• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
த3ச’கம் 4 :அஷ்டாங்கயோக வர்ணனம், யோகசித்தி வர்ணனம் ச

அக்3னி வாஸரவளர்க்ஷ பக்ஷகை3 :
உத்தராயண ஜூஷா ச தைவதை:|
ப்ராபிதோ ரவிபத3ம் ப4வத்பரோ
மோத3வான் த்4ருவ பதா3ந்த மீயதே || (4 – 11)



அக்னி, பகல், சுக்ல பக்ஷம் இவைகளை அதிஷ்டானம் செய்யும் தேவதைகளாலும், உத்தராயனத்துக்கு அபிமான தேவதையாலும், பக்தன் சூர்ய லோகத்தை அடைகின்றான். பிறகு சந்தோஷமாகத் துருவ லோகம் வரையில் செல்கின்றான். (4 – 11)
 
ஆஸ்தி2தோsத2 மஹராலயே யதா3
சே’ஷ வக்த்ர தஹநோஷ்மணாsர்த்த4தே |
ஈயதே ப4வது3பாச்’ரயஸ் ததா3
வேத3ஸ : பத3மத: புரைவ வா|| (4 – 12 )

துருவ லோகத்தை அடைந்த பிறகு பக்தன் மஹர் லோகத்தை அடைகின்றான். ஆதிசேஷனின் முகத்தில் இருக்கும் அக்னியால் அவன் துன்புறுகின்றான். அப்போதோ அல்லது அதற்கு முன்பாகவோ பிரம்ம லோகத்தை அடைகின்றான். (4 – 12)
 
தத்ர வா தவ பதே3sத2வ வஸன்
ப்ராக்ருத ப்ரலய ஏதி முக்ததாம் |
ஸ்வேச்ச2யா கலு புராsபி முச்யதே
ஸம்விபி4த்ய ஜக3த3ண்ட3மோஜஸா || (4 – 13)

பிரம்ம லோகத்திலாவது தங்கள் லோகத்திலாவது வசிக்கும் பக்தன் மஹா பிரளயத்தின் போது மோக்ஷம் அடைகின்றான். அல்லது தன் யோக பலத்தினால் பிரம்மாண்டத்தைப் பிளந்து கொண்டு முக்தி அடைகின்றான்.
 
தஸ்ய ச க்ஷிதி பயோமஹோsனில
த்3யோ மஹத் ப்ரக்ருதி ஸப்த காவ்ருதீ:|
தத்ததா3த்மகதயா விச’ன் ஸுகீ2
யாதி தே பத3மனாவ்ருதம் விபோ4 || (4 – 14 )

ஹே பிரபோ! அந்த பிரம்மாண்டத்தில் பூமி, ஜலம், தேஜஸ், வாயு, ஆகாசம், மஹத் தத்வம், மாயை என்ற ஏழு ஆவர்ணங்களையும் அதன் அதன் ஸ்வரூபமாகவே பிரவேசம் செய்து சந்தோஷமாகத் தங்கள் ஸ்தானத்தை அடைகின்றான். (4 – 14)
 
அர்சிராதி3 க3தி மீத்3ருசீ’ம் வ்ரஜன்
விச்யுதிம் ந ப4ஜதே ஜக3த்பதே |
ஸச்சிதா3த்மக ப4வத்3 கு3ணோத3யான்
உச்சரந்தமனிலேச’ பாஹி மாம்|| (4 – 15)


ஹே ஜகதீசா! இந்த விதமாக அர்ச்சிராதி மார்க்கத்தை அடைபவன் மீண்டும் திரும்பி வருவதில்லை. சத் சித் ஆனந்த ஸ்வரூபியே! குருவாயூரப்பா! தங்கள் குணங்களின் மேன்மையைப் பாடும் என்னைக் காத்தருள்வீர்!
( 4 – 15)
 
த3ச’கம் 5: விராட் புருஷோத்பத்தி ப்ரகார வர்ணனம்

வ்யக்தா வ்யக்தகமித3ம் ந கிஞ்சித3ப4வத் ப்ராக் ப்ராக்ருத பக்ஷயே

மாயாயாம் கு3ண ஸாம்ய ருத்3த4 விக்ருதௌ த்வய்யாக3தாயாம் லயம் |
நோ ம்ருத்யுஞ்ச ததா3sப்ருதம் ச ஸமபூ4ன் நாஹ்னோ ந ராத்ரே: ஸ்தி2தி:
தத்ரைகஸ் த்வம சி’ஷ்யதா2 : கில பரானந்த3 ப்ரகாசா’த்மனா || (5 – 1)

மஹாபிரளயத்தில் முக்குணங்கள் சம அவஸ்தையில் இருந்ததால் மாயையின் விகாரங்கள் தடுக்கப் பட்டிருந்தன. மாயை தங்களிடம் லயித்திருந்தது. அப்போது இந்தப் பிரபஞ்சம் இருக்க வில்லை. சம்சாரமும இருக்கவில்லை. .மோக்ஷமும் இருக்க வில்லை. பகலும் இல்லை; இரவும் இல்லை. தாங்கள் மட்டும் சச்சிதானந்த ரூபியாக மிஞ்சி இருந்தீர்கள். (5 – 1)
 
கால: கர்ம கு3ணாச்’ச ஜீவா நிவஹா விச்’வம் ச கார்யம் விபோ4
சில்லீலா ரதிமேயுஷி த்வயி ததா3 நிர்லீனதாமாயுயு:|
தேஷாம் நைவ வத3ந்த்ய ஸத்வமயி போ4: ச’க்த்யத்மான திஷ்ட2தாம்
நோ சேத் கிம் க3க3ன ப்ரஸூன ஸத்3ருசா’ம் பூ4யோ ப4வேத் ஸம்ப4வ:|| (5 – 2)


அப்போது ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களும், காலம், கர்மம், ஜீவ சமூகங்கள் அனைத்து மாயா காரியங்களும் தங்களிடம் லயம் அடைந்தன. சுருதிகள் அவைகளுக்கு அத்யந்தம் அபாவத்தைச் சொல்வதில்லை. இல்லை என்றால் ஆகாசபுஷ்பங்களை ஒத்த அவைகளுக்கு மறுபடியும் உற்பத்தி எங்கனம் நிகழும்? (5 – 2)
 
ஏவம் ச த்3வி பரார்த்த4 கால விக3தா வீகக்ஷாம் ஸிஸ்ருக்ஷாத்மிகாம்
விப்4ராணே த்வயி சக்ஷுபே4 த்ரி புவனீ பா4வாய மாயா ஸ்வயம் |
மாயாத: க2லு கால ச’க்தி ரகி2லா த்3ருஷ்டம் ஸ்வபா4 வோsபி ச
ப்ராது3ர் பூ4ய கு3ணான் விகாஸ்ய வித3து4ஸ் தஸ்யாஸ் ஸஹாயக்ரியம் || (5 – 3)

இவ்விதம் இரண்டு பரார்த்த காலம் முடிவடைந்தது. தாங்கள் சிருஷ்டியைத் தொடங்க விரும்பிய பொழுது மாயை தானாகவே க்ஷோபத்தை அடைந்தது. மாயையிலிருந்து காலம் தோன்றியது. ஜீவர்களின் கர்மங்களும், அவற்றுக்கு ஏற்ற சுபாவங்களும் ஆவிர்பவித்தன. முக்குணங்களை விகாசிக்கச் செய்து மாயைக்கு உதவி செய்தன. (5 – 3)
 
மாயா ஸந்நிஹிதோs ப்ரவிஷ்ட வபுஷா ஸாக்ஷீதி கீ3தோ ப4வான்
பே4தைஸ்தாம் ப்ரதி பி3ம்ப3தோ விவிசி’வான் ஜீவோsபி நைவாபர: |
காலாதி3 ப்ரதி போ3தி4தா1sத2 ப4வதா ஸஞ்சோதி3தா ச ஸ்வயம்
மாயா ஸா க2லு புத்3தி 4 தத்வ மஸ்ருஜத் யோsசௌ மஹானுச்யதே || (5 – 4)


மாயையின் அருகில் இருந்த போதிலும் தாங்கள் மாயையில் பிரவேசிப்பதில்லை இதனால் தாங்கள் சாக்ஷீ எனப்படுகின்றீர். அனேக பேதங்களுடன் அதே மாயையில் பிரதி பிம்பமாகப் பிரவேசிப்பவரும் தாங்களே ஆவீர் . காலம், கர்மம், ஸ்வபாவம் என்பவற்றால் உணர்த்தப்பட்டும், உங்கள் பிரேரணைப் படியும் மாயை புத்தி தத்துவத்தைச் சிருஷ்டித்தது. அந்த புத்தி தத்துவமே மஹத் தத்துவம் என்றும் கூறப்படுகின்றது. (5 – 4)
 
தத்ராசௌ த்ரிகு3ணாத்மகோsபி ச மஹான் ஸத்தவ ப்ரதா4ன: ஸ்வயம்
ஜீவேsஸ்மின் க2லு நிர்விகல்ப மஹிமத் யுத்3போ3த4 நிஷ்பாத3க : |
சக்ரேsஸ்மின் ஸவிகல்ப போ3த4க மஹன் தத்வம் மஹான் க2ல்வசௌ
ஸம்புஷ்டம் த்ரிகு3ணைஸ் தமோsதி ப3ஹுலம் விஷ்ணோ ப4வத் ப்ரேரணாத் || (5 – 5)

மஹத் தத்துவம் முக்குணங்களின் ரூபமாக இருக்கின்றது. இவற்றில் சத்வ குணம் பிரதானமாக இருந்து கொண்டு ஒரு ஜீவனிடம் ‘நான்’ என்னும் அறிவை உண்டாக்குகின்றது. எங்கும் நிறைந்துள்ள ஈசா! மஹத் தத்துவம் மூன்று குணங்களாக விருத்தி அடைந்த போது, தமோ குணம் நிறைந்த ஜீவாத்மாவிடம் ‘நான் மனிதன்’ என்ற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணமே அந்த ஜீவனில் அஹங்காரத்தை சிருஷ்டித்தது.
(5 – 5)
 
த3ச’கம் 5: விராட் புருஷோத்பத்தி ப்ரகார வர்ணனம்

ஸோsஹம் ச த்ரிகு3ண க்ரமாத் த்ரிவித4 தாமாஸாத்3ய வைகாரிகோ
பூ4யஸ் தைஜஸ தாமஸாவிதி ப4வன்னாத்3யோன ஸத்தாவாத்மனா |
தே3வானிந்த்3ரிய மாநினோs க்ருத தி3சா’வாதார்க்க பாச்’யச்’விநௌ
வஹ்நீந்த்3ராச்யுத மித்ராகான் விது4விதி4 ஸ்ரீ ருத்3ர சா’ரீர கான் || (5 – 6)


உற்பத்தியானவுடன் அஹங்காரம் முக்குணங்களுடன் இணைந்து வைகாரிகம் ( சாத்விக அஹங்காரம்), தைஜசம் (ராஜச அஹங்காரம்), தாமச அஹங்காரம் என்று மூன்றாகப் பிரிந்தது. வைகாரிகத்திலிருந்து திசைகள், வாயு, சூரியன், சந்திரன், வருணன் அஸ்வினி தேவதைகள், அக்னி, இந்திரன், விஷ்ணு, மித்திரன், பிரஜாபதி, பிரமன், ருத்ரன், க்ஷேத்ரக்ஞன் என்ற இந்திரியங்களின் அபிமான தேவதைகளை சிருஷ்டித்தது. (5 – 6)
 
பூ4மன் மானஸ பு3த்3த்4யஹங்க்ருதி மிலச் சித்தாக்2ய வ்ருத்யன் விதம்
தச்சாந்த:கரணம் விபோ4 தவ ப3லாத் ஸத்வாம்ச’ ஏவாஸ்ருஜத் |
ஜாதஸ் தைஜாஸதோ த3சே’ந்த்3ரிய க3ணஸ் தத்தாமஸாம் சா’த்புன:
தன்மாத்ரம் நப4ஸோ மருத்புரபதே ச’ப்தோsஜனி த்வத்ப3லாத் || (5 – 7 )



தங்கள் ஏவுதலால் சாத்விக அஹங்காரம் மனது, புத்தி, சித்தம், அஹங்காரம் என்னும் நான்கு அந்தக்கரணங்களைச் சிருஷ்டித்தது. ராஜச அஹங்காரத்திலிருந்து பத்து இந்திரியங்களின் கூட்டம் தோன்றியது. தாமஸ அஹங்காரத்திலிருந்து ஆகாசத்தில் சூக்ஷ்மமான ஒரு சப்தம் உண்டாயிற்று.
(5 – 7)
 
ச’ப்தா3த்3 வ்யோம தத: ஸஸர்ஜித2 விபோ4 ஸ்பர்ச’ம் ததோ மாருதம்
தஸ்மாத்3 ரூபமதோ மஹோsத ச ரஸம் தோயம் ச க4ந்த3ம் மஹீம் |
ஏவம் மாத4வ பூர்வ பூர்வ கலனாதா3த்3யாத்3ய த4ர்மான்விதம்
பூ4த க்3ராமமிமம் த்வமேவ ப4க3வன் ப்ராகாச’யஸ் தாமஸாத் || (5 – 8)

சப்தத்திலிருந்து ஆகாசத்தையும்; ஆகாசத்திலிருந்து ஸ்பர்சத்தையும், ஸ்பர்சத்திலிருந்து வாயுவையும்; வாயுவிலிருந்து ரூபத்தையும்; ரூபத்திலிருந்து தேஜஸ்சையும், தேஜஸ்சிலிருந்து ரசத்தையும்; ரசத்திலிருந்து ஜலத்தையும்; ஜலத்திலிருந்து கந்தத்தையும்; கந்தத்திலிருந்து பூமியையும் படைத்தீர்கள். இவ்வாறு வரிசையாக பஞ்ச தன்மாத்திரைகளையும் பஞ்ச பூதங்களையும் தாமஸ அஹங்காரத்திலிருந்து சிருஷ்டித்தீர்கள் நீங்கள்.(5 – 8)
 
ஏதே பூ4த க3ணாஸ் ததே2ந்த்3ரியக3ணா
தே3வாச்’ச ஜாதா: ப்ருத2க்
நோ சே’குர் பு4வனாண்ட3 நிர்மிதி விதௌ4
தே3வைரமீ பி4ஸ்ததா3 |
த்வம் நானாவித4 ஸூக்திபி4ர் நுத கு3ணஸ்
தத்தவான் யமூன்யாவிச’ம்
சேஷ்டாச’க்தி முதீ3ர்ய தானி க4டயன்
ஹைரண்ய மண்ட3ம் வ்யதா4 : ||( 5 – 9)


பூதக் கூட்டங்களும், இந்திரியக் கூட்டங்களும், அவற்றின் அபிமான தேவதைகளும் தனித் தனியாக இருந்ததால் அவைகளால் பிரம்மாண்டத்தைச் சிருஷ்டிக்க முடியவில்லை. இந்த தேவதைகள் பல விதமாகத் தங்களைத் துதித்தன. அப்போது தாங்கள் மஹத் முதலிய தத்துவங்களில் பிரவேசித்தீர்கள் . அவற்றுக்குக் கிரியா சக்தியைத் தந்து அவைகளை ஒன்றோடு ஒன்று கலந்தும் சேர்த்தும் ஸ்வர்ணமயமான இந்தப் பிரம்மாண்டத்தைச் சிருஷ்டித்தீர்கள். (5 – 9)
 
அண்ட3ம் தத்க2லு பூர்வ ஸ்ருஷ்ட ஸலிலேsதிஷ்ட2த் ஸஹஸ்ரம் ஸமா:
நிர்பி4ன்தன்ன க்ருதா2ச்’ சதுர் த3ச’ ஜக3த் ரூபம் விராடா3ஹ்வயம் |
ஸாஹஸ்ரை: கரபாத3மூர்த்த4நிவஹைர் நி :சே’ஷ ஜீவாத்மகோ
நிர்பா4தோsஸி மருத்புராதி4ப ஸ மாம் த்ராயஸ்வ ஸர்வா மயாத் || (5 – 10)
.
அந்த பிரம்மாண்டம் அதற்கும் முன்பே சிருஷ்டிக்கப்பட்ட நீரில் ஆயிரம் ஆண்டுகள் இருந்தது. தாங்கள் அதனுள் பிளந்து கொண்டு சென்று பதினான்கு லோகங்களின் வடிவுடன் விராட் புருஷன் என்ற பெரிய வடிவத்தை எடுத்துக் கொண்டீர்கள் அனேக ஆயிரம் கைகள், கால்கள், தலைகள் என்று அனைத்து சராசரங்களின் சமஷ்டி ஜீவனாகத் தாங்கள் தோன்றினீர்கள். அப்படிப்பட்ட தாங்கள் என்னை எல்லா விதமான வியாதிகளிலிருந்தும் காப்பாற்ற வேண்டும். (5 – 10)
 
த3ச’கம் 6 விராட்3தே3ஹஸ்ய ஜக3தா3த்மத்வ வர்ணனம்.

ஏவம் சதுர்த3ச’ ஜக3ன்மயதாம் க3தஸ்ய
பாதாலமீச’ தவ பாத3 தலம் வத3ந்தி |
பாதோ3ர்த்4வ தே3ச’மபி தே3வ ரஸாதலம் தே
கு3ல்ப2த்வயம் க2லு மஹாதல மத்3பு3தாத்தமன் || (6 – 1)



பதினான்கு உலகங்களாக உருவெடுத்த தங்களுடைய உள்ளங் கால்கள் பாதாள லோகம் ஆகும்; தங்கள் காலடியின் மேல் பாகம் ரசாதலம் ஆகும்; தங்கள் கணுக் கால்கள் மகாதலம் ஆகும் என்று முனிவர்கள் கூறுகின்றனர். (6 – 1)
 
ஜங்கே4 தலாதலமதோ2 ஸுதலம் ச ஜானு
கிஞ்சோருபா4க3 யுக3ளம் விதலாதலே த்3வே |
க்ஷோணிதலம் ஜக4ன மம்ப3ரமங்க3 நாபி4ர் வக்ஷச்’ச
ச’க்ர நிலயஸ் தவ சக்ரபாணே || (6 – 2)

சக்ரபாணி! தங்கள் முழங்கால்கள் தலாதலம் ஆகும்; முட்டுகள் சுதலம் ஆகும்; தொடைகளின் கீழ், மேல் பாகங்கள் விதலம் அதலம் என்ற இரண்டாக ஆகும்; கடிப் பிரதேசம் பூலோகம் ஆகும்; நாபி ஆகாசம் ஆகும்; மார்பு சுவர்க்க லோகம் ஆகும். (6 – 2)
 
க்3ரீவா மஹஸ்தவ முகம் ச ஜனஸ் தபஸ்து
பா2லம் சி’ரஸ்தவ ஸமஸ்த மயஸ்ய ஸத்யம் |
ஏவம் ஜக3ன்மயதனோ ஜக3தா3ச்’ரிதைரபி
அன்யைர் நிப3த்3த4 வபுஷே ப4க3வன் நமஸ்தே || (6 – 3)

தங்கள் கழுத்து மஹர் லோகம் ஆகும்; தங்கள் முகம் ஜனர் லோகம் ஆகும்; தங்கள் நெற்றி தபோ லோகம் ஆகும்; தங்கள் தலை சத்ய லோகம் ஆகும். இவ்விதம் பதினான்கு உலகங்களையும் சரீரமாக உடைய பகவன்! தங்களுக்கு நமஸ்காரம்! (6 – 3)
 
த்வத்3 ப்3ரஹ்மரந்த்4ர பத3மீச்’வர விச்’வகந்த3
ச3ந்தா3ம்ஸி கேச’வ க4னாஸ்தவ கேச’பாசா’: |
உல்லாஸி சில்லி யுக3ளம் த்3ருஹிணஸ்ய கே3ஹம்
பக்ஷ்மாணி ராத்ரி தி3வசௌ ஸவிதா ச நேத்ரே || (6 – 4)

ஜகத்காரணனான ஈசா ! தங்களின் பிரமரந்திரம் வேதங்கள் ஆகும்; தங்களுடைய கேசமே மேகம்; பிரகாசிக்கும் இரு புருவங்களும் பிரமனின் வீடு; கீழ் இமைகள் இரவு; மேல் இமைகள் பகல்; கண்கள் சூரியன். (6 – 4)
 
நிச்’சே’ஷ விச்’வரசனா ச கடாக்ஷ மோக்ஷ:
கர்ணௌ தி3சோ’ s ச்வியுக3ளம் தவ நாஸிகே த்3வே |
லோப4த்ரபே ச ப4கவன்னத4ரோத்த ரோஷ்டௌ2
தராகணாச்’ச ரத3னா: ச’மனச்’ச’ த3ம்ஷ்ட்ரா || (6 – 5 )

தங்கள் கடைக் கண் பார்வை சமஸ்தப் பிரபஞ்சத்தின் திருஷ்டி ஆகும்; காதுகள் திசைகள் ஆகும்; இரண்டு நாசித் துவாரங்கள் அஸ்வினி தேவதைகள்; கீழுதடு லோபம்; மேலுதடு லஜ்ஜை; பற்கள் நக்ஷத்திரக் கூட்டங்கள், தெற்றுப்பல் யமன் ஆவான். (6 – 5)
 
த3ச’கம் 6 விராட்3தே3ஹஸ்ய ஜக3தா3த்மத்வ வர்ணனம்.

மாயா விலாஸ ஹஸிதம் ஸ்வஸிதம் ஸமீரோ
ஜிஹ்வா ஜலம் வசன மீச’ ச’குந்த பங்க்தி: |
ஸித்3தா4த3ய: ஸ்வரகண முக2ரந்த்4ர மக்3னிர்
தே3வா பு4ஜா: ஸ்தனயுக3ம் தவ த4ர்ம தே3வ: || (6 – 6 )


ஹே ஈசனே! உங்கள் புன்சிரிப்பு மாயை ஆகும்; மூச்சுக் காற்று வாயு ஆகும்; தங்கள் நாக்கு ஜலம் ஆகும்; தங்கள் வாக்குப் பறவைக் கூட்டம் ஆகும்; தங்கள் ஸ்வரங்கள் சித்தர்கள் ஆகும்; வாய் அக்கினி ஆகும்; கைகள் தேவர்கள் ஆவர், ஸ்தனங்கள் தர்ம தேவன் ஆவான். (6 – 6)
 
ப்ருஷ்ட2ம் த்வத4ர்ம இஹ தே3வ மன; ஸுதா4ம்சு’
ரவ்யக்தமேவ ஹ்ருத3யாம்புஜமம்புஜாக்ஷ |
குக்ஷி: ஸமுத்ர நிவஹா வஸனம் து ஸந்த்4யே
சே’ப: ப்ரஜாபதி ரசௌ’ வ்ருஷணௌ ச மித்ர :|| (6 – 7)


தங்களின் பின்புறம் அதர்மம் ஆகும் ; மனது சந்திரன் ஆகும்; ஹ்ருதயத் தாமரை முக்குணங்களின் சாம்யாவஸ்தை ஆகும்; வயிறு சமுத்திரங்கள் ஆகும் ; வஸ்திரங்கள் இரண்டும் சந்திகள் ஆகும்; ஜனநேந்த்ரியம் பிரஜாபதி ஆவான்; அண்டங்கள் மித்திரன் ஆகும். (6 – 7)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top