1 (# 9). தேவர்களை அழைத்தல்.
"ருத்திரர்களையும், மற்ற தேவர்களையும் இங்கு
மொத்தமாகக் குழுமச் செய்வாய் நந்தி தேவா!"
சிந்தையில் அவர்களை நினைவு கூர்ந்ததும்,
வந்து குழுமினர் நந்தியின் முன் அனைவரும்.
காலாக்னி ருத்திரருடன் நூறுகோடி கணங்கள்;
கூர்மாண்டேசருடன் பல கோடி பூதங்கள்;
ஆடகேசுரருடன் கோடி கோடி ருத்திரர்கள்;
வீரபத்திரருடன் நூறாயிரம் கோடி பூதங்கள்;
அய்யனாருடன் நூறு கோடி பூதங்கள் வந்தன;
அய்யன் கட்டளைப்படி அனைவரும் வந்து,
ஈசனைக் கண்டு போற்றிப் புகழ்ந்தனர்.
மணக்கோலம் காண மிக விழைந்தனர்.
நான்முகன் தந்த பொன் ஆபரணங்களைத்
தான் அணியவில்லை; தொட்டு அருளினார்.
தன் பாம்புகளையும், பிறவற்றையும், மின்னும்
இரத்தின ஆபரணங்களாக மாற்றிக்கொண்டார்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
"ருத்திரர்களையும், மற்ற தேவர்களையும் இங்கு
மொத்தமாகக் குழுமச் செய்வாய் நந்தி தேவா!"
சிந்தையில் அவர்களை நினைவு கூர்ந்ததும்,
வந்து குழுமினர் நந்தியின் முன் அனைவரும்.
காலாக்னி ருத்திரருடன் நூறுகோடி கணங்கள்;
கூர்மாண்டேசருடன் பல கோடி பூதங்கள்;
ஆடகேசுரருடன் கோடி கோடி ருத்திரர்கள்;
வீரபத்திரருடன் நூறாயிரம் கோடி பூதங்கள்;
அய்யனாருடன் நூறு கோடி பூதங்கள் வந்தன;
அய்யன் கட்டளைப்படி அனைவரும் வந்து,
ஈசனைக் கண்டு போற்றிப் புகழ்ந்தனர்.
மணக்கோலம் காண மிக விழைந்தனர்.
நான்முகன் தந்த பொன் ஆபரணங்களைத்
தான் அணியவில்லை; தொட்டு அருளினார்.
தன் பாம்புகளையும், பிறவற்றையும், மின்னும்
இரத்தின ஆபரணங்களாக மாற்றிக்கொண்டார்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.