மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.
இரட்டைவேடச் சொற்கள்.

# 136.
சிக்கு = சிக்கல்.
சிக்கு = அகப்படு.

# 137.
சிதை = ஈம விறகு.
சிதை = அழித்து விடு.

# 138 .
சிந்து = ஒருவகைப் பாடல்.
சிந்து = சிதறிவிடு.

# 139.
சிமிழ் = செப்பு.
சிமிழ் = அகப்படுத்து.

# 140.
சிறை = காவல்.
சிறை = காவலில் வை.
 
# 251.
தீர்வு = முடிவு.
தீர்வை = வரி.

# 252.
தீவகம் = விளக்கு.
தீவம் = தீவு.

# 253.
துகிர் = பவழம்.
துகில் = ஆடை.

# 254.
துடக்கு= ஆரம்பி.
துடுக்கு = குறும்பு.

# 255.
துரகதம் = குதிரை.
துரகம் = குதிரை.
 

# 256.
துலக்கு = சுத்தம் செய்.
துலங்கு = பிரகாசி.

# 257.
துளக்கு = அசையக் செய்.
துலக்கு = சுத்தம் செய்.

# 258.
துளங்கு = அசையச் செய்.
துலங்கு = பிரகாசி.

# 259.
துளபம் = துளசி.
துளவம் = துளசி.

# 260.
துறப்பு = பிரிவு.
துறவு = சந்நியாசம்.
 
# 261.
துன்று = நெருங்கு.
துன்னு = தைப்பாய்.

# 262.
தூங்கல் = தொங்குதல்.
தூங்குதல் = உறங்குதல்.

# 263.
வந்தனம் = வணக்கம்.
தெந்தனம் = கவலையின்றித் திரிதல்.

# 264.
தெள்கு = தெள்ளுப் பூச்சி.
தெள்ளு = தெளிவாக்கு.

# 265.
தெற்றி = திண்ணை.
தெற்று = பிழை.
 
# 266.
தெறல் = அழித்தல்.
தேறல் = தெளிவு.

# 267.
தேசிகம் = இடத்துக்குத் தகுந்த பேச்சு.
தேசிகன் = குரு.

# 268.
தோட்டம் = பூங்காவனம்.
தேட்டம் = சம்பாதித்தல்.

# 269.
தொடக்கு = அகப்படுத்து.
தொடங்கு = ஆரம்பி.

# 270.
தொடர்பு = உறவு.
தொடர்வு = தொடர்ச்சி.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 141.
சினை = முட்டை.
சினை = கருத்தரி.

# 142.
சீறு = சீற்றம்.
சீறு = ஒலியுடன் கூடிய மூச்சு விடு.

# 143.
சுடர் = ஒளி.
சுடர் = ஒளி வீசு.

# 144.
சுண்டு = அற்பம்.
சுண்டு = நீரை வற்றச்செய்.

# 145.
சுருக்கு = மடிப்பு.
சுருக்கு = ஒதுக்கி விடு.
 
# 146.
சுருட்டு = சுருள் புகையிலை.
சுருட்டு = அபகரித்துக்கொள்.

# 147.
சுருள் = சுருண்ட பொருள்.
சுருள் = சுருங்கி விடு.

# 148.
சுவை = ருசி.
சுவை = உண்டு ருசி பார்.

# 149.
சுழல் = சுழி நீர்.
சுழல் = வட்டமாகச் சுற்று.

# 150.
சுழி = பூஜ்ஜியம்.
சுழி = அங்கச் சுழி உண்டாக்கு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 151.
சூடு = வெப்பம்.
சூடு = அணிந்துகொள்.

# 152.
சூர் = தெய்வ மகளிர்.
சூர் = பயமுறுத்து.

# 153.
சூழ் = ஆலோசனை.
சூழ் = சுற்றிக்கொள்.

# 154.
செய் = வயல்.
செய் = இயற்று.

# 155.
சேதி = செய்தி.
சேதி = வெட்டிவிடு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 156.
சேர் = எட்டுப் பல எடை.
சேர் = கலந்துவிடு.

# 157.
சொல் = மொழி.
சொல் = வாயால் பேசு.

# 158.
சொலி = மரப்பட்டை.
சொலி = ஒளி விடுவாய்.

# 159.
ஜோடி = இரட்டை.
ஜோடி = அலங்காரம் செய்.

# 160.
சோதி = ஒளி.
சோதி = பரீட்சை செய்.
 
# 271.
தொய்யல் = சோர்தல்.
தொய்யில் = ஒரு நீர்த் தாவரம்.

# 272.
தொழும்பு = அடிமை.
தழும்பு = காயத்தின் வடு.

# 273.
தொழுனன் = கணவன்.
தொழுனை = குஷ்டம்.

# 274.
தொறு = பசுக்கூட்டம்.
தொற்று = ஒட்டவை.

# 275.
தோதகம் = வஞ்சகம்.
பாதகம் = தீங்கு.
 
# 276.
தோப்பு = சோலை.
தோப்பி = நெல்லில் இருந்து செய்த சாராயம்.

# 277.
தோரணம் = அலங்காரம்.
தோரணை = முறை, வகை.

# 278.
தோராயம் = உத்தேச அளவு.
தோரீயம் = ஒரு வகைக் கூத்து.

# 279.
தோரை = மலை நெல்.
தேரை = சிறு தவளை.

# 280.
தோலா = ஒரு ரூபாய் எடை.
தோலான் = உபயோகம் அற்றவன்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 161.
தக்கு = தந்திரம்.
தக்கு = நிலைபெறு.

# 162.
தகர் = ஆண் யானை / ஆடு / சுறாமீன்.
தகர் = அடித்து நொறுக்கு.

# 163.
தகை = பொருத்தம்.
தகை = தடுத்து விடு.

#164.
தடி = கொள்.
தடி = பருமனாகிவிடு.

# 165.
தண்டி = பருமன்.
தண்டி = தண்டனை அளி.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 166.
தண்டு = கதாயுதம்.
தண்டு = வசூல் செய்.

# 167.
தத்து = ஆபத்து.
தத்து = தாவிச்செல்.

# 168.
ததர் = கொத்து.
ததர் = நொறுக்கிவிடு.

# 169.
தப்பு = தவறு / குற்றம்.
தப்பு = ஆபத்திலிருந்து நீங்கி விடு.

# 170.
தம்பி = இளைய சகோதரன்.
தம்பி = சிலை போல ஆகிவிடு.
 
# 281.
தோலி = பழத்தோல்.
தோழி = சினேகிதி.

# 282.
தௌவை = மூதேவி.
ஒளவை = பாட்டி, சமணப் பெண் துறவி.

# 283.
நக்கல் = கேலிச் சிரிப்பு.
நக்கன் = நிர்வாண
க் கடவுள்.

# 284.
நங்கை = சிறந்த பெண்.
தங்கை = இளைய சகோதரி.

# 285.
வசியம் = வசப்படுத்துதல்.
நசியம் = மூக்குப்பொடி.
 
# 286.
நசுநாறி = உலோபி.
பிசினாறி = உலோபி.

# 287.
நந்தவனம் = பூந்தோட்டம்.
நந்தனம் = இந்திரன் தோட்டம்.

# 288.
நம்பன் = ஆண்களில் சிறந்தவன்.
நண்பன் = தோழன்.

# 289.
நமர் = நம்மவர்.
நமன் = யமதர்மன்.

# 290.
நாயாடி = வேடன்.
நாடோடி = ஊர் ஊராகத் திரிபவன்.
 
# 291.
நாராசம் = எழுத்தாணி.
நாராயம் = அம்பு.

# 292.
நால்வாய் = யானை.
கால்வாய் = நீர் பாயும் பாதை.

# 293.
நாவிகன் = கப்பலோட்டி.
நாவிதன் = அம்பட்டன்.

# 294.
நானம் = கஸ்தூரி, புனுகு.
நாளம் = குழாய், நரம்பு.

# 295.
நிச்சயம் = உறுதி.
நிச்சலும் = எப்போதும்.
 

# 296.
நித்தியம் = அன்றாடம்.
நித்திலம் = முத்து.

# 297.
நிதம்பம் = ம
லைப் பக்கம்.
நிம்பம் = வேம்பு.

# 298.
நியமம் = செய்கடன்.
நியமனம் = கட்டளை.

# 299.
நிலத் தாமரை = ரோஜாமலர்.
ஆகாயத் தாமரை = இல்லாத பொருள்.

# 300.
நிலப்படு = உறுதியாக்கு.
நிலைப்பாடு = கருத்து.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 171.
தமி = தனிமை.
தமி = தனியன் ஆகிவிடு.

# 172.
தருக்கு = கர்வம்.
தருக்கு = செருக்கு அடைவாய்.

# 173.
தலை = சிரம்.
தலை = மேன்மையாகு.

# 174.
தவ = மிகவும்.
தவ = நீங்கி விடு.

# 175.
தழை = இலை.
தழை = செழிப்பாக வளர்.
 
# 176.
தளி = நீர்த்துளி.
தளி = தெளிவாக அறிவாய்.

# 177.
தளிர் = இளம் இலை.
தளிர் = செழிப்பாகு.

# 178.
தளுக்கு = மினுக்கு.
தளுக்கு = பிரகாசிப்பாய்.

# 179.
தளை = காட்டு.
தளை = அடக்கிவிடு.

# 180.
தறி = முளை.
தறி = வெட்டிவிடு.
 
# 301.
காமன் = மன்மதன்.
நீகாமன் = மாலுமி.

# 302.
நீரிழிவு = சிறுநீர் மிகுதல்.
நீர்க்கடுப்பு = வலியுடன் சிறுநீர்.

# 303.
நீலி = பார்வதி தேவி.
நீவி = ஆடையைக் கொசுவி.

# 304.
நுக்கு = பொடியாக்கு.
நுங்கு = பனங்காயின் உட்பகுதி.

# 305.
நுழை = புகு.
நூழை = சிறுவாயில்.

 
# 306.
நுக்கு = பொடிசெய்.
நூக்கு = ஊசலாடு.

# 307.
நெட்டி = எலும்பு.
நெட்டில் = மூங்கில்.

# 308.
நெருநல் = நேற்று.
நென்னல் = நேற்று.

# 309.
நெருநற்று = நேற்று.
நென்னேற்று = நேற்று.

# 310.
நெடு = தேடு.
நாடு = தேடு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 181.
தனி = ஒற்றை.
தனி = நிகர் அற்று விளங்கு.

# 182.
தா = வலிமை.
தா = தருவாய்.

# 183.
தாழ் = தாழ்ப்பாள்.
தாழ் = கீழே சாய்ந்துவிடு.

# 184.
தாளி = பனைமரம்.
தாளி = உணவைத் தாளிதம் செய்.

# 185.
திக்கு = திசை.
திக்கு = தட்டுத் தடுமாறிப் பேசு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 186.
திகை = தேமல்.
திகை = பிரமித்துவிடு.

# 187.
திட்டு = மேடு.
திட்டு = நிந்தனைசெய்.

# 188.
திணி = செறிவு.
திணி = நன்றாக உட்புகுத்து.

# 189.
தித்தி = சிற்றுண்டி.
தித்தி = இனிப்பாக இரு.

# 190.
திதி = நாள்.
திதி =இனிப்பாக இரு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 191.
திமிர் = கர்வம்.
திமிர் = வாரி இறை.

# 192.
திரட்டு = தொகை நூல்.
திரட்டு = ஒன்றாகச் சேர்.

# 193.
திரள் = கூட்டம்.
திரள் = உருண்டை ஆக்கு.

# 194.
திரி = விளக்கின் திரி.
திரி = இங்கும் அங்கும் அலை.

# 195.
திருகு = சுரி.
திருகு = முறுக்கி இறுக்கு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

# 196.
திரை = அலை.
திரை = உடல் சுருங்கி விடு.

# 197.
தீட்டு = அசுத்தம்.
தீட்டு = கூராக்கு.

# 198.
துணி = ஆடை.
துணி = தைரியம் அடை.

# 199.
துணை = உதவி.
துணை = ஒத்திரு.

# 200.
துதி = புகழ் மொழி.
துதி = தோத்திரம் செய்.
 
Status
Not open for further replies.
Back
Top