My jokes in Tamil and English

Status
Not open for further replies.
உங்க மாட்டுப்பொண் குளிக்காம இருக்காளாமே?
அட இது ஊர் பூராவும் தெரிஞ்சி போச்சா? வாரத்துக்கு ஒரு நாள் தான் குளிக்கிறா. தினமும் குளிடீன்னு சொன்னா நான் தண்ணியில்லாத ஊர்லேயிருந்து வந்திருக்கேன். எங்க ஊர்லே அப்படித்தான் வழக்கம்னு சொல்றா.
 
அந்தப் பெரியவரை அவங்க வீட்டிலே அப்படி விழுந்து விழுந்து கவனிக்கிறாங்களே. என்ன விசேஷம்?
வேறே ஒண்ணுமில்லை. அரசாங்க வேலையிலிருந்து ரிடையராகி கை நிறைய பென்ஷன் வாங்குறாரில்லே. அதான்.
 
அரசர்: மந்திரியாரே, என்னோட இ மெயிலைத் திறக்க முடியவில்லை.
மந்திரி: ஏன் அரசே?
அரசர்: பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டது .
மந்திரி: பாஸ்வேர்ட் உங்கள் மனைவி பெயரைத்தானே வைத்ததாகச் சொன்னீர்கள் அரசே.
அரசர்: ஆம். ஆனால் எந்த மனைவி என்பதை மறந்துவிட்டேன்.
மந்திரி: (மனதிற்குள்) நாளுக்கு ஒரு திருமணம் செய்து கொண்டால் இப்படித்தான்.
 
அவர் என்ன அப்படி ஒரு தமிழ் வெறியராயிருக்கார்?
ஏன்? எதை வெச்சி அப்படிச் சொல்றீங்க?
பின்னே என்னங்க? தூக்கம் வந்தா கொட்டாவி விடமாட்டாங்களா? அதைக் கூட அவர் தமிழர் பண்புன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு
 
நேத்து பெஞ்ச மழையிலே ரோட்டிலே எல்லாம் முழங்காலளவு தண்ணி. எங்க வீட்டுக்குள்ளேயே அரை அடித்தண்ணி. அப்படி இருக்கும்போது நேத்து பெஞ்ச மழை அளவு 2 சென்டிமீட்டர்தான்னு tvயிலே சொல்றாங்களே? கேக்கறவங்க எல்லாம் முட்டாள்னு நினைச்சுட்டாங்களா?
 
கம்ப்யூட்டர் ஜோக்ஸ்
வீட்டுக்கார அம்மா: போன மாசம் நீ சொல்லாம கொள்ளாம அஞ்சு நாள் வரலை.
வீட்டு வேலைக்காரி: நீங்க தப்பாச் சொல்றீங்க. நான் என் பையனோடே லாப்டாப்புலே எல்லாத்தையும் ரிகார்ட் பண்ணி வெச்சிருக்கேன். கரெக்டா நாளு நாள் தான் வரலை அதுவும் சொல்லாம கொள்ளாம இல்லை. உங்களுக்கு ஈ மெயில் அனுப்பி இருந்தேனே பாக்கலையா?
 
என்னடி, உன் மாமியாரை நாலு பேர் போட்டு அடிச்சிக் கிட்டு இருக்காங்களே, உதவறத்துக்கு நீ போகலையா?
இல்லை. அந்த நாலு பேரே போதும்.
 
நம்ம தலைவர் நடத்தின சிறப்புக் கூட்டத்தின் போது ஏகப்பட்ட செருப்புகள் வந்து விழுந்ததே. கவனிச்சீங்களா?
ஆங். கவனிச்சேன், கவனிச்சேன். கடைசியிலே சிறப்புக் கூட்டம் செருப்புக் கூட்டமா மாறிப்போச்சு.
 
சீனு: படம் பார்க்கலாம்னு போனேன். ஒரே கும்பலா இருந்தது. திரும்பி வந்துட்டேன்.
கோபு: நானும் படம் பார்க்கலாம்னு போனேன். கும்பலே இல்லை. அதனாலே திரும்பி வந்துட்டேன்.
 
நம்ம தலைவர் நடத்தின சிறப்புக் கூட்டத்தின் போது ஏகப்பட்ட செருப்புகள் வந்து விழுந்ததே. கவனிச்சீங்களா?
ஆங். கவனிச்சேன், கவனிச்சேன். கடைசியிலே சிறப்புக் கூட்டம் செருப்புக் கூட்டமா மாறிப்போச்சு.
 
இந்தப் படத்துக்கு எந்த முட்டாள் கதை எழுதினான்னு தெரியல்லே.
ஏன்? நான் தான்.
மன்னிக்கணும். கதை பரவாயில்லை. வசனம்தான் கெடுத்துடுத்து. அதை எழுதினவன் சரியான மடையன்.
சாரி!வசனம் எழுதினதும் நான்தான்.
அடேடே அப்படியா? வசனம்கூட பரவாயில்லை. டைரக்ஷன் தான் சுத்த மோசம்.
அந்தப் படத்தோட டைரக்டரும் நான் தான்.
அய்யய்யோ! என்னை மன்னிக்கணும். நீங்கயாருன்னு தெரியாம உங்க கிட்டே ஏதேதோ சொல்லிட்டேன்.
அதனாலே பரவாயில்லை. எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.
என்ன சந்தோஷமா?
ஆமாம். ஏன்னா இவ்வளவு கஷ்டப் பட்டு நான் எடுத்த படத்தைப் பாத்ததே
நீங்க ஒத்தர்தானே.
 
ஆபீஸுலே வேலை செய்யற எல்லாரும் லீவு வந்ததுன்னா சந்தோஷப் படுவாங்க. நீங்க என்ன சார் இப்படி அலுத்துக்கிறீங்க?
லீவு விட்டா வீட்டுலே தொந்திரவு தாங்க முடியாது. இங்கே அழைச்சுக்கிட்டு போங்க அங்கே அழைச்சிக்கிட்டுப் போங்கன்னு ஆளுக்கு ஆள் தொந்திரவு. கடைக்குப் போய் அதை வாங்கிக் கொடுங்கன்னு இதைவாங்கிக் கொடுங்கன்னு பிச்சிப் பிடுங்கல். ஏகப்பட்ட அலைச்சல். எக்கச்சக்கமான செலவு வேறே. அதே, ஆபீஸ் இருந்தா அலையாம கொள்ளாம ஆபீஸ் நாற்காலியிலே சௌகரியமா சாஞ்சிக்கிட்டு ஆபீஸ் செலவுலே ஃபேன், லைட் எல்லாம் பேட்டுக்கிட்டு அப்பப்போ துங்கிக்கிட்டு எந்தச் செலவுமில்லாம நல்லாப் பொழுது போகும். அப்படிஇருக்கும்போது.....
 
இப்ப எல்லாம் என் பொண்ணு அவ ஃப்ரெண்டோட தினமும் ஃபோன்லே நாலு மணி நேரம், அஞ்சு மணி நேரம் பேசறா. என்னடீன்னு கேட்டா, நீ தானே அம்மா 'உன் ஃப்ரெண்டோடே ஒரு நாளைக்கு நூறு தரம் பேசறே. இனிமேலே ஒரு நாளுக்கு ஒரு தரத்துக்கு மேலே பேசக்கூடாதுன்னு கண்டிப்பா சொன்னே' ன்னு சொல்றா.
 
எலக்டிரிக் போஸ்ட் மேலே ஏறி அங்கே அறுந்துபோன ஒயரை சரி பண்ண அனுப்பியவரைப் பார்த்து கீழே இருந்தபடி எலக்ட்ரீஷியன்:
"தம்பி எந்த ஒயர் லைவ் ஒயர், எது டெட் ஒயர்னு முதல்லே கண்டு பிடிக்கணும். என்ன? உங்கிட்டே டெஸ்டர் இல்லியா? சரி. நீ இப்ப இடது பக்க ஒயரைத் தொடு."
(சற்று நேரம் கழித்து)
உனக்கு ஒண்ணும் ஆகல்லியே. நல்ல வேளை. தப்பித் தவறியும் வலது பக்க ஒயரைத் தொட்டுடாதே. உயிர் போயிடும்.
 
Wife - You hate my relatives!
Husband – No darling, I don’t! In fact, I like your mother-in-law more than I like mine.
 
ஆமாம், உனக்கு இப்ப என்ன சம்பளம்?
வருஷத்துக்கு 6 லட்சம்.
பரவாயில்லியே. எந்தக் கம்பெனியிலே?
கம்பெனியா? என்ன சொல்றீங்க நீங்க? நான் காலேஜ் ஸ்டூடண்ட். நான் காலேஜூக்குக் கட்டின சம்பளத்தைச் சொன்னேன்.
 
டாக்டர் சார், தினமும் இந்த வலி எனக்கு அரை மணிக்கு ஒரு தரம் வருது. வந்தா ஒரு மணி நேரத்துக்குக் குறைஞ்சு போறதேயில்லை.
 
உங்க பையன் உங்களை எப்படி கவனிச்சிக்கறான்?
அவன் என்னை தன்னோட சொந்தப் பிள்ளையை எப்படி கவனிச்சிப்பானோ அதே மாதிரி தான் என்னையும் கவனிச்சிக்கிறான்.
அடாடா, கேக்கறதுக்கே நல்லா இருக்கே. நீங்க கொடுத்து வச்சவர்தான்.
ஆமாம். அவன் பிள்ளையை எப்படி அடிச்சி, கண்டிச்சி, திட்டி கவனிச்சிக்கிறானோ, அதே மாதிரிதான் என்னையும் கவனிச்சிக்கிறான்னேன்..
 
மாமி நான் எம் பொண்ணுக்கான ஜாதகத்தைப் பார்த்துண்டு இருந்தப்போ எங்காத்து கம்ப்யூட்டர் crash ஆயிடுத்து. ஒரு மணி நேரம் உங்க laptop ஐக் கொடுத்தேள்னா நான் அந்த ஜாதகங்களை ப் பார்த்துட்டு உடனே திருப்பித்தந்துடறேன்.
 
என்னங்க நீங்க சொல்றது நல்லாவா இருக்கு? டிரஸ் பண்ணிக்க அந்த நர்ஸ் கிட்டே போகணும்னு சொல்றீங்க?
ஆமாங்க. முழங்கால்லே ரொம்ப ஆழமா ஒரு சிரங்கு புறையோடிப் போயிருக்கு.. அதுக்கு தினமும் கட்டுப் போட்டு டிரஸ் பண்ணி விடறது அந்த நர்ஸ்தாங்க.
 
ஒரு சோத்துப் பருக்கை கூட கெடைக்காம அவன் நேத்துத் திண்டாடிப் போயிட்டான்.
அடப் பாவமே. படு பட்டினியா?
படு பட்டினியுமில்லே. படுசட்டினியுமில்லே.கோந்து கவரை ஒட்ட மாட்டேன்னுட்டுது. அதுக்காக சோத்துப் பருக்கையைத் தேடித் திண்டாடினான்னு சொன்னேன்.
 
எங்கே அவர் அவ்வளவு வேகமா ஓடறார்?
அவருக்கு ஹார்ட் அட்டாக் வரதுக்கான அறிகுறி தெரியறதாம். அது வரதுக்குள்ளே வீட்டுக்குப் போயிடணும்னு அப்படி ஓடறார்.
 
நாம அடைஞ்சது முன்னேற்றமா பின்னேற்றமானே தெரியல்லே
ஏன்?
ஒரு நாட்டுலே இருந்து இன்னொரு நாட்டுக்குப் போற நேரம் வருஷா வருஷம் குறைஞ்சுக் கிட்டே போகுது. ஆனால் உள்ளூரிலே ஒரு இடத்துலே இருந்து இன்னொரு இடத்துக்குப் போற நேரம் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுதே.
 
மத்தவங்க செய்யற தவறுகளிலிருந்து நாம கத்துக்கணும்னு சொல்றாங்களே அது எதுக்காக?
நாமே அவ்வளவு தவறுகளையும் செஞ்சு கத்துக்கறதுக்கு நமக்கு ஆயுசு பத்தாதில்லையா? அதனால்தான்.
 
Status
Not open for further replies.
Back
Top