• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

என் குருநாதர்.


சென்னைக்கு 1982 - இல் குடி பெயர்ந்தோம். (திருமணமான பின், முதலில்

விசாகப்பட்டணம்) என்னவரின் அண்ணி, சங்கீத கலாநிதி டாக்டர். எஸ். ராமநாதன்

அவர்களின் மாணவி. அவர்கள் வீட்டிலேயே சிலர் குழுமிக் கொண்டு,

கற்றுக்கொள்வார்கள். என்னையும் பாடம் கேட்க அழைத்தார். எனக்கோ பயம்! நான்

அவர்கள் group இல் இல்லையே என்று. அதனால் கடைசி வரிசையில், ஓரத்தில்

அமர்ந்தேன், கையில் பேப்பர், பேனா சகிதம். எனக்கு 'நோட்ஸ்' எழுதிக் கொள்ளவிட்டால்,

பாட வராது! தாத்தா ஸ்வர, சாஹித்யம் எழுதிக் கற்பித்ததாலோ, என்னவோ!

சங்கராபரணத்தில், தியாகராஜரின் கோவூர் பஞ்சரத்தின க்ருதி. பல்லவி, அனுபல்லவி

இரண்டும் அவர் சொல்லித்தர, நான் 'நொடேஷன்' எழுதிக்கொண்டே பாடினேன். வகுப்பு

முடிந்ததும், என்னை அழைத்தார். 'எங்கே, என்ன எழுதினாய் காட்டு', என்று சொல்ல, நான்

பேப்பரை நீட்டினேன். வாங்கி ஒரு பார்வை ஓடவிட்டு, 'ரொம்பத் துல்லியமா

எழுதியிருக்கே! Good!' என்றார்! எனக்கு உச்சியில் 'ஐஸ்'! நன்றி சொல்லி நகரும்போது,

மறுநாளிலிருந்து தன் வீட்டில் நடக்கும் வகுப்புகளுக்கு வருமாறு பணித்தார்!


திருவல்லிக்கேணியில் சாருடைய ('சார்' என்றுதான் அவரைக் குறிப்பிடுவோம்) வீடு.

காலை முதல், தொடர்ந்து வகுப்புக்கள் நடக்கும். நான், மகனை பள்ளிக்கு அனுப்பியதும்,

அங்கே போய்விடுவேன். எல்லா group மாணவ, மாணவிகளுடனும், என்னையும் சேர்த்து

உட்கார வைப்பார். திருமதி. வேதவல்லி அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டது போல,

அவருக்கு மணியும் (நேரம்) தெரியாது; money யும் தெரியாது, பாடம் நடத்தும்போது!

எப்போதும் எத்தனை fees என்பதைச் சொல்லவே மாட்டார். மாணவர்கள் கொடுப்பதை,

தன் மனைவியிடம் கொடுக்கச் சொல்லுவார். மிக அதிசயமான மனிதர். நான் வீட்டுக்குப்

போவதாகச் சொன்னால், 'மூணு மணிக்குத் தானே ஸ்கூல் முடியும். நீ ரெண்டு மணி

வரைக்கும் இரு. பசிச்சா, மாமிகிட்டே கேட்டு, சாப்பிடு!' என்பார். இத்தனை அன்புடன்

பாடம் சொல்லிக் கொடுக்கும்போது, எப்படி விட்டுவர மனசு இருக்கும்? யாரையும்

குறையே சொல்ல மாட்டார்! எல்லோருமே பாடலாம் என்பது அவரின் அசையாத

நம்பிக்கை. எங்கள் வீட்டுக்கு அருகில் class நடந்தால், அது முடிந்ததும், என்னுடனே

எங்கள் வீட்டுக்கு வருவார். தோசை என்றால் கொள்ளைப் பிரியம். பத்து நிமிடம் (சரியாக)

easy chair - இல் ஓய்வெடுத்து, இரண்டு தோசை, மிளகாப் பொடியுடன் சாப்பிட்டுவிட்டு,

என் வீணையுடன் அமர்ந்துவிடுவார். எனக்கு, என் மாணவிகளின் வீணைகளில் ஒன்று!

தன்னை மறந்து வாசிப்பார். நான் மெதுவாகப் பின் தொடர்வேன். இதுபோல

அருமையான நிமிடங்களை நினைவில் வைத்துள்ளேன்! ஆத்மார்த்த சங்கீதமே மிகவும்

உயர்ந்தது, என்பது அவரது சித்தாந்தம். எளிமையில் இனிமை காணும் அவரின் உயர்ந்த

பண்பு, எல்லோரும் கற்க வேண்டிய நல்ல பண்பு. :angel:

:director: தொடரும்...........
 

என் குருநாதர். (தொடர்ச்சி )



'ராக்ஷஸி' என்று யாரேனும் என்னை அழைத்தால், அவர்களிடம் பேசவே மாட்டேன்!

ஆனால், என் குருநாதர் அவ்வாறு என்னைச் சொன்னபோது, பூரித்தேன்! இதுதான்

விஷயம். அவருக்கு திடீரென கச்சேரி அழைப்பு, சபரி மலையிலிருந்து! அச்சமயம், திரு.

துளசீவனம் (கேரளாவில் I A S அதிகாரி - ராமச்சந்திரன்) அவர்களின் ஐயப்பன்

பாடல்களை, திரு மகாராஜபுரம் சந்தானம் பாடி, இசை நாடாவாக வெளியிட்டிருந்தார்.

அதை என்னிடம் கொடுத்த 'சார்', 'நாளைக்கு எனக்கு இந்த பத்துப் பாட்டுக்கும்,

நொடேஷன் வேணும்' என்று புன்னகையுடன் கொடுத்தார். அன்று இரவில், ஒரு மணி

வரை வேலை செய்து, அவர் சொன்னதை முடித்தேன். மறுநாள், அந்தப் பேப்பர்களைக்

கொடுத்ததும், 'எனக்குத் தெரியும். ராக்ஷஸியாச்சே நீ!' என்று சொல்லிச் சிரித்தார்.

ராக்ஷஸர்கள் இரவில் பலம் மிகுந்தவர்கள், என்றும் விளக்கினார்! மறக்காமல் கச்சேரி

முடித்து வந்தபின், அந்த நொடேஷன் உதவியால், எளிதாகப் பாடியதாகவும் கூறி

மகிழ்ந்தார். இன்றுவரை, பசுமையாக உள்ளன, அவரின் சொற்கள்!


Music academy அருகில், ஒரு வீட்டில் வகுப்பு நடக்கும். 'சார்' என்னை அங்கு அழைத்துச்

சென்றுவிட்டார். அந்த குழுவில் நான் மெம்பர் இல்லை! தலைவி மாமிக்கோ மிகக் கடுப்பு.

'இருபது ரூபாய் மெம்பர்ஷிப் இருக்கறவாதான் உள்ளே வரலாம். நீ மெம்பரா,

இல்லையா?', என்று கேட்டார், கடுமையாகவே! உடனே, நான் பணத்தைக் கொடுத்து, 'சார்

கூப்பிட்டதால் வந்தேன். இனிமேல் மெம்பராகச் சேர்த்துக்கொள்ளுங்கள்', என்றேன். சில

வகுப்புக்கள் சென்ற பின், நான் நொடேஷன் எழுதுவதைக் காப்பி அடிக்க மற்றவர்கள்

கேட்க, நான் ஒவ்வொரு பாட்டு முடிந்ததும், அதை எழுதிக் கொடுக்க, எல்லோரும் அதை

xerox எடுக்க, தலைவி மாமி முதல், எல்லோரும் தம் 'நெற்றிக்கண்' பார்வையை மாற்றி,

அன்புடன் பார்க்க ஆரம்பித்தனர்! ஒருநாள், 'சார்' எல்லோரிடமும், நான் அந்த

வகுப்புகளுக்கு asset என்று சொல்ல, 'asset - ன்னு சொன்னா சந்தோஷம் சார்! அசடுன்னு

சொன்னாத்தான் கஷ்டம்' என்று சொல்ல, உடனே அவர், அடுத்த ஞாயிற்றுக் கிழமை

முதல் திருவல்லிக்கேணி humour club -க்கு வருமாறு அழைத்தார்! என்னவரின் ஒரே

விடுமுறை நாள் அது என்பதால், நான் பணிவுடன் மறுத்துவிட்டேன்.


எளிமையின், அடக்கத்தின், நற்பண்பின், சிறந்த நுண்ணறிவின், அன்பின் மொத்த உருவம்

அவர். ஒரே வரியில் சொன்னால்: மனிதருள் வைரம்!

:pray: . . . :hail:
 
உடன் பிறப்புகள்...

விதிப் பயனால் வரும் வாழ்வின் தொடக்கம்... அதில் சுற்றமும் துணையும் அமைவதும்

அடக்கம்! நல்ல குடும்பமும், அன்பான உடன் பிறப்புகளும் கிடைப்பது, நம் வாழ்வில்

பெறும் பெரும் பேறு! இதோ, கொஞ்சம் நினைவலைகள் அடிக்கின்றன..........


முதலில் பெரிய அக்காவைப் பற்றிக் கொஞ்சம்... எங்கள் சிறு வயதில், அம்மாவுக்கு

அடுத்தபடியாக, எங்களை கவனித்துக்கொண்டவள்! அணில் குட்டிகளையும்,

காக்கைகளையும் காட்டி, உணவு ஊட்டுவாள். தம்பி தங்கைகள் ஜுரம் வந்து படுத்தால்,

அன்புடன் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளுவாள். திருமணமாகி, திருவனந்தபுரம்

சென்றபின், வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டு, என் 'மிலிடரி' நடை வாசிப்பை

நளினப்படுத்தினாள். வீணை வாசிப்பின் அடிப்படை கமகங்கள், நான் அவளிடம்

கற்றவைதான். வீணையில் என் முதல் குரு எனலாம். எப்பொழுது ஊருக்கு வந்தாலும்,

மூட்டையாகப் பரிசுகள் வாங்கி வருவாள். நாங்கள் அவளுக்கு வைத்த செல்லப் பெயர் -

Santa! வீட்டின் மூத்த பிள்ளையாகவே செயல்பட்டாள். அரசாங்க வேலையில் பெரிய

பதவி வகித்தாலும், எளிமையையே விரும்புவாள். எல்லோருக்கும் உதவ வேண்டும்

என்ற மனப்பான்மையை, அவளிடம்தான் கற்க வேண்டும்!


இரண்டாவது, V R mam! துறுதுறுப்புக்கு மறு பெயர். ஒரு கணம்கூட விரயம் செய்ய

மாட்டாள். பத்துப் பேர்களின் வேலையை ஒருத்தியாகச் செய்து உடலை

வருத்திக்கொள்ளுவாள். ஆந்திராவில் வசித்தபோது, ஒவ்வொரு லீவில் வரும்போதும்

12 பாட்டில் ஆவக்காய் ஊறுகாய் போட்டு, எல்லோருக்கும் விநியோகம் செய்வாள்!

பலமுறை நான் கோபித்துக் கொள்ளுவேன். 'ஏன் இப்படிக் கஷ்டப் படுகிறாய்?' எனக்

கேட்பேன். இருந்தாலும், இது பல ஆண்டுகள் தொடரும் நிகழ்ச்சியானது!


எல்லாப் பொருட்களும் வீட்டில் வைத்திருப்பாள். 'யாருக்கு என்ன வேணாம்னாலும்

இங்கேதான் வருவா', என்று அவள் குழந்தைகள் சொல்லுவார்கள். பரோபகாரி. எல்லாக்

கலைகளிலும் ஆர்வம் உண்டு. சின்ன வயதில் தாத்தாவுக்கு 'டிமிக்கி' கொடுத்து, நடனக்

கலை கற்றவளாயிற்றே! விருந்தினர் வந்தால் 'வயிறு முட்ட' உணவு அளிப்பாள்.

அட்டவணையிட்டு வேலை முடிப்பதில் அவளுக்கு அலாதி ஆர்வம். ஆங்கில இலக்கணப்

புத்தகம் முழுதும், மூன்று முறை தாத்தாவிடம் படித்துப் பாராட்டுப் பெற்றதால், இன்று

அவள் எழுதிய பல கட்டுரைகள் 'young world' இல் பிரசுரமாகி உள்ளன! ஓயாத உழைப்பை

இவளிடம் கற்கவேண்டும்!


:blah: . . தொடரும்...........
 
உடன் பிறப்புகள்...(தொடர்ச்சி)

ஐவரில் நடுவில் உள்ள ஒரே sandwich brother, அடுத்ததாக. சின்ன வயதில், பள்ளியில்

ஆசிரியர்களால் 'நடமாடும் encyclopedia' என்ற பெயர் பெற்றவன். இன்றுவரை

அப்படித்தான்! நல்ல விஷய ஞானம். சிறு வயதில் மிருதங்கத்தில் கற்ற ஜதிகளை, கல்லூரி

நாட்களில் 'ட்ரம்ஸில்' வாசித்து அசத்தியவன். பள்ளி செல்லும் நாட்களில், அவன்

தோளில் கை போட்டுக் கொண்டு நடந்தால், நடக்கும் சிரமமே தெரியாது! விளையாட்டுச்

சேட்டைகள் செய்வான். பள்ளி நாட்களில், அவன் சொல்லுவதையெல்லாம் நம்புவோம்!

இரவு படுத்துக்கொண்ட பின் ,'காலை சைக்கிள் ஓட்டற மாதிரி வேகமா நூறு தடவை

செஞ்சா, நல்லாயிருக்கும்', என்பான். நானும் தங்கையும் அதேபோலச் செய்தால், கால்

'விண் விண்' என வலிப்பதுடன், ரத்தம் வேகமாகப் பாயும். அதுதான் அவன் சொன்னா

'நல்லாயிருக்கும்'! தீயின் அருகே சென்று ஏப்பம் விட்டால், அது பெரிதாக எரியுமென

ஒருமுறை ஏமாற்ற, இன்றும் ஸ்வாமி விளக்கு ஏற்றும்போது, நான் படு ஜாக்கிரதை!

எல்லாம் ஒரு பயம்தான்.


இன்று............

தந்தை வழியில் மருத்துவம் படித்து, பணி ஆற்றுபவர். எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

அவர் எழுதிய 'Trick or Treat' புத்தகம் பரவலான பாராட்டைப் பெற்றது. அதுவே 'போஸ்ட்

மார்ட்டம்' என்ற தொடராக, ஜூனியர் விகடனில் வெளியாகி, பின் புத்தக வடிவிலும்

வெளிவந்துள்ளது. (One of the best sellers!) எங்கள் தந்தை, அண்ணாவை 'Man of few

words' என்பார், சுருங்கச் சொல்லி, விளங்க வைப்பதால். ஒரு உதாரணம்... 'சர்க்கரை

நோய் வந்தால், ஏன் சில ஆண்டுகளுக்குப் பின் மாத்திரை வேலை செய்வதில்லை?' என்று

கேட்டதற்கு வந்த பதில்: ' Pancreas ஐ அடிச்சு வேலை வாங்கினா, கொஞ்ச நாளைக்கு

பின், சண்டி மாடு மாதிரி strike பண்ணும்!' அதிக மருந்து கொடுத்து சிகிச்சை செய்வதை

எதிர்த்து, இவருடன் வேறு சில மருத்துவர்களும் சேர்ந்து, ஒரு society ஆரம்பித்துள்ளனர்.


கம்ப்யூட்டர் புத்தகங்கள் நிறையப் படித்து, அதில் நிறைய விஷயங்கள் அறிந்தவர். தன்

தொழில் மீது மிகுந்த அக்கறையும், பக்தியும் கொண்டவர். 'அண்ணா! ஹோமியோபதியில்

side effect இருக்காதோ?' என்று கேட்டால், 'effect டே இருக்காது! அப்பறம்தானே side

effect!' என்பார். அலோபதி நிபுணர் அல்லவா! ஆனாலும், மற்றவர் ஏற்றுக்கொண்ட

வைத்திய முறைகளில் குறுக்கிட மாட்டார். அவரவர் விருப்பமே முதன்மை என்பார். தன்

மன சாட்சிக்கு விரோதமாக சிகிச்சை அளித்து, பணம் ஈட்டச் சொன்ன ஒரு பெரிய

மருத்துவ மைய வேலையை உதறித் தள்ளிவிட்டு, தான் படித்த Jipmer கல்லுரியிலேயே

பணிக்கு அமர்ந்தார். இன்று, மலேசிய நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்தில், உயர் பதவி

வகிக்கின்றார். மருத்துவர்கள் எல்லோருமே அவரைப் போல இருந்தால், இந்தியாவே

வேறு மாதிரி இருக்கும்!


:angel: . . . :peace:
 
உடன்பிறப்புகள்... (தொடர்ச்சி)

வீட்டின் கடைக் குட்டி என் தங்கை. அப்பாவின் செல்லம். 'குட்டி' என்று அழைத்தால்

மூக்கின் மேல் கோபம் வரும். அப்பாவிடம் 'தாஜா' பண்ண இவளைத்தான் அனுப்புவோம்.

சின்ன வயதிலேயே நல்ல diplomat! ஏனென்று சொல்கிறேன். ஒரு முறை யாரோ வந்து

அப்பாவைத் தேட, 'அப்பா! யாரோ ஒரு மாமா கூப்படறா.' என்றாள். அப்பா வேறு ஏதோ

யோசனையில் இருந்ததால், 'அவரைப் போகச் சொல்லு!' என்று சொல்ல, ஒருவேளை

இதையே குழந்தை அவரிடம் சொல்லுமோ என்று அவசரமாகப் பின் தொடர்ந்து வந்தால்,

இவளோ,' அப்பா கொஞ்ச நேரேம் உக்காரச் சொன்னா!' என்றாள். அப்போது அப்பா வைத்த

பெயர்தான் diplomat! சினிமாப் பாடல்கள் பாடினால் அம்மாவின் திட்டு விழும் என்று

அறிந்ததால், நல்ல 'ட்யூன்'களை, இரண்டுபேரும் ஸ்வரத்திலேயே பாடி ஏமாற்றுவோம்!

சுவாரஸ்யமான நேரங்கள் அவை!


கடைக்குட்டி என்றால், எல்லா அக்காவின் குழந்தைகளையும் கவனிக்கும் வேலை வரும்.

நான் பெற்ற செல்வம், முதல் மூன்று மாதங்கள் சரியாக இரவு 11 மணிக்கு கொட்டக்

கொட்ட முழிக்கும்! என்னதான் slow motion -இல் படுக்கையில் விட்டாலும் 'வீல்

வீல்தான்'. காது டமாரம் கிழிந்துவிடும்! நான் ஓய்வு எடுக்க வேண்டுமே என்று, தன்

கையில் அவனை வைத்துக்கொண்டு நள்ளிரவு தாண்டி வெகு நேரம் ஆகும் வரை

உடகார்ந்திருப்பாள். அவளின் இந்த உதவியை, என்றுமே மறக்க முடியாது! 'தம்பி

உடையான் படைக்கு அஞ்சான்' என்பார்கள். 'தங்கை உடையாள் baby sitting - க்கு

அஞ்சாள்!', என்பேன் நான்.


வயலின் மிக அருமையாக வாசிப்பாள். திருமணம் ஆனபின், அவளுடைய வயலின்

பரணில் ஏறியது. ஊக்கப்படுத்த யாருமில்லை! இன்றுவரை அதைப் பற்றி எண்ணினால்,

எனக்கு வருத்தமே. சமையல் கலையில் expert ஆகிவிட்டாள். கிராமத்தில்

வாழ்க்கைப்பட்டால், வேறு என்ன கலை வளரும்?


:director: தொடரும்...........
 
Last edited:
raji,

i feel for your youngest sister. maybe she does not, but folks like me, have seen so many gifted girls whose lives and ambitions were destroyed through marriage.

i find all the time, it was the fault of the father, who either had no clue, or in most cases, ignored the the potentials of the daughters. 'get them married, no matter' appeared to be the sole goal.

in the 50s, a great veena vidwachi, potential, was married off at 17, to a village family, who were more attune to the braying of an ass than the tunes of her veena strings. quickly the veena gathered dust, and the time was spent of mil, sil, and later babies.

much later, another relative, whose artistic skills were deliberately suppressed by here hub and inlaws. sometimes God provides relief in strange ways. the husband died young, and the relative assumed her artistic career to the level of stars.

i am hoping that nowadays all this is past. ie we treat our girls at par with our boys.
 
Dear Sir,

Her aspiration was NOT to become a performing artist, anyway. I feel bad because her inlaws

did not even allow her to play on her violin and she could not improve her proficiency in classical

music, both in vocal and violin!

As you said, she does not feel bad about it and lives happily with her hubby and kids

(now grown ups!).

Regards,
Raji Ram
 
.................
i find all the time, it was the fault of the father, who either had no clue, or in most cases, ignored the the potentials of the daughters. 'get them married, no matter' appeared to be the sole goal...........
It was NOT the fault of the father. In the previous generation, the expected percentage of

compatibility between the bride and groom was only 40%. You must have heard the saying,

அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை! No marriage was without compromises, either! The basic

criteria for choice of partner were 1. good match of horoscopes, 2. family status to be equal

3. groom's education + 4. height + 5. salary (in the case of working girls) to be higher than

that of the bride, 6. complexion, 7. beauty (included wearing the spects - as a minus) etc. But

now a days, people on both sides expect 100% match and go on delaying the marriage of

their sons and daughters! Our generation girls adjusted very well to the new environment easily

and led a happy life, with all the short comings!

:peace:
 
.. Our generation girls adjusted very well to the new environment easily

and led a happy life, with all the short comings!

:peace:

yes raji, you said it all there in 'our generation'.

only thing that i will disagree with your, is that they 'led a happy life' inspite of shortcomings. maybe they accepted it because they had no choice.

the man never made a compromise. this was accepted then, appears to be accepted as OK by you. even now, in perspective.
 
Dear Sir,

Men also had to compromise! {I forgot one main criteria in the list given in my earlier post, (viz) age!!}

Many tall guys got married to short girls and very handsome guys to not so pretty, dark girls!

Of course, women had to adjust to more shortcomings! I know one neighbourhood mami, my

friend's MIL, who got married at her tender age, as the second wife of a polio affected man.

She wanted to outlive her her bitter half, at least for 10 years and so she did so 15 years!!

Regards,
Raji Ram
 
சிறு வயது - சிறு விளையாட்டுக்கள்!

கிராமத்தில் வளர்ந்தால், சில இனிமையான தருணங்கள் கிடைப்பது உறுதி. எங்கள்

வீட்டுக்கு எதிரில், ஒரு சின்ன மைதானம் இருக்கும். அதன் உரிமையாளர் பெயரும் சின்ன

முதலியார்! எங்கள் அடுத்த வீடு அவருடையது. கொஞ்சம் 'தண்ணி பார்ட்டி'தான். ஒரு

முறை பலத்த அடியுடன், அப்பாவிடம் வைத்தியத்திற்கு வந்தார். எப்படி இவ்வளவு

கடுமையான காயங்கள் என்று கேட்டதற்கு வந்த பதில்: 'டாக்டர் சார்! நேத்து ராத்திரி

பொள்ளாச்சி போயிட்டு வரும்போது, ரெண்டு மோட்டார் பைக் வந்ததா நெனச்சு,

நடுவிலே விட்டேன் என் பைக்கை! ஆனா, அது ஒரு லாரியோட ரெண்டு Head light - ன்னு

கீழே விழுந்த பிறகு தெரிஞ்சது!'


இப்போது எங்கள் விளையாட்டு பற்றி... அவர் எப்போதும் பெரிய வைக்கோல் போர்

குவித்து வைத்திருப்பார், அந்த மைதானத்தில். வைக்கோல் பறக்காது இருக்க,

வைக்கோலையே கயிறு போலத் திரித்து, அங்கங்கு கட்டி இருப்பார்கள். ஒரு பெரிய

யானையின் உயரம் இருக்கும் அந்தப் போரில், வைக்கோல் கயிற்றைப் பிடித்தே

ஏறுவோம்; அந்தப் புறம் சறுக்குவோம்; தாத்தாவுக்குத் தெரியாமல்தான்! 'உடம்பு

சொறியும், குட்டிகளா!' என்று, தாத்தா அதனிடம் போக விடமாட்டார். விளையாடிய பின்,

கை கால் சோப்புப் போட்ட அலம்பினாலும், முதுகெல்லாம் சொறியும்! பின் என்ன?

'வயலின் வாசிப்பு'தான், முதுகில்! இப்படிப் பாடுபட்டாலும், சந்தர்ப்பம் கிடைக்கும்போது,

மறக்காமல் உண்டு எங்கள் சறுக்கு விளையாட்டு!


ஆளியாறு மிகப் பெரியது. வீட்டுக்கு அருகில் ஓர் உப்பு ஆறும் உண்டு. எங்கள்

வேலைக்கார அம்மாவுடன், சில சமயம் அங்கு செல்லுவோம். கொஞ்சம்தான் தண்ணீர்

ஓடும். அதில் 'ஸ்டயிலாக' நீச்சல் அடிப்பதுபோல பந்தா செய்வோம். வீடு திரும்பிய பின்,

அந்த ஆத்துத் தண்ணியும், 'வயலின் வாசிக்க' வைக்கும்!


சித்தியின் பசங்கள் நல்ல 'சைஸ்' இருப்பார்கள். இருவரும் Rugby விளையாட்டுக்குக்

கூப்பிடுவார்கள். பந்தை வைத்துக் கொண்டு மோதினால், நாங்கள் எல்லாம் சட்னி

ஆவோம்! நாங்கள் மறுத்துவிட்டு, நொண்டி விளையாட்டுக்குக் கூப்பிடுவோம்.

அவர்களால் இரண்டு நிமிஷம் கூட நொண்டி அடிக்க முடியாதே! கடைசியில் இரண்டுமே

பரஸ்பரம் மறுக்கப்பட்டு, ஓடிப் பிடித்து விளையாடுவோம்.


இந்த விளையாட்டுக்கள் வாழ்வின் இனிய தருணங்கள்தான்!


:blah: தொடரும்...........
 
Dear Sir,

Men also had to compromise! {I forgot one main criteria in the list given in my earlier post, (viz) age!!}

Many tall guys got married to short girls and very handsome guys to not so pretty, dark girls!

Of course, women had to adjust to more shortcomings! I know one neighbourhood mami, my

friend's MIL, who got married at her tender age, as the second wife of a polio affected man.

She wanted to outlive her her bitter half, at least for 10 years and so she did so 15 years!!

Regards,
Raji Ram

dearest raji,

i am really picking on you without any intervals. so forgive me, dear lady.

Only so because a couple of your points goes against my fundamental sensitivities.

You mentioned dark and ‘not so pretty’ in the same context. What is wrong with being dark. I have the most beautiful relations (young girls), dark as charcoal, but their features, to me, are the best in the world.

Sure enough, one got derided by her parents, and was asked to lower her expectations re marriage. She stood firm, and happened to marry a ‘fair’ handsome man, out of his choice. And hers too. I think we are too ‘colour conscious’ to qualify as the most racist group in the world. And we tend to short sell our girls who, through no fault of their own, are endowed with ebony skin tone. Shame on us.

Re your mil’s friend, it is ironical, that her ‘revenge’ was outliving her husband. Having tended to be a nurse in addition to wifely chores, this poor lady was done wrong. But I guess those were norms of earlier years. Hopefully we have put this all to rest in our community.

A fervent prayer,that we indeed have, inspite of numerous neanderthally request here in this forum, for ‘simple marriage, no expectations, would need to know hindi, English, telugu, assist in business’ and take care of the inlaws. I pray that those ads go unanswered, as they very well deserve to be.
 

One clarification, Sir! I wrote 'not so pretty, dark girls' because I too have seen dark girls with

beautiful features! Even our neighbour chinna mudhaliar's daughter was a pitch dark pretty girl!
 
இளமை முதல் துறவி!

என் நினைவு தெரிந்த நாளிலிருந்து பாட்டி ( அன்னையின் பாட்டி) விபூதி மணத்துடனே,

மனத்தில் நிறைந்தவர். கொள்ளை அன்பு எல்லோரிடமும் காட்டுவார்! 'விஷு' சமயம்

அவரைப் பார்க்கச் சென்றால், தன் விபூதி மணக்கும் பெட்டியிலிருந்து வெள்ளிக் காசு

ஆளுக்கு ஒன்று அளிப்பார். முன்பெல்லாம், 'வளைச்செட்டி' என்று, பூதாகாரமான

இரட்டை வெள்ளைப் பைகளில் வளையல்களை அடுக்கடுக்காக வைத்து விற்கும்

வியாபாரிகள், தினமும் தெருவில் போவார்கள். அவர்களை அழைத்து, பெண் குழந்தைகள்

எல்லோரின் கைகளிலும் வளைகளை அடுக்கச் சொல்லுவார். எல்லாக் குழந்தைகளையும்

அலங்கரித்துப் பார்த்து, ஆனந்தப்படுவார். எங்களுக்குத் தாழம்பூ பின்னல் பின்னச்

சொல்லுவார்.


அவரின் அன்பை மட்டுமே அறிந்த நாங்கள், எங்களுக்கு விவரம் புரியும் வயதில்தான்,

அவர் வாழ்வின் விவரங்கள் அறிந்தோம்! Teen வயது முடிய இரு ஆண்டுகள்

இருக்கும்போதே, விதியின் கொடுமையால் வஞ்சிக்கப்பட்டவர். ஆம்! மணமான மூன்று

ஆண்டுகளில், கைக்குழந்தயுடன், கைம்பெண் ஆனார்! அந்தக் காலக் கொடுமையை

எல்லோருமே அறிவோமே! அந்த இளம் பிராயத்திலேயே, கருநாகம் போன்ற கூந்தலை

இழந்து, வெள்ளை உடையும், 'நார் மடியும்' ஆடைகளாகக் கொடுக்கப்பட்டு, ஒரு நல்ல

விஷயத்திலும் பங்கேற்க விடாத சமுதாயத்திலே, தன் மன உறுதியால் மட்டுமே

வாழ்வைத் தொடர்ந்தவர். இருபதுகளில் உள்ளபோதே, அவரை விட மூத்த ஆண்கள்,

'பாட்டி' என்று அழைப்பார்களாம்! அதுபோன்ற பேச்சுக்களையும் தாங்கியவர். தன் பெண்

மண வயது எட்டியதும், நல்ல மருத்துவரைக் கணவனாக்கி மகிழ, அவள் வழியே பேரன்

பேத்திகள் கிடைக்க, அந்த மகிழ்ச்சியும் பத்தே ஆண்டுகள்தான்! மகளின் அகால

மரணத்திற்குப் பின் அவளின் வாரிசுகளை வளர்க்கும் பணியில் காலம் உருண்டு ஓடியது.

தனக்கென்று அவர் என்ன இன்பம் அனுபவித்தார் என்பது, இன்றுவரை எனக்குப் புரியாத

புதிர்தான்! ஆனாலும், என்றுமே தன் இயலாமை பற்றியோ, தான் வாழ்வில் பல

துன்பங்களைக் கண்டவர் என்றோ கூறிப் புலம்பியதே கிடையாது. 'வைரம் பாய்ந்த

நெஞ்சம்' என்பது இதுதானோ என்று நான் எண்ணுகிறேன், இப்போது! பூரண ஆயுள்

வாழ்ந்து, எல்லோரிடமும் அன்பை மட்டுமே பொழிந்து, துறவியாகவே வாழ்ந்த அவர்,

ஒரு தெய்வப் பிறவிதான்!


:angel: . . :hail:
 
Last edited:
Raji,

My heartbroken feelings for your great grandma.

I cannot even imagine the sorrows that she went through, probably without realizing that all her sorrows were man (the gender) made and not God given.

Furthermore, to lose an only child, daughter, who must have been her only source of comfort, also must have been devastating.

With the benefit of an enlightened era, we cannot but feel for folks like your grandma. But as you have seen from my previous posts here in this very thread, vestiges of old attitudes prevail. We still have distances to go, to rid ourselves of petty and irrational prejudices.
 

Times are changing now, Sir! Most of the evils against women are vanishing slowly...

As you say, we still have a long way to go. :car:
 
Dear Mr. Kunjuppu,

Actually our great grandmother was kept so busy by her eight

grandchildren (out of which six were boys and one was a new born baby)

she had no time to think about herself.

In those days no kitchen gadgets to help and everything had to be done

manually. She must have worked day and night to look after these eight

kids and her busy doctor son-in-law!

When late in her life, she lost her memory (Alzheimer' disease?) she

would instruct the person in her room, to call all those imaginary

characters walking around and always she would want to feed them.

She is the one person who was a real Annapoorni- the giver of food to

everyone who had the good fortune of being seen by her!

She was so cheerful, so kind, so selfless, so jovial that it is hard to

imagine such a person in real life.

She died within ten days after our paternal grandfather (our music /

maths/grammar guruji) died.

Today if they were alive they would be ~ 125 years old!

Two great people in our real lives!

with warm regards,
V.R.
 
Dear Sis!

Welcome! You are in a haste, as always! Amma's family had five brothers and two sisters!

I am trying not to write about their old age health problems, and want to share more of happy

moments we had with them! :dance:

Cheers,
Raji
 
பெரிய மாமா...

தாய் மாமாவுக்கு என்றுமே மரியாதை அதிகம்தான். தந்தைக்கு அடுத்து, அவர்தான்

சிறந்தவர். விளையாட்டாக ஒன்று கூறுவார்கள்: உரிய மரியாதை தராவிட்டால், தாய்

மாமா, நாய் மாமாவாக மாறிக் குதறுவார் - என்று!


அப்பாவின் குடும்பம் பர்மாவில் வசித்ததுபோலத்தான் அம்மாவின் குடும்பமும். பெரிய

மாமா அப்பாவின் ஜூனியர், மருத்துவக் கல்லூரியில்! அப்பா M B B S இல் வாங்கிய GOLD

MEDAL தான் அம்மாவைக் கைப் பிடிக்கக் காரணம்; மாமாவின் சிபாரிசுதான்! (அந்தக்

காலத்திலேயே, ஜாதகம் பார்க்காமல், சுவாமியிடம் பூ கட்டிப் போட்டுப் பார்த்து, வாழ்வில்

இணைந்தனர்) அப்பா சாது... மாமா தீரர்!


இப்போது அவரைப் பற்றி..... சிவந்த உயர்ந்த அழகிய தோற்றம்; புன்சிரிப்பு; குறும்புக் கண்

சிமிட்டல்கள்; விரும்பி அணியும் உடை வெள்ளை நிறத்தில்; வெள்ளைக் கார்

வைத்திருப்பார்; மனதும் வெள்ளைதான். எங்கள் அடுத்த ஜெனரேஷனில் முதல் குழந்தை

அவருக்கு வைத்த பெயர்: White Uncle. நல்ல பரோபகாரி. சிறந்த ENT வைத்திய நிபுணர்.

ஒரே நாளில் 18 'டான்சில்ஸ்' அறுவை சிகிச்சைகள் செய்து, சாதனை படைத்தவர்.

அவரின் சாகசங்கள் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்! சில சுவையான சம்பவங்களைப்

பகிர்ந்துகொள்ளுகிறேன்.


சிக்கனத்தின் மறு உருவம். ஒரு மாதச் செலவுகளை ஒரு வெள்ளைத் தாளை எட்டாய்

மடித்து, குட்டிக் குட்டி எழுத்தில் எழுதுவார். அந்த ஒரு தாளே எட்டு மாதக் கணக்குகளை

உள்ளடக்கும். பணம் சேர்த்து வைக்க, தன் சகோதரிகளுக்கு உதவுவார். (அதே குட்டி

எழுத்து account தான் ஒவ்வொரு சகோதரிக்கும்!) நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது,

அவர்தான் எங்கள் கார்டியன். தண்ணீர் நிரப்ப, அவர் வீட்டில் பெரிய தகரத் தொட்டி உண்டு.

அந்தத் தொட்டி ரிப்பேருக்கு, நாங்கள்தான் எடுபிடிகள்! 'அரால்டேட்' பசையும், மூன்று

பைசா நாணயங்களும் கையில் இருக்கும். எங்கள் உதவியுடன், ஓட்டைகளைக்

கண்டுபிடித்து, காசுகளை ஒட்டி அடைத்துவிடுவார். பலமுறை இதே action replay ஆகச்

செல்ல, ஒரு நாள் நாங்கள் சொன்னோம்,' மாமா! அடுத்த வருஷம், இந்தத் தொட்டியின்

அடிபாகம் பூராவும் மூணு பைசாக் காசுகளே இருக்கும்!' உடனே, கண் சிமிட்டிச் சிரித்தார்.


மாமியும், பெண்கள் மருத்துவ நிபுணராகப் பணி செய்ததால், அந்தக் காலத்திலேயே,

கறிகாய்கள் திருத்திக் கொடுப்பார். இந்தியக் கணவர்கள் அந்நாளில் செய்யாத வேலைகள்

அவை. இந்நாளிலும், பலர் செய்வது கிடையாது! Routine - இல் 200% நம்பிக்கை! 'இந்த

Time - ல இந்த வேலை மாமா செய்வான்னு, எல்லோருக்கும் தெரியணம்' என்று கூறி,

தன் routine - ஐக் கடைப்பிடிப்பார். எங்களை, 'வந்தேமாதரம்' பாடல் வைத்து, காலை

ஆறு மணிக்கு எழுப்புவார். இரவு பத்து மணிக்கு lights out!! எத்தனை home work

இருந்தாலும், அதற்குள் முடிக்கணும். இல்லையென்றால், ஸ்பெஷல் வேண்டுகோள்

விடுக்கணும்! வெந்நீர் போட ஒரு drum இருக்கும். அது ஒரு பிளாஸ்டிக் சட்டை

போட்டிருக்கும். (சூடு வெளியேறாமல் இருக்க). ஆளுக்கு அரை பக்கெட் வெந்நீர் என்று

கணக்கு!


:director: தொடரும்..........
 
:sorry: :bolt: :wave:

Please carry on your one-to-one conversation!
focus.gif
 

Dear Sis!

No need to say sorry! You are most welcome to share your views here.

Is it not good to remember happy moments in life and forget the sad ones?

Raji Ram :peace:
 
பெரிய மாமா ...... (தொடர்ச்சி)

மாமா வீட்டில் எட்டு அடிக்கு நாலு அடி அளவில் பெரிய சாப்பாடு மேஜை. உணவு

உண்ணும் சமயம் யார் வந்தாலும், அவர்களின் சமூக அந்தஸ்த்து உயர்ந்ததா என்று

ஆராயாமல், அந்த மேஜையில் எல்லோருடனும் உண்ண வைப்பார்! காய் கறிகளை

எல்லோரின் தட்டிலும் சரி சமமாகப் போட்டுவிடுவார். மற்றவை அவரவர் விருப்பம்.

மாமி, தன் தம்பிக்கு, சிபி அரசன்போல மாறி, kidney தானம் செய்தபோது, அடிக்கடி

வேலூருக்குச் செல்லுவார்; அச்சமயம் பால் வாங்குவதைக் குறைக்காமல், எல்லா extra

பாலையும் பால்கோவா கோலிகளாக மாற்றி வைப்பார்; அவருடைய நளபாகத்தில்! யார்

வந்தாலும் கோலி தந்து, பையிலும் கொஞ்சம் போட்டுக் கொடுப்பார், அதே குறும்புக்

கண்சிமிட்டலுடன்!


பயம் என்பது அறியாதவர். ஆண்டு விடுமுறையில், நாங்கள் கன்னியாகுமரி

செல்லும்போது, மாமாவும் உடன் வந்தார். அங்கு சூரிய அஸ்தமன நேரத்திற்குள் சேர

வேண்டும் என்று, அவர் காரைப் படு வேகமாய் ஓட்ட ஆரம்பித்தார். அப்படி வேகம்

எடுத்தும்கூட, சூரியன் 'டாடா' சொல்லிப் போய்விட்டான்! மாமாவுக்கு, ஏதேனும்

வீரமாகச் செய்ய ஆசை. கடலில் குளிக்கலாமென்று சொல்லி, உள்ளே இறங்கிவிட்டார்.

அப்போது விவேகானந்தர் தியானம் செய்த பாறையை யாரோ காட்ட, அதில் நானும்

ஏறுவேன் என்று சொல்லி, கடலில் நீச்சலை ஆரம்பித்தார்! (இது நடந்தது, 1967 -

இன்றைய விவேகானந்தர் நினைவாலயம் கட்டப்படவில்லை). அங்கு இருந்த ஒரு

இளசுகள் பட்டாளம் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்த, அப்பா எவ்வளவு சொல்லியும்

கேட்காமல், நீச்சலைத் தொடர்ந்து, பாறை மீதும் ஏறிவிட்டார். இங்கிருந்து பார்த்தால்

சின்ன பொம்மை போலவே தெரிந்தார்! பாறை உச்சியை அடைந்தபின், double thumbs up

காட்டும் வரை, எல்லாமே OK தான். இறங்கும்போது பாறையின் பாசம் வழுக்கிவிட,

பின்தலை பாறையில் மோத, அரை மயக்கத்தில் சறுக்கி வந்து, கால்கள் கடல்

அலைகளில் முங்கிவிட, பாறை மேலே கிடந்தார். சப்த நாடியும் எங்களுக்கு ஒடுங்கியது!

இந்த இளசுப் பட்டாளமோ, பேயறைந்ததுபோல நின்றது! நல்ல வேளை; சில நீண்ட,

கவலை தோய்ந்த நிமிடங்களுக்குப் பின், எழுந்து, பின்தலையைத் தடவி, அதில் வழிந்த

ரத்தத்தைக் கடல் நீரில் அலம்பி, மீண்டும் கரை வந்து சேர்ந்தார். பின் என்ன! அப்பா வண்டி

ஓட்ட, திருவனந்தபுரத்தில் அக்காவின் வீட்டை அடைந்து, ஐஸ் கட்டிகளை முதல்

உதவியாக வைத்து, சுற்றிப் பார்க்கும் எண்ணத்தை மறந்துவிட்டு, மறுநாளே

திரும்பிவிட்டோம்! ஆண்டவனின் தயவால் மாமா நலமடைந்தார். (ஆம்! Hospital பக்கம்

போகவே இல்லையே!)


ஒரு பின்னிரவு நேரம்; பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை வரும் வழி; அவரின் காரை

முன்செல்ல விடாமல், ஒரு மாட்டுவண்டி ஆடி ஆடிச் செல்ல, காரில் பறக்கும் மாமாவுக்கு,

பொல்லாத கோபம் எழ, காரை ஓரம் கட்டி நிறுத்தி, வண்டி அருகில் சென்று, அதில் கிடந்த

சவுக்கை எடுத்து, தூங்கும் வண்டிக்காரன் மீது சின்ன அடி அடிக்க, துள்ளி எழுந்த

அவனிடம் சொன்னார்: 'இது மாதிரி அடிச்சு, மாட்டு வண்டிய ஓரமா ஓட்டு, தெரிஞ்சுதா?'


ஒருமுறை, ஒரு குடிகாரன் மாமாவுடைய காரின் துணிக் 'கவரை', 'பிளேடால்'

கிழித்துவிட, அதைக் கண்ட அவர், எம் ஜி ஆர் ஸ்டையிலில், அவனை நாலு சாத்துச்

சாத்தி, தள்ளிவிட்டார்! உடனிருந்த எங்கள் அப்பாவிற்கு கிலி பிடித்தது! மாமாவோ

சிரித்துக் கொண்டே,'நாலு பேர் வந்தாலும், சமாளிப்பேன் சார்!' என்று கூறி, தன் பெயர்

எழுதிவைத்த கட்டையைச் சுழற்றிக் காட்டினாராம்! இதை அறிந்த மாமி, நாலு நாட்கள்

லீவு போட்டுவிட்டு, அவருடன் சென்று ஆஸ்பத்திரியில் அமர்ந்தது வேறு விஷயம்! தன்

மகனுக்கு மருத்துவப் படிப்பில் ஆர்வம் வர வைக்க, ஒரு முறை, தான் செய்யும் ஒரு

தொண்டை அறுவை சிகிச்சையை அவனுக்குக் காட்ட, மிரண்டு போனான் அவன்; இன்று

அவன் ஒரு டாக்டர்தான்.... ஆனால், Ph. D!


என் முதல் வீணைக் கச்சேரியின்போது, 'வீணை இசை வாணி' என்று பொறித்த தங்க

Brooch பரிசாக அளித்தார். இன்றுவரை எல்லா விசேஷங்களுக்கும் அதை அணிய நான்

மறப்பதில்லை... மாமாவையும் மறப்பதில்லை! பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர்,

சமஸ்கிருதம் தபால் வழியாகக் கற்றார். யோகி போல நீண்ட தாடியும் வளர்த்தினார்.

வெள்ளை உடையில் அவர் ரயில் பயணங்கள் சென்றபோது, பலர் நமஸ்கரிப்பார்களாம்.

அன்பு மாறாது, இறுதிவரை வாழ்ந்தார். அன்பும், அரவணைப்பும் கூடவே கண்டிப்பும்

நிறைந்த அவர், ஒரு மாமனிதர்தான். ஐயமே இல்லை!


:angel: . . :thumb:
 
பெரிய மாமி...

அன்பும், அரவணைப்பும், கருணையும் கொண்ட ஒரு அமைதியான பிறவி. இவரின் சிரிப்பு

மட்டும் கொஞ்சம் அதிரும்! திருமணம் ஆன பிறகு, மருத்துவத் துறையில் பட்டம்

பெற்றார். அந்தக் காலத்தில் அதுவும் அதிசயமே! இவர் பெயரைக் கொண்ட இன்னொரு

மருத்துவரும், அதே கோவை மருத்துவமனையில் பணி புரிந்தார்; அவர் மணம்

ஆகாதவர். எனவே, அங்கு இவர்களின் பெயர்களை யாருமே சொல்ல மாட்டார்கள்; இவர்

Mrs; அவர் Miss!


சுற்றத்தில் எல்லாக் குழந்தைகளையும், தன்னுடையது போலவே பாவிப்பார். தன் உடன்

பிறப்புகளிடம், மிகுந்த பாசம் கொண்டவர். தன் தம்பிக்கு kidney தானம் செய்ய

விழைந்தபோது, இவருடைய kidney அறுபது சதம் மட்டுமே சக்தி கொண்டதால்,

சென்னையில், அறுவை சிகிச்சைக்கு மறுத்துவிட்டனர் மருத்துவர்கள். இவர் ஆயுளும்

குறையும் என்று எச்சரித்தனர். தம்பி சில ஆண்டுகள் வாழ்ந்து, குடும்ப சொத்துக்களைச்

சரி செய்ய வேண்டும். எனவே, வேலூருக்குச் சென்று, தன் மருத்துவ நண்பர் உதவியுடன்,

தான் நினைத்ததை சாதித்தார். தம்பிக்குச் சில ஆண்டுகள் வாழ்வு தந்தார்.


மிகப் பணக்கார இடத்தில் கடைசி மாமாவின் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாக,

சம்பந்தி வீட்டார் தங்க நகைகள் அதிகம் கேட்க, தனக்கென்று ஒரு செயின், இரு

வளையல்கள், ஒரு ஜதை தோடுகள் மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும்

அளித்துவிட்டார்! அதிசயமான பெண்மணியே இவர். எளிமை விரும்பி!


காலை ஐந்து மணி முதல் சுறுசுறுப்பாக வேலை ஆரம்பித்துவிடுவார். சமையல்

வேலைகள் முடித்து, சுவாமியை வழிபட்டு, காலை சிற்றுண்டி முடித்து, மதிய உணவு

pack செய்து எடுத்துக்கொண்டு, சரியாக எட்டு மணிக்கு வேலைக்குச் செல்வார். வீட்டுப்

பராமரிப்பும், மருத்துவப் பணியும் சமமாக balance செய்தவர். கனிவான வார்த்தைகள்

தவிர, கடுமையான வார்த்தைகள் இவர் சொன்னதே இல்லை!


குருவாயூரப்பனின் தீவிர பக்தை. 'கேசாதி பாத வர்ணனை'யை, P லீலாவின் தேன்

குரலில், அடிக்கடி கேட்பார், கண்ணீர் மல்க! தினமும், மல்லிகை மாலை கட்டி, நடுவில்

ரோஜா ஒன்றைப் பொருத்தி, இறைவனின் பெரிய படத்திற்குப் போட்டு, அழகு பார்ப்பார்.

எங்கள் கல்லூரி நாட்களில், மாமா வீட்டில் தங்கிப் படித்தபோது, மாலை கட்டும்

வேலையை, போட்டி போட்டுக்கொண்டு செய்வோம், நானும், என் தங்கையும்.


இன்று, உடல் நலம் குன்றிய நிலையிலும், zero gravity pen வாங்கி, தான் படுத்திருக்கும்

நிலையிலேயே, எங்களுக்குக் கடிதங்கள் எழுதி, நலம் விசாரிப்பது வழக்கம். அன்பின்

வடிவமே இவர். சுற்றம் அனைத்தையும் அன்புடன் பார்த்து, அரவணைப்பதை இவரிடம்

கற்கவேண்டும்... கற்றுக்கொண்டேன்!!


:grouphug: . . . :angel:
 
Dear Sir,

You had asked me when I started this thread, why black is always associated with evil! This is

the right time for me to answer that. Knowledge is bright and related to Sun, hence pure white.

(Goddess Saraswathi is adorned with white silk saree) So, naturally foolishness is dark and

hence black. It is horrifying to read the news! This guy about whom you have mentioned is

black in mind, attitude and outlook.

Regards,
Raji Ram
 

Latest ads

Back
Top