• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.
என்னுள் ஒட்டியிருக்கும் கொஞ்சநஞ்ச கணிதம் இதற்கே உபயோகம்!

சமையல் செய்யும்போது, மேலும் கொஞ்சம் உபயோகம்!
( இருவருக்கு அளவு ' X ' என்றால், அறுவருக்கு 3 X ):bounce:
 
There is nothing which is not based on mathematics. We may not be using Sine and


Cosine values but we do definitely use Arithmetic and Geometry in everyday life!

Good work ! Keep it up!!
:tea:
 
மரபுச் சொற்கள்.

குதிரை .........குதிரைக் குட்டி.
யானை..........யானைக் குட்டி.
புலி ...............புலிக்குட்டி.
பன்றி ...........பன்றிக் குட்டி.

யானை.........யானைக் கன்று.
மான்..............மான் கன்று.
பசு..................பசுக் கன்று.
எருமை.........எருமைக் கன்று.


கோழி.............கோழிக்குஞ்சு.
எலி..................எலிக்குஞ்சு.
மைனா............மைனாக்குஞ்சு.
மீன்...................மீன் குஞ்சு. .
 
........................
#19.
கலை = வித்தை, ஆண் மான்.
களை = அயர்ச்சி, தாவரக்களை.
கழி = மூங்கில், கரும்பு.
correction:
கழை = மூங்கில் (கழைக் கூத்தாடி கையில் கழை பிடித்துக் கயிற்றில் நடப்பான்)... :nod:
 
பொதுவான சில தவறுகளும், திருத்தங்களும்.

1. அடமழை................அடை மழை.
2. அடமானம்.............அடைமானம்.
3. அமக்களம்.............அமர்க்களம்.
4. ஆத்துக்காரர்.........அகத்துக்காரர்.
5. ஆத்துக்காரி...........அகத்துக்காரி .
6. ஆத்துக்கு................அகத்துக்கு.
7. ஆம்படையாள்.....அகமுடையாள்.
8. ஆம்படையான்.... அகமுடையான்.
9. இடது பக்கம்..........இடப்பக்கம்.
10.இடது புறம் ..........இடப் புறம்.
 
இப்போது 'பேச்சுத் தமிழ்', இலக்கியத்தை ஆக்கிரமிப்பதால், நல்ல தமிழ் கொஞ்சம் பாடுபடுகிறது!

'இன்னாம்மே! நல்லாக்கீரையா?' என்னும் சென்னைச் செந்தமிழும், ஏற்றம் பெறுகிறது!!

:hurt:...:pound:
 
சென்னைச் செந்தமிழும்
பின்னே வருகின்றது!

இன்றும் உலவிடும் அதை
பின்னர் நாம் காண்போம்!
:loco:
 
11. இமையமலை................இமயமலை.
12. இளைமை.......................இளமை.
13. உடமை............................உடைமை.
14. உத்திரவு..........................உத்தரவு.
15. ஊரணி..............................ஊருணி.
16. என்னமோ.......................என்னவோ.
17. ஒட்டறை.........................ஒட்டடை.
18. ஒத்தடம்..........................ஒற்றடம்.
19. ஒருக்கால்.......................ஒருகால்.
20. ஒருவள்...........................ஒருத்தி.
 
21. கத்திரி........கத்தரி.
22. கம்பிளி .....கம்பளி.
23. கயறு..........கயிறு.
24. குடக்கூலி ...குடிக்கூலி.
25. கோடாலி.....கோடரி.
26. கோர்வை.....கோவை.
27. சந்தணம்.......சந்தனம்.
28. சம்மந்தம்......சம்பந்தம்.
29. சம்மந்தி.........சம்பந்தி.
30. சமயல்...........சமையல்.
 
Last edited:
31. சிகப்பு.......சிவப்பு.
32. சிலது........சில.
33. சிலவு.........செலவு.
34. சீக்காய்........சிகைக்காய்.
35, சுவற்றில்.....சுவரில்.
36. சுவற்றுக்கு ...சுவருக்கு.
37. சுவற்றை..... சுவரை.
38. தமயன்..........தமையன்.
39. தலகாணி ......தலையணை .
40. தாப்பாள்........தாழ்ப்பாள்.
 
Last edited:
41. தாவாரம் ...தாழ்வாரம்.
42. நிலமை......நிலைமை.
43. நோம்பு.......நோன்பு .
44. பாவக்காய்..பாகற்காய்.
45. புட்டு...........பிட்டு.
46. புடவை.......புடைவை
47. புண்ணாக்கு..பிண்ணாக்கு.
48. பேதமை......பேதைமை.
49. பொண்ணு....பெண்.
50. பொம்பிளை..பெண்பிள்ளை.
 

51. போறும்.....போதும்
52.
முந்தாணி...முன்றானை.
53. முழுங்கு.....விழுங்கு.
54. ரொம்ப........நிரம்ப.
55. வயறு..........வயிறு.
56. விசிரி......... விசிறி
57. விரை..........விதை
58. வேணும்.......வேண்டும்..
59. வெங்கலம்....வெண்கலம்
60. வென்னீர் ......வெந்நீர் .
 
வேண்டும் என்பது தூய தமிழாயினும், இறையைப் போற்றும் இசைப் பாடல்களில்,

வேணும் என்ற சொல் அதிகமாகக் காணப்படுகின்றது.

'சன்னதியில் இருக்கவேணும்' என்பது போல!

ராஜி ராம்
 
'வேண்டும்' என்னும் போது வல்லினத்தின் தாக்கம் தெரிகின்றது.

'வேணும்' என்னும் போது கொஞ்சம் பரிதாபமாகவே இருக்கின்றது.

இறைஅருளை வேண்டிட, 'வேண்டும்' என்பதைவிட
'வேணும்' என்பதே பொருத்தமாகத் தெரிகின்றது.
:pray2:
 
Last edited:
இறை அருளால் வந்த சொற்களில், உணர்வுகள்

நிறைவாக இருப்பதில் வியப்பேதும் இல்லையே! :nod:

அன்புடன்,
ராஜி ராம்
 
சிங்காரச் சென்னையின் செந்தமிழ் அகராதி .:whoo:
சென்னைவாசியான தங்கை திருமதி ராஜி ராம்
அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.



1.வெறுமே = ஒன்றும் செய்யாமல்.

2.சும்மனாச்சிக்கும் = பொய்யாக.

3.தேமேன்னு = (தெய்வமே என்று) அமைதியாக.

4. உம்மாச்சி = கடவுள்.

5. ஆப்ட்டுகினான் = மாட்டிக் கொண்டான்!

6. வேணுங்காட்டியும் = வேண்டுமென்றே.

7. ஈஸ்துகினு = இழுத்துக்கொண்டு.

8. டபாய்க்கிறது = ஏமாற்றுவது / நழுவுவது.

9. குந்தினான் = அமர்ந்தான்.

10. இக்குது = இருக்கிறது.
 

11. ஸோம்மா = சும்மா.


12. க்கீதா = இருக்கின்றதா?

13. தாவல = தேவலை.

14. கண்ணாளம் = கல்யாணம்.

15. பச்சத்தண்ணி = குளிர்ந்த நீர்.

16. வென்னித்தண்ணி = சுடு நீர்.

17. தத்தூண்டு = சிறிதளவு.

18. காலங்காத்தால = விடியற்காலையில்

19. தில்லிக்கேணி =திருவல்லிக்கேணி.

20. தாரவாத்தான் = தானம் செய்துவிட்டான்.
 
21. டின்னுக்கட்டினான் = அடித்தான்.
22. பொம்மனாட்டி = பெண்.


23. போவயில = போகும்பொழுது.

24. வந்துக்கினு = வந்துகொண்டே.

25. வாரயில = வரும் பொழுது.
26. போய்க்கினு = போய்க்கொண்டே.

27. கந்தரகோளம் = குழப்பம்.

28. வாக்கப்பட்டு = வாழ்க்கைப்பட்டு.

29. விடியங்காட்டியும் = பொழுது விடிந்தவுடன்.

30.தொந்தரோ = தொந்திரவு.
 
31. அதுகள் = அவர்கள்.

32. வாங்கிக்கினு = வாங்கிக் கொண்டு.

33. தண்ணிக்கொளாய் = தண்ணீர்க் குழாய்.

34. மச்சான் = கணவன்,

35. வச்சிட்டு = வைத்துக்கொண்டு.


36. வந்திட்டு = வந்துகொண்டு.

37. அந்தாண்ட = அந்தப் பக்கமாக.

38. கெய்வன் = கிழவன்.

39. கெய்வி = கிழவி.

40. சாவுகிராக்கி = சாகப் போகிறவன்.

 

41. கௌரதை = கௌரவம்.

42. ஊடு = வீடு.

43. ஊட்லே = வீட்டிற்குள்ளே.

44. இன்னாமே = என்ன அம்மா?

45. இன்னாயா = என்ன ஐயா?

46. ஒரு தபா = ஒரு தடவை.

47. சோமாறி = சோம்பேறி.

48. முடிச்சமுக்கி = திருடன்.

49. ரோதனை = தொந்திரவு.

50. பெருஸு = வயதானவர்.
 
51. துண்ணு = தின்னு.

52. நாஸ்டா = பலகாரம்.

53. பொரை = காய்ந்த bun போன்றது.

54. பிஸ்கோத்து = பிஸ்கட்.

55. இன்னாங்கரே = என்ன சொல்கின்றாய்?

56. சோத்தாங்கை = வலக்கை.

57. பீச்சாங்கை = இடக்கை.

58. கொளம்பு = குழம்பு.

59. வெரசையா = விரைவாக.

60. அளுகாதே = அழாதே.
 
61. அளுவுறே = அழுகின்றாய்.

62. புள்ளே = பெண்ணே!

63. புரோட்டா = பரோட்டா.

64. சீல = சேலை.

65. வேட்டி = வேஷ்டி.

66. அப்பால = பிறகு.

67. வாயப்பயம் = வாழைப்பழம்.

68.கெய்க்க = கிழக்கே.

69.பொ
ய்க்க = பிழைக்க.

70. ம
ய்க்கி = மழைக்கு.
 
71. பிரிஞ்சி = பிரியாணி.

72. எம்மாஞ்சைஸு = எவ்வளவு பெரியது.


73. இம்மா
ஞ்சைஸு = இவ்வளவு பெரியது.

73. கூவுறே = சத்தம் போடுகிறாய்.


74. அவங்கைல = அவனிடம்.


75. வலி = இழு.


76. ஒத்து = விலகு.


77. டப்பாசு = பட்டாசு.


78. பயாஸ்கோப்பு = திரைப்படம்.


79. நன்னி = நன்றி.


80. படா பேஜாரு = பெரிய துன்பம்.
 
எனது நண்பன் மயிலை மன்னார் சொல்லப்போகும் 'கந்தரநுபூதி' விளக்கங்களுக்கு
இந்தப் பதிவு மிகவும் உறுதுணையாக இருக்கும்! :)))
அட்டகாசமான தொகுப்பு! :))
 
உண்மையான கந்தர் அனுபூதியா?
சென்னை செந்தமிழ் அனுபூதியா?

தொகுப்பில் பாதிக்கும் மேலே
தொகுத்தவர் என் தங்கை ராஜிராம்.

கருத்து மட்டுமே என்னுடையது!
:director:
கடின உழைப்பு அவருடையது. :roll:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top