• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.
இரட்டைவேடச் சொற்கள்.

#21.
அவை = கூட்டம்.
அவை = தானியம் குற்று.

#22
அழல் = நெருப்பு.
அழல் = பிரகாசி.

#23.
அழி = கேடு.
அழி = சிதைத்துவிடு.

#24.
அழுங்கு = எறும்பு தின்னி.
அழுங்கு = சோம்பியிரு.

#25.
அள்ளு = காது, பற்றிரும்பு (iron clamp)
அள்ளு = உள்ளங்கையால் முகர்ந்து எடு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

#26.
அளி = அன்பு.
அளி = கொடு.

#27.
அளை = தயிர்.
அளை = துழாவு.

#28.
அற்று = அத்தன்மையது.
அற்று = இல்லாமல் போனது.

#29.
அனல் = கனல்.
அனல் = வெப்பம் வீசு.

#30.
அனுபவி = ஆத்மஞானி.
அனுபவி = இன்புற்றிரு.
 
#141.
குஞ்சரம் = ஆண் யானை.
குஞ்சரி = பெண் யானை.

#142.
குஞ்சி = குடிமி.
குஞ்சு = சிறியது.

#143.
குட்டன் = சிறு பிள்ளை.
குட்டான் = ஓலைப் பெட்டி.

#144.
குடகு = ஒரு நாடு.
குடக்கு = மேற்கு திசை.

#145.
குடந்தை = வளைவு.
குடந்தம் = கை கூப்பி வணங்குவது.
 
#146.
குடம்பை = முட்டை.
குதம்பை = காதணி.
குதம்பாய் = பெண்ணே.

#147.
குடம் = நீர் பிடிக்கும் பாத்திரம்.
கூடம் = பெரிய அறை.

#148
குடிசை = சிறு வீடு.
குடிஞை = நதி.

#149.
குடில் = குடிசை.
குடிலம் = வஞ்சகம்.

#150.
குடுக்கை = தேங்காய் ஓட்டுப் பாத்திரம்.
குடுவை = வாய் குறுகிய பத்திரம்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

#31.
ஆட்டு = கூத்து.
ஆட்டு = அதிரச் செய்.

#32.
ஆடு = ஒரு மிருகம்
ஆடு = சஞ்சரி.

#33.
ஆவலி = வரிசை.
ஆவலி = அழுது புலம்பு.

#34.
ஆள் = ஆண் மகன்.
ஆள் = அரசு செய்.

#35.
இசை = சங்கீதம்.
இசை = பாடு /
வாசி.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 36.
இடுக்கு = மூலை.
இடுக்கு = நெருக்கி அழுத்து.

# 37.
இடை = இடுப்பு.
இடை = பின் வாங்கு.

# 38.
இணை = ஜோடி.
இணை = பொருத்திவிடு.

#39.
இமை = மயில்.
இமை = கண்களைச் சிமிட்டு.

#40.
இரு = பெரிய, கரிய.
இரு = உட்கார்.
 
# 151.
குண்டம் = கற்பிழந்த பெண்.
குண்டன் = கள்ளக் காதலில் பிறந்தவன்.

# 152.
குணி = குணம் உடையவன்.
குணில் = குறுந்தடி.

#153.
குத்துக்கால் = தாங்கும் தூண்.
குத்துக் கோல் = வேலாயுதம்.

#154.
குதட்டு = குழறிப் பேசு.
குதப்பு = மென்று தின்.

#155.
குதிரி = யாராலும் அடக்க முடியாத பெண்.
குதிரை = பரி.
 
# 156.
குதலை = மழலைச் சொல்.
மதலை = சிறு குழந்தை.

#157.
குதிரைவலி = பிரசவ வலி.
குதிரைவாலி = ஒரு வகை தானியம்.

#158.
குந்தம் = குதிரை.
குந்தளம் = பெண்ணின் தலைமுடி.

#159.
குந்தாணி = பெரிய உரல்.
குந்தாலி = தோண்ட உதவும் ஒரு கருவி.

#160.
குப்பல் = கு
வியல்.
குப்பம் = செம்படவர்களின் ஒரு கிராமம்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

#41.
இரை = உணவு.
இரை = ஓசை உண்டாக்கு.

#42.
இலகு = பளுவின்மை.
இலகு = பளபளப்பாக இரு.

#43.
இவர் = மரியாதைக்கு உரியவர்.
இவர் = படர்ந்து முன்னேறு.

#44.
இழை = ஆபரணம்.
இழை = மாவாக ஆக்கு.

#45.
இளி = குற்றம்.
இளி = ஏளனம் செய்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

#46.
இளை = காவற்காடு.
இளை = மெலிந்து போ.

#47.
இறை = கடவுள்.
இறை = பாய்ச்சு.

#48.
ஈண்டு = இந்த இடத்தில்.
ஈண்டு = கூட்டமாகச் சேர்.

# 49.
உட்கார் = பகைவர்.
உட்கார் = அமர்ந்திரு.

# 50.
உடல் = உடம்பு.
உடல் = சினம் கொள்.
 
# 161.
கும்பா = வாய் அகன்ற பாத்திரம்.
கும்பி = வயிறு.
கும்பு = திரள், கூட்டம்.

#162.
கும்மாயம் = குழையச் சமைத்த பருப்பு.
கும்மாளம் = குதித்து ஆட்டம் போடுவது.
குப்பாயம் = சட்டை.

#163.
கும்மு = உரலில் மெல்லக் குற்றுவது.
கும்மி = கை கொட்டி ஆடுதல்.

#164.
குருத்து = தாவரத்தின் இளம் பகுதி.
குருந்து = குழந்தை, வெண் குருத்து.

#165.
குருள் = மகளிர் கூந்தல்.
குருளை = இளம் விலங்கு.
 
#166.
குரோசம் = இரண்டரை மைல் தொலைவு.
குரோதம் = கோபம்.

#167.
குலவு = விளங்கு.
குலாவு = கொஞ்சு.

#168.
குலிகம் = சாதிலிங்கம், சிவப்பு.
குலிசம் = வச்சிராயுதம்.

#169.
குவவு = குவிதல் செய்.
குலவு = நாட்டியம் பயில்.

#170.
குவி = கூம்பு.
குவை = குவியல்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 51.
உடு = நட்சத்திரம்.
உடு = ஆடை அணிந்து கொள்.

# 52.
உடை = ஆடை.
உடை = தகர்த்து எறி.

# 53.
உப்பு = உணவில் இடுவது.
உப்பு = பொங்கிப் பருத்து விடு.

# 54.
உமி = தானியத்தின் மேலுறை.
உமி = பொங்கிக் கொப்பளி.

# 55.
உரி = தோல்.
உரி = களைந்து விடு .
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 56.
உருமு = இடி, மின்னல்.
உருமு = பேரொலி செய்.

# 57.
உரை = தேய்வு.
உரை = சொல்லு.

# 58.
உழை = இடம்.
உழை = வருந்தி முயற்சி செய்.

# 59.
உளை = பிடரி மயிர்.
உளை = மனம் வருந்து.

# 60.
உறை = பெருமை.
உறை = திடப் பொருளாக இறுகு.
 
#171.
குழகன் = இளைஞன்
அழகன் = வடிவுடையவன்.

#172.
குழப்பு = கலக்கு.
குழம்பு = கலங்கு.

#173.
குழவி = கைக் குழந்தை.
குழவு = இளமை.

#174.
குழிசி = பானை.
குழிவு = குழிந்து இருத்தல்.

#175.
குழுமு = கூட்டம் கூடு.
குழுஉ = கூட்டம்.
 
#176.
குறிச்சி = குறிஞ்சி நில ஊர்.
குறிஞ்சி = மலையும் மலை சார்ந்த இடமும்.

#177.
குறுக்கு = குறையச் செய்.
குறுகு = உயரம் குறைந்து விடு.

#178.
குருணீ = ஒரு மரக்கால் தானியம்.
குருணை = உடைந்த தானியம்.

#179.
கூடகாரம் = மேன்மாடம்.
கூடாரம் = துகில் வீடு.

#180.
கூத்தை = நடனத்தை.
கூதை = காற்று.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 61.
ஊகம் = பெண் குரங்கு.
ஊகம் = யூகித்து அறிவது.

# 62.
ஊடு = இடைப் பட்டது.
ஊடு = பிணங்கு.

# 63.
ஊர் = நகரம்.
ஊர் = ஊர்ந்து நகரு.

# 64.
ஊறு = தொடு உணர்ச்சி.
ஊறு = சுரப்பது.

# 65.
எட்டு = ஒரு எண்.
எட்டு = நெருங்கி அடைவாய்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 66.
எதிர் = முன்னே.
எதிர் = நிகழ்த்து.

# 67.
எரி = நெருப்பு.
எரி = ஒளிவிடு.

# 68.
எருக்கு = ஒரு செடி.
எருக்கு = கொல்லு.

# 69.
ஏவு = அம்பு.
ஏவு = தூண்டிவிடு.

# 70.
ஏறு = ஆண் விலங்கு.
ஏறு = மேலே செல்.
 
# 181.
கூழன் = தெளிந்த அறிவு இல்லாதவன்.
கூளன் = பயனற்றவன்.

# 182.
கெச்சை = பாதசரம்.
கச்சை = மார்பணி.

# 183.
கெடி = மலைக்கோட்டை.
கொடி = படரும் கொடி.

# 184.
கெத்து = பிள.
கெந்து = தத்து.

# 185.
கேசரம் = மகரந்தம்.
கேசரி = சிங்கம்.
 
# 186.
கைதவம் = பொய்.
கைதவன் = வஞ்சகன்.

# 187.
கைதை = தாழை.
கைது = சிறைக்காவலில் இருப்பது.

# 188.
கைமாற்று = சிறு கடன்.
கைமாறு = பிரதி உபகாரம்.

# 189.
கைலி = இடுப்பில் அணியும் ஆடை.
கைலை = கைலாசம்.

# 190.
கொங்கணி = கொங்கண நாட்டவன்.
கொங்காணி = மழையைத் தடுக்கும் பனைஓலைக் குடை .
 
இரட்டைவேடச் சொற்கள்.


# 64.
ஊறு = தொடு உணர்ச்சி.
ஊறு = சுரப்பது.
ஊறு என்பதற்குத் தீங்கு என்று ஒரு பொருளும்,

ஊறு என்பதற்கு ஊறுதல் (ஊறுகாய் ஊறுவது போல) என்று ஒரு பொருளும் உண்டே!
 
There are more than one meaning for each word.

I am just selecting the ones who show the maximum contrast in their meanings.

You are welcome to add more differences :)
 
Actually there are so many meanings for each word and we hardly use them in

more than one context- be it Tamil or English or any other language. :decision:

You must have seen the long chains of words in the 'A to Ksha' in the Sanskrit

dictionary. The more words we learn and remember the better we will be able to

write our poems and posts. :typing:

The 'sea of words' is indeed unfathomable.

On the one hand people who know something-get awed at the endless

store of words and choice of words! :scared:

On the other hand persons who have stumbled to write three poems(?!)

with every possible mistake contemplate on publishing a book of

poems!

World is such!

With the help of a chivalrous sponsor or with enough bank balance,

the book may even appear!! But have it from me it will NEVER sell!

It can be presented along with thamboolm to the ladies or to kids

attending birthday parties.
:high5:
 
நலம் தரும்!

இந்தக் குறளை என்றும் நினைவில் கொள்ளுதல் நலம் தரும்!

'வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து!' குறள் எண்: 250

:couch2:
 
இப்போதைய பிரச்சனையே அது தானே! :blabla:

அப்பப்பா! வலியார் யார்? மெலியார் யார்?:decision:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top