மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.
# 311.
நேமம் = நியமனம்.
நேயம் = அன்பு.

# 312.
நேசம் = அன்பு.
நேயம் = அன்பு.

# 313.
நேர்ச்சி = வேண்டுதல்.
தேர்ச்சி = வெற்றி பெறுதல்.

# 314.
நேர்த்தி = சிறப்பு.
நேர்ச்சி = சபதம்.

# 315.
நேர்மை = செம்மை.
நேர்மை = எளிமை.
 
# 316.
நோக்கம் = குறிக்கோள்.
நோட்டம் = கண்காணித்தல்.

# 317.
நோப்பாளம் = சினம் .
நேப்பாளம் = ஒரு நாடு.

# 318.
நோல் = பொறுத்திரு.
நோலை = எள்ளுருண்டை.

# 319.
நோற்பு = தவம் செய்தல்.
நோன்பு = விரதம் இருத்தல்.

# 320.
நோன்பி = விரதம் இருப்பவன்.
நோன்பு = இருக்கும் விரதம்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 201.
துப்பு = வலிமை.
துப்பு = உமிழ்.

# 202.
துமி = மழைத்துளி.
துமி = வெட்டிவிடு.

# 203.
துய் = உணவு.
துய் = நுகர்வாய்.

# 204.
துவை = ஒலி.
துவை = துணிகளை சுத்தம் செய்.

# 205.
துளி = சிறிதளவு.
துளி = சொட்டாக விடு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 206.
துளை = துவாரம்.
துளை = நீரில் விளையாடு.

# 207.
தூக்கு = தொங்கும் பொருள்.
தூக்கு = உயரத் தூக்கு.

# 208.
தூர் = அடிப்பகுதி.
தூர் = நிரம்பு.

# 209.
தூறு = புதர்.
தூறு = மழைத் தூவு.

# 210.
தேக்கு = ஒரு மரம்.
தேக்கு = ஓட்டத்தைத் தடை செய்.
 

# 321.
பகடி = பரிகாசம்.
பகடு = பெருமை.

# 322.
பகடை = சூதாட்டத்தில் தாயம்.
பகடு = பெருமை.

# 323.
பகர் = சொல்.
பகிர் = பங்கிடு.

# 324.
பகர் = சொல்.
பகல் = பங்கிடுதல்.

# 325.
பஞ்சமம் = ஐந்தாவது ஸ்வரம்.
பஞ்சமர் = ஐந்தாவது
வர்ணத்தார்.
 
# 326.
பஞ்சவன் = பாண்டிய அரசன்.
பஞ்சவர் = பாண்டவர்.

# 327.
பஞ்சு = பருத்தி.
பஞ்சை = ஏழை.

# 328.
பட்சபாதம் = ஒருதலைச் சார்பு.
ட்சவாதம் = பக்கவாதம்.

# 329.
பட்டன் = புலவன்.
பட்டர் = அந்தணர்.

# 330.
படல் = மறைப்புத் தட்டி.
படலை = பரந்த இடம்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 211.
தேர் = ரதம்.
தேர் = ஆராய்வாய்.

# 212.
தை = ஒரு மாதம்.
தை =தையல் வேலை செய் .

# 213.
தொலை = வெகு தூரம்.
தொலை = காணாமல் போக்கிவிடு.

# 214.
தொழு = மாட்டுக் கொட்டகை.
தொழு = வணங்கு.

# 215.
நக்கு = நிர்வாணம்.
நக்கு = நாவினால் தடவு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 216.
நகர் = நகரம்.
நகர் = நகர்ந்து செல்.

# 217.
நகை = அணிகலன்.
நகை = சிரி.

# 218.
நச்சு = ஆசை.
நச்சு = தொந்திரவு செய்.

# 219.
நசை = ஆசை.
நசை = விரும்புவாய்.

# 220.
நடி = நாட்டியப் பெண்
நடி = பாசாங்கு செய்.
 
# 331 .
படுகை = நீர் நிலை.
படுக்கை = பாயும், தலையணையும்.

# 332 .
படைக்கலம் = ஆயுதம்.
படைமடம் = அறப் போரிலிருந்து வழுவுதல்.

# 333.
படைவீடு = பாசறை.
படையெடு = சேனையுடன் செல்.

# 334.
பண்பு = குணம்.
பண்பி = குணத்தை உடையவன்.

# 335.
பதாகை = கொடி.
பதாகினி = சேனை.
 

# 336.
பந்தகம் = கட்டு.
பந்தயம் = போட்டி.

# 337.
பப்பாதி = இரு சம பங்கு.
பப்பாளி = ஒரு சிறு மரம்.

# 338.
பரதர் = கூத்தர்.
பரதவர் = நெய்தல்நிலமக்கள் .

# 339.
பரதவி = வருந்து.
பரிதவி = வருந்து.

# 340.
பகிரங்கம் = வெளிப்படை.
பகிரண்டம் = சிருஷ்டியில் வெளி இடம்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 221.
நனை = பூ அரும்பு.
நனை = ஈரம் ஆக்கு.

# 222.
நாடு = தேசம்.
நாடு = தேடிச்செல்.

# 223.
நால் = நான்கு.
நால் = தொங்கு.

# 224.
நாறு = முளை.
நாறு = மணம் வீசு.

# 225.
நிரப்பு = நிறைவு.
நிரப்பு = முடிவுறச்செய்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 226.
நிரை = வரிசை.
நிரை = நிரப்பு.

# 227.
நிலவு = நிலா.
நிலவு = தங்கியிரு.

# 228.
நிலை = இயல்பு.
நிலை = உறுதியாக நில்.

# 229.
நிறை = மேன்மை
நிறை = நிரப்பு.

# 230.
நுனி = முனை.
நுனி = கூராக்கு.
 
# 341.
பங்கம் = குற்றம்.
பக்கம் =சமீபம்.

# 342.
பங்கயம் = தாமரை.
பங்கம் = உடைத்தல், கெடுத்தல்.

# 343.
பரதேசம் = அயல் நாடு.
பரதேசி = ஆண்டி.

# 344.
பரப்பு = பரவச் செய்.
பரம்பு = பரவிய நிலம்.

# 345.
பரவை = கடல், ஆடல்.
குரவை = கடல், கூத்து.
 
# 346.
பரவு = பரந்திடு.
பராவு = வணங்கு, தொழு.

# 347.
பரிதாபம் = இரக்கம்.
பரிதானம் = லஞ்சம்.

# 348.
பருதி = சக்கரம்.
பருத்தி = பஞ்சு.

# 349.
பவம் = பிறப்பு.
பவ்வம் = மரக்கணு .

# 350.
பரப்பு = பரவச் செய்.
பறப்பு = பறத்தல்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 231.
நூக்கு = ஒரு மரம்.
நூக்கு = ஊசலாட்டு .

# 232.
நூல் = புத்தகம்.
நூல் = நூல் நூற்பாய்.

# 233.
நூறு = ஒரு எண்.
நூறு = பொடியாக்கு.

# 234.
நெக்கு = நெகிழ்ச்சி.
நெக்கு = நெம்புகோலால் உயர்த்து.

# 235.
நெய் = உருக்கிய வெண்ணை.
நெய் = நெசவு செய்.
 
# 236.
நெளி = ஒரு விரல் அணி .
நெளி = வளைந்து நகர்ந்து செல்.

# 237.
நெறி = வளைவு.
நெறி = கையால் அழுத்து.

# 238.
நேர் = நல்லொழுக்கம்.
நேர் = பொருந்து.

# 239.
நொடி = ஒரு வினாடி.
நொடி = விரல்களைச் சொடுக்கு.

# 240.
நோக்கு = பார்வை.
நோக்கு = கண்களால் பார்.
 
# 351.
பாசடை = பசிய இலை.
பாசறை = படைகள் தாங்கும் இடம்.

# 352.
பாண்டரங்கன் = சிவன்.
பாண்டுரங்கன் = பெருமாள்.

# 353.
பாண்டல் = பூஞ்சணம் பிடித்தல்.
பாண்டில் = வட்டம், கிண்ணம்.

# 354.
காந்தள் = ஒரு அழகிய மலர்.
பாந்தள் = பாம்பு.

# 355.
பாறை = கல்.
பாரை = கடப்பாரை.
 
# 356.
பானல் = வயல்.
பானாள் = நள்ளிரவு.

# 357.
பிச்சம் = இறகு, குடுமி.
பிச்சன் = பைத்தியம்.

# 358.
பிசாசு = பேய்.
பிசாத்து = அற்பம்.

# 359.
பிசி = பொய்.
பிசை = அழுத்திக் கசக்கு.

# 360.
பிரதாபம் = புகழ்.
பிரதானம் = முதன்மை.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 241.
பசை = பிசின்.
பசை = நடப்புக் கொள்வாய்.

# 242.
படர் = வருத்தம்.
படர் = கிளை விட்டுப் பரவு.

# 243.
படி = ஒரு முகத்தல் அளவு.
படி = கற்றுக்கொள்.

# 244.
படை = சேனை.
படை = நிவேதனம் செய்.

# 245.
பணி = செயல்.
பணி = அடங்கியிரு.
 
# 246.
பனை = பருமை.
பனை = பருமனாக இரு.

# 247.
பதி = கோவில்.
பதி = அழுத்து.

# 248.
பந்தி = வரிசை.
பந்தி = இணைத்து விடு.

# 249.
பயிர் = செடி கொடிகள்.
பயிர் = விலங்கு போல ஒலி எழுப்பு.

# 250.
பரப்பு = இட அளவு.
பரப்பு = பரவச் செய்.
 
# 361.
பிரதேசம் = இடம்.
பிரதோஷம் = சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் பின்னுமான
மூன்றே முக்கால் நாழி.

# 362.
பிரமாணம் = அளவு.
பிரமாதம் = அஜாக்கிரதை.

# 363.
பாட்டன் = தாத்தா.
பீட்டன் = கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பேரன்.

# 364.
புகர் = கபில நிறம்.
புகல் =சொல்.

# 365.
புகா = உணவு.
புகார் = முறையீடு.
 
# 366.
அடவி = காடு.
புடவி = பூமி.

# 367.
புற்புதம் = நீர்க்குமிழி.
அற்புதம் = அதிசயம்.

# 368.
பூஜ்ஜியம் = ' 0 ' / ஒன்றும் இல்லாதது.
பூஜ்ஜியன் = மதிக்கத் தகுந்தவன்.

# 369.
பூட்டன் = கொள்ளுத் தாத்தா.
பூட்டி = கொள்ளுப் பாட்டி.

# 370.
பெட்ப = மிகவும்.
பெட்பு = விருப்பம்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 251.
பரி = குதிரை.
பரி = ஆசைப்படு.

# 252.
பரு = கட்டி.
பரு = பெரிதாக ஆகு.

# 253.
பாணி = காலம்.
பாணி = தாமதி.

# 254.
பாவி = தீயவன்.
பாவி = பாவனை செய்.

# 255.
பாவு = இரண்டு பலம் எடை.
பாவு = பரவு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 256.
மடங்கு = அளவு.
மடங்கு = வளைந்து மடங்கு.

# 257.
மண்டலி = விஷப்பாம்பு.
மண்டலி = வளைதல் செய்.

# 258.
மண்டு = செறிவு.
மண்டு = நெருக்கு.

# 259.
மந்தி = பெண் குரங்கு.
மந்தி = தாமதி.

# 260.
மாய் = நரி, ஆச்சா மரம்.
மாய் = மறைந்து போ.
 
# 371.
பெற்றி = இயல்பு, தன்மை.
பெற்றிமை = பெருமை.

# 372.
பேஎம் = பயம்.
பேகம் = தவளை.

# 373.
பைரவி = துர்க்கை .
பைராகி = வட இந்தியத் துறவி.

# 374.
பொக்கை = குற்றம்.
பொக்கணம் = துணிப்பை.

# 375.
வெல்லம் = கரும்புச் சக்கரைக் கட்டி.
பொல்லம் = தைத்தல்.
 
Status
Not open for further replies.
Back
Top