• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!


Probably, most of the older generation guys were dominating, sometimes unnecessarily showing

their anger towards their wives and the saying 'கோபம் உள்ள இடத்தில்தான் குணமும்

இருக்கும்' came to pacify the poor ladies getting those 'bitter' halves!

:grouphug:
 
raji,

as these guys grew older, they needed their wives more, and hence the anger subsided. i know a guy who used to terrorise his wife and daughters. he mellowed with age, and his daughter used to talk to me in awe, as to how much a tyrant he was but had become so soft - as if this was a great achievement.

the women were cowed in those days. which is why i have no sentimentality for those 'good old days'. the old days were awful. nothing good about it.
 
......
In our house, my grandma used to recycle the spoiling kaNNi mangaais. Carefully removing the cover of green moss on top of the brine in the bharani, she used to pick the rotting mangoes and make the most delicious arachukalakki. She used to comment, that the best arachukalakki comes only when the mango is on the verge of turning to rot
..........

We have also tasted 'that', prepared by our amma! But only difference is: We named it 'அழுக மாங்காப் பச்சடி'.

Talking about அழுக மாங்கா... If someone cries, our villagers will say 'அவ அழுகறா!' the accent in அவ

varying slightly, depending on who cries... a boy or a girl! So, we call anyone who cries, as அழுக மாங்கா!

:peace:
 
Can we feel happy, contented and thrilled that

now the 'tables are turned' and the

'menfolk are cowed down' (bull turned cows?)

and face their 'bitter halves' in the

'present bad days'? :confused: :noidea:
 
தந்தை.....

பொறுமைக்கு வேறு பெயர் வைத்தால், எங்கள் தந்தையின் பெயரே பொருத்தம்!

ராமன்..... பெயருக்கு ஏற்றபடி, முகத்தில் மாறாத மந்தஹாசம். அப்பாவுக்குக் கோபம்

வந்து நாங்கள் பார்த்ததே இல்லை. 'என்னம்மா இது?' என்று கொஞ்சம் குரலை

உயர்த்தினால், இரண்டு நாட்கள் அப்பா முன் செல்ல மாட்டோம்! அதுதான் அப்பாவின்

'திட்டு'... அதிக பக்ஷம்.

'இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று'.

இந்தக் குறளை, அப்பாவைப் போன்றோரைக் கண்டுதான் திருவள்ளுவர்

எழுதியிருப்பாரோ? தன் பொறுமைக்கு ஏற்றபடி மருத்துவம் படித்து நோயாளிகளை

அன்பாய் குணப்படுத்தியவர். தான் அனுபவத்தில் கற்ற பாடங்களை, பாங்காக எங்களுக்கு

எடுத்துக் கூறுவார். இசையில் அலாதி ஆர்வம். அகில இந்திய வானொலி பாடற் பயிற்சி

நிகழ்ச்சியில் கற்றுக் கொடுக்கும் கீர்த்தனைகளை, அழகான கையெழுத்தில், ஸ்வரப்படுத்தி

எழுதி வைப்பார். பாடலைக் கேட்கவும் வைப்பார். இதுபோலப் பல கீர்த்தனைகள்

கற்றுக்கொண்டோம்.


கடன் கொடுப்பதும், வாங்குவதும் உறவைக் கெடுக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை

கொண்டவர். கர்ம யோகம்தான் சிறந்தது என்ற கொள்கை, அப்பாவுடையது. ஸ்வாமி

கோவிலை மட்டும் சுற்றிச் சுற்றி வந்தால் பயனில்லை என்று புரிய வைப்பார்.

எல்லோரும் நன்கு கூடி வாழ்வதை விரும்புவார். அவரைப் பின்பற்றினால், ஒருபோதும்

தவறு செய்ய முடியாது! ஆனைமலை ஊர் மக்களுக்கு கடவுளுக்கு நிகராக விளங்கியவர்.

'சாமி, சாமி', என்று சுற்றிவரும் நோயாளிகளுக்கு, சாமி போலவே துணை நின்று காப்பார்.

P. G. Wodehouse நாவல்களை ரசித்துப் படிப்பார். கண்களில் நீர் வரும் அளவு சிரிப்பார்.

இன்றும் அந்தச் சிரிப்பு, மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது!


அப்பாவின் வெள்ளைக் கோட்டுக்கு பட்டன் சொருகி மாட்ட, நாங்கள் போட்டி போடுவோம்.

நாங்கள் செய்யும் சின்னச் சின்ன உதவியைக்கூட புன்னகையுடன் பாராட்டுவார். நல்ல

திரைப் படங்கள் வந்தால், கூட்டிச் செல்வார். ஒரு முறை, புதிதாகப் பொள்ளாச்சியில்

கட்டிய 'நல்லப்பா திரை அரங்கில்' GUNS OF NAVARONE திரைப்படம் பார்க்க, இரவு

அழைத்துச் சென்று, சில்லென்று காற்று ஜன்னல் வழியே முதுகில் வீச, பால்கனியில்

அமர்ந்து படம் பார்த்தது, இன்னும் நினைவில் உள்ளது. கோவையில் நடக்கும் நல்ல

கச்சேரிகள் எவ்வளவு கேட்டுள்ளோம், அப்பாவுடன்! அந்தக் கேள்வி ஞானம் இசையறிவு

வளர அடித்தளமாக அமைந்தது. நான் வீணையில் வாசிக்கும் துக்கடாக்களை, மிகவும்

ரசிப்பார். தன் நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்.


:director: தொடரும்.......
 
தந்தை ........... (தொடர்ச்சி)

திடீரெனத் தன் மனைவிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதைத்து, இரவு நேரம் புலம்பி

வந்தான் ஒருவன்! அவன் வீட்டிற்குச் சென்றதுமே, அப்பாவுக்கு விஷயம் புரிந்தது.

மாமியாரிடம் 'சீராடி'விட்டு ( சண்டைதான்!) வெறித்த பார்வையுடன் அந்தப் பெண்

கிடந்தாள்! 'எழுந்திரும்மா' என்ற கனிவான் சொற்களுக்கு, அசையாது கிடந்தாள். உடனே,

தன் கத்திரிக்கோலை எடுத்து 'கிளிக்' என்று சத்தம் போட வைத்த அப்பா, ' வேற

ஒண்ணுமில்லை. நாக்குதான் சிக்கி இருக்கு! கொஞ்சம் நுனியைக் 'கட்' பண்ணினால்,

எல்லாம் சரியாகும்', என்று சொன்னவுடன், வெறித்த கண்களைக் கொஞ்சமாக் ஆட்ட

ஆரம்பித்தாள், அந்தப் பெண். 'அட! கண்ணு அசையறதே!' என்று கூறிவிட்டு,

'உக்காரும்மா' என்றதும் உட்கார்ந்தாள். 'எழுந்திரும்மா' - எழுந்தாள். 'நட, பாக்கலாம்' -

நடந்தாள். 'பேசுவியா?' - பேசினாள்! அந்த வீட்டில் அனைவரும் ஆனந்தக் கூத்தாட,

விட்டால் போதுமென, திரும்பி வந்தார் அப்பா.


அந்த ஊர் மக்கள் எத்தனை புத்திசாலிகள் என்பதற்கு ஓர் உதாரணம். 'டாக்டரு சாமி!

அன்னைக்கு நீங்க எனக்கு அஞ்சு ரூபா கொடுத்தீங்க. இன்னைக்கு ஒரு ஊசி போட்டு

மருந்தும் கொடுத்தீங்க. அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு!'


பர்மாவில் தங்கப் பதக்கத்துடன் மருத்துவப் பட்டம் பெற்று, ராணுவ டாக்டராகச் சேர்ந்து,

இரண்டாம் உலகப் போர் சமயம் இந்தியாவுக்கு நடையாய் நடந்து வந்து, சேலத்தில்

டாக்டர் ராஜாராம் அவர்களின் உதவி டாக்டராகச் சேர்ந்தார். மலைப் பாதைகளைக் கடந்து

வந்தபோது, வழியில் மூங்கில் அரிசியைச் சேகரித்து, அதைச் சமைத்துச் சாப்பிட்டதைக்

கேட்கும்போது, கதை போலவே தோன்றும்! சேலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை

அனுபவித்ததில், வேறு ஊர் மாற எண்ணம் ஏற்பட்டதாம்! ஆனைமலை என்ற ஊரில்,

மருத்துவர் தேவை என்று அறிந்ததும், அப்பா கேட்ட ஒரே கேள்வி, 'அந்த ஊரில் தண்ணீர்

நல்லாக் கிடைக்குமா?' என்பதே. வற்றாத ஆளியாறு ஓடுவதை அறிந்ததும் இடம்

பெயர்ந்தாராம்! தன் தொழில் மீது அத்தனை உறுதியான நம்பிக்கை கொண்டவர்.


நாம் எல்லோருக்கும் நல்லதே செய்தால், நமக்கும் பல உதவிகளை ஆண்டவன்

செய்வான் எனக் கற்பித்தவர். அப்பா விரும்பிக் கூறும் கதைகளில் இது ஒன்று. ஒரு

நதிக்கரையில் ஒரு சந்நியாசி அமர்ந்திருக்க, தேள் ஒன்று நதியில் தத்தளிப்பது கண்டு

அவர் வெளியில் எடுக்க, தேள் அவர் கையைக் கொட்ட, அவர் கையை உதறியதும், தேள்

மீண்டும் நீரில் விழ, மீண்டும் அவர் காப்பாற்ற, மீதும் அது கொட்ட, அவர் கையை

உதற.... இந்த ACTION REPLAY தொடருவதைக் கண்டு வழிப்போக்கன், 'ஏன் அதைக்

காப்பாற்றிக்கொண்டே இருக்கிறீர்?' என வினவ, அவர் சொன்னாராம், ' காப்பது என்

வழக்கம்; கொட்டுவது அதன் வழக்கம்!' எப்போதும் நல்லதையே நினைத்து நல்லதையே

செய்யவேண்டும் என்பார், அப்பா.


கோவில்களுக்கு அதிகம் செல்ல மாட்டார். 'நம் வீட்டில் இல்லாத ஸ்வாமியா?', என்பார்!

மணி விழா வயதுக்குப் பின், கீதை தினமும் பாராயணம் செய்ய ஆரம்பித்தார். கீதை

காட்டுவதும் கர்ம யோகப் பாதைதானே! அந்த வயதில், ஆசிரியரிடம் வயலின் வாசிக்கக்

கற்றார். தினமும் அதிகாலை டிகிரி காபி குடித்ததும், மாயாமாளவகௌள ராகம்

இசைப்பார். அந்த ராகம் வீட்டிற்கு நல்லதைக் கொண்டு வரும் என்ற குருவின் வாக்கை

வேத வாக்காக மதித்தார். (அவரின் குரு பற்றிப் பின்னர் எழுதுகிறேன்!) 'மிக உன்னத

மனிதர்' என்பது அப்பாவைப் பற்றி ரத்னச் சுருக்கமாக உரைப்பது! அவரின்

நற்பண்புகளையே, நாங்களும் பின்பற்ற விழைகிறோம்!


:blah: தொடரும்...............
 
Can we feel happy, contented and thrilled that

now the 'tables are turned' and the

'menfolk are cowed down' (bull turned cows?)

and face their 'bitter halves' in the

'present bad days'? :confused: :noidea:

It was the 'financial independence' which gave that bullish nature to men!

Now a days, girls are also independent financially and demand respect and freedom!

The guys who get better halves are lucky, for sure!!

The newly weds in those days, not only suffered from their BHs but also form MsIL.. Poor dears!

This means, there were lady terrorists too, in the form of MsIL!!! ... :whip:
 
முதல் குரு .....

எங்கள் முதல் குரு, எங்கள் தந்தை வழித் தாத்தா! 'நீ, வா, போ' என்று ஒருமையில்

பேசுமளவு நெருக்கம். கணக்கில் 'புலி'! அந்தக்கால 'இன்டர்மீடியட்' தான்! ஆனால்,

அக்காவின் M. Sc கணக்குகளையும் அனாயாசமாகப் போடுவார். மூக்கு நுனி பேப்பர்

தொடுமளவு வளைந்து எழுதுவார். தன் கேள்வி ஞானத்திலேயே, ஸ்வரக் குறிப்புகளுடன்

எழுதிய பாடல்களைப் பார்த்தால், மிக பிரமிப்பாக இருக்கும். (சென்னை வந்த பின், குரு

சங்கீத கலாநிதி ஸ்ரீ எஸ் ராமநாதன் அவர்களிடம், தாத்தா 'ராம நாடகக் கீத்தனைகள்'

அனைத்துக்கும் ஸ்வரக் குறிப்பு எழுதியதைக் காட்டியதும், 'இது ஒரு life time வேலை

ஆயிற்றே!' என வியந்து போனார்!) Tape recorder, CD player இவை இல்லாமல்,

நினைவில் பாடல்களைப் பதித்து, எழுதி வைப்பது என்பது, இமாலய சாதனையே! தானே

பாடல்கள் இயற்றி, மெட்டமைத்து எழுதி வைப்பார். இசை அறிவை நாங்கள் மிகப்

பிரயத்தனப்படாமலேயே அள்ளி வழங்கினார். இப்போதுதான் புரிகிறது, நாம் எவ்வளவு

விஷயங்கள் அவரிடம் கற்றோம் என்பது.


எங்களுக்கு அன்பாகத் தலை கோதி விடுவார். நாங்கள் சுகமாகக் கண்மூடி

அமர்ந்திருப்போம்! Wren and Martin grammar மூன்று முறை அக்கா படித்ததை சொல்லிச்

சொல்லி மகிழ்வார். மாலை வேளைகளில், 'ரேழி'யில் அமர்ந்து, எங்களுக்கு 'மனக்

கணக்கு' சொல்லிக் கொடுப்பார். '18 ஐக் கூட்டணுமா? - ரெண்டைக் கழிச்சு இருபதைக்

கூட்டு!'; '25 ஆல் பெருக்கணுமா? நாலால் வகுத்து, ரெண்டு சைபரைப் போடு' ...

இதுபோல short cut பல கற்பிப்பார்.ஆனால், 13 வாய்ப்பாடுக்கு மட்டும் நான் 'ஜூட்' விட்டு

ஓடுவேன்........ இன்றுவரை அது பெரிய படுத்தல்தான்! கணக்குப் போடும்போது தவறு

செய்தால், 'அசட்டுப் பொண்ணே! அப்படியல்ல, இப்பிடியாக்கும்!' என்று சரியான முறை

கற்றுக் கொடுப்பார்.


தலையில் துண்டு கட்டிக்கொண்டு, வாழை மரம் நடுவார். தன் துணிகளை, சோப்புகூடப்

போடாமல், பளிச்செனத் துவைத்து உலர்த்துவார். ராம ஜபம் செய்துகொண்டு, மேலும்

கீழும் நடப்பார். வயிற்று வலியால் அவதிப்படும்போது, அமைதியாக அமர்ந்துகொள்வார்.

சனிக்கிழமைதோறும், அருகிலுள்ள கிருஷ்ணன் கோவிலில், மாலை வேளை தவறாது

பாட வைப்பார். சில முறை, தானே சலங்கை கட்டிக்கொண்டு, ராம நாம சங்கீர்த்தனம்

பாடியதும் உண்டு.


மாசாணன் என்பவருக்கு, சங்கீதம் கற்றுக் கொடுத்து, அவரையே எங்கள் ஆசிரியராகவும்

அமர்த்தினார்! பல ஆண்டுகளுக்குப் பின், அதே ஆசிரியர், எங்களை சந்தித்து, திருச்சிக்கு

அருகில் ஒரு பள்ளியில் இசை ஆசிரியராகப் பணி செய்து, வசதியாக வாழ்வதாகக் கூறி,

தாத்தாவை அன்புடன் நினைவு கூர்ந்தார்!


:director: . . . தொடரும்...........

 
முதல் குரு ..... (தொடர்ச்சி)

கடைசி சம்பந்தியிடம் அலாதி பிரியம் கொண்டிருந்தார்! ஒரு முறை, அவர் கொண்டுவந்த

ஜிலேபி என்று தெரியாமல், ஒன்றை எடுத்துப் பார்த்து, 'இது கேடு வந்திருக்கு!' என்றார்.

'அப்படியா தாத்தா! அந்த மாமாதான் கொண்டுவந்தா', என்று சொன்னதும், 'அது

ஊசினதல்லா, பாகு ஆக்கும்!' என்று கூறி, ஊசிப்போன ஜிலேபி விட்ட 'நூலை', 'பாகு' என

மாற்றினார்! 'காதலுக்குக் கண்ணில்லை' என்று யார் சொன்னது? 'அன்புக்குக்

கண்ணில்லை' என்பதே மிகச் சரியாகும்!


நானும், தங்கையும், ஆளுக்கொரு பூனை வளர்த்தோம். (இப்போது நினைத்தால், பயமாக

இருக்கிறது) அவை உள்ளே வரக்கூடாது என மிரட்டினாலும், (அதுக்கு என்ன தமிழா

தெரியும்?) சாப்பிடும் சமயம், வாலை விறைத்தபடி, காலைச் சுற்றி வரும்! இது கண்ணில்

பட்டால், உடனே தாத்தா கையில் தடி! டேபிளின் அடியில் தடியைச் சுழற்றி, பூனையுடன்

எங்கள் காலையும் பதம் பார்ப்பார்! தாத்தாவின் வேஷ்டியைக் கண்டாலே, பூனைகள்

ஓட்டம் பிடிக்கும்!


தன் கடைசி நாட்கள் வரை தன் வேலைகளைத் தானே செய்துகொண்டார். சாப்பாட்டு

விஷயத்திலும் 'கறார்'. காபி, டீ என்ற பேச்சே கிடையாது! காலை டிபனுக்கு மூணு இட்லி,

ரெண்டு ஸ்பூன் மிளகாப் பொடி, ரெண்டு ஸ்பூன் எண்ணெய் என்று எல்லாமே 'கணக்கு'

தான் அவருக்கு. வேளை தவறாமல், அளவாக உண்ணுவார். நேரம் வீணாகாது, நல்ல

விஷயங்களில் செலவிடுவார்.


பெண் குழந்தைகள் மிக அடக்கமாக இருக்கணும் - என்பார். பள்ளிக் கூடத்தில், டான்ஸ்

நிகழ்ச்சியில் சேர விடமாட்டார்! அக்காவுக்கு நாட்டியம் கற்றுக்கொள்ள ஆசை!

தாத்தாவுக்கு 'டிமிக்கி' கொடுத்துவிட்டு, பைஜாமா, கம்மீஸ் உடையில், பின் கதவு வழியாக

ஓடுவாள், டான்ஸ் வகுப்புக்கு (அம்மா உதவியுடன்தான்!) தாத்தாவுக்கு என்மேல் கூடுதல்

பாசம்.... பாட்டியின் மறைவுக்குப் பின் நான் பிறந்ததாலோ, என்னவோ! நானும்,

தங்கையும் சண்டை போட்டால், என்னையே support பண்ணுவார். தாத்தாவின்

பாடல்களை, என்னிடம் பாட்டு கற்கும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில் எனக்குப்

பேரானந்தம். அவரின் முப்பது பாடல்கள் அடங்கிய 'பக்தி மணி மாலை' என்ற புத்தகத்தின்

பதிப்பாசிரியர் ஆனதிலும் அளவிலா மகிழ்ச்சி!


அவர் நினைவு வராத நாளே கிடையாது! எங்களின் இசை அறிவு வளர வித்திட்ட அவரை,

என்றும் வணங்க விழைகிறேன்! :pray:

:blah: தொடரும்...........
 
My dear Raji,

I have heard stories where the mothers- in- law used to take 'revenge' on their

daughters -in -law for the atrocities committed on them by their mothers- in -law.

Being financially independent and self reliant is good for sure.

But some modern girls do not know where to stop when it comes to independence

and freedom!

with love and regards,
V.R.Akka.

 
visa,

i have to disagree with you.

who are we to judge? while you agree on the general default of mil abuse of those days, i think, it is not right, to state, that today's girls do not know the 'limit', per your standards.

today's behaviour is the result of yesterday's cause.

QED.
 

OMG!! Mrs. V R did not generalize anything about modern girls, Kunjuppu Sir! (not supporting

because she is my sis!) She told about SOME of the girls. It is true that some of the girls,

who get very high salaries, do not feel bad about going to pubs to stay till late night, drink

and dance!! They also argue that there is nothing wrong in that and it is a way to ENJOY

life... If the others in the house accept this as an enjoyment, then their married life will be

peaceful!


One more request.... Please do not make this thread a platform to argue. I just wish to give

the different colours of people. Just enjoy reading this, with a tinge of humour! Thank you!

:grouphug:
 
Dear Mr. Kunjuppu,

Can I tell you two things?

The D.I.l s of yesteryear who were terrorized when they were young by their Ms.I.L

are now being dominated by their young Ds.I.L, when they have become old!

The same people seem to be targeted always

and they suffer under two different categories. :ballchain:

The second thing is the lower limit of (some of the modern girls)

starts far far away from where my upper limit ends!

So they can never ever overlap. :bolt:

My husband's closest friend for four decades used to say often,

"Already women know inherently how to control their husbands through

food and bed. Now they have education and independence and so sky will

be the limit to the power they can exert on their H.P.Hs." :fencing:

(Hen Pecked Husbands!)

Well if the young men of today have no complaints, I need not have one

either! :rolleyes:

with warm regards,
V.R
 
'வண்ண வண்ண மனிதர்கள்' தலைப்பு நன்றாக உள்ளது.நன்றி.
 
dear visa,

dear raji has admonished me for 'arguing'. so i am going to stop such that.

but i cannot help myself from this one comment - your post appears more as reflecting the viewpoint of a then dil, now a mil, deprived of some 'bossing' due to changing times.

normally, யானைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்

except in this case, this பூனை (no pun meant here)appears to have been deprived her due share of terrorising her dil.

now, i will attempt to seal moi lips after this :)
 
Is it an "all or none policy" always? :rolleyes:

All Arguments or All Silence? :decision:

Is no golden media available??? :confused:

Well Raji Ram calls the shots as it is her thread! :peace:

 
I expect my dear friends ( and sister!! ) to post their மலரும் நினைவுகள் in this thread
and keep it in a good mood! I requested only to stop :argue: .... This does not mean :tape2:

Raji Ram :cool:
 
பொறுமையாய் ஒரு குரு!

அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்க விருப்பம். ஒன்று வாங்கப்பட்டது. ஆசிரியருக்குக் காது

கேட்கும் திறன் குறைவு. ஆனால், மிருதங்க ஜதிகள் மட்டும் நன்றாகக் கேட்கும்! அவரின்

கையெழுத்து மணி மணியாகக் கண்ணில் ஒற்றிக்கொள்ளுமாறு இருக்கும்.

பொறுமையாக ஜதிகளை ஒரு நோட்டில் எழுதி, முதலில் சொல்லிக் காட்டி, பின்னர்,

வாசித்துக் காட்டி, பாடம் சொல்லிக் கொடுப்பார். இதனிடையில், ஒரு வீணை எங்கள்

வீட்டிற்கு வந்து சேர, நான் உரிமை கொண்டாடிக் கொண்டு (வயது எட்டோ என்னமோ...

என் பெயரையும் வீணையின் குடத்தில் பதித்தேன்!). தானே சொல்லிக் கொடுக்கிறேன்

என்று முன் வந்த அந்த ஆசிரியர், குடத்தின் மேல் காதை வைத்துக்கொண்டு, ஸரளி,

ஜண்டை வரிசைகள் முதலாக வாசிக்க வைப்பார்! தாத்தாவுக்குப் பொறுக்காது! 'கமகம

வேண்டாமோ பொண்ணே!', என்பார்!! யாருக்கு அந்த இழைப்பதெல்லாம் தெரியும்? நான்

பாட்டுக்கு 'மிலிடரி' நடைபோல 'டக் டக்'கென வாசித்துக்கொண்டே போவேன்! வீணையே

இனிமைதானே. (நான் வீணை கற்ற கதை பின்னர் எழுதுகிறேன்!) ஆசிரியர்

அம்மாவையும் சிறிது நேரம் வயலின் வாசிக்க வைப்பார்! All in all குருவாக இருந்த

அவருக்குச் சம்பளம் பத்து ரூபாயும், காலை காபியும், விஜய தசமிக்குப் புது உடையும்!

தினமும் காலை ஆறரை மணி முதல், எட்டு மணி வரை அவர் பாடம் சொல்லிக்

கொடுக்கும் நேரம்.... அம்மா, நான், அண்ணா என்ற வரிசையில்! அவரின் பொறுமையும்,

மணியான எழுத்தையும், இன்றும் மனமாரப் பாராட்டுகிறேன்!


:blah: தொடரும்...........
 
வயலின் ஆசிரியர்!

அப்பா மணி விழா வயதில் வயலின் கற்றுக் கொண்டார் என்றேனே! அந்த வயலின்

ஆசிரியரைப் பற்றிச் சொல்கிறேன். பெயர் திரு. 'வயலின்' வெங்கட்ராமன். அப்படித்தான்

அடைமொழியோடு சொல்லிக் கொள்வார்! முதல் சந்திப்பிலேயே, தன் வாக்கு

சாதுரியத்தைக் காட்டியவர். 'நான் வயலின் வெங்கட்ராம ஐயர்', என்று கூறிக்கொண்டு,

வீட்டிற்கு வந்தவரை, வரவேற்ற அம்மா, 'சார்! சாப்பிட்டாச்சா?' என்று கனிவுடன் கேட்க,

வந்த பதில், 'சாப்பிட்டா ஆச்சு!'


அப்பாவுக்கு பயிற்சி, அதிகாலையில் அளிப்பார். தற்பெருமை பேசுவதில் வல்லவர்! ஒரு

உதாரணம்: 'டாக்டர்வாள்! (அப்படித்தான் அழைப்பார்) ஒரு கச்சேரிலே ஒரு கல்யாணி

வாசிச்சேன் பாருங்கோ! 'அண்ணா! இனிமேல் நான் பாடறதுக்கு, என்ன இருக்கு!' ன்னு

கேட்டு, அரியக்குடி (வேறு யாருமல்ல!!) மேடைலேயே நமஸ்காரம் பண்ணிட்டார்!'

என்பார். யார் போய் அரியக்குடியைக் கேட்பார்கள், என்ற தைரியம்தான்! அருமையாக

வாசிப்பார். ஆனால், ஐந்து நிமிடம் வாசித்தால், அரை மணி நேரம் பேச்சு என்ற

விகிதம்தான் அவருக்கு! நன்றாக அப்பா வாசித்தால், 'அப்படிப் போடுறா சாமி!' என்பார்,

குழந்தைச் சிரிப்புடன்! (வாயும் பொக்கைதான்!) எனக்கும் வீணை கற்றுத் தருகிறேன்

என்று ( முதுகலைப் படிப்பு முடித்த சமயம்) அவர் வயலினில் வாசிப்பதை, என்னை

வீணையில் வாசிக்கச் சொல்லுவார்! 'மோட்டார் மாதிரி மூஞ்சி வச்சுக்கப் படாது!' என்பார்!

அது என்ன 'மோட்டார் மூஞ்சி'? இப்போது, என்னுடைய சில மாணவிகளைப்

பார்க்கும்போது 'அது' புரிகிறது! அவரே சொல்லுவார்,' இப்போ நான் சொல்லறது

பிடிக்காது! பெரியவளா ஆனதும், என்னை நினைச்சுக்குவே.' மிகச் சரிதான். நான்

ஆசிரியை நிலையில் அமரும்போது, அவரின் நினைவும் பல நாட்கள் வருகிறது நிஜமே!

'எங்க அப்பா அம்மாவுக்குப் பதினாலு குழந்தைகள்! (குசேலரின் தம்பியோ?) சாப்பிட

உக்காந்தா, ஒரு பந்தி மாதிரித் தெரியும். சாப்பிட்ட இடம் துடைப்பது, கடைசியாக

எழுந்திருப்பவர் வேலை என்று அம்மா சொல்வதால், போட்டி போட்டுக் கொண்டு

சாப்பிடுவோம்', என்பார், தன் மலரும் நினைவுகளாக.


ஆனால், அவருக்கு ஒரே மகன்தான். ( தன் அப்பா பட்ட பாட்டை நினைத்து,

பயந்திருப்பாரோ?) அவனைவிடச் சில மாதங்கள் பெரிய பெண்ணை, அவனுக்கு மணம்

முடித்தார். கனவில் ஸ்வாமி வந்து (கருணாநிதி கனவில், 'அண்ணா' வருவது போல)

'நாளைக்கு உங்கள் வீட்டுக்கு வரும் பெண்ணை, மகனுக்குக் கல்யாணம் செய்து வை',

என்று சொன்னதாகத் தெரிவித்தார். 'அதேபோல பெண் வந்தாள். கொஞ்சம் 'பல்லழகி'

(தேங்காய்த் துருவிப் பல் - என்று நாம் கிண்டல் செய்வதை, இதைவிட நளினமாக

யாரால் வர்ணிக்க முடியும்?) அவளையே முடித்துவிட்டேன்!' என்றார். பேச்சிலும்,

செயலிலும் வல்லவரே, அவர். வாழ்வின் நிகழ்வுகளைச் சரியான கோணத்தில் எடுத்துக்

கொள்ள அறிந்த நல்ல மனிதர்.


அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது, எப்போதும், இனிய புன்னகையுடன் இருக்க

வேண்டும். (மோட்டார் மூஞ்சி கூடவே கூடாது!) அவரின் சொற்களில் அடிக்கடி வருவது,

'உன்னதம்' மற்றும் 'மஹோன்னதம்'! இசை பாடுவதுடன், இசைபட வாழ்வதும், உன்னதம்

அல்லவா?

:clap2: தொடரும்...........
 
....................
now, i will attempt to seal moi lips after this :)
Dear Sir,

That is NOT what I want, please, let me make it clear! Your memories of yesteryears keep the thread lively

and I am expecting your feed backs. I enjoy reading them too!

Regards,
Raji Ram :cool:
 
மானசீக குரு!

வீணை வாசிப்பவருக்கு வேறு யார் மானசீக குரு ஆக முடியும். அவர், திரு.சிட்டிபாபுதான்!

அவரின் பல பாடல்களைப் பதிவு செய்து, கேட்டு, 'காபி' அடித்து, நானே ஒரு 'ஸ்டையிலை'

ஏற்படுத்திக்கொண்டேன்! (மூத்த சகோதரி, திருமணமான பின், திருவனந்தபுரத்தில் நல்ல

வீணை ஆசிரியையிடம் பயின்று, என் 'மிலிடரி' நடை போன்ற சின்ன வயது வாசிப்பை,

நளினப் படுத்த உதவியிருந்தாள்!) அம்மா எப்போதும் ஊக்கத்தின் இருப்பிடம்!


திரு. சிட்டிபாபு, கோவையில் ஒரு இசை நிகழ்ச்சி செய்ய வந்தபோது, என்னையும்,

தங்கையையும், எங்கள் தந்தையின் துணையோடு அவரைச் சந்திக்க வைத்து, என்னை

வாசித்துக் காட்ட வைத்தார். மிகவும் மனம் மகிழ்ந்த அவர், அன்று மாலை நிகழ்ச்சியில்,

எங்கள் இருவரையும் மேடையில் அமர்த்தி, தன் வாசிப்பைக் காண வைத்ததுடன்,

சென்னை திரும்பியபின், ஒரு அழகான பாராட்டும், தன் கைப்பட எழுதி அனுப்பினார்!

சரியான பயிற்சி குருமுகமாக அப்போது கிடைக்காத எனக்கு, அந்தப் பாராட்டு, அகில

இந்திய வானொலியில் தேர்வு பெறவும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் 1976 -

ஆம் ஆண்டு இளம் வீணைக் கலைஞராகத் தேர்வு பெறவும் மிகவும் உதவியது. (1982 -

இல் தான் டாக்டர். எஸ். இராமநாதன் அவர்களின் அறிமுகமும், அவரிடம் சிட்சை பெறும்

பெரும் பேறும் கிடைத்தன.)


அவரது 'ராதா மாதவம்' மற்றும் 'சிவலீலா விலாசம்' என்ற இசைத்தட்டுக்களில்,

அழகாகக் கதைகளை இசைவடிவில் தந்துள்ளார். இன்றுவரை, அதை மிஞ்சி மனதை

மயக்கும் இசை வரவில்லை என்பது என் எண்ணம். அரை மணி நேரத்திற்குள், பல இனிய

அனுபவங்கள் தரும், அந்த இசை வடிவங்கள்! மேதாவிலாசம் என்பது அதுதானே!


சென்னையில் 1975 - இல் தந்தையுடன், அந்த வீணை மேதையின் இல்லத்திற்குச்

சென்றோம். அன்புடன் உபசரித்து, தன்னுடைய Master piece ஆன, குயில் பாட்டின்

வரிகளையும் பாடி, வாசித்துக் காட்டினார். (அந்தக் குயில் கூவும் ஒலியை, வீணையில்

இசைக்க, ஒரு 'டெக்னிக்' உண்டு! கற்றுக் கொடுத்தார்!) ஏதோ கிராமத்தில்

வசித்துக்கொண்டு, தன்னை 'குரு'வாக நினைத்தவள்தானே என்று எண்ணாது, பரிவுடன்

பேசிய அவரை, என்றும் மறக்க முடியாது! உயர்ந்த நிலையை அடைந்த பின் காட்டும்

பணிவு, என்றுமே மனத்தைக் கவரும் என்பதற்கு, அவரே சான்று!

:grouphug:
 
raji,

chitti babu is tops. his குயில் கூவு is still unparalleled in the annals of veena. i can, blessed as i am with donkey ears for music appreciation, still pick out chitti's veena any day.

is it not amazing, that he beat out hollow, his guru, eamani sankara sastri? குருவை மிஞ்சிய சிஷ்யன்

which brings me to the 'other' veena player - s. balachander. i found him boring. unable to hold an audience. arrogant. he used to come late by several hours to his own concert.

he dabbled in movie making. but this coward, could not admit that movies are just as noble an art as carnatic music. he had to put on airs, that CM is 'holy', but movies are 'sin' that he indulged (if this was so wrong, he did not give an explanation as to why he waded in its turpid waters.

still, inspite of everything, i liked his 'bommai', which i consider among the best tamil suspense movies. it reminds me of an old alfred hitchcock movie, whose name i now forget.

i cannot understand S.B. why this hypcracy? cannot CM and kollywood live under the same body and mind frame?

ps..sangom, pls treat this as a note to you too. would like your comments. as well as the general public. thank you.
 
Dear Kunjuppu Sir,

I was a kid when this movie 'Bommai' was released. It was a nice thriller in those days!

Still remember the song 'Neeyum bommai naanum bommai' (first song by Jesudaas?) in a low

pitch!! The hero (?) of the story (viz) that Bommai is also fresh in my memory!

Thank you for the feed back, Sir.

Regards,
Raji Ram
 

Latest ads

Back
Top