபி பாவித: |
பிதாsபி தேஷாம் க்3ருஹயாத நாரத3
ப்ரத3ர்சி’தாத்மா ப4வதா3த்மதாம் யயௌ || (19 – 5 )

இந்த பிரசேதஸ்களின் அதிகமாக வளர்ந்த தவத்தால், யாகங்களை நாசம் செய்வதில் ஈடுபட்டிருந்த அவர்களுடைய முன்னோனாகிய வேனன் பரிசுத்தம் அடைந்தான். அவர்கள் தந்தையாகிய பிராசீன பர்ஹிஸ் தன் வீட்டுக்கு வந்த நாரதரிடம் ஆத்ம ஞானம், பெற்று உமது சாயுஜ்யத்தை அடைந்தான்.

---------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 19 : த3க்ஷோத்பத்தி வர்ணனம்

க்ருபா ப3லேனைவ புர: ப்ரசேதஸாம்
ப்ரகாச’ மாகா3: பதகே3ந்த்3ர வாஹன: |
விராஜி சக்ராதி3 வராயுதா4ம்சு’பி4:
பு4ஜாபி4ரஷ்டா பி4ருத3ஞ்சித த்3யுதி: || (19 – 6 )

கருடனை வாகனமாகக் கொண்ட தாங்கள், பிரகாசிக்கும் ஆயுதங்களின் ஒளி எட்டு புஜங்களிலும் பட்டுப் பரவும் காந்தியுடனும் , கருணையுடனும், பிரசேதஸ்களின் முன்பு பிரத்தியக்ஷம் ஆனீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

ப்ரசேதஸாம் தாவத3யாசதாமபி
த்வமேவ காருண்ய ப4ராத்3 வரானதா3: |
ப4வத்3 விசிந்தாsபி சிவாய தே3ஹினாம்
ப4வத்வசௌ ருத்3ர நுதிச்’ச காமதா3 || (19 – 7 )

பிரசேதஸ்கள் எந்த வரத்தையும் வேண்டாத போதிலும் தாங்களே கருணை மிகுதியால் அவர்களுக்கு வரங்களை அளித்தீர்கள். உங்கள் நினைவே உடல் படைத்தவர்களுக்கு க்ஷேமத்தைத் தரும். ருத்திரனால் உபதேசிக்கப்பட்ட இந்த ஸ்துதியும் பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பதாக ஆகட்டும்.

------------------------------------------------------------------------------------------------------------------

அவாப்ய காந்தாம் தனயாம் மஹீருஹாம்
தயா ரமத்4வம் த3ச’ லக்ஷவத்ஸரீம் |
ஸுதோsஸ்து த3க்ஷோ நுனு தத்க்ஷணாத் மாம்
ப்ரயாஸ்யதே2தி ந்யக3தோ முதை3வ தான் || (19 – 8)

“மரங்களின் பெண்ணை மனைவியாக அடைந்து அவளுடன் பத்து லக்ஷம் வருஷங்கள் சுகம் அனுபவியுங்கள். பிரசேதஸ்களே! தக்ஷன் என்னும் புத்திரன் உண்டாகட்டும். அந்த க்ஷணத்திலேயே என்னை வந்தடைவீர்!” என்று அவர்களுக்குச் சொன்னீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

ததச்ச தே பூ4தல ரோதி4னஸ் தரூன் க்ருதா4
த3ஹந்தோ த்3ருஹிணேவ வாரிதா : |
த்3ருமைச்’ச த3த்தாம் தனயாமவாப்ய தாம்
த்வது3க்த காலம் ஸுகி2னோs பி4ரேமிரே || (19 – 9 )

அதன் பின் பூமியை மறைக்கின்ற தருக்களைக் கோபத்துடன் எரித்தார்கள். பிறகு பிரம்மனால் தடுக்கப்பட்டார்கள். மரங்கள் தந்த பெண்ணை மணந்து கொண்டு தாங்கள் கூறிய காலம் வரை பிரசேதஸ்கள் இன்பமாக வாழ்ந்தார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

அவாப்ய த3க்ஷம் ச ஸுதம் க்ருதாத்4வரா:
ப்ரசேதஸோ நாரத3 லப்3த4யா தி4யா |
அவாபுரானந்த3 பத3ம் ததா2வித4ஸ்
த்வமீச’ வாதாலய நாத2 பாஹிமாம் || (19 – 10)

அந்த பிரசேதஸ்கள் தக்ஷனைப் புத்திரனாக அடைந்தார்கள். யாகங்களிச் செய்து, நாரதனிடமிருந்து பெற்ற ஞானத்தால் ஆனந்தமயமாகிய பரப் பிரம்மத்தை அடைந்தார்கள். அப்படிப்பட்ட குருவாயூரப்பா என்னைக் காப்பாற்ற வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------
 
Visalam Madam

The following are the names of some chapters in SRUMAN NARAYANEEYAM that I found in Times Music "SRUMAN NARAYANEEYAM" Album that I would be buying the same to start my Narayaneeyam chanting ,I would like to know their Dasakam Numbers as only the chapters names are mentioned :

Dhyanam
Bhagavadswaroopam & Mahat...
Dhruva Charitham
AjamilaMoksha
Prahalada Charitham
Balidarpa Samnam
Ramayana Hanuman Samagama
Krishnavataram
Kaleeya Mardanam
Govindabhishekam
Rasakreeda
Veda Stuti
Kesadi Padavarnanam

Hoping for your reply .

Dear Mr. krishna,
I got a more recent version of Sreeman Naaraayaneeym (only the moolam).
Bhagavadswaroopam & Mahatvam is the first dasakam
Veda Stuti is the 99th dasakam ( as rightly guessed by me)
I have already given the dasakam numbers for the others.
Happy reading! :)
 
த3ச’கம் 20 : ருஷப4 யோகீ3ச்வர சரித வர்ணனம்

ப்ரிய வ்ரதஸ்ய ப்ரிய புத்ர பூ4தாத்
ஆக்3னீத்4ர ராஜாது3தி3தோ ஹி நாபி4 : |
த்வாம் த்3ருஷ்ட்வா நிஷ்ட த3மிஷ்டி மத்4யே
தவைவ துஷ்ட்யை க்ருத யக்ஞ கர்மா || (21 – 1)

பிரியவிரதனியன் பிரிய புத்திரனான ஆக்னீத்திர ராஜனின் மகன் நாபி ராஜன். அவன் உங்கள் ப்ரீத்திக்காகவே யக்ஞம் செய்தான். யாகத்தின் நடுவில் அபீஷ்டங்களை அளிக்கும் தங்களைத் தரிசித்தான்.

----------------------------------------------------------------------------------------------------------------

அபி4ஷ்டு தஸ் தத்ர முனீச்’வ ரைஸ்த்வம்
ராக்ஞ: ஸ்வதுல்யம் ஸுத மர்த்2ய மான : |
ஸ்வயம் ஜனிஷ்யேsஹமிதி ப்3ருவாண:
திரோsத3தா4 ப3ர்ஹிஷி விச்’வமூர்த்தே || (20 – 2)

விஸ்வரூபியாகிய ஈசனே! யாகத்தில் முனிவர்கள் தங்களை நன்கு துதித்தனர். “தங்களைப் போல ஒரு பிள்ளை பிறக்க வேண்டும்!” என்று வேண்டிக் கொண்ட போது “நானே வந்து பிறக்கிறேன்!” என்று கூறி விட்டு அக்கினில் மறைந்து விட்டீர்கள் நீங்கள்.

------------------------------------------------------------------------------------------------------

நாபி4 ப்ரியாயாமத2 மேரு தே3வ்யாம்
த்வமம்ச’தோsபூ4ர் ருஷபா4பி4 தா4ன: |
அலோக்ய ஸாமான்ய கு3ண ப்ரபா4வ
ப்ரபா4விதா சே’ஷ ஜனப்ரமோத3 : || (20 – 3)

அதன் பிறகு நாபிச் சக்கரவர்த்தியின் பத்தினியாகிய மேரு தேவியிடம், உலகில் எங்கும் காண முடியாத உயர்ந்த குணங்களுடனும், மகிமைகளுடனும், எல்லோருக்கும் ஆனந்தத்தை வளர்ப்பவராக ரிஷபன் என்ற பெயருடன் அவதரித்தீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------

த்வயி த்ரிலோகி ப்4ருதி ராஜ்ய பா4ரம்
நிதா4ய நாபி4: ஸஹ மேரு தே3வ்யா |
தபோவனம் ப்ராப்ய ப4வன்நிஷேவீ
க3த: கிலானந்த3 பத3ம் பத3ம் தே || (20 – 4 )

நாபி ரராஜன், மூன்று உலகங்களையும் தாங்குகின்ற தங்களிடம் ராஜ்ஜிய பாரத்தை ஒப்படைத்தான் . மேரு தேவியுடன் சென்று தபோவனத்தை அடைந்தான். தங்களைச் சேவித்து மனைவியுடன், ஆனந்தத்ததுக்கு இருப்பிடமாகிய தங்கள் வைகுந்ததைச் சென்று அடைந்தான்.

------------------------------------------------------------------------------------------------------

இந்தர3ஸ் த்வது3த் கர்ண க்ருதாத3 மர்ஷாத்3
வவர்ஷ நாஸ்மின் நஜனாப4வர்ஷே |
யதா3 ததா3 த்வம் நிஜயோக3 ச’க்த்யா
ஸ்வவர்ஷ மேனத்3 வ்யாத3தா4: ஸுவர்ஷம் || (20 – 5 )

இந்திரன் தங்கள் புகழைக் கண்டு பொறாமை கொண்டான். அதனால் அந்த அஜநாப வர்ஷத்தில் மழை பெய்யவே இல்லை. அப்போது தாங்கள், தங்களின் மேலான யோகபலத்தினால் பூகண்டத்தில் நல்ல மழையைப் பொழியச் செய்தீர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 20 :ருஷப4 யோகீ3ச்வர சரித வர்ணனம்

ஜிதேந்த்3ர த3த்தாம் கமனீம் ஜெயந்தீம்
அதோத்3 வஹன் நாத்மரதாச’யோsபி |
அஜீஜனஸ் தத்ர ச’தம் தநூஜானேஷாம்
க்ஷிதீசோ’ பாரதோsக்3ர ஜன்மா || (20 – 6 )

ஆத்மா ராமனாக இருந்த போதிலும் ஜயிக்கப்பட்ட இந்திரன் தந்த ஜயந்தி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவளிடம் நூறு பிள்ளைகளை அடைந்தீர்கள். அவர்களுள் மூத்தவனான பரதன் என்பவன் அரசன் ஆனான்.

---------------------------------------------------------------------------------------------------------

நவாப4வன் யோகி3வரா நவான்யே
த்வபாலயன் பா4ரத வர்ஷ க2ண்டான் |
சைகாத்வசீ’திஸ்தவ சேஷ புத்ரா :
தபோப3லாத்3 பூ4ஸுர பூ4யமீயு : || (20 – 7 )

அவர்களில் ஒன்பது பேர் யோகீஸ்வரர்கள் ஆனார்கள். வேறு ஒன்பது பேர் பாரத வர்ஷத்தின் ஒன்பது கண்டங்களை ஆண்டு வந்தனர். மற்ற எண்பத்தொரு பிள்ளைகளும் தபோபலத்தினால் பிராமணப் பதவியை அடைந்தார்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

உக்த்வா ஸுதேப்4யோsத முநீந்த்3ர மத்4யே
விரக்தி ப4க்த்யன்வித முக்தி மார்க்கம் |
ஸ்வயம் க3த:பாரமஹம்ஸ வ்ருத்தி மதா4
ஜடோ3ன் மத்த பிசா’சசர்யாம் || (20 – 8 )

முனி புங்கவர்களின் மத்தியில் பிள்ளைகளுக்கு வைராக்கியம், பக்தி இவற்றுடன் கூடிய மோக்ஷ மார்க்கத்தை உபதேசித்தீர்கள். தாங்களும் பரம ஹம்சர்களின் மார்க்கத்தை ஆஸ்ரயித்துக்கொண்டு ஒரு ஜடன் , ஒரு பித்தன், ஒரு பேயன் என்று சொல்வதற்கேற்ப நடந்து கொண்டீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

பராத்மபூ4தோsபி பரோபதே3ச’ம் குர்வன்
ப4வான் ஸர்வ நிரஸ்ய மான : |
விகார ஹீனோ விசசார க்ருத்ஸ்னாம்
மஹீமஹீனாத்ம ரஸாபி4லீன : || (20 – 9 )

தாங்கள் பரமாத்வாக ஆனபோதிலும், பிறருக்கு ஞானோபதேசம் செய்து கொண்டும், பிறரால் இகழப்பட்டபோதிலும் எந்த ஒரு விகாரமும் அடையாமலும், பரிபூர்ண பிரம்மானந்தத்தில் மூழ்கியவராக பூமி முழுவது சஞ்சாரம் செய்தீர்கள்.

---------------------------------------------------------------------------------------------------------

ச’யு வ்ரதம் கோ3ம்ருக3 காகசர்யாம்
சிரம் சரன்னாப்ய பரம் ஸ்வரூபம் |
த3வாஹ்ருதாங்க குடகாசலே த்வம்
தாபான் மமாபாகுரு வாதநாத2 || (20 – 10)

மலைப் பாம்பைப் போல இரை தேடாமல் இருப்பதையும்; பசு, மிருகம், காக்கை இவைகளுடைய வாழ்க்கை முறைகளையும்அனுஷ்டித்தீர்கள். பரமாத்மா ஸ்வரூபத்தை அடைந்த தங்களின் சரீரம் குடகு மலையில் காட்டுத் தீயால் கொளுத்தப்பட்டது. அப்படிப்பட்ட தாங்கள் என் தாபங்களைப் போக்க வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 21 : ஜம்பூ3 த்3வீபாதி3ஷு ப4க3வது3பாஸனா ப்ரகார வர்ணனம்

மத்4யோத்3ப4வோ பு4வ இலாவ்ருத நாம்னி வர்ஷே
கௌ3ரீ ப்ரதா4ன வனிதாஜன மாத்ரபா4ஜி |
ச’ர்வேண மந்த்ர நுதிபி : ஸமுபாஸ்ய மானம்
ஸங்கர்ஷணாத்மக மதீச்’வர ஸம்ச்’ரயே த்வாம் || (21 – 1)

அனைத்துக்கும் ஈஸ்வரனே! பூமியின் மத்தியில் இருக்கின்ற, பார்வதியைப் பிரதானமாகக் கொண்ட பெண்கள் மட்டும் வசிக்கும் இடம் இலாவிருதம் என்ற பூகண்டம். அங்கே பரமேஸ்வரனால் மந்திரங்களாலும், தோத்திரங்களாலும் உபாசிக்கப் படுகின்ற சங்கர்ஷண ரூபியாகிய தாங்களை வணங்குகிறேன்.

------------------------------------------------------------------------------------------------------

ப4த்3ராச்’வ நாமக இலாவ்ருத பூர்வ வர்ஷே
ப4த்3ரச்’ரவோ பிர் ருஷிபி4: பரிணூய மாணம் |
கல்பாந்த கூ3ட4 நிக3மோத்3த4ரண ப்ரவீணம்
த்4யாயமி தே3வ ஹயசீ’ர்ஷ தனும் ப4வந்தம் || (21 – 2)

தேவா! பத்ராச்ரவம் என்ற பெயர் கொண்ட, இலாவிருதத்தின் கிழக்கே உள்ள பூகண்டதில், பத்ரச்ரவஸ்ஸுக்கள் என்னும் ரிஷிகளால் தொழப்படுகின்றவரும், பிரளய காலத்தில் மறைந்த வேதங்களை வெளிக் கொண்டு வருவதில் சமர்த்தரும் ஆகிய ஹயக்ரீவனின் ரூபத்தில் தங்களை தியானிக்கின்றேன்.

-------------------------------------------------------------------------------------------------------

த்4யாயாமி த3க்ஷிணக3தே ஹரிவர்ஷ வர்ஷே
ப்ரஹ்லாத3 முக்2ய புருஷை: பரிஷேவ்யமாணம் |
உத்துங்க3 சா’ந்த த4வளாக்ருதிமேகசுத்3த4
ஞானப்ரத3ம் நரஹரிம் ப4க3வன் ப4வந்தம் || (21 – 3)

பகவன் ! இலாவிருதத்திற்குத் தெற்கில் இருக்கின்ற ஹரிவர்ஷம் என்ற பூகண்டத்தில், பிரஹ்லாதன் முதலியோரால் சேவிக்கப்படுபவரும்; உயர்ந்த அத்வைத ஞானத்தைக் கொடுப்பவரும்; உயர்ந்த, வெண்மையான, சாந்த வடிவம் கொண்டவரும்: ஆகிய நரசிம்ஹமூர்த்தி ரூபியைத் தியானிக்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------

வர்ஷே ப்ரதீசி லலிதாத்மனி கேதுமாலே
லீலாவிசேஷ லலித ஸ்மித சோ’ப4னாங்க3ம் |
லக்ஷ்ம்யா ப்ரஜாபதி ஸுதைச்’ச நிஷேவ்ய மாணம்
தஸ்யா: ப்ரியாய த்3ருத காமதனும் ப4ஜே த்வாம் || (21 – 4)

இலாவிருதத்திற்கு மேற்கில் இருப்பதும், மிக அழகியதும் ஆகிய கேதுமாலம் என்னும் பூகண்டத்தில்; லீலா விசேஷங்களாலும், புன்முறுவலாலும் சோபிக்கும் அவயவங்களை உடையவரும், லக்ஷ்மி தேவியாலும், பிராஜப்தியின் புத்திரர்களாலும் சேவிக்கப் படுபவரும், லக்ஷ்மியின் விருப்பத்திற்காக மன்மதசரீரம் தரித்தவரும் ஆகிய தங்களை வணங்குகிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------

ரம்யேsப்யுதீ3சி க3லு ரம்யக நாம்னி வர்ஷே
தத்3வர்ஷநாத2 மனுவர்ய ஸபர்யா மாணம் |
ப4க்தைக வத்ஸல மமத்ஸர ஹ்ருத்ஸு பா4ந்தம்
மத்ஸ்யாக்ருதிம் பு4வன நாத2 ப4ஜே ப4வந்தம் || (21 – 5)

லோக நாதா ! இலா விருத்தத்திற்கு வடக்கில் இருக்கின்ற இரம்யகம் என்னும் பூகண்டத்தில், வைவஸ்வத மனுவால் ஆராதிக்கப்படுகின்றவரும், பக்தர்களிடம் வாத்சல்யம் கொண்டவரும், பொறாமையை ஒழித்துவிட்ட யோகியர்களின் உள்ளத்தில் பிரகாசிப்பவருமான தங்களை மத்ஸ்ய ரூபத்தில் நான் சேவிக்கின்றேன்.

----------------------------------------------------------------------------------------------------------

வர்ஷம் ஹிரண்மய ஸமாஹ்வய மௌத்த ராஹம்
ஆஸீனமாத்3ரி த்4ருதி கர்மட2 காமடா3ங்க3ம் |
ஸம்ஸேவதே பித்ரு க3ண ப்ரவரோsர்யா மாsயம்
தம் த்வாம் ப4ஜாமி ப4கவன் பரிசின்மயாத்மன்|| (21 – 6 )

சத் சித் ரூபியே! இலாவிருதத்திற்கும், இரம்யகத்துக்கும் வடக்கில் இருக்கும் ஹிரண்மயம் என்னும் பூகண்டத்தில்; மந்தர மலையைத் தாங்கும் சக்தி படைத்த ஆமை வடிவம் கொண்ட தங்களை; பித்ரு கணங்களின் பதியாகிய அர்யமா என்பவர் சேவிக்கின்றார். நானும் சேவிக்கின்றேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 21 : ஜம்பூ3 த்3வீபாதி3ஷு ப4க3வது3பாஸனா ப்ரகார வர்ணனம்

கிஞ்சோத்தரேஷு குருஷு ப்ரியா த4ரண்யா
ஸம்ஸேவிதோ மஹித மந்த்ர நுதி ப்ரபே4தை3: |
த3ம்ஷ்ட்ராக்3ர க்4ருஷ்ட2 க4னப்ருஷ்ட2 க3ரிஷ்ட2 வர்ஷ்மா
தவம் பாஹி விக்ஞநுத யக்ஞவராஹ மூர்த்தே || (21 – 7)

ஞானிகள் துதிக்கும் யக்ஞவராஹமூர்த்தியே! உத்தரகுரு என்ற பூகண்டதில், தங்கள் பத்தினியாகிய பூதேவியால் மஹா மந்திரங்களாலும், தோத்திரங்களாலும் துதிக்கப்பட்டவரும், மேகங்களின் அடியைத் தெற்றுப் பற்களின் நுனியினால் தொடுமளவுக்கு உயர்ந்த கனமான சரீரத்தை உடையவரும், ஆகிய தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------

யாம்யாம் தி3ச’ம் ப4ஜதி கிம்புருஷாக்2யவர்ஷே
ஸம்ஸேவிதோ ஹனுமதா த்3ருட4 ப4க்தி பாஜா |
ஸீதாபி4ராம பரமாத்3பு4த ரூப சா’லி ராமாத்மாக:
பரிலஸன் பரிபாஹி விஷ்ணோ || (21 – 8)

எங்கும் நிறைந்துள்ள விஷ்ணோ! இலாவிருதத்திற்கும், ஹரிவர்ஷத்திற்கும் தெற்கில் இருக்கின்ற கிம்புருஷம் என்னும் பூகண்டத்தில், திடமான பக்தியுள்ள ஹனுமானால் நன்றாக சேவிக்கப்பட்டவராகவும் சீதா தேவிக்குப் பிரியாமான அற்புத வடிவை உடைய ஸ்ரீ ராமனாகவும் விளங்கும் தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீ நாரதே3ன ஸஹ பா4ரத க2ண்ட3 முக்2யை:
த்வம் ஸாங்க்2ய யோக3 நுதிபி4 : ஸமுபாஸ்யமான: |
ஆகல்ப கால மிஹ ஸாது4ஜனாபி4ரக்ஷீ
நாராயணோ நரஸ்ஸக2: பரிபாஹி பூ4மன் || (21 – 9 )

பரிபூர்ண ஸ்வரூபியே! பாரத கண்டத்தில் நாரத முனிவரும், பக்தர்களும் கூடித் தங்களை ஞானத்தாலும், யோகத்தாலும், தோத்திரங்களாலும் உபாசிக்கின்றனர். பிரளயகாலம் வரையில் சாது ஜனங்களைக் காப்பாற்றும் நர, நாராயாண ரூபியாகிய தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------

ப்ளாக்ஷேsர்க்க ரூபமயி சா’ல்மல இந்து3ரூபம்
த்3வீபே ப4ஜந்தி குச’நாம்னி வஹ்நிரூபம் |
க்ரௌஞ்சேம்பு3 ரூபமத2 வாயுமயம் ச சா’கே
த்வாம் ப்3ரஹ்ம ரூபமயி புஷ்கர நாம்னி லோகா: || (21 – 10)

பகவானே! ப்ளாக்ஷத் தீவில் ஆதித்யரூபியாகவும்; சால்மலி தீபத்தில் சந்திரரூபியாகவும், குசதீபத்தில் அக்கினி ரூபியாகவும், க்ரௌஞ்ச தீபத்தில் ஜலரூபியாகவும், சாகத் தீபத்தில் வாயுரூபியாகவும்; புஷ்கரத் தீபத்தில் பிரம்மரூபியாகவும் தங்களைத் துதிக்கின்றனர்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஸர்வைர் த்4ருவாதி3 பீ4ருடு3 ப்ரகரைர் க்3ரஹைச்’ச
புச்சா2தி3 கேஷ்வ வயவேஷ்வபி4 கல்ப்யமானை: |
த்வம் சி’ம்சு’மார வபுஷா மஹதாமுபாஸ்ய:
ஸந்த்4யாஸு ருந்தி4 நரகம் மம ஸிந்து3சா’யின் || (21 -11)

பாற்கடலில் துயிலும் பரந்தாமா! மகான்கள், வால் முதலிய அவயவங்களில் துருவன் முதலான எல்லா நக்ஷத்திரங்களுடனும், கிரகங்களுடனும், சிம்சுமார ரூபியாகத் தங்களை சந்தியா காலங்களில் வழிபடுகின்றனர். தாங்கள் என் நரகத்தைத் தடுக்க வேண்டும்.

------------------------------------------------------------------------------------------------------------

பாதாலமூலபு4வி சேஷதனும் ப4வந்தம்
லோலைக குண்ட3ல விராஜி ஸஹஸ்ர சீ’ர்ஷம் |
நீலாம்ப3ரம் த்4ருத ஹலம் பு4ஜகா3ங்க3 நாபி4:
ஜுஷ்டம் ப4ஜே ஹர க3தா3ன் கு3ருகே3ஹ நாத2 || (21 – 12)

பாதாளத்தின் அடியில் ஒன்றரைக் குண்டலம் இட்டு அசைகின்ற ஆயிரம் தலைகளை உடையவரும்; நீல வஸ்திரம் தரிப்பவரும், கலப்பை ஆயுதம் தாங்கியவரும்; நாககன்னியாரால் சேவிக்கப்படுபவரும் ஆன ஆதிசேஷன் வடிவில் தங்களைச் சேவிகின்றேன். குருவயூரப்பா! என் ரோகங்களைப் போக்குவீர்.

------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 22 : அஜாமிலோபாக்2யானம்

அஜாமிலோ நாம மஹீஸுரா: புரா
சரன் விபோ4 த4ர்மபதா2ன் க்3ருஹாச்’ரமீ |
கு3ரோர் கி3ரா கானனமேத்ய த்3ருஷ்டவான்
ஸுத்3ருஷ்ட சீ’லாம் குலடாம் மதா3குலம் || (22 – 1)

பிரபுவே! முன்பொரு காலத்தில் அஜாமிளன் என்னும் பிராமணன் கிருஹச்த்தனாகத் தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டிருந்தான். பிதாவின் கட்டளைப்படிக் கானகம் சென்ற போது அங்கே நாணமற்றவளும், மதத்தால் மெய் மறந்தவளும் ஆன ஓரு விபச்சாரியைக் கண்டான்.

----------------------------------------------------------------------------------------------------------

ஸ்வத: ப்ரசா’ந்தோsபி ததா3ஹ்ருதாசயா :
ஸ்வத4ர்மமுத்ஸ்ருஜ்ய தயா ஸமாரமன் |
அத4ர்மகாரீ த3ச’மி ப4வன் புனர்த3தௌ4
ப4வன் நாம யுதே ஸுதே ரதிம் || (22 – 2)

சுபாவத்தில் சாந்தனாக இருந்த போதிலும் அவளால் வசீகரிக்கப்பட்டான். தன் குலதர்மத்தை விட்டு விட்டு ஆவலுடன் இன்பம் அனுபவித்தான். கிழவன் ஆன பின்பும் அதர்மங்களைச் செய்து வந்தான். தங்கள் பெயரை உடைய மகனிடம் அதிக அன்பு வைத்திருந்தான்.

-----------------------------------------------------------------------------------------------------

ஸ முக்தகாலே யமராஜ கிங்கரான்
ப4யங்கராம்ஸ்த்ரனபி4 லக்ஷயன் பி4யா |
புரா மனாக் த்வத் ஸ்ம்ருதி வாஸனா ப3லாத்
ஜுஹாவ நாராயண நாமகம் ஸுதம் || (22 – 3)

மரணகாலம் வந்த போது மிகவும் பயங்கரமான மூன்று கிங்கரர்களை எதிரில் கண்டு அஞ்சி, முற்காலத்தில் செய்த தங்களின் நாம வாசனையால் நாராயணன் என்ற பெயர் உள்ள தன் பிள்ளையை அவன் அழைத்தான்.

--------------------------------------------------------------------------------------------------------

துராச’யஸ்யாபி ததா3த்வநிர்க3தத்வதீ3ய
நாமாக்ஷர மாத்ர வைப4வாத் |
பரோsபி பேதுர் ப4வதீ3ய பார்ஷதா3:
சதுர்பு3ஜா: பீதபடா மனோஹரா: || (22 – 4 )

அஜாமிளன் கெட்ட மனம் கொண்டவனாக இருந்த போதிலும், அவன் உச்சரித்த தங்களின் நாம வைபவத்தால் நான்கு புஜங்களை உடையவர்களும், பீதாம்பரம் தரித்தவர்களும், மனத்துக்கு இனியவர்களும் ஆகிய தங்களுடைய பார்ஷதர்கள் அங்கே தோன்றினர்.

---------------------------------------------------------------------------------------------------

அமும் ச ஸம்பாச்’ய விகர்ஷதோ ப4டான்
விமுஞ்சதேத்யாருருதுர் ப3லாத3மீ |
நிவாரிதாஸ்தே ச ப4வஜ்ஜனைஸ் ததா3
ததீ3யபாபம் நிகி2லம் ந்யவேத3யன் || (22- 5)

அஜாமிளனைப் பாசக்கயிற்றால் கட்டி இழுக்கின்ற யம கிங்கரர்களைப் பார்த்து தங்களின் தாசர்கள், “இவனை விட்டு விடுங்கள்” என்று தடுத்தனர். அப்போது யம கிங்கரர்கள் அவன் செய்த பாவங்களின் பட்டியலை அறிவித்தார்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 22 : அஜாமிலோபாக்2யானம்

ப4வந்து பாபானி கத2ம் து நிஷ்க்ருதே
க்ருதோsபி போ4 த3ண்ட3னமஸ்தி பண்டி3தா: |
ந நிஷ்க்ருதி: கிம் விதி3தா ப4வாத்3த3சா’ம்
இதி ப்ரபோ4 த்வத் புருஷா ப3பா4ஷிரே || (22 – 6)

“ஹே பண்டிதர்களே ! பாபங்கள் இருக்கட்டும் .பிராயச்சித்தம் செய்த பிறகும் தண்டனை எதற்காக? உங்களுக்குப் பிராயச் சித்தம் பற்றித் தெரிந்து இருக்க வேண்டாமா?’ என்று தங்களுடைய பார்ஷதர்கள் யம கிங்கரர்களிடம் கேட்டார்கள்.

----------------------------------------------------------------------------------------------------------

ச்’ருதி ஸ்ம்ருதிப்4யாம் விஹிதா வ்ரதாத3ய:
புனந்தி பாபம் ந லுனந்தி வாஸனாம் |
அனந்த ஸேவா து நிக்ருந்ததி த்3வயீம்
இதி ப்ரபோ4 த்வத் புருஷா ப3பா4ஷிரே || (22 – 7 )

“ஸ்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் விதித்துள்ள விரதம் முதலியவை பாபத்தை நாசம் செய்கின்றன. ஆனால் வாசனையைப் போக்குவதில்லை. ஸ்ரீ ஹரியைத் துதிப்பது பாபம் , வாசனை இரண்டையுமே போக்குகின்றது!” என்று தங்கள் புருஷர்கள் சொன்னார்கள்.

----------------------------------------------------------------------------------------------------------

அனேன போ4 ஜன்ம ஸஹஸ்ர கோடிபி :
க்ருதேஷு பபேஷ்வபி நிஷ்க்ருதி க்ருதா: |
யத3க்3ரஹீன்னாம ப4யாகுலோ ஹரேரிதி
ப்ரபோ4 த்வத் புருஷா ப3பா4ஷிரே || (22 – 8)

“ஹே யமகிங்கரர்களே! பயத்தால் மெய் மறந்த இவன் ஸ்ரீ ஹரியின் நாமத்தை உச்சரித்த உடனே இவன் ஆயிரம் கோடி ஜன்மங்களில் செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்துவிட்டான்!” என்று தங்களுடைய புருஷர்கள் சொன்னார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------

ந்ருணாம பு3த்3த4யாsபி முகுந்த3 கீர்த்தனம்
த3ஹத்யகௌ4கா4ன் மஹிமாஸ்ய தாத்3ருசா’ : |
யதா2க்3னி ரேதா4ம்ஸி யதௌஷத3ம் க3தா3ன்
இதி ப்ரபோ4 த்வத் புருஷா ப3பா4ஷிரே || (22 – 9 )

“அக்கினி விறகுகளை எரிப்பது போலவும், மருந்து வியாதிகளை நாசம் செய்வது போலவும், புத்தி பூர்வகமாக இல்லாமல் முகுந்தன் பெயரைச் சொன்னாலும் பாவங்கள் எரிந்து நாசமடைகின்றன. அந்த நாமத்தின் மகிமை அப்படிப் பட்டது” என்று தங்கள் புருஷர்கள் சொன்னார்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------

இதீரிதைர் யாம்ய ப4டைரபா ஸ்ருதே
ப4வத்3 ப4டானாம் ச க3ணே திரோஹிதே |
ப4வத் ஸ்ம்ருதிம் கஞ்சன காலமாசரன்
ப4வத் பத4ம் ப்ராபி ப4வத்3ப4டைரசௌ || (22 -10)

இவ்விதம் எடுத்துரைக்கப்பட்ட யம கிங்கரர்கள் விலகிவிட, தங்களுடைய பார்ஷதர்களும் மறைந்து சென்று விட்டனர். அஜாமிலன் சிறிது காலம் தங்களை ஸ்மரித்துக் கொண்டு இருந்து விட்டுத் தங்கள் பார்ஷதர்களால் அழைத்துச் செல்லப் பட்டு வைகுண்டத்துக்குச் சென்றான்.

----------------------------------------------------------------------------------------------------------------

ஸ்வகிங்கரா வேதன ச’ங்கிதோ யம:
த்வத3ங்க்4ரி ப4க்தேஷு ந க3ம்யதாமிதி |
ஸ்வகீய ப்4ருத்யான சி’சி’க்ஷ து3ச்சகை:
ஸ தே3வ வாதாலயநாத2 பாஹிமாம் || (22 -11)

யமன் தன் கிங்கரர்களின் விண்ணப்பதைக் கேட்டு ஐயம் அடைந்தான். தங்கள் திருவடிகளுக்கு பக்தி செய்பவர்களிடம் நெருங்கக் கூடாது என்று கட்டளை இட்டான். குருவாயூரப்பா! அப்படிப்பட்ட தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

--------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 23: சித்ரகேதூபாக்2யானம்

ப்ராசேதஸஸ்து ப4க3வன்னபரோsஹி த3க்ஷ:
த்வத் ஸேவனம் வ்யதி4த ஸர்க3 விவ்ருத்3தி4 காம: |
ஆவீர் ப3பூ4வித2 ததா3 லஸத3ஷ்ட பா3ஹு:
தஸ்மை வரம் த3தி3த2 தாம் ச வதூ4 மஸிக்னீம் || (23 – 1)

பிரசேதஸுக்களின் புத்திரன் தக்ஷனிடமிருந்து வேறுபட்டவனும் பிரசித்தி அடைந்தவனும் ஆகிய ஒரு தக்ஷன் தங்கள் தரிசனத்துக்காக தங்களை ஆராதித்தான். அப்போது தாங்கள் எட்டுக் கரங்களுடன் அவனுக்கு காட்சி தந்தீர்கள். “இனி மேல் ஆண் பெண் சேர்க்கையினால் பிரஜா சிருஷ்டி உண்டாகட்டும்!” என்ற வரம் அளித்தீர்கள். அஸிக்னீ என்ற பெண்ணை தக்ஷனுக்கு மனைவியாகக் கொடுத்தீர்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------

தஸ்யாத்மஜாஸ் த்வயுதமீச’ புன: ஸஹஸ்ரம்
ஸ்ரீ நாரத3ஸ்ய வசஸா தவ மார்க3 மாபு : |
நைகத்ரவாஸ ம்ருஷயே ச முமோச சா’பம்
பக்தோத்தமஸ் த்வ்ருஷி ரனுக்3ரஹ மேவ மேன || (23 – 2)

அவருடைய புத்திரர்கள் முதலில் பதினாயிரம் பேர்களும், அதன் பிறகு ஆயிரம் பேர்களும் ஸ்ரீ நாரதரின் உபதேசத்தால் மோக்ஷ மார்க்கத்தை அடைந்தனர். அதனால் கோபம் கொண்ட தக்ஷன் நாரதமுனிக்கு ஒரே இடத்தில் நிலையாக இருக்க முடியாதபடிச் சாபம் தந்தான். பக்தர்களில் சிறந்த நாரதன் அந்தச் சாபத்தையும் ஒரு அனுக்ரஹமாகவே எண்ணினான்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஷஷ்ட்யா ததோ து3ஹித்ருபி4 :ஸ்ருஜத: குலௌகா4ன்
தௌ3ஹித்ர ஸூனு ரத2 தஸ்ய ஸ விச்’வரூப: |
த்வத் ஸ்தோத்ர வர்மித மஜாபய தி3ந்த்3ர மாஜௌ
தே3வ த்வதீ3ய மஹிமா க2லு ஸர்வ ஜைத்ர: || (23 – 3)

தக்ஷன் தன் அறுபது பெண்களைக் கொண்டு வம்ச பரம்பரைகளை உண்டாக்கினான். அந்தத் தக்ஷனுடைய பெண் வயிற்றுப் பேரனின் பிள்ளை ஆவான் விஸ்வரூபன். அவன் தங்களுடைய ஸ்தோத்திரமாகிய நாராயண கவசத்தால் ரக்ஷை பெற்று இந்திரனை தேவாசுர யுத்தத்தில் வெற்றி அடையச் செய்தான். தங்கள் மகிமை அனைத்தையும் வெல்லும் வல்லமை படைத்தது அல்லவா?

------------------------------------------------------------------------------------------------------------

ப்ராக் ஸூரஸேன விஷயே கில சித்ரகேது :
புத்ராக்3ரஹீ ந்ருபதிரங்கி3ரஸ: ப்ரபா4வாத் |
லப்3த்4வைக புத்ரமத2 தத்ர ஹதே ஸபத்னீ ஸங்கை :
அமுஹ்ய த3வச’ஸ்தவ மாயயாsசௌ || (23 – 4)

முன்னொரு காலத்தில் சூரசேன தேசத்தில் சித்ரகேது என்ற அரசன் ஒரு புத்திரனைப் பெற விரும்பினான். அவன் அங்கிரஸ் முனிவரின் மகிமையால் ஒரு புத்திரனை அடைந்தான். பிறகு சக்களத்திகளால் அந்தப் பிள்ளை கொல்லப்பட்ட போது சித்ரகேது வருத்தத்தாலும் தங்கள் மாயையாலும் மனம் மயங்கினான்.

------------------------------------------------------------------------------------------------------------------

தம் நாரத3ஸ்து ஸமமங்கி3ரஸா த3யாலு:
ஸம்ப்ராப்ய தாவது3பத3ர்ச்’ய ஸுதஸ்ய ஜீவம் |
கஸ்யாஸ்மி புத்ர இதி தஸ்ய கி3ரா விமோஹம்
த்யக்த்வா த்வத3ர்சன விதௌ4 ந்ருபதிம் ந்யயுங்த்த || (23 – 5)

தயாளுவாகிய நாரதர், அங்கிரஸ் முனிவருடன் அங்கே அரசனிடம் வந்து அவன் புத்திரனின் ஜீவாத்மாவைக் காட்டினார். “நான் யாருடைய பிள்ளை ?” என்று அந்த ஜீவாத்மா அவனிடம் கேட்டவுடன் அரசனின் மன மயக்கம் ஒழிந்தது. அவன் தங்களை ஆராதிக்கும் வழியில் நியமிக்கப்பட்டான்.

-----------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 23: சித்ரகேதூபாக்2யானம்

ஸ்தோத்ரம் ச மந்த்ரமபி நாரத3தோsத லப்3த்4வா
தோஷாய சேஷவபுஷோ நனு தே தபஸ்யன் |
வித்3யாத4ராதி4பதிதாம் ஸ ஹி ஸப்த ராத்ரே
லப்3த்4வாsப்ய குண்ட2மதி ரன்வப4ஜத்3 ப4வந்தம் || (23 – 6)

பிறகு அந்த அரசன் ஸ்ரீ நாரதரிடமிருந்து ஸ்தோத்திரம், மந்திரம் இவற்றை அடைந்தான். ஆதிசேஷ ரூபியான தங்களைக் குறித்துத் தவம் செய்தான். ஏழே நாட்களில் வித்யாதரர்களுக்கு அதிபதி ஆகிவிட்டான் என்றாலும் தீவிர மதியுடன் விடாமல் தங்களைத் துதித்துக் கொண்டே இருந்தான்.

-----------------------------------------------------------------------------------------------------

தஸ்மை ம்ருணால த4வலேன ஸஹஸ்ர சீர்ஷ்ணா
ரூபேண ப3த்3த4 நுதி ஸித்3த4க3ணா வ்ருதேன |
ப்ராது3ர் ப4வன் நசிரதோ நுதிபி4: ப்ரஸன்னோ
த3த்த்வாssத்மதத்வ மனுக்3ருஹ்ய திரோத3தா4த2 || (23 – 7)

தாமரைத் தண்டைப் போல வெளுத்ததும், ஆயிரம் தலைகளை உடையதும், துதிக்கின்ற சித்த கணங்களால் சூழப்பட்டதும் ஆன ரூபத்தில் தாங்கள் சீக்கிரமே ஆவிர்பவித்தீர்கள். துதிகளால் மனம் மகிழ்ந்து, ஆத்ம தத்துவத்தை அவனுக்கு உபதேசம் செய்து அனுக்ரஹித்து விட்டு மறைந்து சென்றீர்கள்.

------------------------------------------------------------------------------------------------------

த்வத்3 ப4க்தமௌலி ரத2 ஸோs பி ச லக்ஷ லக்ஷம்
வர்ஷாணி ஹர்ஷ லமனா பு4வனேஷு காமம் |
ஸங்கா3 பயன் கு3ணக3ணம் தவ ஸுந்த3ரீ பி4:
ஸங்கா3தி ரேக ரஹிதோ லலிதம் சசார || (23 – 8)

அதன் பின் தங்களின் பக்த சிரோன்மணியாகிய அவன் தங்கள் குணங்களை வித்தியாதரப் பெண்களைக் கொண்டு கானம் செய்வித்தான். விஷயங்களில் பற்றின்றியும், மனம் சந்தோஷம் கொண்டும், லக்ஷக் கணக்கான வருஷங்கள் பல உலகங்களிலும் தன் மனம் போல சஞ்சரித்தான்.

----------------------------------------------------------------------------------------------------

அத்யந்த ஸங்க3 விலயாய ப4வத் ப்ரணுன்னோ
நூனம் ஸ ரூப்ய கி3ரிமாப்ய மஹத் ஸமாஜே |
நிச்’ச’ங்க மங்க க்ருத வல்லப4மங்கஜாரீம்
தம் ச’ங்கரம் பரிஹஸன்னுமயாs பி4சேபே || (23 – 9 )

அவனுடய விஷயப் பற்று முற்றிலுமாக நாசம் அடைவதற்காகவே தாங்கள் அவனை கைலாச மலைக்கு ஏவினீர்கள் போலும். அங்கே மகான்களுடைய சபையில் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் தன் மடியில் பத்தினியை வைத்து கொண்டிருந்த மன்மதனின் வைரியாகிய சங்கரனைப் பரிஹசித்தான். அதன் காரணமாக உமையால் சபிக்கப்பட்டான்.

-----------------------------------------------------------------------------------------------------

நிஸ்ஸம்ப்4ரமமஸ் த்வயமயாசித்த சா’பமோக்ஷோ
வ்ருத்ராஸுர த்வமுபக3ம்ய ஸூரேந்த்3ர யோதீ4 |
ப4க்த்யாssத்மா தத்வ கத2னை: ஸமரே விசித்ரம்
ச’த்ரோபி ப்4ரமமபாஸ்ய க3த: பத3ம் தே || (23 – 10)

சித்ரகேது உமையின் சாபத்துக்கு சிறிதும் அஞ்சவில்லை. அதிலிருந்து விடுதலையையும் அவன் யாசிக்கவில்லை. விருத்திராசுரனாகப் பிறந்து இந்திரனுடன் போர் புரிந்தான். பக்தியாலும் ஆத்ம தத்துவ விளக்கத்தாலும் சத்ருக்ளின் அஞ்ஞானத்தைப் போக்கடித்தான். தங்கள் இடமாகிய வைகுண்டத்தைச் சென்ற அடைந்தான். இது ஆச்சரியமானது!

----------------------------------------------------------------------------------------------------

த்வத் ஸேவனேன தி3திரிந்த்3ர வதோ4த்3யதாsபி
தான் ப்ரத்யுதேந்த்3ர ஸுஹ்ருதோ3 மருதோsபி4லேபே4 |
த்3ருஷ்டாச’யோs பி சு’ப4தை3வ ப4வன்னிஷேவா
தத்தா த்3ருச’ஸ் த்வமவ மாம் பவனாலயேசா’ || (23 – 11)

திதிதேவி இந்திரனைக் கொல்ல விரும்பினாள். அவள் அவ்வாறு முயன்ற போதிலும் அவள் பும்சவன விரதம் அனுஷ்டித்ததால் தன் விருப்பத்துக்கு மாறாக இந்திரனின் சினேகிதர்களாகிய மருத்துக்களைப் பெற்றாள் . தங்களுடைய விரதம் கெட்ட எண்ணம் உடையவர்களிடத்திலும் சுபத்தையே அளிக்கின்றது. அப்படிப்பட்ட குருவாயூரப்பா! தாங்கள் என்னைக் காக்க வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 24 ப்ரஹ்லாத3 சரித வர்ணனம்

ஹிரண்யாக்ஷோ ப்ரோத்ரி ப்ரவர வபுஷா தே3வ ப4வதா
ஹதே சோ’க2 க்ரோத3 க்4லபித த்4ருதி ரேதஸ்ய ஸஹஜ : |
ஹிரண்ய ப்ராரம்ப4 : கசி’புரமராராதி ஸத3ஸி
ப்ரதிக்ஞா மாதேன தவ கில வதா4ர்த்த2ம் மது4ரிபோ || (24 – 1 )

அரக்கன் மதுவின் வைரியே! பெரும் பன்றி உருவத்தில் தாங்கள் ஹிரண்யாக்ஷனைக் கொன்ற போது, அவன் சகோதரனான ஹிரண்ய கசிபு சோகத்தாலும் கோபத்தாலும் தங்களை வதம் செய்யப்போவதாக அரச சபையில் பிரதிக்ஞை செய்தான் அல்லவா?

--------------------------------------------------------------------------------------------------------------

விதா4தாரம் கோ4ரம் ஸ க2லு தபஸித்வா நசிரத :
புர:ஸா க்ஷாத் குர்வன் ஸுர நர ம்ருகா3த்3யைரநித4னம் |
வரம் லப்3த்4வா த்3ருபதோ ஜக3தி3ஹ பவன் நாயக மித3ம்
பரிக்ஷுந்த3ன் நிந்த்3ரா த3ஹரத தி3வம் த்வாமக3ணயன் || (24 – 2)

ஹிரண்ய கசிபு கடும் தவம் புரிந்து வெகு விரைவிலேயே பிரம்மனைத் தன் கண் எதிரில் கண்டான். பிரம்மனிடமிருந்து தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள் முதலியவற்றால் மரணம் இல்லாமையை வரமாகப் பற்றுக் கொண்டான். அதனால் மிகுந்த கர்வம் அடைந்தான். தங்களைப் பொருட்படுத்தாமல் இந்த உலகத்தை துன்புறுத்தினான். இந்திரனிடமிருந்து அவன் சுவர்க்கத்தையும் அபஹரித்தான்.

------------------------------------------------------------------------------------------------------------

நிஹந்தும் த்வாம் பூ4யஸ்தவ பத3மவாப்தஸ்ய ச ரிபோ:
ப3ஹிர் த்3ருஷ்டேரந்தர் த3தி4த2 ஹ்ருத3யே ஸூக்ஷ்ம வபுஷா |
நாதன் உச்சைஸ் தத்ராப்யகி2ல பு4வனாந்தே ச ம்ருக3யன்
பி4யா யாதம் மத்வா ஸ க2லு ஜிதகாசீ’ நிவவ்ருதே || (24 – 3)

ஹிரண்ய கசிபு தங்களைக் கொல்வதற்காக வைகுண்டம் சென்று அங்கு தங்களைத் தேடினான். அவன் வெளியே தேடும் போது நீங்கள் அவன் இருதயத்தில் சூக்ஷம வடிவில் மறைந்து இருந்தீர்கள். அவன் அதை அறியாமல் அந்த வைகுண்டத்திலும் பதினாங்கு லோகங்களிலும் உரக்கக் கர்ஜித்துக் கொண்டு தங்களைத் தேடினான். தங்கள் அவனிடம் பயந்தோ ஓடிவிட்டதாகவும் அதனால் தானே ஜெயித்து விட்டதாகவும் எண்ணிக் கொண்டு மிகுந்த அபிமானத்துடன் திரும்பிச் சென்றான் அல்லவா?

---------------------------------------------------------------------------------------------------------

ததோsஸ்ய ப்ரஹ்லாத3: ஸமஜனி ஸுதோ க3ர்ப்ப4 வஸதௌ
முனேர் வீணா பாணோ ரதி4க3த ப4வத்3 ப4க்தி மஹிமா |
ஸ வை ஜாத்யா தை3த்ய : சி’சு’ரபி ஸமேத்ய த்வயி ரதிம்
க3தஸ் த்வத்3 ப4க்தானாம் வரத3 பரமோதா3ஹாரணதாம் || (24 – 4)

தாயின் கர்ப்பத்தில் வசிக்கும் போதே நாரத முனிவரால் பகவத் பக்தியை அறிந்து கொண்ட பிரஹ்லாதன் என்ற பிள்ளை ஹிரன்ய கசிபுவுக்குப் பிறந்தான். வரதா! பிரஹ்லாதன் சிறு குழந்தையாக இருந்த போதிலும், அசுர குலத்தில் பிறந்திருந்த போதும் தங்களிடம் பரம பக்தி கொண்டிருந்தான். தங்கள் பக்தர்களுக்குச் சிறந்த உதாரணமாக விளங்கினான்.

--------------------------------------------------------------------------------------------------------

ஸுராரீணாம் ஹாஸ்யம் தவ சரண தா3ஸ்யம் நிஜஸுதே
ஸத்3ருஷ்ட்வா து3ஷ்டாத்மா கு3ருபி4ரசி’சி’க்ஷச்சிரமமும் |
கு3ரு ப்ரோக்தம் சாஸாவித3மித3 மபத்3ராய த்3ருட4மிதி
அபாகுர்வன் ஸர்வம் தவ சரண ப4க்த்யைவ வவ்ருதே4 || (24 – 5)

அசுரகள் பரிஹசிக்கும் தங்கள் திருவடிகளின் மீது உள்ள தீவிர பக்தியைத் தன் புத்திரனிடம் கண்டான். குருமார்களைக் கொண்டு வெகு காலம் பிரஹலாதனுக்குக் கற்பித்தான். ஆனால் அவன் “குருமார்கள் உபதேசிப்பது க்ஷேமத்துக்குக் காரணம் அல்ல” என்று அவற்றை எல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டுத் தங்களுக்குச் சேவை செய்கின்ற மனத்துடனேயே வளர்ந்தான்.

---------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 24 ப்ரஹ்லாத3 சரித வர்ணனம்

அதீ4தேஷு ச்ரேஷ்டம் கிமிதி பரிஷ்டஷ்டேsத தனயே
ப4வத்3 ப4க்திம் வர்யாமபி4 க3த3தி பர்யாகுல த்4ருதி: |
கு3ருப்4யோ ரோஷித்வா ஸஹஜமதி ரஸ்யேத்யபி4வித3ன்
வதோ4 பாயானஸ்மின் வ்யதனுத ப4வத் பாத3 ச’ரணே || (24 – 6 )

அதன் பிறகு மகனிடம் “நீ கற்றுக் கொண்டவற்றில் மேலானது எது?” என்று கேட்க அவன் தங்கள் பக்தியையே மிகவும் மேன்மையானதாகக் கூறினான். குருமார்களிடம் ஹிரண்ய கசிபு கோபித்துக் கொள்ள, அவர்கள் இது பிரஹலாதனின் இயற்கையான புத்தி என்பதை எடுத்துக் கூறினார்கள். ஹிரண்ய காசிபு தங்களிடம் பக்தி பூண்ட பிரஹலாதனைக் கொன்று விடத் தீர்மானித்தான்.

----------------------------------------------------------------------------------------------------------

ஸ சூ’லைராவித்3த4 ஸுப3ஹு மதி3தோ தி3க்3க3ஜ க3ணை :
மஹா ஸர்பைர் த3ஷ்டோsப்யனச’ன க3ராஹார விது4த: |
கிரீந்த்3ரா வக்ஷிப்தோsப்யஹஹ பரமாத்மன்னயி விபோ4
த்வயி ந்யஸ்தாத்மத்வாத் கிமபி ந நிபீடா3மப4ஜத || (24 – 7)

எங்கும் நிறைந்துள்ள பரமாத்மாவே! பிரஹலாதன் சூலங்களால் குத்தப் பட்டான். திசைகளைக் காக்கும் யானைக் கூட்டங்களால் மிதிக்கப் பட்டான். பெரிய பாம்புகளால் கடிக்கப் பட்டான். பட்டினி கிடந்தான். விஷம் கலந்த உணவை உண்டான். உயர்ந்த மலையிலிருந்து கீழே தள்ளப்பட்டான். அவன் தங்களிடம் தன் ஆத்மாவை சமர்ப்பணம் செய்திருந்ததால் அவன் எந்த விதத் துன்பத்தையும் அடையவில்லை அல்லவா?

--------------------------------------------------------------------------------------------------

தத: ச’ங்கா விஷ்ட: ஸ புனரதி து3ஷ்டோs ஸ்சய ஜனகோ
கு3ரூக்த்யா தத்3கே3ஹே கில வருண பாசை’ஸ் தமருநணத் |
கு3ரோச்’சா சாந்நித்4யே ஸ புனரனுகா3ன் தை3த்ய தனயான்
ப4வத்3 ப4க்தேஸ் தத்வம் பரமமபி விஞ்ஞான மசி’ஷத் || (24 – 8 )

அதற்குப் பிறகு, சங்கை கொண்டவனும், துஷ்டனுமான ஹிரண்ய கசிபு குரு ஜனங்களின் வாக்கின்படி அவர்கள் வீட்டிலேயே பிரஹலாதனை வருண பாசத்தால் கட்டி வைத்தான். பிரஹலாதன் குருமார்கள் அருகில் இல்லாத போது மற்ற அசுரச் சிறுவர்களுக்கு தங்களின் பக்தியின் தத்துவத்தையும் ஆத்மா ஞானத்தையும் உபதேசம் செய்தான்.

------------------------------------------------------------------------------------------------------

பிதா ச்’ருண்வன் பா3லப்ரகர மகி2லம் த்வத் ஸ்துதிபரம்
ருஷாsந்த: ப்ராஹைனம் குலஹதக கஸ்தே ப3லமிதி|
ப3லம் மே வைகுண்ட2ஸ் தவ ஜக3தாம் சாபி ஸ ப3லம்
ஸ ஏவ த்ரைலோக்யம் ஸகலமிதி தீ4ரோsயமகதீத் || (24 - 9 )

ஹிரண்ய கசிபு அசுரச் சிறுவர்கள் கூடித் தங்களைத் துதிப்பதைக் கேட்டறிந்து கோபத்தில் குருடன் ஆகிவிட்டான். “குலத் துரோகியே! யார் உன்னுடைய பலம்? ” என்று பிரஹலாதனிடம் கேட்டான். “எனக்கும், உங்களுக்கும் , எல்லோருக்கும் பலம் மஹா விஷ்ணுவே! மூவுலகங்களிலும் உள்ள எல்லாம் அவரே!” என்று புத்தியில் சிறந்த அவன் மகன் தீரமாக உரைத்தான் அல்லவா?

----------------------------------------------------------------------------------------------------------

அரே க்வாசௌ க்வாசௌ ஸகல ஜக3தா3த்ம ஹரிரிதி
ப்ரபி4ந்தே ஸ்ம ஸ்தம்ப4ம் சலித கர வாலோ தி3தி ஸுத: |
அத: பச்’சாத்3 விஷ்ணோ ந ஹி வதி3துமீசோsஸ்மி ஸஹஸா
க்ருபாத்மன் விச்’வாத்மன் பவனபுரவாஸின் ம்ருட3ய மாம் || (24 – 10)

ஹிரண்ய கசிபு தன் வாளை வீசிக்கொண்டு ” அடே! சகல ஜகத் ஸ்வரூபியாகிய அந்த ஹரி எங்கே ? அந்த ஹரி எங்கே?” என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்த ஒரு தூணைப் பிளந்தான்! எங்கும் நிறைந்திருக்கும் விஷ்ணோ! அதன் பின் நடந்ததைச் சொல்லும் சக்தி எனக்கு இல்லை! கருணாமூர்த்தியே, விஸ்வரூபியே! என்னைச் சுகமுறச் செய்வாய்.

------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 25: நரசிம்ஹாவதார வர்ணனம்

ஸ்தம்பே க4ட்டயதோ ஹிரண்ய கசி’போ : கர்ணௌ ஸமாசூர்ணயன்
ஆகூ4ர்ண ஜ்ஜக3த3ண்ட குண்ட3 குஹரோ கோ4ரஸ் தவா பூ4த்3ரவ: |
ச்’ருத்வா யம் கில தை3த்யராஜ ஹ்ருத3யே பூர்வம் கதா3sப்ய ச்’ருதம்
கம்ப:கச்’சன ஸம்பபாத சலிதோsப்யம்போஜ பூ4ர் விஷ்டராத் || (25 – 1)

தூணில் அடித்த ஹிரண்ய கசிபுவின் காதுகளைப் பிளக்கின்ற, பிரம்மாண்டத்தில் இருக்கும் அத்தனை சராசரங்களையும் கலங்கச் செய்கின்ற பயங்கரமான சிம்ஹ நாதத்தை உண்டாக்கினீர். இதற்கு முன்பு எவரும் கேட்டிராத அந்த நாதத்தினால் அசுரன் மனதில் இனம் தெரியாத அச்சம் உண்டாயிற்று, பிரமன் கூடத் தன் ஆசனத்திலிருந்து நழுவி விட்டான்.

---------------------------------------------------------------------------------------------------------

தை3த்யை தி3க்ஷு விஸ்ட்ருஷ்ட சக்ஷுஷி மஹாஸம்ரம்பி4ணி ஸ்தம்ப4த :
ஸம்பூ4தம் ந ம்ருகா3த்மகம் ந மனுஜாகாரம் வபுஸ்தே விபோ4 |
கிம் கிம் பீ4ஷணமமேதத3த்3பு4தமிதி வ்யுத்3ப்4ராந்த சித்தேsஸுரே
விஸ்பூ2ர்ஜத்3 த4வலோக்3ர ரோம விகஸத்3 வர்ஷ்மா ஸமாஜ்ரும்ப4தா2: || (25 – 2)

விபோ ! கடுங் கோபங்கொண்ட அந்த அஸுரன் எல்லா திசைகளிலும் பார்க்கும் போது தூணிலிருந்து மிருக வடிவம் அல்லாததும் மனித வடிவம் அல்லததும் ஆன தங்கள் சரீரம் தோன்றியது. “பயங்கரமான, ஆச்சரியமயமான இது என்ன? இது எனா?” என்று அவன் சித்தப் பிரமை அடைந்து நின்று விட்டான். விரிந்த, வெளுத்த, பயங்கரமான பிடரி மயிர்களுடன், பிரகாசிக்கின்ற சரீரத்துடன் தாங்கள் மேலும் வளர்ந்தீர்கள் அல்லவா?

-------------------------------------------------------------------------------------------------

தப்த ஸ்வர்ண ஸவர்ண கூ4ர்ண த3தி ரூக்ஷாக்ஷம் ஸடா கேஸர
ப்ரோத்கம்ப ப்ரனிகும்பி3தாம்ப3ர மஹோ ஜீயாத்தவேத3ம் வபு: |
வ்யாத்தவ்யாப்த மஹாத3ரி ஸக2முக2ம் க2ட்3கோ3க்3ரவல்க3ன் மஹா
ஜிஹ்வா நிர்க3ம த்3ருச்’யமானஸு மஹா த3ம்ஷ்ட்ரா யுகோ3ட்3டா3 மரம் || (25 – 3)

உருக்கிய தங்கம் போன்ற, சுழலுகின்ற, பயங்கரமான கண்களுடனும்; ஆகாசத்தை மறைக்கும்படி அசையும் பிடரி மயிர்களுடனும்; விரிந்த, அகன்ற, பெருங் குகை போன்ற வாயுடனும்; வாள் போன்று நீண்டு துழாவுகின்ற நாக்குடனும்; பெரிய இரண்டு தெற்றுப் பற்களுடனும்; தோன்றிய தங்களுடைய சரீரம் மிக ஆச்சரியமயமானது! அதற்கு மேன்மை உண்டாகட்டும்!

-------------------------------------------------------------------------------------------------
உத்ஸர்பத்3வலிப3ங்க3 பீ4ஷண ஹனும் ஹ்ரஸ்வ ஸ்த2வீயத்ஸர
க்3ரீவம் பீவரதோ3ச்’ ச’தோத்3 க3த நக2 க்ரூராம்சு’ தூ3ரோல்ப3ணம் |
வ்யோமோல்லங்கி4 க4னாக4னோபம க4ன ப்ரத்3வான நிர்தா4வித
ஸ்பர்த்3தா4லு ப்ரகரம் நமாமி ப4வதஸ்தந்நார ஸிம்ஹம் வபு : || (25 – 4 )

மேலெழுந்த ரேகைகளின் பிளவுகளால் பயங்கரமான கன்னங்களுடனும் ; குட்டையான பெருத்த கழுத்துடனும்; பெருத்த பல கரங்களிலிருந்து வெளி வந்த நகங்களின் கிரணங்களுடனும்; ஆகாசம் வரை வியாபித்த உடலுடனும்; ; மேக கர்ஜனை போன்று எதிரிகளை அச்சுறுத்தும் குரலுடனும்; தோன்றிய தங்களின் நரசிம்ஹ ஸ்வரூபத்தை நான் நமஸ்கரிக்கின்றேன்.

----------------------------------------------------------------------------------------------------------

நூனம் விஷ்ணுரயம் நிஹன்ம்யமுமிதி ப்4ராம்யத்3 க3தா3 பீ4ஷணம்
தை3த்யேந்த்3ரம் ஸமுபாத்3ரவந்தமத்4ருதா2 தோ3ர்ப்4யாம் ப்ருது2ப்4யாமமும் |
வீரோ நிர்க3லிதோsத2 கட்3க ப2ல்கே க்3ருஹ்ணன் விசித்ர ச்’ரமான்
வ்யாவ்ருண்வன் புனராபபாத பு4வனக்3ரா ஸோத்3யதம் த்வாமஹோ || (25 – 5 )

“நிச்சயமாக இது விஷ்ணுவே! இவனைக் கொன்று விடுகிறேன்!” என்று சொல்லித் தங்கள் அருகே ஓடிவந்து, பயங்கரமாகக் கதாயுதத்தைச் சுழற்றிய, அந்த அசுரனைப் பெருத்த இரண்டு கரங்களால் பிடித்தீர்கள் அல்லவா? தங்கள் பிடியிலிருந்து நழுவிய அந்த அசுர வீரன், வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, விசித்திரமாகத் தன் திறமைகளைக் காட்டிக் கொண்டு, உலகையே விழுங்கும் உங்களைத் தாக்க நேருக்கு நேர் ஓடி வந்தான் அல்லவா?

--------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 25: நரசிம்ஹாவதார வர்ணனம்

ப்4ராம்யந்தம் தி3திஜாத3மம் புனரபி ப்ரோத்3
க்3ருஹ்ய தோ3ர்ப்4யாம் ஜவாத்3
த்3வாரேs தோரு யுகே3 நிபாத்ய நக2ரான்
வ்யுத்கா2ய வக்ஷோபு4வி |
நிர்பி3ந்த3ன்னதி க3ர்ப்ப4 நிர்ப4ர க3லத்3
ரக்தாம்பு3 ப3த்3தோ4த்ஸவம்
பாயம்பாயமுதை3ரயோ ப3ஹு ஜக3த்
ஸம்ஹாரி ஸிம்ஹாரவான் || (25 – 6)

சுற்றுகின்ற அந்த அசுரத் துஷ்டனை மறுபடியும் இரண்டு கைகளால் வேகமாகப் பிடித்து எடுத்தீர்கள். வாயிற்படியில் உமது தொடைகளின் மேல் அவனைப் படுக்க வைத்துக் கொண்டு நகங்களைச் செலுத்தி அவன் உடலைப் பிளந்தீர்கள். வேகமாக வெளிவந்த இரத்தப் பெருக்கை உற்சாகத்துடன் குடித்துவிட்டு . உலகையே சம்ஹாரம் செய்வது போல உரக்கக் கர்ஜித்தீர்கள்.

----------------------------------------------------------------------------------------------

த்யக்த்வா தம் ஹதமாசு’ ரக்தலஹரி ஸிக்தோன்னத் வர்ஷ்மணி
ப்ரத்யுத்பத்ய ஸமஸ்த தை3த்ய படலீம் சாகா2த்3ய மானோ த்வயி |
ப்4ராம்யத்3 பூ4மி விகம்பிதாம்பு3தி4குலம் வ்யாலோல சை’லோத்கரம்
பரோத்ஸர்பத்க2சரம் சராசரமஹோ து3:ஸ்தா2மவஸ்தா2ம் த3தௌ4 | | (25 – 7)

இரத்தப் பெருக்கல் நனைந்த தாங்கள் உயிரற்ற அந்த அசுரனின் உடலை வீசிவிட்டு தாவி குதித்து எல்லா அசுரக் கூட்டத்தையும் விழுங்கத் தொடங்கினீர்கள். அப்போது ஸ்தாவர ஜங்கம மயமான கொடுமையான நிலை அடைந்தது! உலகம் சுழன்றது! கடல்கள் கலங்கின! மலைகள் நிலை குலைந்தன ! நக்ஷத்திரங்கள் சிதறின!

---------------------------------------------------------------------------------------------------

தாவன் மாம்ஸவபா கரால வபுஷம் கோ4ராந்த்ர மாலாத4ரம்
த்வாம் மத்3யே ஸப4மித்3த4 ரோஷமுஷிதம் து3ர்வார கு3ர்வாரவம்|
அப்4யேதும் ந ச’சா’க கோs பி பு4வனே தூ3ரே ஸ்தி3தா பீ4ரவ :
ஸர்வே ச’ர்வ விரிஞ்ச வாஸவ முகா2 : ப்ரத்யேக மஸ்தோஷத || (25 – 8 )

மாமிசத்தாலும், கொழுப்பாலும் பயங்கரமாக மாறிய சரீரத்தை உடையவரும், குடலை மாலையாகத் தரித்தவரும்; பொங்கி எழுந்த கோபத்துடன் சபையில் இருப்பவரும்; எவராலும் தடுக்க முடியாத ஆரவாரத்தை உடையவரும் ஆன உங்களை நெருங்கும் துணிவு எவருக்குமே இல்லாமல் போயிற்று. சிவன், பிரமன், இந்திரன் எல்லோருமே தனித் தனியாக நின்று கொண்டு தங்களைத் துதித்துக் கொண்டு இருந்தார்கள்.

------------------------------------------------------------------------------------------------------

பூ4யோப்sயக்ஷ தரோஷதா4ம்னி ப4வதி
ப்3ரஹ்மாக்ஞயா பா3லகே
ப்ரஹ்லாதே3 பத3யோர் நமத்ய மப4யே
காருண்ய பா4ராகுல: |
சா’ந்தஸ்த்வம் கரமஸ்ய மூர்த்4னீ
ஸமதா4 :ஸ்தோத்ரை ரதோ2த்3 கா3யாத:
தஸ்யா காமதி4யோsபி தேனித2 வரம்
லோகாய சானுக்3ரஹம் || (25 – 9 )

அப்போதும் தங்கள் கோபம் குறையவில்லை. பிரமனின் ஆணைப்படி சிறுவன் பிரஹலாதன் பயமின்றித் தங்கள் திருவடிகளை வணங்க, அவன் தலையில் கையை வைத்து அருள் புரிந்தீர்கள். அதன் பின்னர் ஸ்தோத்திரங்களால் சிறுவன் தங்களைத் துதிக்க, ஆசையற்றவனாக அவன் இருந்த போதிலும் அவனுக்கு வரம் தந்தீர்கள். உலகத்தையும் அனுக்ரகித்தீர்கள்.

------------------------------------------------------------------------------------------------

ஏவம் நாடித ரௌத்3ர சேஷ்டித விபோ4 ஸ்ரீதாபநீயாபி4த4
ச்’ருத்யன்த ஸ்புடகீ3த ஸர்வமஹிமன்னத்யந்த சு’த்3தா4 க்ருதே |
தத்தாத்3ருங் நிகி2லோத்தரம் புனரஹோ கஸ்த்வாம் பரோ லங்க4யேத்
ப்ராஹ்லாத3ப்ரிய ஹே மருத்புரபதே ஸர்வா மயாத் பாஹி மாம் || (25 – 10)

இங்கனம் பயங்கரமான லீலைகளைப் புரிந்தவரும்; நிருசிம்மதாபனி என்ற உபநிஷத்தில் தெளிவாகக் கூறப்பட்ட மகிமைகளை உடையவரும்; பரிசுத்தமான ஸ்வரூபத்தை உடையவரும் ஆன எங்கும் நிறைந்துள்ள பிரபுவே! உவமையற்ற, எல்லாவற்றுக்கும் மேலான தங்களை ஒரு பாரிஷதன் அல்லாமல் வேறு யாரால் மீற முடியும்? பிரஹலாதப் பிரியனான குருவாயூரப்பா! என்னை எல்லா ரோகங்களிளிருந்தும் காப்பாற்ற வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 26 : க3ஜேந்த்3ர மோக்ஷ வர்ணனம்

இந்த்3ரத்3யும்ன: பாண்ட்3ய க2ண்டா3தி ராஜ:
த்வத்3 ப4க்தாத்மா சந்த3னாத்3ரை கதா3சித் |
த்வத் ஸேவாயாம் மக்3ன தீ4ராலுலோகே
நைவாக3ஸ்தயம் ப்ராப்தமாதித்2ய காமம் || (26 – 1)

ஒருமுறை பாண்டிய அரசனும் தங்கள் பக்தனும் ஆகிய இந்திரத்யும்னன் மலய பர்வதத்தில் தங்களைச் சேவிப்பதில் ஆழமாக ஈடுபட்டிருந்தான். அதனால் அதிதியாக வந்த அகஸ்தியரைக் கண்ணெடுத்தும் பார்க்க வில்லை.

----------------------------------------------------------------------------------------------------

கும்போ4த்3பூ4தி: ஸம்ப்4ருத க்ரோத4 பா4ர:
ஸ்தப்3தாத்மா த்வம் ஹஸ்தி பூ4யம் ப4ஜேதி |
ச’ப்த்வாsதை2னம் ப்ரத்யகா3த் ஸோsபி லேபே4
ஹஸ்தீந்த்3ரத்வம் த்வத் ஸ்ம்ருதி வ்யக்தி த4ன்யம் || (26 – 2)

மிகவும் கோபம் அடைந்த அகஸ்தியர் அவனை, “கர்வத்தால் அசையாமல் இருந்த நீ யானை வடிவம் பெருவாய்!” என்று சபித்து விட்டுச் சென்றார். இந்திரத்யும்னன் தங்கள் ஸ்மரணம் தெளிவாக விளங்கும் வண்ணம் கஜேந்திர வடிவத்தை எடுத்தான்.

------------------------------------------------------------------------------------------------

து3க்3தா4ம்போ3தே4ர் மத்ய பாஜி த்ரிகூடே
க்ரீட3ஞ்ச்சைலே யூதபோsயம் வசா’பி4: |
ஸர்வாஞ்ஜந்தூனத்ய வர்த்திஷ்ட சக்த்யா
த்வத்3 ப4க்தானாம் குத்ர நோத்கர்ஷலாப4: || (26 – 3 )

பாற் கடலின் நடுவில் இருக்கின்ற திரிகூட மலையில் பெண் யானைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த யானைகளின் அரசன் கஜேந்திரன் தன் பலத்தால் எல்லாப் பிராணிகளையும் விஞ்சி இருந்தது. தங்கள் பக்தர்களுக்கு எங்கு தான் மேன்மை கிடைக்காது?

---------------------------------------------------------------------------------------------------

ஸ்வேன ஸ்தே2ம்னா தி3வ்ய தே3ச’த்வச’க்த்யா
ஸோயம் கே2தா3ன ப்ரஜானன் கதா3சித் |
சை’லப்ராந்தே க4ர்மதாந்த: ஸரஸ்யாம்
யூதை2: ஸார்த்த4ம் தவத் ப்ரணுன்னோsபி4ரேமே || (26 – 4)

அந்த கஜேந்திரன் தன் பலத்தாலும், அந்த திவ்விய தேசத்தின் சக்தியாலும், ஒரு துன்பத்தையும் அறியவில்லை. ஒருமுறை வெய்யிலின் கடுமையால் சோர்ந்து களைத்துத் தன் யானைக் கூட்டத்துடன் மலையின் அருகில் இருந்த ஒரு குளத்தில் புகுந்து விளையாடியது. இதுவும் தங்கள் விருப்பபடியே நடந்திருக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------

ஹூஹூஸ் தாவத்3 தே3வலஸ்யாபி சா’பாத்
க்3ராஹீ பூ4தஸ் தஜ்ஜலே வர்த்தமான: |
ஜக்3ராஹைனம் ஹஸ்தினம் பாத3தே3சே’
சா’ந்த்யர்த்த2ம் ஹி ச்’ராந்திதோsஸி ஸ்வகானாம்|| (26 – 5)

அதே சமயம் ஹூஹூ என்ற கந்தர்வனும் தேவலருடைய சாபத்தால் முதலையாக மாறி அந்தக் குளத்தில் வசித்து வந்தான். அவன் கஜேந்திரனின் காலைக் கவ்விப் பிடித்துக் கொண்டான். தங்கள் பக்தர்களுக்கு சாந்தி அளிப்பதற்கு முன்பு தாங்கள் துன்பத்தையும் தருவீர்கள் அல்லவா?

---------------------------------------------------------------------------------------------------
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top