• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

Raji Ram

Active member
வண்ண வண்ண மனிதர்கள்!

வண்ண வண்ண மனிதர்கள்!

மனிதர்களில் எத்தனை விதங்கள்; எத்தனை குணங்கள்! நிறங்களோடு குணங்களை

ஒப்பிட்டு நோக்கினால், வண்ண மய உலகு கிட்டும்! அன்புக்குப் பசுமை, அமைதிக்கும்

வெண்மை, வீரத்துக்குச் செம்மை, வெறுப்புக் கருமை, துறவுக்குக் காவி என்று அடுக்கிக்

கொண்டே போகலாம். ஒருவரிடமே, எல்லாக் குணங்களின் கலவையும் உண்டு;

வெவ்வேறு விகிதத்திலே! இல்லையெனில், உலகமே ஒருபோலாகி, சலிப்புத் தட்டுமே!


மூத்த குடிமகள் உரிமை அடுத்த ஆண்டு வரும் நிலையில், என் வாழ்வில் சந்தித்த

மனிதர்களின் குணங்களை அசைபோட விழைகிறேன். சில சுவையான் சம்பவங்களைப்

பகிர்ந்துகொள்ளுகிறேன்! மற்றவரின் 'மலரும் நினைவுகள்' அறிய, எல்லோருக்குமே

இருக்கும் ஒரு எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை எதிர்பார்த்து, இத்தொடரைத்

தொடங்குகிறேன்!

அன்புடன்,
ராஜி ராம் :typing:
 
Last edited:
நான் எழுதிய முதல் அனுபவம்!

என் முதல் கதையை, மகனின் வரவிற்குப் பின் விசாகப்பட்டணத்திலிருந்து எழுதினேன்!

பொள்ளாச்சி தமிழ் இசை சங்கத்தின் மாத இதழில் பிரசுரமான அந்த (அனுபவ) கதையை,

முதலில் அளிக்கிறேன்.

ராஜி ராம் :thumb:
 
Last edited:
raji,

looking forward to your series. must have been a momentous time - anticipating your dil.

just a pointer - isn't it strange that we always give negative attributes to black? please do not read too much into this statement. it was just an observation, neither good nor bad.

thank you.
 
சீ ச் சீ... இப்பழம்! பாகம் - 1

யாரோ அழைப்பு மணியை அடிக்கிறார்கள்! "ஒரு நாளாவது மத்யானம் அரை நாழி படுக்க

விடமாட்டாளே! வேலைக்காரி நாலு நாள் வரமாட்டேன்னு போனதும் போனா, நாள்

பூராவும் விடாம வேலைதான்!' என்று முணுமுணுத்துக் கொண்டே, என் ஒரு வயது

மகனுக்கு அருகில் தலையணையைப் போட்டுவிட்டு வருகிறேன்! கதவு இடுக்கில் ஒரு

நோட்டீஸ் தொங்கிக்கொண்டு இருக்கிறது. அதை எடுத்துப் படித்த என் முகத்தில், வெற்றிப்

புன்னகை! ஆம்! Baby health contest (நாளை) ஞாயிற்றுக் கிழமை 8 மணிக்கு நடக்கப்

போவதாக அறிவிப்பு. அப்பொழுதே என் அருமை மகனுக்கு முதற் பரிசு கிடைத்ததாகவும்,

நானும் என்னவரும் சீமாவுடன் சென்று (கைதட்டல்களுக்கு இடையே!!) பரிசு

வாங்குவதாகவும், ஒரு இன்பமான நினைப்பு! பின் தூங்குவேனா என்ன?


மாலை என்னவரின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆபீசில் அதிகம்

வேலையோ, என்னவோ, ஆறு மணிக்குத்தான் வருகிறார். வந்தவரைக்

குழந்தையைக்கூடக் கொஞ்ச விடாமல், நோட்டீஸைப் படிக்கச் சொல்லுகிறேன். நான்

எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக, baby contest' - ஆ? நேத்தே யாரோ சொன்னா!' என்று

சுவாரசியம் இல்லாமல் சொல்லுகிறார். நானாவது விடுவதாவது! (பரிசு வாங்கும்

பெருமை, என்னக்கல்லவா தெரியும்!) 'நம்ம சீமாவை எடுத்துண்டு போனா, கண்டிப்பா

பிரைஸ் கிடைக்கும்! நாளைக்கு நாமும் போகலாம்', என்கிறேன். 'இன்னைக்கு ஏழு மணிக்கு

நம்ம club -ல நல்ல சினிமாவாம். அதுக்குப் போயிட்டு வந்தா, ராத்திரி லேட் ஆயிடும்.

நாளைக்கு ஒருநாள்தான் எனக்கு rest day. 8 மணிக்குப் போகணும்ன்னா எப்படி?' என்று

அலுத்துக் கொள்கிறார் இவர். 'சினிமா பாக்காட்டாலும் பரவாயில்லை. ஆனா, நாளைக்குக்

கண்டிப்பாய் போயாகணும்', என்று பிடிவாதம் பிடிக்கிறேன். கடைசியாக, 'மானேஜர்

லெவலில் இருக்கறவா யாருமே போக மாட்டா. நீ ஏன் பாடுபடறே?' என்கிறார். (மத்த

மானேஜரெல்லாம் வயசானவாளா இருந்தா, நான் என்ன செய்ய! அவர்களின் பசங்கள்

எல்லாமே பெரிசுகள்.) 'இதெல்லாம் நாமளா நெனச்சுக்கறது. எல்லாக் குழந்தைகளும்

ஒண்ணுதானே!' என்று கூறி, அத்துடன் விவாதத்தை முடிக்கிறேன்! ஆக, சினிமா போவது

cancel ஆயிற்று!

தொடரும்......
 
Last edited:
சீ ச் சீ... இப்பழம்! பாகம் - 2

மறுநாள் காலை ஐந்து மணிக்கு முன்பே எழுந்துவிடுகிறேன். தினமும் ஆறு மணி வரை

(ஞாயிற்றுக்கிழமை இன்னும் அதிகம்!) தூங்கும் நான்தானா எழுந்தது என்று, எனக்கே

ஆச்சரியம்! சுறுசுறுவென்று வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு, என்னவரை

எழுப்புகிறேன். 'எனக்கு காபி மட்டும் போதும்மா. வந்து டிபன் சாப்பிடலாம்', என்கிறார்.

குழந்தைக்கு மட்டும் டிபன் கொடுத்து, நல்ல உடை அணிவித்து, நாங்கள் காபி மட்டும்

குடித்து, கிளம்புகிறோம்.


காரில் சென்று இறங்கியது நாங்கள் மட்டுமே! 'பாத்தியா? நம்ம காரைப் பாத்தாலே

ப்ரைஸ் கிடைக்காது!', என்கிறார் என்னவர். எனக்கு வரும் கோபத்தை அடக்கிக்கொண்டு,

'சும்மா ப்ரைஸ் கிடைக்காதுன்னு சொல்லாதீங்கோ', என அலுத்துக்கொள்கிறேன். நாங்கள்

ஆடிடோரியத்தில் நுழைந்தபோது, ஏற்கனவே சுமார் அறுபது குழந்தைகளும் ( ஐந்து

வயதிற்குக் கீழ்), அவர்களின் பெற்றோர்களும் இருக்கிறார்கள். இவர் சொன்னபடியே,

எனக்குத் தெரிந்தவர் யாருமே இல்லை! ஏதோ ஒரு நாற்காலியில் அமர்ந்துகொள்கிறேன்.

பக்கத்தில் உள்ள பெண்ணிடம் பேச வேண்டாமா? குண்டுக் குழந்தையை மடியில்

வைத்துக்கொண்டிருந்த அவளிடம், 'மீ பாபுகி ஸமஸரமாயிந்தாண்டி? (உங்கள்

பையனுக்கு ஒரு வருஷம் ஆகிவிட்டதா?) என்று 'மாடலாட', அவளோ திரு திருவென்று

விழித்துவிட்டு, 'நான் மெட்ராஸ்; போன மாசம் வந்தோம்', என்று அசடு வழிகிறாள்.

அவளுக்கு எப்படித் தெரியும் நான் தமிழ் என்று! 'அடேடே! நீங்களும் தமிழ்தானா?', என்று

கேட்டபின், அரட்டை அடிக்க ஆரம்பிக்கிறேன்! (இதற்குள் என்னவரைச் சுற்றி 'சார், சார்',

என்று குட்டி ஆபீசர்கள் கூட்டம்!). அவள் குழந்தை ராஜாவுடன் பார்த்தால் என் மகன்

'ஒல்லிப்பிச்சான்'. ஆனாலும் மனதிற்குள், 'இப்பவெல்லாம் குண்டுக் குழந்தைக்கு ப்ரைஸ்

கொடுக்க மாட்டா. over weight - ன்னு இவனுக்குக் கிடைக்காது!' என்று எண்ணுகிறேன்...


:bowl: தொடரும்......
 
சீ ச் சீ... இப்பழம்! பாகம் - 3

மணி ஒன்பது. அனைவரும் வந்தாயிற்றா என்று பார்வையை ஓடவிட்ட ஒரு ஆள்,

குழந்தையை வைத்துக்கொண்டிருந்த அனைவரிடமும் ஒவ்வொரு பேப்பரைக்

கொடுக்கிறான். அதில், குழந்தையைப் பற்றின விவரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.

பெயர், வயது இதைத் தவிர மற்றவை எல்லாமே ஊசி போட்ட விவரங்கள். 'இது என்ன,

பேபி கான்டெஸ்ட்டா அல்லது ஊசி கான்டெஸ்ட்டா? என எண்ணியபடி, அதைப் பூர்த்தி

செய்து கொடுக்கிறேன்.


மணி பத்து! பக்கத்திலுள்ள பெண் - கலா - தன் குழந்தை ராஜாவுக்கு இரண்டு முறை

பாட்டில் பால் கொடுத்துவிட்டாள். சீமா சமர்த்தாக வேடிக்கை பார்க்கிறானே தவிர,

பசியென்று சொல்லவில்லை! இனி, மதியம்தான் பெரிய மனுஷன் போலச்

சாப்பிடுவான். தினமும் பத்து மணிக்கு, அரை டம்ளர் பால் கொடுக்க, நான் படும் பாடு

எனக்கல்லவா தெரியும்! இன்று ஒரு நாளாவது அம்மா தொந்தரவு செய்ய மாட்டாளே

என்று, அவனுக்கும் குஷிதான். கலாவின் கூடையில் இன்னும் எத்தனை பாட்டில் பால்

இருக்குமென்று பார்க்க எழும் நப்பாசையை அடக்கிக்கொள்கிறேன்.



பத்தேகால் மணியளவில், மூன்று டாக்டர்கள், நடுவில் போடப்பட்ட மேசையைச் சுற்றி

அமர்ந்து, ஒவ்வொரு குழந்தையாகக் கூப்பிடுகிறார்கள். எடை, உயரம் பார்த்த பின், மற்ற

விவரங்களையும் சரிபார்க்கிறார்கள்.எத்தனை விரைவில் பார்த்தாலும், ஒருவருக்கு

இரண்டு நிமிடமேனும் வேண்டாமா? எல்லாக் குழந்தைகளையும் பார்த்து

முடிக்கும்போது, மணி பண்ணிரண்டேகால்!



இந்த இரண்டு மணி நேரத்தில் நடந்த கலாட்டாவை விவரிக்க, எழுத்தால் இயலாது!

சின்னக் குழந்தைகள் பசியால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவதும், பெரிய குழந்தைகள்

சண்டை போட்டு அடித்துக்கொள்வதும் என ஏக அமளி. இதனிடையில், ராஜாவின்

அப்பா, இரண்டு பால் பாட்டில் கொண்டு வந்ததையும் குறிப்பிட வேண்டும்!


எல்லோரும் பரிசு அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.


:director: தொடரும் .........
 
சீ ச் சீ... இப்பழம்! பாகம் - 4

இதற்குள் யாரோ, 'சின்ன குவார்டர்சில் இருக்கும் குழந்தைக்குத்தான் பரிசு கிடைக்குமாம்.

அவாளைத்தானே encourage பண்ணுவா!', என்கிறார். டிபன் சாப்பிடாத வயிறு ஓவென்று

அலற, நல்ல சினிமாவை முந்தின நாள் 'மிஸ்' பண்ணின வருத்தம் எழ, எனக்கு என்ன

செய்வது என்றே தெரியவில்லை!


இன்னும் அரை மணி நேரம் சென்றபின், மைக் செட் வைக்கப் படுகிறது. தலைமை

தாங்கும் டாக்டர், ஒரு குட்டிப் பிரசங்கமே செய்கிறார். குழந்தை வளர்ப்புப் பற்றி அவர்

சொன்னது கடுகளவு. ஊசி போடுவது பற்றிச் சொன்னது .................................

(நிரப்பிக்கொள்க! டாக்டர்கள் மன்னிக்கவும்!)


ஒருவழியாக, போட்டி முடிவு அறிவிக்கப்படுகிறது! என்னமோ, என்னவர் பரிசு

கிடைக்காதுன்னு சொன்னதாலே சீமாவுக்குக் கிடைக்கவில்லை என்பதுபோல, அவரை

முறைக்கிறேன். அவரோ, 'நமுட்டுச் சிரிப்பு' சிரித்து, என் கோபத்தை மேலும் கிளறுகிறார்!

ஆனால், பரிசு வழங்கும்போது, என் கோபம் மறைந்து, சிரிப்பு வருகிறது!


காரில் வீடு திரும்புகிறோம். 'என்னம்மா? கோபமெல்லாம் போய் சிரிக்கிற?', கேட்கிறார்

என்னவர். நான், 'இந்த பிளாஸ்டிக் டப்பா ப்ரைஸுக்கு, இத்தனை அலட்டிக்கணமா? நேத்து

சினிமாவைப் பாத்தூட்டு, இன்னைக்குக் கொஞ்சம் லேட்டா எழுந்திருக்கலாம்!

பரவாயில்லை. இதுவும் நல்லதுக்குத்தான். ப்ரைஸ் கெடைக்கலைனாத்தான்

குழந்தைக்குக் கண் படாது!', என்று முடிக்கிறேன்! 'சீ ச் சீ... இப் பழம் - கதைதானா?' என்று

சொல்லி, என்னவரும் சிரிக்கிறார்!

The_Fox_and_the_Grapes_.jpg


:bump2:
 
'இது என்ன,

பேபி கான்டெஸ்ட்டா அல்லது ஊசி கான்டெஸ்ட்டா?
Wow, Mrs. Raji Ram, it seems only you can make a mundane Children's contest so interesting. The self-deprecating style is always a winner. I shall look forward to the future episodes.

Cheers!

p.s. Just read the last post, it is over. A good one, your gentle style is quite enjoyable.
 
Last edited by a moderator:
dear raji,

i enjoyed the short story.

personally self and spouse were never into baby shows.

growing up at home, there was a stigma attached to showing babies as it was rumoured that it would affect the baby's life.

i remember one 'murphy radio baby', which was rumoured to have died. it could be true, it could be due to ailment. but madras of the time of my youth, my family strongly beleived in such stuff. so even though i was a cute 'fair' chubby bonny baby, no baby show for me :(. nor for my sibling or close maternal cousins :(

all this changed when i was in my teens. TM Sounderrajan lived in our neighbourhood and one day spotting me in the barber shop, soon approached my dad. he offered me a role as the younger pattinathaar.

i adamantly refused. my father was upset at the loss of the money offered. mom stood by me. thanks to that, the tamil cine world lost a competition to kamalahassan, who incidentally grew up in my street the early years, when he acted in kalathur kannamma. i remember playing in the street with him once. his family soon moved out.

kamal ofcourse went on to bigger and better things. while i ?

hope this titbits helped lighten up my mundane post. best wishes..
 
Last edited:

Just kidding, Sir! If you had accepted that offer.....

Probably, a song would have been like this.......

பூப் பூவாப் பூத்திருக்கு,

பூமியிலே ஆயிரம் பூ!

பூவிலே சிறந்த பூ என்ன பூ?

குஞ்சுப்பூ !!

(original was குஷ்பூ !!!)

:lalala:
 
Thank you Pann Sir!

I think, in the movie, the kids around the heroine tell தப்பு , சிரிப்பு etc and

then finally, the lady says அன்பு! ( lo....ng time since I saw the movie!)


:grouphug: . . :thumb:

P.S: இனி 'ஹீரோயினி' என்று நினைவில் கொள்வேன்! Thanks to Pann Sir!
 
Last edited:
மாதா, பிதா, குரு, தெய்வம்....

மாதா, பிதா, குரு, தெய்வம்..... இதுதானே சரியான வரிசை!

என் எண்ண அலைகளில் வரும் வண்ண மனிதர்களின் நினைவுகளில் அன்னை,

தந்தை, குரு, இவர்களைப் பற்றி முதலில் ஆரம்பிக்கிறேன்....

:pray: . . :typing:
 
அன்னை .....

நல்ல அழகு, நுண்ணறிவு, ஓயாத சுறுசுறுப்பு, எல்லாவற்றையும் கற்பதில் ஆர்வம்,

புதியவை எல்லாம் முயற்சி செய்யும் முனைப்பு .... இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

மிகச் சில பெண்களே இவரைப்போல உலகில் பிறப்பார். சிறு வயதில், தன்னை

ஈன்றவளை இழந்ததால், அவளை ஈன்றவள் பாதுகாப்பில் வளர்ந்தவர். சகோதரர்கள்

அனைவரிடமும், ஒரே தங்கையிடமும் அதிகப் பாசம் காட்டுவார்! எனக்கு நினைவு

தெரிந்த நாளிலிருந்து நான் கண்டது, அயராது உழைக்கும் அன்னையைத்தான்! அவரின்

கோபமும் மிகப் பிரசித்தம். ஆனால், எல்லோருக்கும் உதவும் மனது!


சின்ன வயது நினைவுகள் சில..... 'தொப்பிப் பெட்டி' என்று ஒன்று! ஓர் அண்டாக்

கொள்ளளவு! தொப்பி போல மூடி உள்ளதால் அந்தப் பெயர். பூட்டும் வசதி உண்டு...

ஆனால், என்றும் பூட்டப்படாதது! அது நிறைய, தேன் குழல் அல்லது நாடா முறுக்கு

செய்து அடுக்குவார்; போக வரச் சாப்பிடுவோம். இப்போது நினைத்தாலும் பகீரதப்

பிரயத்தனமாகத் தோன்றுகிறது. தாமரைக் கிழங்கு வாங்கி வந்து, சுத்தம் செய்து, சின்னச்

சின்ன வட்டமாய் வெட்டி, பெரிய அண்டாவில், மஞ்சள் பொடி, உப்பு, காரம் சேர்த்த நீரை

ஊற்றி, நறுக்கின துண்டங்களைப் போட்டு வேகவைத்து, வெய்யிலில் உலர்த்தி......

அப்பப்பா.... நாங்கள் ஐவரும் எடுபிடிகளாக ஓடி வலம் வந்தபோதும், அம்மா செய்த

வேலைகளை நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது!


மைசூருக்கு நாங்கள் சென்றபோது, மகாராஜாவின் அரண்மனைக்குள் அனுமதி மறுத்தான்

காவலாளி, கன்னடத்தில் கத்திக் கொண்டு! நாங்கள் அனைவரும் தயங்கி நின்றபோது,

அம்மா முன்னே சென்று, 'ஹிந்தி மாலூம்?' என்று கேட்டுவிட்டு, A K 47 போல ஹிந்தியில்

பொரிந்து தள்ள, காவலாளி அம்பேல்... அம்மா, அரண்மனை முழுக்க சுற்றிப் பார்த்து

வந்தார்!


தைரியத்தின் மறு உருவம் அம்மா. ஒரு முறை கிணற்றில் நல்ல பாம்பு விழுந்துவிட,

அனைவரும் அதைக்கண்டு அலறிவிட்டோம்! அப்பாவுக்கு அன்று பொள்ளாச்சியில் வேறு

வேலை வர, பாம்பாட்டி அங்கு கிடைத்தால், அவனை நாளை வரச் சொல்லலாம், என்று

கிளம்பினார். நாங்களும் காரில் தொற்றிக்கொண்டோம்! கார் வெளியில் வருமுன்னே,

தயார் நிலையில் நிற்கும் அம்மா, அன்று வரவில்லை! வேறு என்ன? அந்தப் பாம்பை

விடுவிக்க வேண்டுமே, எங்கள் இடைஞ்சல் இல்லாது! எண்ணியபடியே, நாங்கள் திரும்பி

வருமுன், பாம்புக்கு விடுதலை! ஆம்... ஒரு கூடையில் கயிற்றைக் கட்டி, கிணற்றுக்குள்

விட்டு, பாம்பு அதில் ஏறியதும், மேலே இழுப்பாராம்; எட்டு முறைகள் பாதி

தொலைவிலேயே, மீண்டும் கிணற்றில் விழுந்த அது, ஒன்பதாம் முறை, கிணற்று

விளிம்பு வரை சவாரி செய்ய, அதை ஒரு கம்பால் தள்ளிவிட்டாராம். என்ன தைரியம்!

கேட்ட எங்கள் தூக்கம் போனது அன்று இரவு!


சென்னையில் (அன்றைய மெட்ராசில்) அப்பாவின் மாமா பெண்ணுக்குக் கல்யாணம்.

அதற்கு வந்த அம்மாவுக்கு, சம்பந்தி வீட்டில் பக்ஷணம் கொண்டுபோய் 'ஒப்பேற்றும்'

வேலை. ஏன் தெரியுமா? 'முறுக்கு' அத்தனையும் 'நொறுக்கு'!!! ஆம்... நொறுங்கிப்

போனது. குதிரை வண்டியில் பக்ஷணங்களை ஏற்றிக்கொண்டு, சம்பந்தி வீட்டிற்குச்

சென்றார், அம்மா. நயமாக அந்த மாமாவுடன் பேச, முடிவில் அவரே, 'முறுக்கை

உடைத்துத் தானேம்மா சாப்பிடறோம்! பரவாயில்லை. ருசி நல்ல இருந்தாலே போதும்!'

என்று சொல்லிவிட்டார்! மணப்பெண் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்! இது போல

எத்தனையோ நிகழ்வுகள்.....


:blah: தொடரும் ......
 
raji,

re # 16,

you finally taught me how தாமரைகிழங்கு is made. mom used to tell me it was complicated, and she did not know. it is one of my favourite வத்தல் and each visit to chennai, i arrange for கரவடாம் & தாமரைகிழங்கு to be delivered from kalpathi. (member sri please note palghat cuisine does not die.. my children look forward to the வத்தல் too).

the last para: you could be reading a chapter of my life too. we had my father's mama's grand daughter wedding in chennai. it was a society marriage. both the groom and the bride came out of madras, but the wedding was conducted in madras on the groom's mom's insistence.

1972 summer. yours truly was made incharge of the wedding by the bride's father. my poor mother set up impromptu aduppus in our backyard and hired the mamis for the exhorbitant demands of the sambandhi. really ashamed to say, even today - LITERALLY EXHORBITANT. the bride's father, to whom we were obliged had only one word 'கண்ணா அவா என்ன கேட்டாலும் சரின்னு சொல்லு'

our murukku experience was perfect. but i can relate to the sambandhi here. he appears to be a saint, compared to the virago that we had to deal with. :)

excellent start.
 

Yes Sir!! Those days, sambandhis were demanding FULL SEER! (viz) hundred numbers in five

different HUGE sized bakshanams, including 11 'vari' 'murukku' and 'chengal' size mysoorpaagu!

I remember the setting up of new 'kodi aduppu' in our back yard, to make the bakshanams for

my eldest sister's wedding, which took place in our newly built house, in quarter acre of land!


Thanks for your feed back and மலரும் நினைவுகள்! :thumb:
 
அன்புச் சகோதரி,

'Heroine' ஐ 'heroin' ஆக்கி விட்டீர்களே, இது நியாயமா?
 
அன்புச் சகோதரி,

'Heroine' ஐ 'heroin' ஆக்கி விட்டீர்களே, இது நியாயமா?

நியாயம் இல்லைதான்! ஆனால் அவர்களும் 'அது' போலத்தானே மயக்குவார்கள் என்று

விட்டுவிட்டேன்! இது எப்படி இருக்கு Pann Sir!!

ஆனாலும், இப்போதே திருத்துகிறேன்! நன்றி .......:hail:
 

Yes Sir!! Those days, sambandhis were demanding FULL SEER! (viz) hundred numbers in five

different HUGE sized bakshanams, including 11 'vari' 'murukku' and 'chengal' size mysoorpaagu!

I remember the setting up of new 'kodi aduppu' in our back yard, to make the bakshanams for

my eldest sister's wedding, which took place in our newly built house, in quarter acre of land!


Thanks for your feed back and மலரும் நினைவுகள்! :thumb:

raji, it is memories of those times, that has made me disgusted with our erstwhile customs and behaviours of the grooms' families.

i have written here before. my own aunt's wedding was almost stopped by the groom's mama because we had mixed pandhi. grandpa was a lawyer in kerala, and his clientele were malayalis and muslims. they had get the first pandhi to go to the court.

the groom's mama took insult to non brahmins being served at all. it took my grandfather and the rest all the skills, to pacify the man. we cooked separately for him and his ilk. nasty folks.
 
அன்னை ..... (தொடர்ச்சி)

தளி வடாம் என்று சுவை மிகுந்த ஒரு தயாரிப்பு. தயாரிக்கும் விதமும் படு சுவைதான்!

தோட்டத்திலிருந்து பலா மர இலைகளில் பெரிதாகப் பறித்து வந்து, சுத்தம் செய்து,

அரிசியை ஊற வைத்து அரைத்த நைஸ் மாவில், எள்ளு, காரம், எலுமிச்சம்பழ ரசம், உப்பு

சேர்த்து, அந்தக் கலவையை இலைகளில் எழுதி ( அப்படித்தான் சொல்லுவார்கள்....

செய்வது தோசை வார்ப்பது போல் action ) ஆவியில் வேகவைத்து, ஆறியதும் நிழலில்

உலர்த்தி ( வெய்யிலில் வைத்தால், வரிகள் விடும்! ) காய்ந்தபின் பாதுகாக்க வேண்டும்...

வேண்டியபோது, எண்ணையில் பொறித்து.... ஆஹா!! இந்த project - ஐ அம்மா எங்கள்

முழு ஆண்டு லீவில் செய்வார். வெய்யில் காலமாய் இருக்கும்! எங்களை எடுபிடி வேலை

வாங்கலாம்! எங்களுக்கும் பரம ஆனந்தமே. ஏனென்றால், நாங்கள், காயவைக்கும்

வேலையுடன், வழியிலே பல ஈர வடாங்களை சுருட்டி 'லபக் தாஸ்' வேலையும்

செய்வோம்! இக்காலத்துக் குழந்தைகள் மிஸ் பண்ணுவதில், இந்த அனுபவமும்

ஒன்றுதான். நம்ம ஜெனரேஷனில் பலபேர் இந்த வேலைகள் செய்வதே கிடையாது!

அம்மாவுக்கு நிறைய energy தான்! இப்போது எண்பதுகளில் உள்ள அம்மா, இந்த வருஷம்

கூட அறுபதுகளில் உள்ள மூத்த சகோதரியிடம் தளி வடாம் தயாரிக்கச் சொல்லி

(சொல்லாவிட்டால், யார் செய்வார்களாம்?) உதவியுள்ளார்! அக்காதான் கஷ்டப்பட்டாள்!


இன்னொரு அசட்டுத்தனமும் செய்வோம்! 'எப்போ பாட்டியின் ஸ்ராத்தம் வரும்?', என்று

கேட்டபடியே இருப்போம்.... அர்த்தமே புரியாமல்! அன்று கிடைக்கும் போளி (உப்புட்டு

என்றும் சொல்வார்கள்), எள்ளுருண்டை, சுய்யின் எல்லாம் படு ஸ்பெஷல் எங்களுக்கு!

சித்தப்பா குடும்பங்கள் வரும். தம்பி தங்கைகள் விளையாடக் கிடைபார்கள்.. இன்ன பிற!

சமைத்துப் போடும் அம்மவுக்குத்தானே வேலைகள்?


அப்பாவின் 'பேஷண்டு'களில் சில பண்ணையார்கள் உண்டு. அவர்கள் தேம்பாகு கொடுத்து

அனுப்புவார்கள். அது என்னவென்றால், கரும்புச் சாறைக் குறுக்கி வெல்லம்

செய்யும்போது, கொஞ்சம் குறுகிய நிலையில் எடுக்கும் இனிப்பு திரவம்! தேன் போலவே

இருக்கும். பிரட், சப்பாத்தி, அடை இவற்றுக்கு நல்ல 'காம்பினேஷன்'. அத்துடன்,

தண்ணீரில் கலந்து பானகம் போலக் குடிக்கலாம்! எதற்கு விலாவாரியாக எழுதுகிறேன்

என்றால், பட்டணத்தை மட்டும் பார்த்து வளந்தவர்களுக்கு இது என்னவென்றே தெரிய

வாய்ப்பில்லை.


:cheer2:தொடரும்............
 
அன்னை ..... (தொடர்ச்சி)

'சிக்கனம் தேவை எக்கணமும்', என்ற சித்தாந்தம் உடையவர். ஊறுகாய் பாட்டில்

காலியானதும் அதில் மோரை ஊற்றி, திடீர் பச்சடி செய்வார்! ஒரு முறை, 'பெரும்படி'

சமையலில், மாங்காய் ஊறுகாய் போட்ட வாணலி காலியானதும், அதில் காலையில்

மிஞ்சின இட்டிலியை உதிர்த்துப் பொடிமாஸ் போலச் செய்து அனைவருக்கும் உருட்டிக்

கொடுக்க, ஒரு மாமி அதை பால்கோவா உருண்டை என்று எண்ணி வாயில் போட்டு,

முகத்தில் புது expression காட்ட. ஒரே அமளிதான்! பால்கோவாவின் இனிப்பை நினைத்து,

காரத்தை அனுபவித்த, அந்த மாமியின் நிலை பார்த்த எங்களின் சிரிப்பு ஓய வெகு நேரம்

ஆனது! அம்மாவின் சிக்கனம் செய்த காமெடி!


புது வீடு கட்டும்போது, காலை ஒன்பது மணிக்கே வேலைகளை முடித்து, குடை பிடித்துக்

கிளம்பிவிடுவார், அந்த மேஸ்திரியை 'மேய்க்க'. அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலும்

அம்மா நீரூற்றி நனைத்தது! அந்த வீடு கை மாறிய பின்னும், மீண்டும் அதை வாங்கி,

அங்கு சென்று தங்க ஆசைதான், இன்றும்கூட அம்மாவுக்கு!


Tatting. knitting, crochet, embroidery என்று அனைத்து நூல் வேலைகளுடன், தையல்

கலையும் தெரியும்... புடவை பாவாடையாகி, பின் கைதுடைக்கும் துண்டாக

உருமாறுவது, மிக சகஜம். அப்பா, சில கஷ்டமான பிரசவ கேஸ்களை கவனிக்கப்

போகும்போது, அம்மாவும் உடன் சென்று உதவுவார்! எல்லாக் கலைகள் பற்றின

நோட்ஸும் தனித் தனி டைரிகளில் இருக்கும். வயலின் வாசிக்கவும் கற்றார். எங்களை

சங்கீதத்தில் ஊக்குவித்தது அம்மாதான். யார் எங்கள் வீட்டுக்கு வந்தாலும், பாடிக் காட்டச்

சொல்லுவார். ஒரு தடவை ஒரு மாமாவிடம் 'என்றைக்கு சிவ க்ருபை வருமோ?' என்ற

பாட்டைப் பாடச் சொல்ல, அந்த மாமாவும் ரசித்துக் கேட்க, பின் எப்போது வீட்டுக்கு

வந்தாலும், 'ராஜேஸ்வரி! (முழுப் பெயரையும் நீ.........ட்டி முழக்கிக் கூப்பிடுவார்)

என்றைக்கு - பாட்டு', என்று கேட்க ஆரம்பிக்க, அந்த மாமாவின் பெயரே 'ராஜேஸ்வரி

மாமா' ஆனது! அந்த முகாரி ராகம் என்னைப் படுத்திய பாடு, எனக்கே வெளிச்சம்!


இறைவன் கண்ணன் ஒருவேளை எங்கள் பக்கத்து வீட்டில் இருந்திருந்தால்..........

என்னைக் கிள்ளியே இருக்க மாட்டான்! எனக்குத்தான் முகாரி ராகம் அத்துப்படியே!

அந்த 'விஷமக்காரக் கண்ணன்' பாட்டில் வருவது இதுதானே:

'பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான் - முகாரி

ராகம் பாடச் சொல்லி வம்புக்கிழுப்பான்

எனக்கது தெரியாதென்றால் நெக்குருகக் கிள்ளிவிட்டு

விக்கி விக்கி அழும்போது, இதுதாண்டி முகாரி என்பான்!'


பைப் ரிப்பேர் முதல், சின்னச் சின்ன எலக்ட்ரிக் வேலை வரை எல்லாமே அம்மா

செய்வார். நாங்கள் இவையெல்லாம் அம்மாவிடம் கற்றதுதான்! மற்ற பல

பெண்களிலிருந்து நாங்கள் வேறுபடுவதும், இதனால்தான். எல்லா வேலைகளையும்

இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய, எத்தனை பேர் உள்ளனர்? தம் கணவரைப் பெட்டி

தூக்க வைப்பது முதல், அத்தனை எடுபிடி வேலைகளையும் செய்ய வைப்பது, பல

பெண்களுக்கு வாடிக்கை!


சிறு வயதில் திருமணம் செய்துகொண்டு, கணவரின் மூன்று தம்பிகளையும் வளர்த்தி

ஆளாக்கி, சுற்றம் அனைத்துக்கும் உதவி புரிந்து மங்கையருள் மாணிக்கமாக

விளங்குபவர். அந்தக் கோபத்தை மட்டும் குறைத்தால், இவருக்கு ஈடு இணையே

இருக்காது! ஆனால், கோபம் உள்ள இடத்தில்தான் குணமும் இருக்கும், அல்லவா?

எங்களை என்றுமே குழந்தையாக எண்ணி order செய்வார். அம்மா சொல்லும்

வேலைகளை உடனுக்குடன் செய்தால், தன்னைப் பார்க்க வருபவர்களிடமெல்லாம்

சொல்லிச் சொல்லி மகிழ்வார். அன்னையைப் பேணுவது நம் கடமை அல்லவா?


:blah: தொடரும்.....
 
raji,

re your comment 'பல ஈர வடாங்களை சுருட்டி 'லபக் தாஸ்' ' reminds me of the pleasure of scraping the bottom of the uruLi for well done browned maavu and eating the scraps with oil ..yummmmmmmmmmmm :)


A few more comments.

In our house, my grandma used to recycle the spoiling kaNNi mangaais. Carefully removing the cover of green moss on top of the brine in the bharani, she used to pick the rotting mangoes and make the most delicious arachukalakki. She used to comment, that the best arachukalakki comes only when the mango is on the verge of turning to rot

Re next veettu kannan: hope you got lucky with your next veettu kannan.

Re anger and anger management. I am not so sure that I agree with you, re generalizing that where anger resides, so there do lives good qualities. I have had experiences with folks, who used to get angry for nothing and these are the most disagreeable and bullyish sort. Anger and nobility, do not necessarily go hand in hand. Ofcourse, I can understand you, in the context of endearment with your mom. NP with that.
 
Last edited:

Latest ads

Back
Top