#35e. கீர்த்திவாசன்
அஞ்சிய தோழியர் ஓடினர் தேவியிடம்;
அஞ்சிய தேவியோ ஓடினாள் பிரானிடம்.
யோகம் கலைந்து எழுந்தார் சிவபிரான்.
வேகமாக எறிந்தார் தன் சூலாயுதத்தை!
விழுந்தான் சிரம் துண்டாகிய கஜமுகன்!
விழும் பொழுது "சிவாய நம:" என்றான்.
அவசரத்தில் பக்தனைக் கொன்றதால்
அவனை எழுப்பி வரம் தந்தார் சிவன்.
"தங்கள் ஸ்பரிசம் தந்தது முக்தியை
தங்கள் சேவையே என் விருப்பம்" என
யானைத் தோலை உரித்து அணிந்தார்;
யானைத் தலையை பத்திரப் படுத்தினார்.
கீர்த்தி வாசன் என்னும் பெயருக்குப்
பாத்திரம் ஆனார் சிவபிரான் இதனால்.
மண்டபம் நிலை நாட்டப்பட்டது மீண்டும்.
மண்டபத்தில் தேவி; நிஷ்டையில் பிரான்!
மிக்காரும், ஒப்பாருமில்லை என்று
எக்காளம் இட்டு வந்தான் சிந்தூரன்.
"பூரித்து மகிழ்ச்சி அடையாதே சிந்தூரா!
தூரத்தில் இல்லை உன் பரிதாப முடிவு!
வல்லவன் ஒருவன் பார்வதி வயிற்றில்
கொல்லுவதற்காக வளர்த்து வருகிறான்!"
யார் பேசியது என்று ஊரெங்கும் தேடினான்
யாரையும் காணோம்; அது அசரீரி வாக்கு!
'என்னை அழிப்பதற்கு ஒருவனா - நான்
என்னை அழிக்குமுன் அவனை அழிப்பேன்!"
சென்றான் கைலாசம்; இல்லை அங்குதேவி!
சென்றான் சுவர்க்கம்; இல்லை அங்கு தேவி!
அறிந்தான் தேவி பூவுலகில் இருப்பதை.
அடைந்தான் பரியலி வனத்தை உடனே!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
அஞ்சிய தோழியர் ஓடினர் தேவியிடம்;
அஞ்சிய தேவியோ ஓடினாள் பிரானிடம்.
யோகம் கலைந்து எழுந்தார் சிவபிரான்.
வேகமாக எறிந்தார் தன் சூலாயுதத்தை!
விழுந்தான் சிரம் துண்டாகிய கஜமுகன்!
விழும் பொழுது "சிவாய நம:" என்றான்.
அவசரத்தில் பக்தனைக் கொன்றதால்
அவனை எழுப்பி வரம் தந்தார் சிவன்.
"தங்கள் ஸ்பரிசம் தந்தது முக்தியை
தங்கள் சேவையே என் விருப்பம்" என
யானைத் தோலை உரித்து அணிந்தார்;
யானைத் தலையை பத்திரப் படுத்தினார்.
கீர்த்தி வாசன் என்னும் பெயருக்குப்
பாத்திரம் ஆனார் சிவபிரான் இதனால்.
மண்டபம் நிலை நாட்டப்பட்டது மீண்டும்.
மண்டபத்தில் தேவி; நிஷ்டையில் பிரான்!
மிக்காரும், ஒப்பாருமில்லை என்று
எக்காளம் இட்டு வந்தான் சிந்தூரன்.
"பூரித்து மகிழ்ச்சி அடையாதே சிந்தூரா!
தூரத்தில் இல்லை உன் பரிதாப முடிவு!
வல்லவன் ஒருவன் பார்வதி வயிற்றில்
கொல்லுவதற்காக வளர்த்து வருகிறான்!"
யார் பேசியது என்று ஊரெங்கும் தேடினான்
யாரையும் காணோம்; அது அசரீரி வாக்கு!
'என்னை அழிப்பதற்கு ஒருவனா - நான்
என்னை அழிக்குமுன் அவனை அழிப்பேன்!"
சென்றான் கைலாசம்; இல்லை அங்குதேவி!
சென்றான் சுவர்க்கம்; இல்லை அங்கு தேவி!
அறிந்தான் தேவி பூவுலகில் இருப்பதை.
அடைந்தான் பரியலி வனத்தை உடனே!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.