My jokes in Tamil and English

Status
Not open for further replies.
அவர் தேர்தல்லே தோத்ததனாலே மொட்டை அடிச்சிக்கிட்டு இருக்காரு.

தேர்தல்லே ஜெயிச்சிருந்தார்னா நமக்கெல்லாம் மொட்டை அடிச்சிருப்பாரு.
 
But for Thomas Alwa Edison, who invented light bulbs, we would all be watching television in the dark.
Xxx
 
செத்துப் போனவங்க உயிரோடு வர சமாசாரத்தை நீங்க பாத்திருக்கீங்களா?
இல்லை சார்.
நான் பாத்தேன். உங்க மாமா செத்துப் போனதாகச் சொல்லி நீங்க நேத்து லீவு போட்டீங்களா?
ஆமாம்.
அவர் நேத்து சாயந்திரம் உங்களைத் தேடிக்கிட்டு ஆபீஸுக்கு வந்து இருந்தார்.
 
குதிரைப் பந்தயத்துக்குப் போனியே ஏதாவது விழுந்ததா?
ஓ! விழுந்ததே நான் பணம் கட்டின குதிரை. கால் தடுக்கிக் கீழே விழுந்தது.
 
Here’s all you have to know about men and women: women are crazy, men are stupid. And the main reason women are crazy is that men are stupid.
– George Car
 
படம் எடுத்து நஷ்டப் பட்டா, இப்ப எல்லாம், அந்த நடிகர்தான் காரணம்னு சொல்லிப் பணத்தைத் திரும்ப வாங்கிடலாம்.
அப்படியா சொல்றீங்க? என் பையன் படிச்சி ஃபெயில் ஆயிட்டான். அவனுக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார்கள் கிட்டே இருந்து அவன் படிப்புக்கான செலவு பூராவையும் நான் திரும்பி வாங்கறதுக்கு இது ஒரு நல்ல முன் உதாரணம். இதைச் சொல்லி நான் ஸ்கூலுக்கு அவனுக்காகக் கட்டின அத்தனை பணத்தையும் திரும்ப வாங்கிவிட வேண்டியதுதான்.
 
என்ன, பாகவதர் சபையிலே ஒரு கேள்வி கேட்டவரைப் பாத்து அந்த மாதிரி பேசிட்டார்?
பாகவதர்க்கு சங்கீதம்தான் தெரியல்லேன்னு நெனச்சேன். இங்கிதமும் அவருக்குத் தெரியல்லேன்னு இப்ப தெரிஞ்சி போச்சு.
 
You know… There is a name for people who are always wrong about everything all the time… Husband!!!
– Bill Maher
 
Men are the head of the family ,
Women are the neck ,
they can turn the head
wherever and whenever they please
 
At my age I do what Mark Twain did. I get my daily paper, look at the obituaries page and if I'm not there I carry on as usual. xyz
 
அந்த நோயாளியை ஏன் கைது செஞ்சிருக்காங்க?
அவர் ஒரு தீவிர வியாதியிலே கஷ்டப் பட்டுக் கொண்டு இருக்கிறதா அவங்க வீட்டுக்காரங்க சொன்னதைப் பக்கத்து வீட்டுக்காரர் தவறாக் கேட்டுட்டு அவர் ஒரு தீவிரவாதின்னு போலீஸூலே கம்ப்ளெயிண்ட் பண்ணவே அவரைப் போலீஸ் கைது பண்ணிடுச்சு.
 
வழக்கமாக ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவுக்காக தவம் செய்பவர்)
எப்பவும் இந்த ஆட்டோ ஸ்டாண்டுலே நாம கூப்பிடற இடத்துக்கு வர மாட்டேன்னு சொல்ல ஒரு நாலு அஞ்சு ஆட்டோவாவது இருக்கும். ஆனா இன்னிக்கி அப்படி சொல்ல ஒரு ஆட்டோவைக் கூடக் காணோமே.
 
When you see a homeless man, feel no pity.
He is a hopeless man,
For he should have listened to his wife.
xyz
 
Always remember:
When SHE cancels a date, it is because..
“She has to.”
But
When HE cancels a date, it is because..
“He has two.”
 
ஏன் இலாக்கா இல்லாத முதல்வரா இருக்க முடிவு பண்ணினீங்க?

ஆட்சியிலே ஏதாவது தப்புத் தண்டா நடந்தாக்கூட என்னை எந்த இலாக்காவுலே நடக்கிற தப்புக்கும் பொறுப்பு ஆக்க முடியாது பாருங்க.
 
உங்க பையனைப் பாத்து ரொம்ப வருஷம் ஆச்சு. அவனக் காணமே. எங்கே போயிருக்கான்?

பட்டம் வாங்கப் போயிருக்கான்.

பரவாயில்லியே. பட்டம் வாங்கற அளவு அவ்வளவு பெரிய பையனா?

நீங்க வேறே. அவன் வயசு 12. அவன் கடைக்குப் போயிருக்கான் காத்துலே பறக்க விடற பட்டம் வாங்க.
 
Aadhar not mandatory for booking rail or air tickets
But now, Aadhaar required for death certificates
News
NEW DELHI: , August 04, 2017 16:17 I
Now without Aadhar, you can't die. Even if you die, you can't be burnt or buried?
So what about those who die in railway or air accidents?
 
Men only have two faults,
everything they say is one
and everything they do is another. xyz
 
வக்கீல் ஐயா, நான் செய்யாத தப்புக்கு மூணு வருஷம் ஜெயில்லே இருந்துட்டேன். இப்ப உங்க உதவியாலே உண்மை தெரிஞ்சு என்னை விடுதலை பண்ணிட்டாங்க. ஏங்க? எந்த மாதிரி தப்புகளுக்கு மூணு வருஷம் தண்டனை கிடைக்கும்?
எதுக்குக் கேட்கிறே?
அனுபவிச்ச தண்டனையை நியாயப் படுத்த அதுக்கேத்த மாதிரியான தப்பைப் பண்ணினாத்தான் என் மனசு சமாதானமடையும். அதுக்குத்தான் கேட்கிறேன்.
 
Status
Not open for further replies.
Back
Top