#14a. ருக்மாங்கதன்
அரசனைக் காணாது திரும்பிச் சென்றவர்கள்
அரசனைத் தேடக் கானகம் வந்தனர் மறுநாள்.
நாரத முனிவருடன் அரசனைக் கண்டனர்
கூறினார் அவனைப் பணிந்து வணங்கி,
"தங்களைக் காணாது தவித்தும் நேற்று
தங்களைக் கண்டு மகிழ்ந்தோம் இன்று.
கானகத்தில் நிகழ்ந்தது என்ன மன்னா?
வானவர் மயங்கும் உருவம் மாறியதேன்?"
நடந்த கதையைக் கூறிய ருக்மாங்கதன்
நடக்கப்போவதையும் கூறினான் பின்னர்.
"சென்று கதம்பவனம் சேருவேன் இப்போதே!
வென்று கொடிய நோயைத் திரும்புவேன் நாடு!"
சிந்தாமணித் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான்;
சிந்தாமணி விநாயகரைத் தொழுது நின்றான்;
தந்தை உபதேசித்த மந்திரத்தை ஜபித்தான்;
விந்தை காணீர்! மறைந்தது வெண்குஷ்டம்!
விமானத்தில் வந்தனர் தேவகணங்கள்,
"விநாயகர் அழைக்கிறார் வருக மன்னா!"
"கிடைத்தற்கரிய பெருமை இது எனினும்
விடமுடியாது வயது முதிர்ந்த பெற்றோரை!"
"தாய், தந்தையரை எண்ணி நீராடுங்கள்!
வாய்க்கும் அவர்களுக்கும் இந்தப் பெருமை."
தீர்த்தமாடி எழுந்தனர் அரசனும், மற்றோரும்.
ஆர்வத்துடன் அடைந்தனர் கௌண்டின்யபுரம்.
வந்தன விமானங்கள் அனைவர்க்கும் - ஏறிச்
சென்றனர் விண்ணுலகம் விநாயகரிடம்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
அரசனைக் காணாது திரும்பிச் சென்றவர்கள்
அரசனைத் தேடக் கானகம் வந்தனர் மறுநாள்.
நாரத முனிவருடன் அரசனைக் கண்டனர்
கூறினார் அவனைப் பணிந்து வணங்கி,
"தங்களைக் காணாது தவித்தும் நேற்று
தங்களைக் கண்டு மகிழ்ந்தோம் இன்று.
கானகத்தில் நிகழ்ந்தது என்ன மன்னா?
வானவர் மயங்கும் உருவம் மாறியதேன்?"
நடந்த கதையைக் கூறிய ருக்மாங்கதன்
நடக்கப்போவதையும் கூறினான் பின்னர்.
"சென்று கதம்பவனம் சேருவேன் இப்போதே!
வென்று கொடிய நோயைத் திரும்புவேன் நாடு!"
சிந்தாமணித் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான்;
சிந்தாமணி விநாயகரைத் தொழுது நின்றான்;
தந்தை உபதேசித்த மந்திரத்தை ஜபித்தான்;
விந்தை காணீர்! மறைந்தது வெண்குஷ்டம்!
விமானத்தில் வந்தனர் தேவகணங்கள்,
"விநாயகர் அழைக்கிறார் வருக மன்னா!"
"கிடைத்தற்கரிய பெருமை இது எனினும்
விடமுடியாது வயது முதிர்ந்த பெற்றோரை!"
"தாய், தந்தையரை எண்ணி நீராடுங்கள்!
வாய்க்கும் அவர்களுக்கும் இந்தப் பெருமை."
தீர்த்தமாடி எழுந்தனர் அரசனும், மற்றோரும்.
ஆர்வத்துடன் அடைந்தனர் கௌண்டின்யபுரம்.
வந்தன விமானங்கள் அனைவர்க்கும் - ஏறிச்
சென்றனர் விண்ணுலகம் விநாயகரிடம்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.