மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.
# 376.
பொள்ளல் = துளைத்தல்.
துள்ளல் = தாவுதல்.

# 377.
அரையன் = அரசன்
பொறையன் = சுமப்பவன்.

# 378.
போக்கிரி = துஷ்டன்.
போக்கிலி = கதியற்றவன்.

# 379.
போதகம் = இளமை.
மோதகம் = கொழுக்கட்டை.

# 380.
மகார் = மகன்கள்.
மகால் = அரண்மனை.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 261.
மாயோன் = விஷ்ணு.
மாயோள் = வஞ்சகி.

# 262.
மானி = கௌரவம் உள்ளவர்.
மானி = கர்வம் கொள்.

# 263.
மிகு = பெரிய.
மிகு = அதிகம் ஆக்கு.

# 264.
மினுக்கு = பகட்டு.
மினுக்கு = பளபளப்பாக்கு.

# 265.
முடுக்கு = முளை.
முடுக்கு = அவசரப்படுத்து.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 266.
முடுகு = துர் நாற்றம்.
முடுகு = விரைந்து செல்.

# 267.
முடை = ஓலைக்கூடை.
முடை = பின்னுவாய்.

# 268.
முந்து = முற்காலம்.
முந்து = முன்னே செல்.

# 269.
முனி = வில்.
முனி = வெறுப்பாய்.

# 270.
மூடு = வேர்.
மூடு = மூடிவை.
 
# 381.
மஞ்சு = பனி, மேகம்.
மஞ்சை = மயில்.

# 382.
மண்டலம் = வட்டம்.
மண்டிலம் = நாட்டின் பெரும் பரப்பு.

# 383.
மண்டு = நீராடு.
பண்டு = நெடும் காலத்துக்கு முன்பு.

# 384.
மத்தகசம் = மத யானை.
மத்தகம் =யானையி
ன் நெற்றி.

# 385.
மதனி = அண்ணன் மனைவி.
மதானி = ஆபரணம்.
 
# 386.
மறுதலை = எதிர்க் கட்சி.
மறுதலி = மாறுபாடு.

# 387.
மன்றாடி = சிவன்.
மன்றாடு = வழக்காடு.

# 388.
மாகாணம் = நாட்டின் பகுதி.
மாகாணி = 1/16 என்னும் பின்னம்.

# 389.
ஆச்சரியம் = அதிசயம்.
மாச்சரியம் = பொறமை.

# 390.
மாசனம் = மக்கள் தொகுதி.
மாசுணம் = பெரும் பாம்பு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 271.
மெல் = மிருதுவான.
மெல் = வாயினால் குதட்டு.

# 272.
மெழுகு = தேனடையில் கிடைப்பது.
மெழுகு = சுத்தம் செய்.

# 273.
மேவு = ஆசை.
மேவு = அடைவாய்.

# 274.
மை = அஞ்சனம்.
மை = ஒளி மழுங்குவாய்.

# 275.
மொத்து = அறிவற்றது.
மொத்து = நன்றாக அடி.
 
# 276.
மொழி = பாஷை.
மொழி = சொல்லு.

# 277.
யூகி = புத்திசாலி.
யூகி = அனுமானம் செய்.

# 278.
வசி = கழுக்கோல்.
வசி = வாசம் செய்.

# 279.
வடு = பிஞ்சு.
வடு = வெளிப்படுத்து.

# 280.
வணர் = கட்டட வளைவு.
வணர் = சுருளாக்கு.
 
# 391.
மாதங்கம் = யானை.
மாதங்கி = பார்வதி.

# 392.
மாதரி = காளி.
மாதவி = துளசிச் செடி.

# 393.
மாயம் = மாயை.
மாயன் = விஷ்ணு.

# 394.
மாயோள் = வஞ்சகன்.
மாயோன் = விஷ்ணு.

# 395.
மாழ்கு = மயங்கு.
மூழ்கு = அமிழ்.
 
# 396.
மிடியன் = வறியவன்.
மிண்டன் = அறிவிலி.

# 397.
மிளை = காவற்காடு.
மிறை = அச்சம்.

# 398.
முகரி = மல்லிகை.
முகாரி = ஒரு ராகம்.

# 399.
முடிப்பு = கட்டு.
முடிபு = முடிவு.

# 400.
முதிரை = ஒரு தானியம்.
முதிரம் = மேகம்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 281.
வத்தி = ஊதுவத்தி.
வத்தி = அதிகமாக்கு.

# 282.
வதி = சேறு.
வதி = கொல்லு.

# 283.
வந்தி = மங்கலப் பாடகர்.
வந்தி = வணங்கு.

# 284.
வரை = மூங்கில்.
வரை = எழுதுவாய் , தீட்டுவாய்.

# 285.
வலி = வலிமை.
வலி = திண்ணியதாக இரு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 286.
வழி = மார்க்கம்.
வழி = திரட்டி எடு.

# 287.
வளர் = இளம் கொம்பு.
வளர் = பெரிதாகு.

# 288.
வளை = வட்டம், சங்கு.
வளை = வளைதல் செய்.

# 289.
வாசம் = நறுமணம்.
வாசம் = வசித்தல்.

# 290.
வாசி = இயல்பு.
வாசி = படி, இசைக்கருவியை இசைப்பாய்.
 
# 391.
மாதங்கம் = யானை.
மாதங்கி = பார்வதி.

# 392.
மாதரி = காளி.
மாதவி = துளசிச் செடி.

# 393.
மாயம் = மாயை.
மாயன் = விஷ்ணு.

# 394.
மாயோள் = வஞ்சகன்.
மாயோன் = விஷ்ணு.

# 395.
மாழ்கு = மயங்கு.
மூழ்கு = அமிழ்.
 
# 396.
மிடியன் = வறியவன்.
மிண்டன் = அறிவிலி.

# 397.
மிளை = காவற்காடு.
மிறை = அச்சம்.

# 398.
முகரி = மல்லிகை.
முகாரி = ஒரு ராகம்.

# 399.
முடிப்பு = கட்டு.
முடிபு = முடிவு.

# 400.
முதிரை = ஒரு தானியம்.
முதிரம் = மேகம்.
 
# 401.
முயற்கோடு = இல்லாத பொருள்.
முயற்கூடு = சந்திரன்.

# 402.
மூர்ச்சி = நினைவு தவறு.
மூர்த்தி = வடிவம், உடல், கடவுள்.

# 403.
மெல்லி = பெண்.
மெலி = இளைத்துப்போ.

# 404.
மேலுக்கு = மேற்புறமாக.
மேலைக்கு = இனிமேல்.

# 405.
மேலார் = உயர்ந்தவர்.
மேவார் = பகைவர்.
 
# 406.
மொத்தை = உருண்டை.
மோத்தை = மடல் விரியாத வாழைப்பூ.

# 407.
மௌலி = சடைமுடி.
மௌனி = மௌன விரதம் பூண்டவன்.

# 408.
யூகம் = உத்தேசம்.
யூபம் = வேள்வி.

# 409.
வட்கர் = குற்றம்.
வட்கார் = பகைவர்.

# 410.
வடமன் = வடநாட்டவன்.
வடமீன் = அருந்ததி நட்சத்திரம்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 291.
வாதி = வக்கீல்.
வாதி = வாதம் செய் .

# 292.
வாது = தர்க்கம்.
வாது = அறுத்தல் செய்.

# 293.
விடி = விடியற்காலை
விடி = உதயமாகு.

# 294.
விதும்பு = நடுக்கம்.
விதும்பு = ஆசைப்படு.

# 295.
விதை = வித்து.
விதை = பரப்பு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 296.
வியர் = களைப்பு.
வியர் = மனம் புழுங்கு.

# 297.
விரி = திரைச் சீலை.
விரி = விளக்கி உரை.

# 298.
விரை = வாசனை.
விரை = வேகம் ஆக்கு.

# 299.
வில் = போர்க்கருவி.
வில் = கிரயம் செய்.

# 300 .
விழு = சிறந்த.
விழு = கீழே சாய்.
 

# 411.
வண்டர் = மங்கலப் பாடகர்.
வண்டல் = நீரால் ஒதுக்கப்படும் மண்.

# 412.
வத்தல் = சிறிய ஓடம்.
வற்றல் = உலர்ந்த உணவு.

# 413.
வயல் = கழனி.
வயலை = பசலைக் கொடி.

# 414.
வயர் = கூர்மை.
வயிர் = சினம் கொள்.

# 415.
வர்த்தனம் = பெருக்குதல்.
வர்த்தகம் = வியாபாரம்.
 
# 416.
வர்மன் = க்ஷத்திரியர்களின் ஒரு பட்டப் பெயர்.
வர்மம் = உட்பகை.

# 417.
வல்லே = விரைவாக.
வல்லை = வலிமை.

# 418.
வழிபடு = பின்பற்று, தொழு.
வழிப்படு = பயணம் செய்.

# 419.
வழுத்து = வாழ்த்து.
வழுது = பொய்.

# 420.
மர்க்கடம் = குரங்கு.
வற்கடம் = வறட்சி.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 301.
விளக்கு = தீபம்.
விளக்கு = துலக்கு, தெளிவாக்கு.

# 302.
விளி = ஓசை.
விளி = அழை.

# 303.
விளை = அனுபவம்.
விளை = உண்டாக்கு.

# 304.
விறல் = வெற்றி.
விறல் = சினத்தோடு பாய்.

# 305.
வீதி = தெரு.
வீதி = பங்கிடு.
 
# 306.
வீழ் = விழுது.
வீழ் = கீழே விழு.

# 307.
வீறு = தனிச் சிறப்பு.
வீறு = மேம்படு.

# 308.
வெளி = மைதானம்.
வெளி = வெளிப்படுத்து.

# 309.
வேய் = மூங்கில்.
வேய் = மூடு.

# 310.
வை = கூர்மை.
வை = நிந்தி.
 
# 421.
வனசம் = தாமரை.
வனசை = இலக்குமி.

# 422.
வாக்கு சுத்தம் = உறுதிமொழியை நிறைவேற்றுவது.
வாக்கு தத்தம் = உறுதிமொழியை அளித்தல்.

# 423.
வான்மிகம் = புற்று.
வான்மீகம் = ராமாயணம்.

# 424.
விஞ்சையர் = வித்தியாதரர்.
விஞ்சையன் = புலவன்.

# 425,
விட்டேறி = தொடர்பற்றவர்.
விட்டேறு = எறிகோல்
 
# 426.
விடங்கர் = முதலை.
விடங்கன் = அழகிய வடிவினன்.

# 427.
வினோதம் = விளையாட்டு.
வினோதன் = பொழுது போக்குபவன்.

# 428.
விமரிசம் = ஆராய்ச்சி.
விமரிசை =ஆடம்பரம்.

# 429.
வியல் = பெருமை.
வியன் = ஆகாசம்.

# 430.
விருது = பட்டம்.
விருதா = வீணாக.
 
# 431.
உற்பத்தி = உண்டாக்குதல்.
விற்பத்தி = கல்வியில் திறமை.

# 432. விசனம் = கவலை.
விசனம் = விசிறி.

# 433.
வெவ்விது = சூடான.
வெவ்வேறு = தனித்தனி.

Dear friends!

At last this long thread is coming to an end.

I never guessed it would turn out to be so long- when I started the thread.

But as time went on more and more words were found-which will fit very well in

this thread!

Thank you for your continued support.

I hope you found this thread as useful as I did!

with warm regards,
Visalakshi Ramani. :pray2:

 
Status
Not open for further replies.
Back
Top