#39z. தூமாசுரன்
அண்டை நாடுகளை வென்று அவற்றை
ஆண்டு வர விரும்பினான் தூமாசுரன்.
படைகள் நடந்தன திக்விஜயத்திற்கு;
திடீர் முடிவு திகைப்பளித்தது பலருக்கு.
தூமாசுரன் கேட்டான் அசரீரி ஒன்றினை,
"சேமமாக ஆட்சி செய்து கொண்டிருந்தாய்!
ஆசை மிகுதியால் படை நடத்துகின்றாய்;
அழிப்பான் உன்னைச் சுமுதையின் மகன்."
திடுக்கிட்டு நின்றான் தூமாசுரன் அதுகேட்டு!
'கெடுத்துக் கொண்டேனோ வாழ்வை நானே?"
'
தருமமூர்த்தி உரைத்தான் தருமத்தை.
"தருமம் தவறி நடந்தால் அழிவு உறுதி!
அருள் வேண்டினால் இல்லை அழிவு.
சரண் புகுவோம் நாம் சுமுதை மகனிடம்!"
சம்மதிக்கவில்லை மற்ற அமைச்சர்கள்.
'இம்மாதிரியான அறிவுரையா தருவது?'
"சரண் அடைவதா சின்னப் பயலிடம்?
சிவன் அருள் பெற்று அழிவற்றவர் நீர்.
பகைவன் பிறப்பான் என்று அறிந்ததும்
பகைவனை அழிக்க வேண்டும் உடனே!
கருவில் உருவான குழந்தையை அழித்தால்,
விரைவில் விடுபடலாம் கவலையிலிருந்து!"
வித்ருமனை வரவழைத்தான் தூமாசுரன்
"சத்ருவை அழிப்பது உன்னுடைய கடமை.
கருவிலே உருவாகும் சுமுதை மகனை
விரைவில் அழித்துவிட்டு வா!" என்றான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
அண்டை நாடுகளை வென்று அவற்றை
ஆண்டு வர விரும்பினான் தூமாசுரன்.
படைகள் நடந்தன திக்விஜயத்திற்கு;
திடீர் முடிவு திகைப்பளித்தது பலருக்கு.
தூமாசுரன் கேட்டான் அசரீரி ஒன்றினை,
"சேமமாக ஆட்சி செய்து கொண்டிருந்தாய்!
ஆசை மிகுதியால் படை நடத்துகின்றாய்;
அழிப்பான் உன்னைச் சுமுதையின் மகன்."
திடுக்கிட்டு நின்றான் தூமாசுரன் அதுகேட்டு!
'கெடுத்துக் கொண்டேனோ வாழ்வை நானே?"
'
தருமமூர்த்தி உரைத்தான் தருமத்தை.
"தருமம் தவறி நடந்தால் அழிவு உறுதி!
அருள் வேண்டினால் இல்லை அழிவு.
சரண் புகுவோம் நாம் சுமுதை மகனிடம்!"
சம்மதிக்கவில்லை மற்ற அமைச்சர்கள்.
'இம்மாதிரியான அறிவுரையா தருவது?'
"சரண் அடைவதா சின்னப் பயலிடம்?
சிவன் அருள் பெற்று அழிவற்றவர் நீர்.
பகைவன் பிறப்பான் என்று அறிந்ததும்
பகைவனை அழிக்க வேண்டும் உடனே!
கருவில் உருவான குழந்தையை அழித்தால்,
விரைவில் விடுபடலாம் கவலையிலிருந்து!"
வித்ருமனை வரவழைத்தான் தூமாசுரன்
"சத்ருவை அழிப்பது உன்னுடைய கடமை.
கருவிலே உருவாகும் சுமுதை மகனை
விரைவில் அழித்துவிட்டு வா!" என்றான்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.