My jokes in Tamil and English

Status
Not open for further replies.
உண்மைச் சம்பவம்
சார், நீங்க சபரி மலைக்கு எத்தனை தரம் போயிருப்பீங்க?
ஒரு தரம் கூட போனதில்லை.
அப்படின்னா எப்படி சார் இவங்க எல்லாரும் உங்களை குருசாமின்னு கூப்பிடறாங்க?
எனக்கு எங்க அம்மா அப்பா வச்ச பேரு குருசாமிங்க. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?
 
அம்மா, கண்ணுலே கிரிக்கட்டி வந்திருக்கு.
எப்பப் பார்த்தாலும் டிவியிலே கிரிக்கெட் பார்த்துக் கிட்டே இருந்தா கண்ணுலே கிரிக்கெட் வராம பின்னே என்ன ஃபுட்பாலாவரும்?
 
என்ன இது? அறுபதாம் கல்யாணமும் அதுவுமா மாமா தலையிலே ஷவர் கேப் போட்டுண்டு இருக்கார். மாமி என்னடான்னா ஷவர் கேப்போடே ரெயின் கோட்டு வேறே போட்டுண்டு இருக்காளே?
அதுவா? மாமாவுக்கு கடுமையான ஜலதோஷம். மாமிக்குப் பச்சைத்தண்ணி ஒத்துக்காது. இப்போ ரெண்டு பேர் தலையிலேயும் ஹோம ஜலத்தை ஜல்லடை மூலமா ஷவர் மாதிரி கொட்டப் போறாளோன்னோ. அதனாலே ரெண்டு பேரும் ஜுரம் வராம இருக்கறதுக்காக அப்படி ஒரு பாதுகாப்பு செஞ்சிண்டிருக்கா.
 
அவர் எடுத்த 'காணாமற் போன காட்சி' ங்கற படம் என்ன ஆச்சு?
அந்தப்படம் சென்ஸாருக்குப் போயி அதுலே 40 நிமிஷக் காட்சிகளை சென்சார் நீக்கிட்டாங்க. படம் வெளியிடறதுக்கு முன்னாலே மத உணர்வுகளைப் புண் படுத்தறதாச் சொல்லி இந்துக்களும், தீவிர வாதிகளையெல்லாம் முஸ்லீம்களாக் காட்டறாங்கன்னு சொல்லி முஸ்லீம்களும், மத மாற்றத்தைக் கொச்சைப் படுத்துவதாகவும் சொல்லி கிறுஸ்தவர்களும் படத்தைத் தீவிரமா எதிர்த்ததாலே சில சில காட்சிகள், சில சில வசனங்கள், சில சில பாடல்கள் இதையெல்லாம் வெட்டப்போக வெறும் டைட்டில் மாத்திரம்தான் மிஞ்சிச்சாம். அதனாலே அந்தப் படமே இப்ப பெயருக்கு ஏத்த மாதிரி 'காணாமற் போன காட்சி'யா ஆயிட்டதனாலே என்ன பண்றதுன்னே தெரியாமல் தலையிலே ஒரு துண்டு கூட போட்டுக்க வக்கில்லாமல் படாதிபதி தவிச்சிக்கிட்டிருக்கார்.
அதுக்குத்தான் எனக்கு என்ன தோணுதுன்னா இனிமே படம் எடுக்கிறவங்க சென்சார் போர்டுக்குக் காட்டறதுக்கு முன்னாடி எல்லா ஜாதித் தலைவர்களுக்கும், எல்லா கட்சித் தலைவர்களுக்கும், எல்லா மதத் தலவர்களுக்கும் போட்டுக்காட்டி
பிறகு சென்சார் போர்டுக்குப் போட்டுக் காட்டி அவங்க எல்லாரும் ஒத்துக்கிட்ட பிற்பாடு படத்தை ரிலீஸ் பண்ணணுங்கறேன்.
 
அதோ ரோடுலே கம்பீரமா நடந்து போய்க்கிட்டு இருக்காரே அவர் யார்?

அந்த ஆளா? அவர்தான் இந்த ஊரிலேயே பெரிய கேடி. அவர் பேர்லே ஏகப்பட்ட கேஸ் இருக்கு கொலை கேஸூகள் உள்பட.
 
என்னங்க? ரொம்ப சோர்ந்து போய் இருக்கீங்க?
படம் எடுக்கறதுக்கே பயமா இருக்குங்க. யாரைப் பத்தி படம் எடுத்தாலும் பிரச்சினையா இல்லே போயிடுது. அது தான். எப்படிப் படம் எடுக்கறதுன்னே புரியல்லியே..
நீங்க ஏன் கவலைப் படறீங்க? பேசாமல் பிராமணர்களைப் பத்தி படம் எடுங்க. அவங்களாலே எந்தப் பிரச்சினையும் வராது. அப்படி வந்தாலும் அவங்களே படத்தை நியாயப் படுத்தி தங்களை சமாதானப் படுத்திப் பாங்க.
 
யார் அவர்? பேச ஆரம்பிச்சா ஓயாமல் பேசிக்கிட்டேயிருக்கார். முடிக்கவே மாட்டார் போல இருக்கு
ஓ! அவரா? அவர் tv சீரியல் கதை எழுதறவர்
 
குடுகுடுப்பைக்காரன் விடியற்காலையில் சொன்ன குறி:
ஜய் ஜக்கம்மா, ஜய் ஜக்கம்மா, இந்த ஊருக்கு நல்ல காலம் பொறக்கப் போகுது. இந்த ஊருக்கு நல்ல காலம் பொறக்கப்போகுது. அடுத்த வருஷம் கரண்ட் கட் இல்லாம எல்லார் வீட்டுலேயும் விளக்கு எரியப்போவுது, கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷினெல்லாம் வேலை செய்யப்போகுது, ஊர்லே அங்கங்கே ரெண்டு மூணு குழாயிலே தண்ணி வரப்போகுது, உங்க பேட்டை m.l.a உங்க கண்ணுலே இந்த வருஷம் தட்டுப் படறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஜய் ஜக்கம்மா, ஜய் ஜக்கம்மா
 
நம்ம தலைவர் ஒரு தரம் சொன்னா நூறுதரம் சொன்ன மாதிரின்னு சொல்றாரு. ஆனா நம்ம வீட்டிலே நான் நூறுதரம் சொன்னாலும் ஒருதரம் சொன்ன மாதிரி கூட எடுத்துக்க மாட்டேங்கறா என் வீட்டுக்காரி.
 
Maths of Marriage

They say that marriage makes a man dizzy, and it's true.
As soon as I got a wife, I lost my balance at the bank.
 
Question: Why do women live longer than men? Answer: Shopping never causes heart attacks, but paying the bill does!
 
பசிச்சதுன்னு ஹோட்டலுக்குப் போனேன். நாலு தோசை சாப்பிட்டும் பசி அடங்கலை. அஞ்சாவது தோசை சாப்பிட்ட பிறகுதான் பசியே அடங்கிச்சு. பில் தான் ஜாஸ்தி ஆயிட்டுது.

போடா, பைத்தியக்காரா, அந்த அஞ்சாவது தோசையை முதல்லேயே சாப்பிட்டிருந்தா பசி அப்பவே அடங்கி இருக்கும், இவ்வளவு பில்லும் ஆயிருக்காது இல்லே?
 
What is your opinion about Jetley's Budget?
I have still not gone through it.
What if? Like our opposition who have already prepared their standard reaction to the budget even before it is presented, you can give your opinion. This is just an annual ritual that goes irrespective of whoever or whichever party presents the budget.
 
Till yesterday you were vehemently critical of the budget, but today all of a sudden, you have made a somersault supporting the budget.
Till yesterday I was in congress. Today, I have joined BJP.
 
எங்க குடும்பத்துலே நாங்க எங்க சொந்தத்துலேதான் கல்யாணம் பண்ணிக்கிற வழக்கம்.
ஓ! அப்படியா?
ஆமாம்.எங்க அம்மா எங்க அப்பாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். எங்க அண்ணன் என் அண்ணியைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். எங்க தாத்தா என்னோடே பாட்டியைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஏன்? நான்கூட என் பெண்டாட்டியைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
 
நம்ம வீட்டிலே நாம வளர்க்கிற, மரம் மாதிரி வளர்ந்திருக்கிற, நம்ம ஒரே பிள்ளையைப் பார்த்துத்தான் யாரோ வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்னு சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.
 
அவனுக்குக் குழந்ழை மனசு. வயசு ஏழு ஆறது. ஆனாலும் கிண்டியிலேதான் காபி குடிப்பேன்னு அடம் பிடிக்கிறான்.
ஏன்? அடையாறிலேயோ, சைதாப்பேட்டையிலேயோ காபி குடிக்க மாட்டானாமா?
நான் அதைச்சொல்லல்லை. சின்னக் குழந்தைங்க பால் குடிக்க நாம உபயோகிப்போமே அந்த கிண்டியைச் சொன்னேன்.
 
என்னஅங்கே வேலைக்காரியோட சண்டை?
பத்து பாத்திரம் தேய்க்கணும்னு சொல்லி வேலைக்கு அமர்த்திட்டு, இப்ப பன்னண்டு பாத்திரம் போட்டிருக்கீங்களே. இது என்ன நியாயம்? நான் அந்த அதிகப்படி ரெண்டு பாத்திரத்தையும் தேய்க்க மாட்டேன்னு சண்டை போடறா.
 
அவன்: இந்த வருஷம் எல்லாப் பண்டிகைகளும் ஞாயித்துக்கிழமை வந்து தொலைஞ்சதனாலே கிடைக்க வேண்டிய லீவு எல்லாம் வீணாயிடுத்து.
அசட்டுப் பிச்சு: நல்ல வேளையா இந்த வருஷம் Good Friday மாத்திரம் ஞாயித்துக்கிழமை வராம போச்சே.
 
உங்க ரேட் எவ்வளவு ஜோசியரே?
ரெண்டு கேள்விக்கு 500 ரூபா.
இவ்வளவு ஜாஸ்தியா இருக்கே. உங்களுக்கே இது நியாயமா இருக்கா?
சரி. ரெண்டு கேள்வி கேட்டுட்டீங்க. எடுங்க 500 ரூபாயை.
 
நம்ம ஊர் ஆத்துலே ரெண்டு பேர் மூழ்கி செத்துட்டாங்களாம்.

அப்படியா? ரெண்டு பேர் மூழ்கி சாகற அளவுக்கு ஆத்துலே தண்ணி இருக்கா? கேக்கவே சந்தோஷமா இருக்கே.
 
நம்ம தலைவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போறாராம்.
யார் சாகும் வரைங்க?


 
உன் பொண்ணுக்குப் பையன் பார்த்துண்டு இருந்தியே, பையன் கிடைச்சுட்டானா?
ஊஹூம். நாங்களும் தேடிண்டுதான் இருக்கோம். இதுவரையிலும் ஒண்ணும் சரியா திகையல்லே.

எனக்குத் தெரிஞ்சி ஒரு பையன் இருக்கான். அவன் இஞ்சினீரிங் கிராஜுவேட். Mbaயும் முடிச்சிட்டு டாடா கம்பெனியிலே கைநிறைய சம்பளம் வாங்கறான். பிக்கல் பிடுங்கல் கிடையாது. ஒத்தைப் பையன். அவனோட அப்பாவும் அம்மாவும் தங்கமானவா. பேசாம அவனுக்கு முடிச்சிடலாம்.
பையன் இந்தியாலே தான் வேலை செய்யறானா?
ஆமாம். இவ்வளவு படிச்சிருந்தாலும ரொம்பவும் அமெரிக்கையான பையன்.
அமெரிக்கையான பையனா இருக்கலாம். வேணாம். அமெரிக்கப் பையனா, அமெரிக்காவிலே இருக்கிற பையனா இருந்தா சொல்லு
 
Last edited:
A guide, showing an old lady through the Zoo, took her to a cage occupied by a kangaroo.
“Here, madam,” he said, “we have a native of Australia.”
“Good gracious,” she replied, “and to think my sister married one of them.”
 
A guide, showing an old lady through the Zoo, took her to a cage occupied by a kangaroo.
“Here, madam,” he said, “we have a native of Australia.”
“Good gracious,” she replied, “and to think my sister married one of them.”
 
Status
Not open for further replies.
Back
Top