அமாவாசை திதி பற்றி சில சந்தேகங்கள்....

நமஸ்காரம் ,
அமாவாசை திதி பற்றி சில சந்தேகங்கள் உள்ளன, தெரிந்தவர்கள் மற்றும் பெரியோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க விழைகிறேன்.

1) தர்ப்பணம் இல்லாதவர்கள் , தலைக்கு தண்ணீர் விட்டு ஸ்நானம் செய்யலாமா? குறிப்பாக கல்யாணம் ஆன ஆண்கள் .

2) தர்ப்பணம் செய்வதற்குமுன் அகத்தின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாமா?
 
வீட்டில் தகப்பனார் இருந்தால் அவருடைய குமாறார்கள் தலைக்கு தண்ணீர் விட்டு ஸ்நானம் செய்யக்கூடாது .

தர்ப்பணம் செய்வதற்குமுன் அகத்தின் பூஜை அறையில் விளக்கு ஏற்றகூடாது
 
வீட்டில் தகப்பனார் இருந்தால் அவருடைய குமாரர்கள் தலைக்கு தண்ணிர் விட்டு ஸ்நானம் செய்ய வேண்டும். கல்யாணம் ஆனவர்கள் பஞ்சகச்சம் கட்டிகொண்டு ஸந்தியா வந்தனம் செய்ய வேண்டும். ப்ராதஹ் ஸ்நானம் காலை 5 மணிக்கு செய்ய வேண்டும். 10 மணிக்கு மேல் மாத்யானிக ஸ்னானம் செய்ய வேன்டும். தினமும். ஆனால் தற்காலத்தில் இது முடியாததால் ஒரு வேளை ஸ்நானம் செய்கிறோம்.

தர்ப்பணம்செய்து முடித்த பின்பு தான் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். பஞ்சாயத்ன பூஜை செய்ய வேண்டும்.
 
Back
Top