#37b. மல்லாலர்
"வேதங்கள் அழிந்து போனதாக எண்ணி
வேதனை கொள்ளாதே பிரம்மதேவனே!
வேதம், ஆகமம், புராணங்கள் மூன்றும்
பேதமின்றி ஆயின எனது முக்கண்கள்.
கமலாசுரனை அழிப்பேன் விரையில்;
கவலையை ஒழித்து விடு!" என்றார்.
சாந்தம் அடைந்தான் பிரம்ம தேவன்;
சத்யலோகம் திரும்பிச் சென்றான்.
அழகிய அந்தணன் ஆனான் கணபதி;
பழகிய கணங்கள் ஆயினர் சீடர்கள்.
சுந்தர ஆசிரமத்தைச் சென்று சேர்ந்திட,
வந்து பணிந்தனர் அங்கிருந்த முனிவர்.
"உம்மைக் கண்டது எம் கவலை மறைந்தது;
எம்மை கௌரவித்துத் தங்குவீர் இங்கேயே "
"மல்லாலர் என்பது அந்தணன் என் பெயர்;
சொல்லக் கேட்டேன் நால்வேதங்கள் பற்றி
களவு போயினவாம் வேதங்கள் நான்கும்;
தளர்ந்து போயினவாம் நீதிநெறிமுறைகள்.
என்னிடம் உள்ளன அதே நால்வேதங்கள்;
உதவுகின்றேன் நான் இயன்ற வரையில்!"
இருக்கக இடம் தந்தனர் அவருக்கு;
திரும்ப உபதேசித்தார் வேதங்களை!
தர்மங்கள் மீண்டும் தழைத்தோங்கின;
கர்மங்கள் மீண்டும் நீதிநெறிப்பட்டன;
உலகில் நிகழும் மாற்றங்களை எல்லாம்
உணர்ந்தான் கமலாசுரன் உள்ளது உள்ளபடி!
சங்காசுரனிடம் சென்று செப்பினான் அவன்
எங்கும் வேதங்கள் மீண்டும் தழைப்பதை!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
"வேதங்கள் அழிந்து போனதாக எண்ணி
வேதனை கொள்ளாதே பிரம்மதேவனே!
வேதம், ஆகமம், புராணங்கள் மூன்றும்
பேதமின்றி ஆயின எனது முக்கண்கள்.
கமலாசுரனை அழிப்பேன் விரையில்;
கவலையை ஒழித்து விடு!" என்றார்.
சாந்தம் அடைந்தான் பிரம்ம தேவன்;
சத்யலோகம் திரும்பிச் சென்றான்.
அழகிய அந்தணன் ஆனான் கணபதி;
பழகிய கணங்கள் ஆயினர் சீடர்கள்.
சுந்தர ஆசிரமத்தைச் சென்று சேர்ந்திட,
வந்து பணிந்தனர் அங்கிருந்த முனிவர்.
"உம்மைக் கண்டது எம் கவலை மறைந்தது;
எம்மை கௌரவித்துத் தங்குவீர் இங்கேயே "
"மல்லாலர் என்பது அந்தணன் என் பெயர்;
சொல்லக் கேட்டேன் நால்வேதங்கள் பற்றி
களவு போயினவாம் வேதங்கள் நான்கும்;
தளர்ந்து போயினவாம் நீதிநெறிமுறைகள்.
என்னிடம் உள்ளன அதே நால்வேதங்கள்;
உதவுகின்றேன் நான் இயன்ற வரையில்!"
இருக்கக இடம் தந்தனர் அவருக்கு;
திரும்ப உபதேசித்தார் வேதங்களை!
தர்மங்கள் மீண்டும் தழைத்தோங்கின;
கர்மங்கள் மீண்டும் நீதிநெறிப்பட்டன;
உலகில் நிகழும் மாற்றங்களை எல்லாம்
உணர்ந்தான் கமலாசுரன் உள்ளது உள்ளபடி!
சங்காசுரனிடம் சென்று செப்பினான் அவன்
எங்கும் வேதங்கள் மீண்டும் தழைப்பதை!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி