• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

raji,

i dont know whether to feel sorry for this guy. or be plain angry.

Dear Kunjuppu,

I think this man is yet another victim of religious indoctrination, unable to face the realities of life and the adversities he was facing. I do not think he was picking his victims at random as reported here.
 

என்னவரின் தந்தை...


தென்கரை கிராமத்தின் மிராசுதார்களில் ஒருவர். தன் பெயரில் உள்ள 'ஐயரை' நீக்கிவிட்டவர்!

காங்கிரஸ் அபிமானி. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். ஹரிஜனக்

குழந்தைகளுக்கு தங்கும் இடம் கட்டி, படிப்புக்கும் உதவியவர். நான் அவரை முதலில்

பார்த்தபோது, எழுபது ஆண்டுகளின் இரண்டாம் பகுதியில் இருந்தார். சிவ பூஜை முடித்த

பின்பே, உணவு உண்பார். மணி பதினொன்று ஆகிவிடும். காலையில் இரு மலைப்

பழங்களும், ஒரு டம்ளர் காபியும் ஆகாரம். வெத்தலைக் கொடிக்கால் இருந்ததாலோ

என்னவோ, இளம் வெத்தலையை இடித்து உண்பார். பாக்கும் சேர்த்து வைத்து

இடிக்கும்போது, பேரக் குழந்தைகள் அவரைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து, பங்கு கேட்கும்!


கேலி செய்வதில் மகா வல்லவர். ஒரு முறை கொஞ்சம் பூசின உடல்வாகு கொண்ட

பெண், அவர் வெத்தலை இடிக்கும் சமயம் வந்தார். 'மாமா! உங்களை இப்படியே

நமஸ்காரம் பண்ணலாமா?' எனக் கேட்டாள். அவளின் சந்தேகம், உட்கார்ந்திருந்த

நிலையிலேயே வணங்கலாமா என்பது. அவரோ, 'உன்னால வளைய முடிஞ்சாப்

பண்ணேன்!' என்று ஒரு போடு போட்டார்!


விசாகப்பட்டணத்தில், எனக்குத் திருமணமான புதிதில், எங்களிடம் ஒரு மாதம் இருந்தார்.

என்னவரின் அம்மாவுக்கு, 'நாட்டுப் பெண்ணின்' தையல் திறமையை அவரிடம் காட்ட

ஆசை! என்னிடம் 'க்ரீம்' கலர் துணி வாங்கி, அவருக்குச் சட்டை தைக்கச் சொன்னார்.

அவரிடம் அளவு கேட்க நாணிக் கொண்டு, நான் என் அளவுக்குக் கொஞ்சம் அதிகம்

வைத்து, சட்டை தைத்தேன்! அவரிடம் தந்தபோது, போட்டுப் பார்த்துவிட்டு, 'ஏண்டீம்மா!

கையைக் கொஞ்சம் நீளமா வைக்க மாட்டியோ?' என்று கேட்டார். 'அப்பா! என்

கையைவிட மூணு 'இன்ச்' நீளம் வச்சேனே!' என்று பதில் சொல்ல, 'ஆமாம்! இவ பெரிய

ஆறடி ஒசரம்னு நெனப்பு - தன்னையே அளவு எடுத்தாளாம்!' என்று கூறிச் சிரித்தார்.

எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. ஆனாலும், ஆசையாக அந்தக் குட்டிக் கைச்

சட்டையைப் பலமுறை போட்டுக்கொண்டு சந்தோஷித்தார். (அவரின் மற்ற சட்டைகள்

காமராஜர் 'ஸ்டயில்'தான்!)


பிள்ளைகளிடம் அண்டி வாழ்வதை அறவே வெறுத்தவர். சென்னையில் உள்ள, தன்

பெரிய பிள்ளையின் வீட்டுக்கு வந்தபோது, அவருக்கு உடல் நலம் குறைந்தது.

ஆஸ்பத்திரியில் சேர்த்தார், பிள்ளை. டாக்டர் 'குளுகோஸ்' ஏற்றிப் படுக்க வைத்தார்.

அவரோ, சிறிது நேரத்தில் அந்த ஊசியைப் பிடுங்கிப் போட்டுவிட்டு, நடந்தே வீட்டுக்கு

வந்துவிட்டார்!


அறுபது ஆண்டுகள் பழைமையான கடிகாரத்தை அன்புடன் பேணி, பாதுகாத்து வந்தார்.

தானே சாவி கொடுப்பார். அவர் கை ராசியோ என்னமோ, இன்றும் அது ஓடுகிறது!

எளிமையான வாழ்வே சிறந்தது என்பது அவரது சித்தாந்தம். ரேடியோவில், செய்திகள்

மட்டுமே கேட்பார். நல்ல கச்சேரிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. சினிமா பாட்டு - கப்சிப்!


வாழ்வின் இறுதிவரை யார் தயவும் நாடாமல், உயர்ந்த வாழ்வு வாழ்ந்த, மாமனிதர் அவர்!

:first:
 
என்னவரின் அன்னை...

சாந்தமான சுபாவம். மெல்லிய குரல். மெலிதான தேகத்தை மறைத்த அழகிய, தழைய

உடுத்திய மடிசார்ப் புடவை. மாறாத சிரிப்பு. நல்ல நட்புடன் எல்லோருடனும் பழகுவார்.

மிகவும் மடி ஆசாரம்! மருத்துவரின் மகளாக வளர்ந்து, ஆசாரம் அதிகம் அறியாத நான்

செய்த லூட்டிகள் பல. பின்னர் சொல்லுகிறேன்! தன் நாட்டுப் பெண்களின் (அப்படித்தான்

சொல்லுவார்) அருமை பெருமைகளை எல்லோரிடமும் சொல்லி மகிழ்வார். நான்தான்

முதுகலைப் படிப்பு முடித்த ஒரே நாட்டுப் பெண்; மதிப்பும் கொஞ்சம் அதிகமே! அவர்

எனக்கு முதலில் சொன்னா advice 'சோம்பல் படாம சமைக்கணும்' என்பதே. 'உண்டி

முதற்றே உலகு', என்று நன்கு அறிந்தவர்!


Short cut சமையலில் வல்லவர். பேரனுக்கு வடை பிடிக்கும் என்று சொன்னவுடன், ஒரு

பிடி உளுந்தை ஊறவைத்து, பத்து நிமிடம் கழித்து, அம்மியில் தட்டி (!), எண்ணையில்

இட்டு, நாலு வடை தயார் செய்துவிடுவார். அவை பேரனுக்கு மட்டுமே! அவரவர் சுவை

அறிந்து, பரிமாறுவார். அவருக்கு நடைப் பயிற்சியே தேவையில்லை. வீட்டின் மேலும்

கீழும் பத்து முறை நடந்தால் போதும். வாசலிலிருந்து இரண்டாம் கொல்லைப்புறக் கதவு

வரை, 120 அடிகள் தாராளமாக இருக்குமே! நடந்துகொண்டே இருப்பார்.


விசாகையில் வசித்தபோது, ஆந்திராவின் போச்சம்பள்ளிப் புடவை மிகவும் பிடித்தது

என்று, இரண்டு ஆறு கெஜங்களை வாங்கி அதிலிருந்து ஒரு ஒன்பது கெஜம் தயாரிக்க

என்னிடம் சொல்லி, அவரின் நண்பி தைத்த புடவை கட்டக் கூடாது என்று

சொல்லும்வரை, உடுத்தி மகிழ்ந்தார்! (நான் செய்து தந்தேன் என்று பெருமை வேறு!)

காலனியில், எங்கள் அடுத்த வீட்டில், ஒரு பெங்காலி குடும்பம் வசித்தது. அந்த

பெங்காலிப் பெண்மணிக்கு ஹிந்தியும் பெங்காலியும்தான் தெரியும். அம்மாவுக்கு

இரண்டும் தெரியாது. ஆனாலும் இருவரும் அரை மணி நேரம் தினமும் பேசுவார்கள்,

மதில் சுவர் அருகிலிருந்தே!


கணவரை கவனிப்பதே தலையாய பணி. அவரின் பூஜைக்கு வேண்டிய எல்லாமே

அழகாகத் தயார் செய்வார். தினமும், இரவு உணவு முடித்ததும், பசும்பால் சொம்பு

ஒன்றை எடுத்துக்கொண்டு, எல்லோருக்கும் பால் வினியோகம் செய்வார். ஒருவரையும்

விடமாட்டார். மிதமான சூட்டில், அருமையாக இருக்கும். பெரிய பேரன்கள் இருவர் பூணல்

போட்டுக் கொள்ளாமலேயே teenage கடைசிவரை வந்துவிட்டதால், குட்டிப் பேரன்கள்

இருவருடன் சேர்த்து, அவர்களுக்கும் வீட்டிலேயே உபநயன விழா நடத்திவிட்டார்.

ஒவ்வொரு வியாழன்றும், பக்கத்து ஊர் பக்தர்களும் உள்ளூர் பக்தர்களுடன் சேர, சாயி

பஜனை நிகழ்த்துவார். எல்லோருக்கும் பஜனை முடிவில் சிற்றுண்டி உண்டு!


கணவர் மறைவுக்குப் பின்னும், தன்னந்தனியாக அவ்வளவு பெரிய வீட்டில் வசித்தார்.

இறுதி நான்கு மாதங்களே சென்னையில் இருந்தார். அவர் உயிர் பிரியும் அந்த இரவில்,

நான் முதல் முறையாக உடன் இருக்கச் சென்றேன். (அதுவரை பிள்ளைகள்தான்

போவார்கள்) என்னைக் கஷ்டப் படுத்தக் கூடாது என்றோ என்னவோ, அந்த இரவிலேயே

இறைவனடி சேர்ந்தார். அந்த மயான அமைதி நொடியை, இப்போது நினைத்தாலும்

நடுங்குகிறது! அவர் பெயரும் அனாமிகாவின் கதையின் super mam இன் பெயரே!

அன்பினால் எல்லோரின் மனதையும் வென்றவர் அவர்.


:grouphug: . . :first:
 
Last edited:
தைரிய நாயகி...

எங்கள் ஊர் பண்ணையார்களில் ஒருவர் வீட்டில், என்றுமே கிணறு வற்றாது! சுற்றியுள்ள

மக்கள் எல்லோரும் அவர் வீட்டில் நீர் இறைப்பார்கள். நீர் எடுப்பதைச் 'சேந்துவது' என்றே

அங்கு சொல்லுவார்கள். எனவே, அவர்கள் வீடு 'சேந்து கிணத்து வீடு' ஆனது!

பண்ணையாரின் மனைவி 'சேந்து கிணத்து அம்மா'! அவருடைய நிஜப் பெயரே

எங்களுக்குத் தெரியாது. பின் கொசுவம் வைத்த கெட்டிப் புடவை (எட்டு கெஜம்)

அணிவார். நைலான் சேலைகளை மிகவும் கிண்டல் செய்வார். 'அதென்ன அம்மிணி!

உள்ள கட்டற பாவாடை அலுங்காமத் தெரியுது!' என்பார்.


எங்கள் மாரி அம்மன் கோவிலில் வீணைக் கச்சேரி செய்ய என்னை அழைத்தனர். நான்

வாசிக்கும்போது, என் தங்கையை தம்பூரா மீட்டச் சொன்னேன்! அந்தக் காலத்தில் Radel

தம்பூரா வரவில்லை!

....................... Radel Saarang .......................

radel%20saarang.jpg


மிருதங்கம் வித்வான் பொள்ளாச்சியிலிருந்து வந்தார். கச்சேரி முடிந்தவுடன், தாம்பூலத்தில்

குட்டிப் பரிசும் வைத்து, சேந்து கிணத்து அம்மாவை அளிக்கச் சொன்னார்கள். இவர் வந்து

'மைக்'கைப் பிடித்தார். 'ரெண்டு அம்மிணிகளுமே நல்லாத்தான் வாசிச்சாங்கோ. பெரிய

அம்மிணியானும் கொஞ்ச நேரம் நிறுத்திச்சு. (தனி ஆவர்த்தன சமயம், வீணையைக் கீழே

வைத்தேனே!) சின்ன அம்மிணி உடாம வாசிச்சது!' என்று போட்டாரே ஒரு போடு!

சிரிப்பலைகள் அடங்க 'வெகு' நேரம் ஆனது.


மிக தைரியசாலி. அவர்கள் சொந்தத்தில் ஒரு மிக முதிய பெரியவர் ஆஸ்பத்திரியில்

இருந்தார். Coma நிலையில் சில நாட்கள் சென்றுவிட, இந்த அம்மையார் அவரைக் காணச்

சென்றார். மூக்கில் குழாய்; மூக்கை மூடிய கோப்பையில் ஆக்சிஜன்; கையில் ஊசி வழியே

குளுகோஸ்; என்ற நிலையில் அவரைக் கண்டார். அப்புறம் நடந்ததை மறுநாள்

எங்களிடம் சொன்னார்,'பாவம்; பெரிய சீவ(ன்); கொளாயா மாட்டி வச்சிருந்தாங்க. நர்ஸ்

அம்மா ரூம விட்டுப் போனதுமே, நா(ன்) போயி அல்லாத்தையும் புடுங்கிப் போட்டனா!

கொஞ்ச நேரத்திலே, அடங்கீருச்சு!' அடடா! இவர் கருணைக் கொலையல்லவா

செய்திருக்கிறார்!


அவரின் தைரியமும், பயமில்லாத பேச்சும் கிராமத்துப் பெண்களுக்கு மிகவும் அரிதான

குணங்களே!

:thumb:
 
இரு அதிசய ஆசாரிகள்!

குமரன் என்ற நல்ல பெயர்! செய்வது தச்சுத் தொழில். நல்ல முனையுள்ள அறிவு.

சொன்னதைப் புரிந்துகொண்டு புதிய முறையில் மர சாமான்களைச் செய்வான். ஆனால்

கடைசியில் ஏதோ ஒன்று சாய்வாகப் பொருத்துவான். அதுதான் 'குமரன் ஸ்டைல்'!


Godrej அலமாரி போல ஒன்று செய்ய அவனுக்கு மிகவும் ஆசை. அப்பாவிடம் காசு

வாங்கிக்கொண்டு, தேயையான பொருட்களாக அலுமினியத் தகடுகள், மரப் பலகைகள்,

ஒரு handle (அதை எங்கே வாங்கினானோ, தெரியாது!) வாங்கிவிட்டான். நாலு அடி

உயரத்தில் மூன்று படிகள் கொண்ட அலமாரி தயார் செய்தான். அதில் கடைசியில்

பொருத்திய handle மட்டும் 'குமரன் ஸ்டைல்'தான்! சாக்கலேட் வண்ணம் அடித்த அந்த

அலமாரி, இன்று வரை நன்றாக இருக்கிறது. அவனை ஒருவேளை நல்ல காலேஜில் படிக்க

வைத்திருந்தால், அமெரிக்காவுக்குப் போய் கொடிகட்டிப் பறந்திருப்பான். தலையில் 'சுழி'

சரியில்லையே! எங்கள் ஊர் படிக்காத மேதைகளில் அவன் ஒருவன்.


இன்னொருவரின் நிஜப் பெயரே தெரியாது! 'நாகப்பன்' அப்பா என்று அழைப்பார்கள்!

ஒடிசலான தேகம்; குழந்தைச் சிரிப்பு - பல் இல்லாததால்! கொலுசு செய்வதில் expert.

காலைக் கீறாமல், மொழுக் மொழுக்கென்று செய்து தருவார். எங்கள் கால் அளவுகளை

எடுத்து, எத்தனை 'இச்சி' (inch தான்) என்று குறித்துக் கொள்வார். நாங்கள் அவருக்கு

வைத்த செல்லப் பெயர் 'இச்சி' ஆசாரி! கூலி என்ற பெயரில் கொள்ளை அடிக்கத் தெரியாத

நல்ல மனிதர்.


இந்த இருவரையுமே எங்கள் ஊருக்குக் கிடைத்த நல்லவர்கள் 'லிஸ்டில்' சேர்க்கலாம்!

:first:
 

விபரீத முடிவு!


அழகு சொட்டும் ஒரு பெண் எங்கள் பள்ளியில் படித்தாள். நீண்ட பின்னல்; தந்த நிறம்;

முத்துப் பற்கள்; சரியான உயரம்; நாணம் கலந்த புன்சிரிப்பு; அதிராத இனிய பேச்சு! ஒரு

தேசீயக் கொடியைக் கையில் பிடித்தால், பாரத மாதா போலவே இருப்பாள். அத்தனை

அழகுப் பெட்டகம். பள்ளியில் பசங்களுடன் பேசவே மாட்டாள். அந்த அமைதிப்

பெண்ணிடம், இத்தனை அழுத்தம் இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை! பள்ளி

இறுதி வகுப்பில் படிக்கும்போது, தன் அத்தை மகனை மணக்க ஆசைப்பட்டாள்!

அவனுடைய பெற்றோர் கொஞ்சம் வசதி குறைவுதான். எனவே, அவள் வீட்டில் எதிர்ப்பு!

சொந்தத்தில் பெரியவர்கள் யாரிடமேனும் பேசி, பெற்றோரை சம்மதிக்க வைக்கத்

தெரியாமல், ஆண்டு விடுமுறையில் இருவரும் அரளி விதையை அரைத்துக் குடித்து,

இன்னுயிர் நீத்தனர்! சினிமா கொடுத்த ஐடியாவாக இருக்குமோ? யாருக்கு என்ன பயன்?

போலீஸ் வந்தால்,விஷயம் எல்லோருக்கும் தெரியுமே என்று, பாம்பு கடித்ததாகச்

சொல்லி, காரியத்தை முடித்துவிட்டனர்! இன்று நினைத்தாலும், அவளின் மரணத்தை

ஜீரணிக்கவே முடியவில்லை; அவள் தைரியம் உள்ளவளா, இல்லையா என்றும்

தெரியவில்லை! சாகும் அளவு தைரியம் இருந்தவளிடம், ஏன் வாழும் தைரியம்

இருக்கவில்லை?


கடலைவிடப் பெண்ணின் மனம் ஆழம் என்பது இவள் போன்றவரைப் பார்த்துத்தானோ?

:noidea:
 

குறுமுனிபோல் ஓர் ஆசான்!


எங்கள் பள்ளியில், பெரிய வகுப்புப் பசங்களுக்கு, குறுமுனிபோல ஆசான் ஒருவர்.

அவரின் செல்லப் பெயர் 'நாலடியார்'! தும்பைப்பூப் போல வெள்ளை வேஷ்டியும்,

முழுக்கைச் சட்டையும் அணிந்து, அங்கவஸ்த்ரமும் அழகாக மடித்துப் போட்டிருப்பார்.

பெருமாள் பக்தர். நெற்றியில் U நாமத்துக்கு இடையே ஒரு சிவப்புக் கோடு இடுவார்,

பளிச்சென்று. தன் பிள்ளைக்கும் 'பெருமாள்' என முடியும் பெயரையே வைத்திருந்தார்.


'சார்' என்று அழைத்தால், திட்டுவார்! 'சார் என்ன சார்... மோர் மாதிரி இருக்கு! நீ என்ன

பெரிய்ய இங்க்லீஷ்காரனோ?', என்று கடிந்து சொல்லிவிட்டு, 'ஐயா - ன்னு அழகாத்

தமிழிலே கூப்பிடு', என்பார்! லூட்டிப் பசங்கள் நாலு எழுந்து, 'ஐய்யாஆ', என்று

பிச்சைக்காரன் போலக் 'கோரஸ்'-ஆகக் குரல் கொடுக்கும்! மேஜையைத் தட்டி,

எல்லோரையும் சத்தமில்லாமல் இருக்கச் சொல்லுவார்.


கண் பார்வை நேராக இல்லாத குறைபாடு, அவருக்கு. ஒரு பையனைப் பார்த்துத்

திட்டினால் (அவருக்கு மிகவும் பிடித்த வேலையே அதுதான்), அடுத்தவன் எழுந்து, 'நான்

ஒண்ணுமே செய்யலையே, ஐயா!', என்பான். 'உன்னைச் சொல்லலைடா; நீ ஏன் பதில்

சொன்னாய்?', என்று அவனை நோக்கினால், அடுத்தவன் எழுந்து, 'நான் பதில்

சொல்லலையே, ஐயா', என்பான். அவரைக் கோபப்படுத்தித் திட்டு வாங்க, பசங்களுக்கும்

அலாதி ஆசைதான்! ஏனென்றால், மிகவும் கோபம் வந்தால், ஓடிப்போய் 'பெஞ்ச்' மேலே

ஏறி, பசங்களை அடிப்பார் - அப்போதுதான் அவருக்குப் பசங்களின் முதுகு எட்டும்!

அதுகளோ 'காமெடி ஷோ' பார்த்ததுபோலச் சிரிக்கும்! பெண் குழந்தைகளிடம், பரிவுடன்

பேசுவார். திட்டெல்லாம் பசங்களே வாங்கும்!


தன் தொழிலைக் கண்ணெனப் போற்றியவர். தன் ஒரே மகனையும், ஆசிரியர் தொழிலுக்கே

படிக்க வைத்து, அதே பள்ளியில் பணியில் சேர்த்தார். தன்னிடம் படித்த பசங்கள், பெரிய

பணியில் அமரும்போது, அதைப் பற்றிச் சொல்லி ஆனந்திப்பார். 'எழுத்தறிவித்தவன்

இறைவன்', என்பதே அவருடைய வேதாந்தம்!

:angel:
 
தமிழ்ப் பற்று!

தமிழ்ப் பற்று மிக்க ஆசிரியர் எங்கள் பள்ளிக்கு வந்தார். தன் இயற்பெயரை மாற்றினார்,

அமுதன் என்று! ஏன் தெரியுமா? அவரின் இல்லத்தரசி பெயர் அமுதவல்லி! இலக்கணப்

பிழை இன்றித் தமிழில் அழகாகப் பேசுவார். முதல் வகுப்பு அவர் நடத்தியதுமே, நாங்கள்

அடுத்த வகுப்பை எதிர்பார்க்க ஆரம்பித்தோம்! அத்தனை அருமையாக இருந்தது.


அவர் கூறிய பல விஷயங்கள் நினைவில் இருந்தாலும், ஒரு திருக்குறளின் பொருளை

மாற்றிச் சொல்லி, எங்களைச் சிரிக்க வைத்ததுதான் TOP!

'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை' என்பது அந்தக் குறள்.

வேறு தெய்வத்தைத் தொழாமல், தன் கணவனையே தெய்வமாகத் தொழுபவள், 'பெய்'

என்று சொன்னவுடன், மழை பெய்யும் என்பது ஒரு கருத்து. வேறு தெய்வத்தைத்

தொழமாட்டாள்; கணவனையே வணங்குவாள்; அவள் 'பெய்' என்று சொன்னவுடன்

பெய்யும் மழையைப் போன்று மகிழ்ச்சியைத் தருபவள் என்று இன்னொரு கருத்து. இவை

இரண்டையும் விட்டு விட்டு, ஆசிரியர் இன்னொரு கருத்துச் சொன்னார்! தெய்வத்தையும்

தொழமாட்டாள்; தன் கணவன் (காபிக் கோப்பையுடன்) 'அம்மா தாயே! கொஞ்சம் எழுந்து

வந்து வேலை செய்கிறாயா?' என்று தொழுது கேட்டபின், எழுவாள்; அவள் 'பெய்' என்று

சொன்னவுடன், மழைகூடப் பயந்துகொண்டு பெய்துவிடும்!


அவரின் மனைவி எங்கள் விளையாட்டுட் 'டீச்சர்'! ஆனாலும் தமிழில் மிகுந்த பற்று.

சினிமாப் பாடல்களை மாற்றி எழுதுவதில் ஆர்வம் உண்டு. 'குங்குமம், மங்கல மங்கையர்

குங்குமம்' என்று ஒரு சினிமாப் பாடல் அப்பொழுது பிரபலமாக இருந்தது. நானும் என்

தங்கையும் சேர்ந்து பாட, ஒரு வரவேற்புப் பாடல் அதே மெட்டில் எழுதிக் கொடுத்தார்.

இப்போதுகூட நினைவில் இருக்கிறது!

'வந்தனம். இங்குள்ள நல்லோர்க்குத் தந்தனம்;

வந்தனம், இதயம் கனிகின்ற வந்தனம்!

ஆனைமலை எனும் அழகு நகர் உள்ளீர்

அனைவரும் வந்துள்ளீர் வந்தனம்!

தேனை மானுமோர் மீனவன் தமிழ்

உண்டிட வந்துள்ளீர் வந்தனம்!'

எங்கள் குறும்புத்தனத்தால், வீட்டில் நாங்கள் இருவரும், அம்மாவிடம் போய், 'வந்தனம்'

என்று வரும் இடங்களில் எல்லாம் 'வந்தனமில்லை'! என்றும், 'தந்தனம்' என்ற இடத்தில்

'தந்தனமில்லை' என்றும் மாற்றிப் பாடிச் சிரிப்போம்!


எங்கள் தமிழ்ப் பற்றை வளர்க்க இந்த இரு ஆசிரியர்களும் மிக உதவியுள்ளனர்.

அவர்களை மறக்கவே முடியாது!

:cheer2:
 
தமிழ்ப் பற்று!



....குங்குமம்' என்று ஒரு சினிமாப் பாடல் அப்பொழுது பிரபலமாக இருந்தது. நானும் என்

தங்கையும் சேர்ந்து பாட, ஒரு வரவேற்புப் பாடல் அதே மெட்டில் எழுதிக் கொடுத்தார்.

இப்போதுகூட நினைவில் இருக்கிறது!

'வந்தனம். இங்குள்ள நல்லோர்க்குத் தந்தனம்;

வந்தனம், இதயம் கனிகின்ற வந்தனம்!

ஆனைமலை எனும் அழகு நகர் உள்ளீர்

அனைவரும் வந்துள்ளீர் வந்தனம்!

தேனை மானுமோர் மீனவன் தமிழ்

உண்டிட வந்துள்ளீர் வந்தனம்!'

எங்கள் குறும்புத்தனத்தால், வீட்டில் நாங்கள் இருவரும், அம்மாவிடம் போய், 'வந்தனம்'

என்று வரும் இடங்களில் எல்லாம் 'வந்தனமில்லை'! என்றும், 'தந்தனம்' என்ற இடத்தில்

'தந்தனமில்லை' என்றும் மாற்றிப் பாடிச் சிரிப்போம்!


எங்கள் தமிழ்ப் பற்றை வளர்க்க இந்த இரு ஆசிரியர்களும் மிக உதவியுள்ளனர்.

அவர்களை மறக்கவே முடியாது!

:cheer2:

அன்புள்ள ராஜி ராம் அவர்களுக்கு ,

இந்த '' மலரும் நினைவுகள் '' பகுதி
நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

எனது பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் பகுதியில்

Who has seen the wind?
Neither I nor you.
But when the leaves hang trembling,
The wind is passing through...

என்ற பாட்டிற்கு அப்பொழுது மிகவும் பிரபலமாய்
இருந்த திரைப் பாடலான '' கொடி அசைந்ததும்
காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
என்ற மெட்டில் எங்கள் Helda James டீச்சர் சொல்லிக் கொடுத்தது
இன்னும் பசுமையாக நினைவில் நிற்கின்றது .

சிவஷன்முகம்
 

சண்முகம் சார்! தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அந்த ஆங்கிலக் கவிதைக்கு நம்ம
தமிழ் மெட்டு நன்றாகவே பொருந்துவது, ஆச்சரியமான விஷயம்தான்! :lalala:
 

'கொடியசைந்ததும்' மெட்டிலே, அமுதவல்லி டீச்சரும் ஒரு பாட்டு இயற்றினார்!

முதல் வரிகள் மட்டுமே நினைவு!

'பாரதி என்றதும் பாட்டு வந்ததா?

பாட்டு என்றதும் பாரதி வந்தாரா?

உரிமை பெற்ற நாம் பீடிழப்பதா?

அன்னை இந்தியா அடிமை செய்வதா?'
:ballchain:
 
raji,

re 'விபரீத முடிவு!', i suspect that there was more smoke behind the screens.

these two probably had approached the parents and were rebuffed. also, there could be historical precedents in each one's house, that requests made by children are never agreed to.

so, it is highly likely, the sense of hopelessness, that drove these to mutual suicide.

so sad raji.

parents being strange creatures, i am not even sure, if there was any grieving.

i know a youth, whose whose ways, was not quite straight. in his teens he used to steal from his home, to pay for his movie and cigarette addiction. the father used to beat him with bamboo stick, well into his late teens.

one day, he took poison and died. the father's response, 'good riddance'. we do not know what the mother felt, for she was completely dominated by the dad.

only the older sister openly cried. that too in private, when visiting us.

there were no ceremonies, and i probably did atleast namesake something for his soul, when i remembered him, in my prayers at kasi/gaya.
 
d.o.perry

d.o.perry, my high school english teacher.

if there is one human, i feel, i owe without ever fulfilling, it would be mr. perry.

perry was an anglo indian, bachelor to the end. over 6ft, skinny, brylcreamed rolled back grey hair, and a moustache. he had a deep voice, and an immense love of the english language.

he taught us how to appreciate poems. even the most vagabond of the boys (ours was a boys' only school) would sit motionless and with rapt attention, whether it be swaying to the daffodils, or lines written near tintern abbey.

perry also loved shakespeare. he used to read from the original and not the abridged. every class it was a public display of oratory. he used to take on all the characters, modulate his voice, raise or lower it, shriek or whisper. it was a one person drama show. we simply loved it.

like the anglo indians who grew up in british india, perry was cultured. he was well read, played the piano well, could carry a 'two left footed partner' any day with elegance on the dance floor.

there used to have an anglo indian club near our home, where there were dances to live music every saturday. we tamil boys, of all religions, used to peep through the windows, fascinated by the whirls and twirls of the couples. perry and his constant partner, were easily the stars.

like all teachers in the 1950s, 60s, perry's salary was meagre - 150 rupees per month or so. but he would never enhance his income with private tuitions. he never married, i figured for the same reason, that he could not support a family.

he had a tamil cook who used to come to school every afternoon with a tiffin set of fresh fragrant food, whcih perry used to eat with knife and fork (all the other teachers had only spoons or ate with their hands).

once, he remarked, how in post independence india, pure drinking chocolate was no longer available. he missed the original schweppes brand made in europe.

so, on my first return home, in 1975, i had two tins of pure drinking chocolate, especially for him. i went to my old school, to find out, mr. perry's whereabouts. only to be told, that he had gone to his heavenly rewards a few years earlier.

if there is one human, to whom i owe what little i am able to think, and how to express it in the english language, it will be mr. perry.

sir, wherever you are, i hope you are int he company of shakespeare, byron, shelly, keats and wordsworth. i know that would be your heaven, and i pray that you are able to see from there, these and such odes of gratitudes from the hundreds of your ex students.

God Bless you sir.
 
................
parents being strange creatures, i am not even sure, if there was any grieving.
...........
Very true, Sir! Even in the 21st century, we hear of 'honour killing' of one's own daughter, if she seeks

a partner form a lower caste! Such incidents do not happen in brahmins families, by God's grace!
 

இளம் கன்று பயம் அறியாது!


பத்தாவது வயதில், ஆறாவது வகுப்பு முடித்து, ஏழாவது வகுப்பில் நுழைந்தேன். எங்கள்

அம்மாவுக்கு என்னை Technical Exam, கர்நாடக சங்கீதத்தில், எழுத வைக்க ஆசை. ESLC

படிப்பவர்களே எழுத அனுமதிக்கப்படுவார்கள். அப்போதுதான், பாடத் திட்டத்தில் First form

(6th class) என்னும் வழக்கம், 6th Standard என்று மாறிய சமயம். எங்கள் தலைமை

ஆசிரியரிடம் சென்று, 7th standard என்பது ESLC - க்கு சமம் என்று சான்றிதழ் வாங்கி,

என்னை எழுதவைத்தார். Theory இரண்டு பேப்பர்கள் எழுதவேண்டும். Practical

பரீட்சையில் பாட வேண்டும்; ஆசிரியர் பாடுவதை ஸ்வரப் படுத்தி எழுதவேண்டும்.

தாத்தா கொடுத்த Training - ஆல் அதுவும் எளிதாகவே இருக்கும். Practical

பரீட்சையன்று நான்தான் அங்கு உள்ளவர்களிலேயே குட்டி! எல்லோரும் பெரியவர்கள்;

சிலர் மாமிகள். என் நம்பரை அழைத்ததும் நான் போய் கதவு அருகே நின்று, அங்கிருந்த

Examiner - ஐப் பார்த்துச் சிரித்தேன்! அவர், 'என்னம்மா? அம்மாவைத் தேடி வந்தாயா?'

என்று கேட்டார், பரீட்சைக்கு வந்த ஒரு மாமியின் பெண் என்று எண்ணிக்கொண்டு!

நானோ, 'இல்லை சார்! பாடத்தான் வந்தேன்!' என்று சொன்னதும், அதிசயித்தபடி உள்ளே

வரச்சொன்னார். அமர்ந்ததும், 'என்ன பாடத் தெரியும்?' என்று கேட்க, 'என்ன வேணாக்

கேளுங்க சார்!' என்றேன். சிரித்தபடியே, மோகன வர்ணம் - அனுபல்லவி பாடச்

சொன்னார். பின் ஒரு கீர்த்தனையின் சரணம் பாடச் சொல்லி, சில ஸ்வரங்களும்

கேட்டார். பயமே இல்லாமல் எல்லாம் பாடிவிட்டு, வெற்றியுடன் வெளியேறினேன்!


இதற்குப் பின்னர்தான் வேடிக்கையே! பரீட்சை முடிவுகள் வந்ததும், அம்மா பேப்பரை

வைத்துக்கொண்டு என் நம்பரை Second class இல் தேட, அதில் இல்லை. (குழந்தை

என்னதான் எழுதி இருக்கும், என்ற நினைப்புத்தான்!) பின், Third class இல் தேட, அதிலும்

இல்லை. உடன் இருந்த சொந்தக்கார மாமி, 'First class வாங்கி இருப்பா... அதிலே

தேடுங்கோ' என்று சொல்ல, அதில் என் நம்பர் வந்ததுடன் (D) என்று அருகில் அச்சாகி

இருந்தது! ஆமாம்... நான் பாடியதில் அசந்த Examiner, Distinction போட்டிருந்தார்!

அன்று போல சந்தோஷம், அதற்குப்பின் இரண்டு முறைகளே அனுபவித்தேன், என்

சாதனைகளுக்காக!
இளம் கன்று பயம் அறியாது என்பது எத்தனை உண்மை! :llama:

 

முதுகலைப் பேராசிரியர்கள்!


முதுகலை வகுப்பில் நுழைந்தேன், டீன் ஏஜ் - இன் கடைசி வருடத்தில். எங்கள்

பேராசிரியர் Prof . ஜகதீசன் அவர்கள். (சந்தோஷம் வந்தால் 'அவுட் வாணம்' போலச்

சத்தமாகச் சிரிப்பார்!) அவரின் மனைவி (எங்கள் அகராதியில் 'மேடம்' ) அவர்களும்,

எங்கள் ஆசிரியைதான். வீட்டிலும், கல்லூரியிலும் உடன் இருக்கும் ஒரு 'கணக்கு'த்

தம்பதியர்! இனிமையான சுபாவம் இருவருக்கும். இன்னொருவர் பேராசிரியர். ஹனுமந்த

ராவ் அவர்கள். அவர் இளங்கலை வகுப்புகளும் நடத்துவார்.


மேடம் கற்றுத்தருவார் Modern Algebra. அந்தப் பாடத் திட்டத்தில், எங்கள் Batch தான்

முதலாவது. எங்கள் வகுப்பில், ஐந்து மாணவியர்; பதினான்கு மாணவர்கள் இருந்தோம்!

Modern Algebra ஒரு பேப்பர். அந்த வருட முடிவிலேயே, மொத்தம் மூன்று பரீட்சைகள்

எழுதவேண்டும். அடுத்த ஆண்டில் இன்னும் நான்கு! ஏழு பரீட்சைகளையும் சேர்த்து

எழுதுவார்கள், அதற்கு முன்பு! இவ்வாறு பிரித்ததால், எங்களுக்குக் கொஞ்சம் எளிதானது.

ஆண்டு முடிவில் மூன்று தாள்கள் முடித்தபின், மதிப்பெண் போட்டுப் பார்த்தால்,

ஒன்றுமே புரியவில்லை! எத்தனை 'மார்க்' போடுவார்கள்? எப்படிக் குறைத்தாலும்,

அறுபது சதவீதத்திற்கு மேல் வரும் என்று நம்பிக்கை! (ஐம்பதுதான் பாஸ் மார்க்!)


இரண்டாம் ஆண்டு - முதல் நாள்; மாணவிகள் கூட்டமாகக் கல்லூரியில் நுழைகிறோம்!

எதிரில் பேராசிரியர் 'ஜ'! சிரித்துக் கொண்டு, எல்லோரும் கோரஸாகக் காலை வணக்கம்

சொன்னதும், என்னிடம் திரும்பி,'What do you expect in modern algebra ?' என்று

சிரிக்காமலே கேட்க, என் சப்த நாடியும் ஒடுங்கியது! அடடா! நமக்கோ மார்க் போடவே

தெரியவில்லை... 'ஒருவேளை, அந்த பேப்பர் திருத்தியவர், மனைவி தந்த உப்புமா

சாப்பிட்டுவிட்டு வந்த கோபத்தில், நாற்பத்தொன்பது போட்டு, சதி செய்தாரோ?....'

என்றெல்லாம் ஒரே நொடியில் மனம் கலங்கியது! அவர் உடனே பெரிதாக அவர்

'ஸ்டயிலில்' சிரித்துவிட்டு, 'You got the first rank in the state! Eighty four percent!

Congrats!' என்றார். அவர் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிய இன்னொரு நொடி

ஆனது! என் நண்பிகளெல்லாம் உற்சாகக் குரல் கொடுத்தனர்! (அந்தக் காலத்தில் 'ஓ'

போடத் தெரியாதே!!) இதுதான் நான் பெருமகிழ்ச்சி அடைந்த இன்னொரு தருணம்!


இப்போது கேட்டால், ஒன்றும் தெரியாது அந்த Modern Algebra வில்! எங்கள் மிலிடரி

மாமா சொல்வது நினைவில் நிழலாடுகிறது:

Algebra is a zebra;

Looks like a cobra!

Makes a man 'gaabraa',

In the town of Agra!

வாழ்க கணிதக் கலை! :hail:
 
raji,

i have always loved algebra, geometry and trigonometry.

thanks to my anglo indian teachers t.l.a.d. gonzaga & george d'netto.

sorry to brag.. got 100% in all the 3 of them; 1966 anglo indian high school exam :)

still remember those theorems.

all my 3 kids, growing up in canada, never learnt to appreciate maths and its cousins. i guess we have great math teachers in india :)
 

சண்முகம் சார்! தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அந்த ஆங்கிலக் கவிதைக்கு நம்ம
தமிழ் மெட்டு நன்றாகவே பொருந்துவது, ஆச்சரியமான விஷயம்தான்! :lalala:

நன்றி. இன்னும் நிறைய சம்பவங்கள் எழுதவேண்டும்போல் இருக்கிறது ..
 
ஆண்டு 1972 .sslc முடித்துவிட்டு puc
நேரு நினைவு கல்லூரியில் சேர்ந்திருந்தேன்.

முதல் வாரம் ..வகுப்புகள் நடக்கவில்லை.

Bench mates களிடம் அரட்டை அடிப்பதும்
அவர்கள் ''ஜாதகம்'' விசாரிப்பதுமாக பொழுது
போய்க்கொண்டிருந்தது.

அப்பொழுது என் அருகில் அமர்ந்துள்ள மாணவனிடம்
பேசிகொண்டிருக்கையில் அவன் தன்னை '' சின்னசேலம் மௌலானா ''
என்று கூற (நாதஸ்வர கலைஞர் அல்ல) எனக்கு ஒரே குழப்பம் கலந்த மகிழ்ச்சி ..

நான் திருப்பி ''திருச்சி வானொலி நிலையத்தில்
விரும்பிக் கேட்டவர்கள் நிகழ்ச்சியில் அடிக்கடி வரும்
அந்த சின்னசேலம் மௌலானாவா''? என்று கேட்டதற்கு
அவனும் ஆம் என்று கூறினான்..எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை..

சின்ன சேலம் மௌலானா எனது bench
என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு
பெருமையாக இருந்தேன் .

(பிறகு, அடுத்த மாதத்தில் அவன் திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு
போய்விட்டது வேறு கதை)
 
Last edited:
நன்றி. இன்னும் நிறைய சம்பவங்கள் எழுதவேண்டும்போல் இருக்கிறது ..
மலரும் நினைவுகள் இனிதாக வரும்போது, நம் வயதும் குறைந்ததுபோலத் தெரிவது நிஜமே! :target:
 

Latest ads

Back
Top