மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.
நவரசச் சொற்கள்.

1. அ ஆ => இரக்கக் குறிப்பு.
.............
இதைக் கண்டவுடன், 'சோ' ராமசாமி, ராசா பற்றிப் பேசிய பேச்சில் கொடுத்த
பல EXPRESSIONS நினைவு வருகிறது! உங்களில் பலர் கேட்டு ரசித்திருப்பீர்கள்! :clap2:
 
.............#40
அழுகுணி = எப்போதும் அழுபவன்/ அழுபவள்.
...............
அழுகுணி ஆட்டம் என்று ஏன் வந்தது? தப்பாக ஆடி, எப்போதும் அழ வைப்பதாலா?
 
# 41
அனலி = சூரியன்,
அனிலன் = காற்று.
#42
ஆகாசப் பந்தல் = மனோ ராஜ்ஜியம்.
ஆகாசத்தாமரை = இருக்கவே முடியாத பொருள்.
# 43
ஆர்ப்பரி = ஆரவாரம் செய்.
ஆவிர்பவி= தோன்று / உருவாகு .
#44
உல்லாசம் = உள்ளக் களிப்பு.
உல்லாபம் = மழலை, திக்கிப் பேசுதல்.
# 45
அவா = ஆசை.
உவா = பௌர்ணமி.
 
நவரசச் சொற்கள் (#2)

11. அம்மாடி => வியப்பு, ஒப்பு, இரக்கம்.

12. அன்னோ => வருத்தம்,இரக்கம்.

13. ஆ=> இகழ்ச்சி, வினா, வலி.

14. ஆகா => சம்மதம், வியப்பு.

15. ஆத்தாடி => வியப்பு, அதிசயம்.

16. ஆம் => அனுமதி.

17 . ஆமாம் => சம்மதம்.

18 .இதோ => சுட்டுவது.

19 .இந்தா => கொடுப்பது.

20 . எல்லே => இரக்கக் குறிப்பு.
 
Last edited:
சித்திர விசித்திரச் சொற்கள்.

ஒலிக் குறிப்புச் சொற்கள் (#2).


11. பட பட = வெடிக்கும் ஓசை.

12. சடச் சட= மரம் முறிதல்.

13. சொடச் சொட = பொரியும் ஓசை.

14. மொகு மொகு = எதிரொலி.

15. மொச்சு மொச்சு = அசை போசுதல்

16. முசு முசு = கண்ணீர் விடுதல்.

17. க்ளுக் = வாய்விட்டுச் சிரித்தல்.

18. லொடக் லொடக் = மறை கழன்றது.

19. கடுக் கடுக் = பல்லைப்பதம் பார்க்கும்.

20. வெடுக் வெடுக் = கடிக்கும் ஓசை.
 
ஆதவன் எத்தனை ஆதவனடி!

1. புத்தியில்லாதவன்= புத்தியில் + ஆதவன்.
.............

த்வாதச ஆதித்யர்கள் என்பவர் இவர்கள் தானோ ? :flame:
எண்ண எண்ண ஆதவர்கள்!

வண்மையில் + ஆதவன்

உண்மையில் + ஆதவன்

வாய்மையில் + ஆதவன்

தூய்மையில் + ஆதவன்

நேர்மையில் + ஆதவன்

வலிமையில் + ஆதவன்

செழுமையில் + ஆதவன்

மகிமையில் + ஆதவன்

கடமையில் + ஆதவன்

புதுமையில் + ஆதவன்

வடிவில் + ஆதவன்

அழகில் + ஆதவன்

ஒளியில் + ஆதவன்

கருணையில் + ஆதவன்

வறுமை + இல் + ஆதவன்

கடுமை + இல் + ஆதவன்

மடமை + இல் + ஆதவன்

கொடுமை + இல் + ஆதவன்

பழைமை + இல் + ஆதவன்


இன்னும் எத்தனை எத்தனையோ :fish2:

 

# 46 .
உள்கு = நினை.
உள்ளு = ஆராய்ச்சி செய்.
# 47 .
ஊதை = குளிர் காற்று.
ஊத்தை = அழுக்கு.
# 48 .
உன் = உன்னுடைய.
ஊன் = இறைச்சி.
#49
எண்ணு = நினை.
எண்கு = கரடி.
#50
அஞ்சல் = தபால்.
எஞ்சல் = குறைபாடு.
 
நவரசச் சொற்கள் (#3)

21. ஏலே => (இளையவனை) விளிப்பது.

22 . எலா => (நண்பனை) விளிப்பது.

23 . என்னே... வியப்பு, கழிவிரக்கம்.

24. ஏ => விளித்தல், இகழ்தல்.

25. ஏடா => (தோழனை) விளிப்பது

26. ஏடி => (தோழியை) விளிப்பது.

27. ஐ => வியப்பு, மகிழ்ச்சி.

28. ஐயகோ => இரக்கம், மிகுந்த துயரம்.

29. ஐயோ = > இரக்கம், துயரம், வியப்பு.

30. ஓ => உயர்வு, ஒப்பு, இழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, விளித்தல்.

 
சித்திர விசித்திரச் சொற்கள்.

ஒலிக் குறிப்புச் சொற்கள் (#3).

21. கீச் கீச் = பறவை ஒலி.

22. க்ரீச் க்ரீச் = எலியின் ஒலி.

23. கல கல = குதூகலம்.

24. பொல பொல = உதிர்வது.

25. சள சள = பேச்சு ஒலி.

தன்மைக் குறிப்பு
ச் சொற்கள்:

26. மச மச = சோம்பேறி.

27. கச கச= வேர்த்துக் களைத்து

28. கொச கொச = புளித்து நாறி.

29. பச பச = பசுமை.

30. பள பள = கண்ணைப் பறிக்கும்.

 
ஒருமுறை பாலக்காட்டில் ஒருதுணிக் கடைக்குச் சென்றிருந்தோம்.

ஒரு அழகிய புடவைக் காட்டி, "அது நிறம் வெளுக்குமா?" என்று கேட்டேன்.
"ஏ............எ......!" என்ற பதில் வந்தது!
:alien:

"அது நிறம் மங்காமல் இருக்குமா?" என்று கேட்டதற்கு
"ஓ ...............ஒ....!" என்ற பதில் வந்தது!
:eek:

"எல்லோருக்கும் புரியும்படி பேசத் தெரியாதா?" என்று கேட்டதற்கு
'நீங்கள் எவடே இருந்து வந்நூ ? பாலக்காடு அல்லே?"என்ற பதில்!
:rolleyes:

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ என்று ஒற்றை உயிர் எழுத்திலேயே சம்சாரித்து
நம்மையும் சம்ஹாரம் செய்துவிடுவார்கள்.
:wacko:
 
பேசிப் பேசி...

பேசிப் பேசி ஒரு கை (வாய்?) பார்க்கும் சிங்காரச் சென்னைக் கடைகளைவிட,

பேச ஓர் எழுத்துச் சொற்களே மேல்! அவர்கள் முகம் சொல்லுமே எண்ணத்தை!

'ஓ' என்ற ஓர் எழுத்தையே நீட்டி, சுருக்கி, சுருதி ஏற்றி, பல வித பதில் சொல்லுவார்கள்!

அதுதான் மலையாளத்தின் மகிமை! அந்த மொழியின் தனி உடைமை!

:blabla: ... :ohwell:
 
சித்திர விசித்திரச் சொற்கள்.

ஒலிக் குறிப்புச் சொற்கள் (#3).
.....
23. கல கல = குதூகலம்.
....................
'கல கல' என்று சிரிக்கச் சொன்னதும், சிரிக்க முடியாததால்,

'கல கல' என்று சோகமாகச் சொல்லும் நடிகர் நினைவு வருகிறது!


இன்னொரு புகழ் பெற்ற படத்தின் கதாநாயகி சொல்லுவாள்:

'எனக்கு எப்போது துக்கம் தொண்டையை அடைத்தாலும்,
கட கடன்னு போய் தண்ணீர் எடுத்து, மட மடன்னு குடிப்பேன்!' :peace:
 

# 51 .
எண்மை = எளிமை.
ஒண்மை = பிரகாசம்.
# 52
எமர் = எம்மைச் சேர்ந்தவர்.
எமன் = காலதேவன்.
# 53
எல் = பகல்/ சூரியன்.
அல் = இரவு.
# 54
எல்லவன் = சூரியன்.
வல்லவன் = திறமைசாலி.
#55
உள்கு = நினை.
எள்கு = இகழ்வாய்.
 
நவரசச் சொற்கள் (#4)

31. ஓகோ => வியப்பு, வினா.

32. சிச்சீ/ சீ சீ => இகழ்ச்சி.

33. சீ => வெட்கம், நாணம்.

34. சூ = > வெறுப்பு, விரட்டுதல்.

35. சே => மிகவும் வெறுப்பு, இழிவு.

36. சேச்சே =>மிகவும் இழிவு.

37. சை => இகழ்ச்சி, வெறுப்பு.

38. சோ => கனமழை.

39. ஞை ஞை =>அழுகை.

40. நை நை => தொந்திரவு.

41. தூ =>மிகுந்த வெறுப்பு, இழிவு.
 
சித்திர விசித்திரச் சொற்கள்.(#4).

தன்மைக் குறிப்பு
ச் சொற்கள்:

31. தொள தொள = லூசாக.

32. தள தள = வளர்ந்து நிற்கும்.

33. மள மள = வேகமாக.

34. வள வள = உபயோகம் இல்லாத.

35. ஜிகு ஜிகு = கண்கள் கூசும்.

36. ஜிலு ஜிலு = மின்னுகின்ற.

37. குளு குளு = குளிர்ந்த.

38. சள சள = ஓயாத.

39. வள் வள் = எரிந்து விழும்.

40. சுள் சுள் = குத்துவலி.
 
#56
எறும்பு = சிறு பூச்சி.
எறும்பி = யானை.
#57 .
காலி = போக்கிரி.
ஏகாலி = சலவைத் தொழிலாளி.
# 58
எண் = 1 ,2, 3....
ஏண் = வலிமை.
#59
மருதல் = பாதுகாக்கப்படுதல்.
ஏமாறுதல் = வஞ்சிக்கப்படுதல்.
# 60
ஏறு = ஆண் விலங்கு.
ஏற்றை = ஆண் விலங்கு.
 
#61
ஏலாதி = ஏலம் முதலியவற்றால் செய்த மருந்து
ஏனாதி = மந்திரி / படைத்தலைவனுக்கு அளிக்கப்படும் பட்டம்..
#62
ஐது = அழகு, மென்மை.
ஐந்து = ஒரு எண்.
#63 .
ஐய = அழகிய.
ஐயா = மதிப்பிற்குரியவர்.
#64 .
ஐயை = பார்வதி தேவி.
ஐயோ = யமனின் மனைவி/அவலச்சொல்.
#65
ஒக்கல் = சுற்றத்தார்.
ஒக்கலை = இடுப்பு.
 
சித்திர விசித்திரச் சொற்கள்.(#5).

தன்மைக் குறிப்பு
ச் சொற்கள்:

41. கொள் கொள் = இருமல்.

42. விசுக் விசுக் = கோப நடை.

43. ஜிவு ஜிவு = கோபம் தலைக்கேறுவது.

44. செவ செவ = முகம் சிவத்தல்.

45. கறு கறு = மேகம் சூழுதல்.

46. வெட வெட = நடுங்குதல்.

47. பிசு பிசு = புஸ்வாணம் ஆவது.

48. சுர்ன்னு = திடீர்க் கோபம்.

49. புர்ன்னு = மூக்குக்கு மேல் கோபம்.

50. திக் திக் = பயம்.
 
சித்திர விசித்திரச் சொற்கள்.(#6).

தன்மைக் குறிப்பு
ச் சொற்கள்:

51. திடுக் = அதிர்ச்சி.

52. வெறிச் = வெறுமை.

53. மெது மெதுவா = மெல்ல மெல்ல.

54. மெத்து மெத்து =
மென்மை.

55. மொத்து மொத்து =அடிப்பது.

56. வெளு வெளு = அடித்துத் துவைப்பது.

57. கிளு கிளு = இன்பம்.

58. நெடு நெடு = உயரம்.

59. கிடு கிடு = பள்ளம்.

60. மழு மழு = சவரம்.
 

.............#59
ஏமருதல் = பாதுகாக்கப்படுதல்.
ஏமாறுதல் = வஞ்சிக்கப்படுதல்.
................
பொதுமக்கள் 'ஏமாறுவதில்' சேர்த்த பெருஞ்செல்வம், 'ஏமருதல்' வழக்கமாகிவிட்டது
 
Last edited:
ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கும் வரையில்

ஏமருவதற்கும் ஆட்கள் இருப்பார்கள் உலகில்!
 

# 66 .
ஒட்பம் = அறிவு.
ஒப்பம் = சம்மதம்.

#67
ஒட்டம் = பந்தயப் பொருள்
ஓட்டம் = ஓடுவது

# 68.
ஒருமா = 1 /20 என்னும் பின்னம்.
ஒருமை = தனிமை.

# 69.
ஒருவண்ணம் = ஒருவாறு.
ஒருவந்தம் = நிச்சயம்.

# 70.
ஒருவு = விட்டு நீங்கு.
மருவு = கட்டி அணை.
 
Chitra vichithrach chorkkal

61. கொழு கொழு = குழந்தை.

62. சொர சொர = தரை.

63. வர வர = வறண்ட.

64. பர பர = விரைவு.

65. வழ வழ = வழுக்கும்.

66. விறு விறு = ஒரு சுவை.

67. வில வில = நடுங்குதல்.

68. சுறு சுறு = சுறுசுறுப்பாக.

69. மட மட = விரைவாக.

70. மத மத = நல்ல வளர்ச்சி.

71. சுடச்சுட =அடுப்பில் இருந்து நேராக.
 

# 71.
ஒரேவழி = ஒரே மார்க்கம்.
ஒரோவழி = சிறு பான்மையாக.

# 72.
ஒல்கு = சோர்வை.
உல்கு = எண்ணு, நினை.

# 73.
ஒல்லு = உடன்படு.
ஒல்லை = விரைவாக.

# 74.
ஒழிபு = எச்சம்.
ஒழிவு = முடிவு.

# 75
ஒழுகு = பாய்ச்சு.
ஒழுக்கு = சொட்டச் செய்.
 
Status
Not open for further replies.
Back
Top