• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#129. பொது எதிரி!

பறவைகள் ஒரு புறம், விலங்குகள் மறு புறம்,
புரிந்தன முடிவில்லாத உலக மகா யுத்தம்!

பாரத யுத்தம் போல பல நாட்கள் நீண்ட யுத்தம்!
பறவைகளும் விடவில்லை விலங்குகளும் தான்!

பறவைகள் கை ஓங்கிய போது வௌவால்,
பறந்து சென்று அந்தப் பக்கம் சேர்த்துகொண்டது.

“நானும் பறவை இனமே! என் இறக்கைகளை
நன்றாகப் பாருங்கள்”, என்று கூறியது அது.

விலங்குகள் கை ஓங்கிய போது வௌவால்,
விரும்பி அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டது .

“உங்களை போலவே நானும் குட்டி போட்டு,
உங்களைப் போலவே நானும் பால் தருகிறேன்”.

“வென்றது யார்? தோற்றுப் போனது யார்?”
என்று யாராலுமே சொல்ல முடியவில்லை!

“போதும் யுத்தம்” என்று இரண்டு தரப்பும்,
பேசி முடிவு செய்தன, போரும் முடிந்தது!

சமயத்திற்கு தகுந்தவாறு கட்சி மாறி மாறி,
சந்தர்ப்பவாதியாகச் செயல்பட்ட வௌவாலை,

விலங்குகளும், பறவைகளும் ஒரு மனதாக
விலக்கின; அன்று முதல் அது பொது எதிரி!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

#129. The common enemy.

A terrific war raged between the animals on one side and the birds on the other! The war was prolonged and the two sides showed signs of winning alternately.

When the birds were nearer to Victory, the bat would join their side claiming that he was a bird too – since he too had wings and he too could fly.

When the animals showed signs of victory, he would hurriedly join them claiming that he to was an animal since he was a mammal and his young ones fed on their mother’s milk.

Finally both the parties got tired of fighting and called off the war on mutual consent. The bat which was changing sides all along and proved to be opportunistic and unreliable became the common enemy of both the birds and the animals.

Moral of the story:
It pays to be faithful to your friends and not fickle minded and unreliable.
 
Despite the limited number of dresses and hand-me-downs from the older siblings we were much happier then - than now when the wardrobe is overflowing with clothes. At times I wish I did not have to organise so much clothes , sheets and pillow covers and curtains all the time!
true yes we were happier, in those times.
as we age so the probles multiply.
7205
 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#130. நிருகன் கதை

களித்து விளையாடிய கண்ணனின் மகன்கள்
களைத்து நீர் வேட்கை மிகுந்ததால் ஒரு
கிணற்றில் எட்டிப் பார்த்தனர்; அங்கே
கிண்ணென்று கல் போன்ற ஒரு ஓணான்.

அற்புதமான அதனை அவர்களால் வெளியே,
எத்தனை முயன்றும் தூக்க இயலவில்லை.
கண்ணனிடம் சென்று கூறினர் பிள்ளைகள்
மண்ணுலகோர் காணா விந்தையைப் பற்றி.

இடத்தை அடைந்த கண்ணன் தன் சிவந்த
இடக்கையால் தூக்கி வெளியே எடுத்தான்;
கண்ணன் கைபட்டவுடனேயே அந்த ஓணான்
பொன்னிற தேவனாகவே மாறி விட்டது!

பட்டாடைகளும், பலப்பல ஆபரணங்களும்
பளபளக்கும் ஒரு வாலிபனாக மாறியது.
பணிவுடன் கண்ணன் தாள்களை அவன்
பணிந்து தன் கதையைக் கூறலானான்.

அரசன் நிருகன் எனப்படுபவன் அவனே!
சிறந்த இக்ஷ்வாகு குலத்தின் மன்னன்;
கொடைவள்ளல் என்ற புகழ் பெற்றவனுக்கு
கொடையினாலேயே கொடுமை நிகழ்ந்தது.

காராம் பசுக்களை அந்தணர்களுக்கு தானம்
கோராமலேயே அளிக்குபோது, ஒருவனின்
கராம் பசுவும் மந்தையில் சேர்ந்துகொண்டது.
ஆராயாமல் அதையும் அளித்து விட்டான்.

பசுவின் சொந்தக்கார மனிதனுக்கும்
பசுவை தானம் பெற்ற மனிதனுக்கும்
பரபரப்பான வாக்குவாதங்கள் முற்றி
சமரசம் செய்ய முடியவே இல்லை.

அந்திமக் காலம் வந்த மன்னனிடம்,
“முந்தி தண்டனையா சுவர்க்கமா?”
வந்து வினவினான் யமதர்மராஜன்,
“தந்து விடு தண்டனையை முதலில்!”

“விழு!” என்றதும் ஒரு ஓணானாக மாறி
விழுந்தான் கிணற்றில் என்றோ ஒருநாள்!
விழுந்தவன் வெகுநாள் காத்திருந்தான்;
வேணு கோபாலனின் கை ஸ்பரிசத்துக்கு.

காத்திருந்தது சற்றும் வீண்போகவில்லை.
“காலமெல்லாம் உன்மீது நான் கொண்ட
பக்தி மாறாமலேயே நிலைத்து இருக்க
பக்தனுக்கு அருள் செய்வாய் கண்ணா!”

பொன் விமானத்தில் ஏறிக் கொண்டான்;
பொன்னுலகம் பறந்து சென்றான் நிருகன்.
நல்லதையே எண்ணிச் செய்யும் போதும்
நாம் எதிர்பாராத தீயவிளைவுகள் வரலாம்!

வாழ்க வளமுடன்
விசாலாக்ஷி ரமணி.

#130. King Nrugan

One day, the sons of Krishna SAmban, Pradhyumnan and others were playing for a long time and became very thirsty. They went to a nearby well, hoping to get a drink of water.

Inside the well there was no water. A large and heavy chameleon was found there. The children tried to take it out of the well, but it was very heavy and unmanageable!

They reported the matter to Krishna. He went to the well and took out the chameleon with his left hand as if it were a toy. The moment Krishna touched it, the chameleon transformed into a young and handsome man – dressed in silk clothes and adorned with various rich ornaments. He touched Krishna’s feet in reverence and related his story.

He was the famous IskvAku king named Nrugan. He was famous for his liberal gifts of cows to Brahmans and other charitable services to the citizens of his country.

One day a stray cow got mixed with the herd he had kept aside for gifting to the brahmins. Unknowingly he presented that stray cow to a brahmin.

When the brahmin who received the cow as a gift was leading it away, the real owner came there and demanded him to give back his cow.

The man who had received it as a gift would not part with it. The king proposed the gift of mare cows and gold coins in compensation for the cow. But neither the owner nor the receiver were willing to come to any kind of compromise!

When the King’s end came, Yama Dharman asked the king, “Do you want enjoy the swargam first or suffer the punishment first?” When the king opted for punishment, he was told to “Fall!”. He fell down transformed into a great chameleon and waited for deliverance by Krishna’s touch.

He begged that his bhakti for Krishna should never diminish. He got into golden chariot and flew off to Heaven.

We may perform an act of kindness with the best of intentions and still end up in a hot spot, due to the circumstances beyond our control.
 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#131. நிற்க ஓரடி நிலம்

ஒரு மிகப் பெரிய நிலச் சுவான்தார்,
ஒரு பெரிய வயல்வெளி உள்ளவர்;
போதும் என்ற மனம் இல்லாததால்,
பேராசை கொண்டு ஏங்கி நின்றார்.

ஒரு நாள் ஒரு விசித்திரமான கனவு,
ஒரு வினோத மனிதன், தன் மனம் விரும்பும்
நிலத்தைத் தனக்குத் தருவதாகக் கண்டு,
நனவாகுமா தன் கனவு என ஏங்கினார்!

மறுநாள் தன் வயல் வெளியில் அதே
மர்ம நபரை நனவிலும் கண்டார்.
மகிழ்ச்சியுடன் விரைந்து வந்தவரிடம்,
மனம் விட்டு இனிக்கப் பேசினான் அவன்.

“காலைக் கதிரவனுடன் நீயும் கிளம்பி,
மாலையில் அவன் மறையும் வரை,
நீ சுற்றி வரும் நிலம் எல்லாவற்றுக்கும்,
நீயே சொந்தம் கொண்டாடலாம் “.

கனவு நனவாவது கண்டு மகிழ்ந்து,
கரை காணாத உற்சாகத்துடன் அவர்,
கண்ணிமைக்குக் நேரத்தில் ஒரு சிறு
கன்றைப்போலத் துள்ளி ஒடலானார்!

“அதோ! அந்த நிலம் வளமையானது,
இதோ! இதுவும் நல்ல விளை நிலம் !”
தன் நிலை தெரியாமல் துள்ளி ஓடினார்;
மண் ஆசையால் மதி இழந்த மனிதர் .

கிளம்பிய இடத்திற்கே திரும்பினால் தான்,
கிடைக்கும் தான் சுற்றி வந்த நிலபுலன்கள் .
கதிரவன் மேற்கில் இறங்குவது கண்டு,
உதிரம் வற்றும்படி மிகவும் வேகமாக;

மூச்சுத் திணற, கண்கள் தெறிக்க, நா வரள,
உடல் நோக ஓடிக்கொண்டே இருந்தார்.
சூரியன் மறைந்து விட்டான் , இவரும்
சுருண்டு விழுந்தார் வெறும் பிணமாக!

மனிதன் நிற்க ஓர் அடி நிலம் போதும்,
மனிதன் இருக்க இரண்டு அடி நிலமும் ,
அவன் கிடக்க ஆறு அடி நிலமும் தேவை;
அனைவரும் அறிவார் இவ்வுண்மையினை.

இன்னமும் வேண்டும் என்று நினைத்து,
இன்னுயிர் போகும்படி பேராசையுடன்;
மாங்கு மாங்கென்று அங்கே ஒடுவனேன்?
மனிதன் தன் இன்னுயிரை விடுவானேன்?

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

#131. A dream come true?

A rich landlord owned several large fertile fields and yet he always coveted for more and more land secretly. He was neither satisfied nor happy in his heart. One night he had a strange dream. He saw a strange man in his dream who promised to gift him large area of fertile land!

Next morning, he met the same strange man in person, near his field. His dream had come true! The man told the landlord, “You may set out at sunrise and all the lands you go round during the day will be yours – provided you come back to the starting point before sunset”

The landlord could hardly believe his eyes or ears. But it was a genuine offer from a king hearted stranger.

The next morning he started dashing like an antelope as the Sun rose in the east. Each piece of land appeared to be more fertile than the previous one. So he kept on running like one truly possessed.

Soon it became a race between the Sun in the sky and the man on the earth! It would be sunset in a few minutes but he would possess all the land he had run around, only if he could reach the starting point before sunset.

He ran straining every muscle in his body. He was out of breath, hungry, thirsty and tired. But the only thought that kept him going was that he should reach the starting point soon.

The sun just disappeared in the west. The man just reached the starting point – only to drop down quite dead! The stranger was nowhere to be seen.

A man needs one square foot of land to stand upon, two square feet of land to sit upon an six square feet of land of sleep upon.
Why should anyone wish for more than his share of Good Fortune? Why should he become so greedy that he would rather lose his life than be contented with a little less?
 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#132. முற்பிறப்பு

முந்தைய பிறவியில் நாரத முனிவர்
தந்தையில்லாமல், தாய் ஒருத்தியின்,
துறவியரை அண்டிப் பிழைப்பவளின்,
வறுமையில் வாடும் மகனாக இருந்தார்.

மாரிக் காலத்தில் நான்கு மாதங்களும்
வேறிடம் செல்லார் துறவியர் எவரும்;
தாயுடன் சேர்ந்து தானும் உதவினான்
மாயையை வென்ற அம்முனிவர்களுக்கு.

அவர்கள் புசித்து எஞ்சிய உணவை
அருள்மிகு பிரசாதமாகவே உண்டும்;
அவர்கள் பேசும் மொழிகளை எல்லாம்
அமர்ந்து கேட்டும் ஞானம் பெற்றான்.

சிறுவனின் தீவிர சிரத்தையைக் கண்டு,
மறை முனிவர்களும் மனம் மிக மகிழ்ந்து
போதனை செய்தனர் இறைபக்தியையும்,
சாதனை செய்யும் சில முறைகளையும்.

பால் கறக்கச் சென்ற அன்னையை
பாம்பு ஒன்று தீண்டிக் கொல்லவே;
பாலகன் பாரினில் தனியன் ஆனான்,
கால் போன போக்கில் திரியலானான்.

ஒரு நாள் தியானம் செய்யும்போது
ஒரு திருவுருவம் மனக்கண்ணில் தோன்ற,
மீண்டும் மீண்டும் அதைத் தான் காண
வேண்டும் வேண்டும் என ஆவல் மிகுந்தது.

“பற்றை முற்றும் விடாதவர்களும், மனப்
பக்குவம் சிறிதும் அடையாதவர்களும்,
காண இயலாது என்னை அறிவாய்! நீ
காண இயலும் உன் அடுத்த பிறவியில்”

அசரீரியாக அவன் மட்டும் கேட்டான்,
அதிசயமான இனிய வார்த்தைகளை!
விசனப்பட்டான் இன்னும் எத்தனை நாள்
விரும்பாத இது போன்ற வாழ்க்கை என?

மின்னல் வெட்டியது போலச் சரிந்தது
முன்னர் பெற்ற அவனது ஸ்தூலதேகம்,
விண்ணில் பறந்தது அவன் சூக்ஷ்மதேகம்,
விஷ்ணுவின் மூச்சுடன் உள்ளே புகுந்தது.

பிரமனின் செய்த அடுத்த படைப்பினில்
பிரமனின் அற்புத மானச புத்திரனாகத்
தோன்றினார் நம் தேவமுனி நாரதர்,
மூன்று உலகமும் பக்தியுடன் சஞ்சரிக்க.

பாமரப் பணிப்பெண் ஒருவளின் மகன்
பார்புகழும் தேவமுனிவர் ஆகிவிட்டதன்
ரகசியம் எது என அறிந்திடுவோம் நாம்,
விகசித்த அவர் பக்தியினால் அன்றோ?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

#132. NAradha’s previous birth.


NAradha was the son of a poor woman who made her living by serving a few holymen in an Ashram. During the rainy season, the ascetics were forced to stay in the same place for four months, as they can’t travel freely during those months.

The mother and son took very good care of them. The boy would eat the left over food as a prasAdam. He would sit and listen to their talks on the greatness of God and the miracles He had performed.

He developed faith and devotion even as a child, just five year old. The holymen were pleased with him and taught the child the greatness of bhakti and the secrets of spiritual practices.

On day, his mother got bitten by a snake, when she went to milk the cow and died. The boy became an orphan and started wandering wherever his legs would carry him. He would sit and meditate for long hours.

One day he got the glimpse of a divine figure in his mind’s vision. He yearned to see it again and again. Then he heard a voice tell him, “Dear Child! you are not yet ready to see me and be with me. You have had satsang (association with holymen) and developed devotion. In your next birth you will become my supreme bhakta and be with me forever”.

When the boy cast off his mortal body, his jeevAthmA (soul) rose high into the heavens and entered Vishnu through the air He breathed, along with Brahman. After the long night the creation was started again.

Then he was born as the mAnasa puthran (son born out of the mind) of Lord Brahma. He became the thrilOka sanchAri (one who roams freely in all the three worlds) as the great VishnU bhakta named as NAradha.

What is the secret behind his transformation from being the son of an illiterate servant woman to becoming a Celestial rishi?
It is nothing but his sincere and staunch devotion to Lord NArAyaNa.
 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#133. பருந்தும், பண்டிதரும்!

உயர, உயரப் பறக்கும் பருந்துக் கூட்டம்,
உயரத்தில் இருக்கின்றனர் கற்ற பண்டிதரும்;
மெத்தப் படித்துக் கற்றவர் சிலருக்கு,
சித்தத் தூய்மை ஏன் ஏற்படுவதில்லை?

உயர, உயரப் பறந்த போதிலும் ஒரு,
பருந்தின் பார்வை தரையின் மீதே!
உண்பதற்கு ஏதேனும் உள்ளதா என்றே,
பார்த்து ஆராயும் அது மேலிருந்தபடியே.

பண்டிதர் சிலர் தம் மேதா விலாசத்திற்கு,
கண் கவர் சன்மானம் என்ன கிடைக்கும்,
என்றே சிந்தித்து இருப்பார் எப்போதும்,
ஒன்றிய மனதோடு சிந்தியார் ஈசனை!

“எத்தனை பேரை பேச்சால் வெல்லலாம்?
எத்தனை பேரை வாதத்தில் மடக்கலாம்?
எத்தனை பேருக்கு பாடம் சொல்லலாம்?
எத்தனை ஊருக்கு பயணம் செல்லலாம்?”

பார்த்தபடி இருப்பார்; இறைவனை நாடார்;
பற்றுதல் ஒழியார்; பக்தியும் கிடையாது; .
பக்தி இல்லாமல் முக்தியும் கிடைக்காது.
படிப்பும் அவர்க்கு ஒரு வெறும் சுமையே!

எட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது,
எத்தனை கற்றாலும் தன்னடக்கத்துடன்,
அனைத்தும் இறைவன் கருணையே என
நினைப்பவரே மனத் தூய்மை அடைவர்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

#133. THE PUNDIT AND THE KITE.


The kite glides in the sky at a very high altitude. A learned pundit also soars high above the others around him. Yet a pundit seems to be no better than an ordinary man in his spiritual evolution! Why is it so?

Even though a kite flies high in the sky, its vision is always focused on the earth below. It is always on the look out for something to eat!

In the same way, a pundit will be thinking about the awards, rewards and titles he is likely to get and which he strongly believes that he deserves. He never concentrates on God with a pure and detached mind.

“How many persons can I conquer by my debating skill?”
“How many lectures can I squeeze in that short visit?”
“How many people will become my admirers and fans…?” will be his line of thoughts.

But we know that “Words without thoughts will never to heaven go!” With his mind firmly fixed on the world, God has already taken a back seat in his priorities!

His attachments to the world and the worldly recognition in the form of fame, titles and cash rewards, keep increasing with increasing popularity. None can attain mukti without bhakti. The dry knowledge will become a heavy load on his intellect.

Only the persons who remain humble and simple appreciate that God has showered on them everything they have, merely out of His Infinite Grace and mercy – and not because they deserved them.

Such persons will give up ego (ahankAram) and the sense of possession (mamakAram). They will pursue the path to self realization with a detached and calm mind and succeed in their endeavor
 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#134. அகத்தியர்

மூர்த்தி சிறிதாயினும் அகத்தியரின்
கீர்த்தி இமயமலையினும் பெரியது.

இமயம் முதல் விந்தியமலை வரை
இருக்கும் அறிவு, தவ வலிமையைச்

சமம் செய்வார் இவர் ஒருவராகவே!
சமம் இல்லை எவருமே இவருக்கு!

பார்வதி பரமேஸ்வரர் மணக்கோலம்
பார்க்க அனைவரும் அங்கே செல்ல;

அதிகரித்த பூமி பாரத்தைச் சமமாக
ஆக்கிவிட்டார் அகத்தியர் ஒருவரே!

வாதாபி, இல்வலன் என்னும் தீயோர்
மேதாவித்தனமாகவே முனிவர்களைக்

கொன்று குவித்து வந்தனர் எவருமே
வென்றிட முடியாத குறுக்கு வழியில் .

ஆட்டு உருவம் எடுப்பான் வாதாபி;
ஆட்டினைச் சமைப்பான் இல்வலன்.

வயிறு நிறைய முனிவர்கள் உண்டபின்,
வயிற்றைக் கிழித்துக் கொல்வான் வாதாபி.

வெட்டித் துண்டாக்கிச் சமைத்த பின்னரும்,
ஒட்டிக் கொண்டு மீண்டும் உயிர் பெறும்,

அற்புத சக்தியின் துணையால் அவர்கள்
பற்பல முனிவரைக் கொன்று வந்தனர் .

ஆட்டைச் சமைத்து உண்ணத் தந்தனர்,
ஐங்கரன் தனக்கு அளித்த வலிமையால்,

ஆக்கி விட்டார் வாதாபியை ஜீரணம்
அருந்தவர் குறுமுனிவர் அகத்தியர்!

“வாதாபி வெளியே வா!” – இல்வலன்.
“வாதாபி ஜீரணம்!” – இது அகத்தியர்.

கோபத்தில் பாய்ந்தவன் முனிவரின்
கோபப் பார்வையில் சாம்பலானான்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

#134. Agasthya Maharishi.

Agasthya maharishi might have been small in stature, but he was greater than all the rishis residing from Himalaya to Vindhya Parvatha put together.

When Lord SivA married PArvathi DEvi, everyone had gone there to witness the wedding of the two Gods. The balance of the earth was disturbed. AgastyA was sent down south to restore the balance singlehandedly.

The Vindhya mountain kept growing taller and taller and was threatening to obstruct the passage of the heavenly bodies. Agasthya crossed the Vindhya and from that time it lies flat, as if
prostrating to the great rishi.

VAtApi and Ilvalan were two rogue demons who used to kill the rishis by pure deception. They would invite the rishis to eat at their home. The unsuspecting Rishi would accept the invitation.

VAtApi had a special power that even if his body was cut into a hundred pieces and cooked, he could regain life and get back into his original form.

VAtApi would assume the form of a lamb. Ilvalan would cut it into pieces and cook. The rishi would eat the meal. VAtApi would regain his original form and life and emerge from the stomach of the rishi, killing him in that process.

They played the same trick on sage Agasthya. When the meal was eaten, the sage digested the lamb completely with the special powers bestowed on him by Lord Ganesh.

When Ilvalan called out the name of VAthApi, the sage replied that he had been digested. Ilvalan tried to pounce on the sage in retaliation and was reduced to ashes by a mere glance of the great sage.
 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#135. எல்லோரும் ”டெல்லர்களே”!

கத்தை கத்தையாய் பச்சை நோட்டு,
கலகலக்கும் நாணயக் கூட்டு,
இவைகள் அளிக்கும் உற்சாகம்
இனிமை,அருமை,பெருமை,உண்மை!

தேடித் தேடி பொருள் ஈட்டி,
ஓடி ஓடி அதைப் பெருக்கி,
நாடி நாடிச் செலவுகள் செய்து,
கூடிக் கூடி இன்புறுகின்றோம்!

உலகில் வரும்போது வெறுங்கை,
உலகை விட்டு செல்லும்போதும் அதுவே!
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம்,
சேர்ந்து வராது செல்லும் போது!

எத்தனை அழகிய வீடோ, மனையோ,
எத்தனை சிறந்த உடையோ, நகையோ,
எத்தனை அதிக பணமோ, காசோ,
எத்தனை செல்வச்செழிப்போ, களிப்போ,

செல்லும் போது உடன் வராது ஒரு
செல்லாக்காசு கூட! நாம் சேமிக்கலாம்;
செல்வத்தை கொடுக்கலாம் வாங்கலாம்;
செலவுகள் செய்து மனம் மகிழலாம்!

வங்கிப் பணம் எல்லாம் “டெல்லர்” வசம்,
வங்கியினுள்ளே இருக்கும் வரையில் தான்.
வெளியே அவர் செல்லும் போது, ஒரே ஒரு
வெள்ளிப் பணமாவது அவர் கூட வருமா?

ஆம், நாம் எல்லோரும் டெல்லர்களே!
ஆனால், நாம் உலகத்தின் டெல்லர்கள்.
உலகமே ஒரு பெரிய வங்கி ஆவதால்,
உயரிய மனிதர்கள் அதன் டெல்லர்களே!

அவர்கள் வங்கிப் பணத்தை உரிமையுடன்
ஆளுவது போலவே நாமும் உரிமையுடன்
ஆளலாம் நம்மிடமுள்ள செல்வதை! நம்
ஆயுள் உள்ளவரை தான், பிறகு இல்லை!

நல்லதையே நினைத்து, நன்மையே செய்து
செல்லும் வழியை நல்வழி ஆக்குவோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நாம்,
வானுறையும் தெய்வத்துடன் ஒன்றுவோம்.

வாழ்க வளமுடன்
விசாலாக்ஷி ரமணி.

#135. TELLERS OF THE BANK CALLED THE WORLD.


Man becomes happy by the sight and smell of the new currency bundles and by the sweet jingle of a purse of new coins! These make him feel happy, proud and confident!

Man spends all his life earning money; in multiplying it by wise investments and in spending it with his loved ones in order to make them happy!

We have entered the world empty handed. We will exit from the world empty handed! None of the things earned, saved, bought and enjoyed will come with us to eternity.

The palatial houses built by us, the grand dresses and jewels worn by us, money, coins, luxuries, fancy gadgets will have to be left behind, when the call comes!

We can earn money, give money, take money and spend money only as long as we are alive! Nor for a moment more than that.

The money in the bank is in the custody of the teller. He can handle the money, give it and receive it (obeying the rules of the bank) as if the money were his own! But when he goes home after the working hours, he can not carry even a single rupee of the bank’s money with him.

It is time to realize that we are all tellers of the bank called THE WORLD! We can handle money asif they are our own only as long as we are in the world. When we leave the world, we have to leave behind us everything that was in our possession and under our custody.

If everyone of us realizes this fact and remembers that we are merely custodians of our wealth and NOT the real owners, much of the greed and unscrupulous hoarding of wealth will com to an end.

Let us use the wealth under our custody wisely, without greed for the benefit of everyone around us!
 
I met a lady who has become very rich after her ancestral home got converted to posh flats in a busy locality. She does not have any children.

She has got her ear lobe pierced to accommodate more diamond earrings ranging from largest to the smallest available!

AND she travels by the city bus - despite her leg problem. Forget her spending the money on others - when she is not willing to spend it on herself for absolute necessities!

aaRaaga neer Odinaalum
naai nakkith thaan kudikkumaam! :(
 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#136. கண்ணன் என் கடவுள்

எண்ண இனிப்பவன் கண்ணன்,
என்றும் இனியவன் கண்ணன்;
எங்கும் இருப்பவன் கண்ணன்,
எங்கள் இதயத்தில் கண்ணன்.

மண்ணை உண்டவன் கண்ணன்,
விண்ணை அளந்தவன் கண்ணன்;
மங்கையைக் காத்தவன் கண்ணன்,
மாயங்கள் செய்தவன் கண்ணன்.

குன்றை எடுத்தவன் கண்ணன்,
கோகுலம் காத்தவன் கண்ணன்;
கன்றை மயக்கிடும் கண்ணன்,
கன்னியர் விரும்பிடும் கண்ணன்.

இசையின் கடவுளும் கண்ணன்,
இடையர் பிள்ளையும் கண்ணன்;
கீதையைத் தந்தவன் கண்ணன்,
கிரிதரனும் அந்தக் கண்ணன்.

மேதைகள் போற்றிடும் கண்ணன்,
பேதைகள் வணங்கிடும் கண்ணன்;
தேவர்கள் தொழுதிடும் கண்ணன்,
தெய்வங்களின் தலைவன் கண்ணன்.

நீயே கதி என்று சொன்னால்,
நித்தமும் காத்திடும் கண்ணன்;
தாயும் தந்தையுமாகி நல்ல
தயை புரிந்திடும் கண்ணன்.

வெண்ணை திருடிய கண்ணன்,
வெள்ளை மனம் கொண்ட கண்ணன்;
மண்ணில் இவனைப் போல் உண்டோ?
எண்ணித் தெரிந்தவரை இல்லை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

#135. The glories of Lord Krishna.

He is deliciously sweet to think about,
The thoughts about Him are also sweet;
With His presence the Universe is built,
He who resides in everyone’s heart.

He ate the soil quite playfully,
He measured world equally playfully;
He saved pAnchAli from public shame,
His countless miracles sing His fame..

He lifted the mountain Govardhnan,
And protected Gokulam from Indran;
He mesmerized the calves and cow (s),
Every pretty damsel was His Lady Love.

He is the God of Music divine,
A cowherd, walking by the ravine;
Giridhara is the great dharma dhAtA,
Through His gospel of The Bhagavat Gita.

The learned men always praise Him,
The illiterate men always worship Him,
The devas and others beings adore Him,
The God of all the Gods-it is always Him.

He becomes the kindest mother,
The guiding and protecting father;
The most dependable elder brother,
To Him who surrender do never bother.

He enjoys eating the stolen butter,
His mind is as soft as the butter;
Can there can be another like Him?
If there can be one, I’m yet to find Him!
 
உருளையின் விட்டம் காண:
ஒரு உருளையின்/ கல்தூணின்/மரத்தின் குறுக்கு விட்டத்தினைக் காண்பதற்கான
எளியமுறை : (%99.9 சரியாக இருக்கும் )

"வளையதைக் கிளையதாகி,
கிளையதை எட்டதாக்கி,
எட்டில் மூன்றைத் தள்ளி
நின்றது நெற்றிக்கனம்"

உருளையின் சுற்றளவை நூலில் எடுத்து , முனைகளை சேர்த்து 4 முறை தொடர்ந்து மடித்தால் கிடைக்கும் 16 இழைகளில் 5 இழைகளின் நீளமானது உருளையின் விட்டமாகும்.

விளக்கம் :
வளையதை :
முதலில் ஒரு நூல் அல்லது கயிற்றின் உதவியினால் உருளைத் தூணின் சுற்றளவினை சரியாக எடுத்துக் கொள்ளவும்.
வளையதைக் கிளையதாக்கி : அந்த சுற்றளவினை இரு சம பாகங்களாக மடித்துக் கொள்ளவும்.
கிளையதை எட்டதாக்கி : அதனை எட்டு சம பாகமாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.
எட்டில் மூன்றைத் தள்ளி : அந்த எட்டு சமபாக அளவின் மூன்று பாகத்தை நீக்கிவிடவேண்டும்.
நின்றது நெற்றிக் கனம் : 8- 3 = 5 , மீதம் நிற்கின்ற ஐந்து சமபாகத்தின் அளவு அந்த விட்டம், நெற்றிக் கனம்.

(நெற்றிக்கனம் என்பது ’விட்டம்’ அதாவது உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றமான வட்டத்தில், இரண்டு ஆரங்கள் சேர்ந்தது, விட்டம்)
 
N.C.Vasanta kokilam
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா…………………………
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா – பெற்ற
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா

அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த
அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா

கல்லால் ஒருவன் அடிக்க ……
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க

வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம்
என்னும் வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட

வீசி மதுரை மாறன்…..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ …. அய்யா …..
பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
 
There is no need to write down the lines as many times as the number of the repetitions of the same line - aka sangathis! :)

I like this line best! :giggle:
வீசி மதுரை மாறன்…..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
 
விளக்கம் :
வளையதை :
முதலில் ஒரு நூல் அல்லது கயிற்றின் உதவியினால் உருளைத் தூணின் சுற்றளவினை சரியாக எடுத்துக் கொள்ளவும். = perimeter = c

வளையதைக் கிளையதாக்கி : அந்த சுற்றளவினை இரு சம பாகங்களாக மடித்துக் கொள்ளவும் = c/2

கிளையதை எட்டதாக்கி : அதனை எட்டு சம பாகமாகப் பிரித்துக் கொள்ளவேண்டும் = c/2 x 1/8 = c/16

எட்டில் மூன்றைத் தள்ளி : அந்த எட்டு சமபாக அளவின் மூன்று பாகத்தை நீக்கிவிடவேண்டும்
8c/16 - 3c/16 = 5c/16

நின்றது நெற்றிக் கனம் : 8- 3 = 5 , மீதம் நிற்கின்ற ஐந்து சமபாகத்தின் அளவு அந்த விட்டம், நெற்றிக் கனம்.

So 2r = d = 5c / 16

But 2r = d = c/pi = cx7/22

Is 5/16 = 7/22?

5x22 = 110 and 16x7= 112

Since they are almost equal the formula is verified! (y)

Thank you posting the formula poem for finding the diameter!
 

Latest ads

Back
Top