மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.
#71.
ஒருங்கு = முழுமை.
ஒருங்கு = ஒன்று கூடு.

#72.
ஒளி = வெளிச்சம்.
ஒளி = மறைத்து விடு.

#73.
ஒன்று = ஒரு எண்.
ஒன்று = ஒன்றாகிவிடு.

#74.
ஓடு = மேல் கவசம்.
ஓடு = விரைந்து செல்.

#75.
கட்டு = ஒரு கொத்து.
கட்டு = அமைப்பாய்.
 
#76.
கடா = ஆண் விலங்கு.
கடா = வினாவு.

#77.
கடு = கசப்பு.
கடு = நோவெடு.

#78.
கடுகு = தாளிக்கும் தானியம்.
கடுகு = விரைந்து செல்வாய்.

#79.
கடை = எல்லை.
கடை = கடைதல் செய்வாய்.

#80.
கண்டி = ருத்திராக்க மாலை.
கண்டி = கடிந்து கொள்ளுவாய்.
 
# 191.
கொச்சு = குஞ்சம்.
கொச்சை = இழிவு.

# 192.
கொட்டடி = சமையல் அறை.
கொட்டில் = தொழுவம்.

# 193.
கொடிச்சி = குறிஞ்சி நிலப் பெண்.
கொடிஞ்சி = தேர்த் தட்டில் தாமரை வடிவில் உள்ள பற்றுக்கோடு.

# 194.
கொடும்புலி = சிங்கம்.
கொடுவரி = புலி.

# 195.
கொழுநன் = கணவன்.
கொழுந்தன் = கணவனின் தம்பி.
 
# 196.
சகுனம் = அறிகுறி.
சகுணம் = குணங்களோடு கூடிய.

# 197.
சகோத்திரன் = ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவன்.
சகோதரன் = உடன் பிறந்தவன்.

# 198.
சங்கயம் = ஐயப்பாடு.
சங்கமம் = கூடுதல்.

# 199.
சடம் = உயிரும், உணர்ச்சியும் இல்லாத ஒன்று.
சடன் = மூடன்.

# 200.
சதகம் = நூறு பாடல்கள்.
தசகம் = பத்துப் பாடல்கள்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

#81.
கணி = சோதிடன்.
கணி = கணக்கிடுவாய்.

#82.
கதிர் = ஒளிக் கிரணம்.
கதிர் = ஒளிவீசுவாய்.

#83.
கருக்கு = கூர்மை.
கருக்கு = கருகச் செய்வாய்.

#84.
கரை = நீர்நிலையின் எல்லை.
கரை = கரைத்து விடு.

#85.
கலை = பகுதி.
கலை = கலைத்து விடுவாய்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

#86.
கவர் = பிறயும் கிளை.
கவர் = கவர்ந்து செல்லுவாய்.

#87.
கவி = கவிஞன்.
கவி = மூடி வளைத்துக் கொள்ளுவாய்.

#88.
கழல் = சிலம்பு.
கழல் = நெகிழ்ந்து விடு.

#89.
கழற்று = கடுமையான அறிவுரை.
கழற்று = அவிழ்த்துவிடு.

#90.
கழி = கோல்.
கழி = கழித்து விடு.
 
# 201.
சந்தேகம் = ஐயம்.
சந்தேசம் = தூது.

# 202.
சம்புகம் = நரி.
சம்புடம் = சிறு பெட்டி.

# 203.
சரதம் = உண்மை.
சரபம் = சிங்கத்தைக் கொல்லும் வலிமையுடைய எட்டுக்கால் பறவை.

# 204.
சல்லடம் = அரைக்கால் சட்டை.
சல்லடை = சலிக்கும் கருவி.

# 205.
சல்லரி = ஒருவகைப் பறை.
செல்லரி = கரையான் தின்னுதல்.
 
# 206.
சவரி = கவரி மான்.
சவுரி = சனி, யமன், விஷ்ணு, திருடன்.

# 207.
சறுக்கு = வழுக்கு.
சறுக்கை = நீர் மதகு.

# 208.
சரீரம் = உடல்.
சாரீரம் = குரல்.

# 209.
சிம்பு = சிறை.
சிம்புள் = சரபப் பறவை.

# 210.
சிலதி = வேலைக்காரி, தோழி.
சிலந்தி = எட்டுக்கால் பூச்சி.
 
# 211.
சிலிர்சிலிர்தல் = மெய்ப் புளகம் அடைதல்.
சிலுசிலுத்தல் = படபடவென்று பேசுவது.

# 212.
சிவல் = கவுதாரி.
சிவலை = சிவந்தநிறம் கொண்ட.

# 213.
விசிறி = காற்று வீசி.
சிவிறி = நீர் வீசி.

# 214.
சினன் = புத்தன்.
சீனன் = சீன நாட்டினான்.

# 215.
சினைப்பு = கருவுறுதல்.
சினைப்பூ = மரக்கிளையில் மலரும் பூ.
 
# 216.
சீட்டுக்கவி = செய்யுளாக எழுதப்பட்ட கடிதம்.
ஆசுகவி = கேட்டவுடன் கவி பாட வல்லவன்.

# 217.
சீதளம் = குளிர்ச்சி.
சீதனம் = சீர் வரிசை.

# 218.
சீயம் = சிங்கம்
சீரம் = மரவுரி.

# 219.
சுங்கம் = வரி.
சுட்கம் = வறட்சி.

# 220.
சுணக்கம் = தாமதம்.
சுணக்கன் = நாய்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

#91.
களை = அழகு.
களை = சோர்வடை.

#92.
களை = மதுபானம்.
களை = களை எடுப்பாய்.

#93.
களை = புல் பூண்டு.
களை = பிடுங்கி எறிவாய்.

#94.
கறி = இறைச்சி.
கறி = நன்கு கடித்து உண்பாய்.

#95.
கறு = தீராத சினம்.
கறு = கருமையாக ஆக்கு.
 
#96.
கன்று = இளம் விலங்கு.
கன்று = சினம் கொள்ளுவாய்.

#97.
கனல் = நெருப்பு.
கனல் = சினம் கொள்ளுவாய்.

#98.
கனி = பழம்.
கனி = மனம் இளகுவாய்.

#99.
கா = சோலை.
கா = பாதுகாத்து வருவாய்.

#100.
காண் = காட்சி.
காண் = அனுபவத்தால் அறிவாய்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 101.
காய் = மரத்தில் காய்ப்பது.
காய் = உலர்வது.

# 102.
கால் = 1/4 என்னும் பின்னம்.
கால் = தோன்றச் செய்.

# 1o3.
கிடை = இருப்பிடம்.
கிடை = அடையப் பெறு.

# 104.
கிழி = பணமுடிப்பு.
கிழி = துண்டாக்கு.

# 105.
கிளை = மரக் கப்பு.
கிளை = பெருக்கம் அடைவாய்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 106.
கீழ் = கிழக்கு.
கீழ் = கிழித்துவிடு.

# 107.
குடை = கவிகை.
குடை = துளைத்து விடு.

# 108.
குமை = துன்பம்.
குமை = குழப்பம் அடை.

# 109.
குலவு = வளைவு.
குலவு = நெருங்கி உறவாடு.

# 110.
குலை = கொத்து.
குலை = தாறுமாறாக்கி விடு.
 
# 221.
சுயம்பாகி = சமையல் செய்பவன்.
சுயம்பு = தானாகத் தோன்றியது .

# 222.
சுளகு = முறம்.
சுளுக்கு = மூட்டு பிசகு.

# 223.
சூதர் = அரசர் முன் பாடுபவர்.
சூதன் = தேரோட்டி.

# 224.
சூலி = கர்பவதி.
சூலிகை = மும்முனையுடைய இடிதாங்கி.

# 225.
செதில் = மீன் உடல் மீதுள்ளது.
செதிள் = மரப்பட்டை.
 
# 226.
சேணிகன் = நெசவாளி.
சேணியன் = இந்திரன்.

# 227.
சேதனம் = பிளத்தல்.
சேதனன் = அறிவு உடையவன்.

# 228.
சேது = சிவப்பு.
சேதி = செய்தி.

# 229.
சேந்து = கயிற்றை இழு.
சேந்தி = கள்.

# 230.
சேமாரி = எருதுகளுக்கு விதை அடிப்பவன்.
சோமாரி = சோம்பேறி.
 
இரட்டைவேடச் சொற்கள்

# 111.
குழம்பு = உண்ணும் திரவம்.
குழம்பு = மனம் கலங்கு.
# 112.
குழல் = துளை உள்ள ஒரு பொருள்.
குழல் = சுருட்டி முடி.
# 113.
குழை = இலையும், தளிரும்.
குழை = இளம் பதம் ஆக்கு.
# 114.
குறை = குற்றம்.
குறை = சிறிதாக்கி விடு.
# 115.
குன்று = சிறிய மலை
குன்று = நிலை கெடு.
 
Last edited:
இரட்டைவேடச் சொற்கள்

# 116.
கூட்டு = நட்பு.
கூட்டு = இணைத்து விடு.
# 117.
கூடு = பறவைக் கூடு.
கூடு = பொருந்து.
# 118.
கூறு = பிரிவு.
கூறு = சொல்லு.
# 119.
கெடு = தவணை.
கெடு = பழுதாக்கி விடு.
# 120.
கொல் = வருத்தம்.
கொல் = அழித்து விடு.
 
Last edited:
# 231.
சேயன் = தொலைவில் இருப்பவன்.
சேயோன் = முருகக் கடவுள்.

# 232.
சௌடால் = டாம்பீகம்.
சௌடோல் = அம்பாரி.

# 233.
சௌம்யம் = சாந்தம்.
சௌர்யம் = வீரம்.

# 234.
சௌசம் = சுத்தம்.
சௌளம் = குழந்தைக்கு முடி இறக்குதல்.

# 235.
ஞிமிர் = நிமிர்.
ஞிமிறு = தேனீ.
 
# 236.
ஞண்டு = நண்டு.
ஞெண்டு = நண்டு.

# 237.
தட்சணம் = அதே நேரத்தில்.
தட்சிணம் = தெற்கு திசை.

# 238.
தம்பலம் = வெற்றிலை பாக்கு.
தம்பனம் = ஸ்தம்பிக்கச் செய்யும் மந்திர வித்தை.

# 239.
தமர் = சுற்றத்தினர்.
தமரூ = உடுக்கை.

# 240.
தரங்கம் = அலை.
தரங்கிணீ = ஆறு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 121.
கொழு = உலோகக்கோல்.
கொழு = செழிப்புறு.

# 122.
கொழுந்து = இளம் தளிர்.
கொழுந்து = தீயில் காய்ச்சப்படு.

# 123.
கொள் = ஒரு தானியம்.
கொள் = பெற்றுக்கொள்.

# 124.
கோடி = நூறு லக்ஷம்.
கோடி = அலங்காரம் செய்.

# 125.
கோடு = கொம்பு.
கோடு = நெறி தவறு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 126.
கோது = சக்கை.
கோது = முடியைச் சிக்கெடு.

# 127.
கோபி = சினம் கொண்டவன்.
கோபி = கோபம் கொள்வாய்.

# 128.
சகி = தோழி.
சகி = பொறுத்துக்கொள்.

# 129.
சங்கரி = பார்வதி.
சங்கரி = அழித்துவிடு.

# 130.
சடை = கற்றைத் தலைமுடி.
சடை = வளர்ச்சி குன்று.
 
# 241.
தலைப்படு = ஒன்று கூடு.
தலைப்பாடு = அளவளாவு.

# 242.
தவளம் = முல்லை.
கவளம் = ஒரு கைச் சோறு.

# 243.
தற்பரம் = மேம்பட்டது.
தற்பவம் = தமிழில் ஒலி மாறுபட்ட சமஸ்கிருதச் சொல்.

# 244.
தனயன் = மகன்.
தனியன் = தனித்த ஆள்.

# 245.
தாங்கல் = தாங்குதல்.
தாங்கள் = மரியாதையைக் குறிக்கும் முன்னிலை பன்மை.

 
# 246.
தாண்டகம் = ஒரு வகைச் செய்யுள்.
தாண்டவம் = ஒருவகைக் கூத்து.

# 247.
தாணா = காவல் நிலையம்.
தாணு = சிவபெருமான்.

# 248.
தாமசம் = தமோ குணம்.
தாமதம் = நேரம் கழித்து.

# 249.
தாழ்வடம் = கழுத்தணி.
தாழ்வாரம் = தாழ்ந்த கூரை.

# 250.
திக்குதல் = திக்குவாய்.
திட்குதல் = மனம் குலைதல்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 131.
சதி = கற்புடைய மனைவி.
சதி = வஞ்சனை செய்.

# 132.
சந்தி = இணைதல்.
சந்தி = எதிர்ப்படு.

# 133.
சரி = வழி.
சரி = கீழே விழு.

# 134.
சாதி = வர்ணப் பிரிவு.
சாதி = நிறைவேற்று.

# 135.
சாம்பு = பறை.
சாம்பு = வாடிப்போ.
 
Status
Not open for further replies.
Back
Top